Thursday 31 July 2008

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் ஆரோக்கியமான வாழ்வு !!


தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா என்று பார்ப்போம்.
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம, பித்தம, மற்றும் வஆதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.

அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:




தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள் :
  1. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்
தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

2. கீல்வாத வலியை குணப்படுத்தும்
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

3. புண்களை வேகமாக குணப்படுத்தும்
புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

4. மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்
மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

5. செரிமானத்தை மேம்படுத்தும்
வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

6. இரத்த சோகையை எதிர்க்கும்
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

7. கர்ப்ப காலத்தின் போது:
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

8. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

9. வயதாகும் செயல்முறை குறையும்
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

10. நோய் கிருமிகளை ஒழிக்கும்
தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.


தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.


Wednesday 30 July 2008

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் ஏன் பதக்கம் பெறுவதில்லை ?

   100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே ஒரு தங்கம், அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. நமது நாட்டில் வீரர்களே இல்லையா ? பிறகு ஏன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி தகுதிச் சுற்றில் கூட தோல்வியைத் தழுவியது ?

இந்திய விளையாட்டு இது என கட்டமைப்பைச் செய்ததில் பண்ணாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது. வீட்டுக்குள்ளேயே சின்னத்திரை மூலமாக காட்டப்படும் அனைத்து விளம்பரங்களிலும் மட்டையாட்டமே (கிரிக்கெட்) முன்னிலையில் இருக்கிறது, பெயரளவுக்குக் கூட மற்ற விளையாட்டுக்களைக் காட்டாததால் மாணவர்களிடையே மட்டையாட்டத்தில் இருக்கும் ஆர்வம் வேறெதிலும் இல்லாமல் போனது.

உண்மையில் படகு செலுத்துதல், கால்பந்து, மல்யுத்தம், கபடி, வாலிபால் ஆகியவற்றிற்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் நாமும் உலக அளவில் வெற்றிபெற முடியும். இந்த விளையாட்டுக்கெல்லாம் அடிப்படையில் உடலில் உறுதி இருக்க வேண்டும். (ஜமாலன் கட்டுரை) உடலில் உறுதி உள்ளவர்களாலேயே இந்த போட்டியிலெல்லாம் பங்கெடுக்க முடியும், எல்லாவற்றிலும் சாதி அரசியல் இருப்பதால், இது போன்ற விளையாட்டுக்களுக்கெல்லாம் ஊக்கமும் கிடைப்பது இல்லை, உண்ணும் உணவு அடிப்படையில் கிடைக்கின்ற அதற்குத் தேவையான உடல் தகுதியுடன் விளையாடும் வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிலேயே இருக்கின்றன இவர்கள் கலந்து கொண்டால் கண்டிப்பாக போட்டிகளில் வெல்ல முடியும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தானே. மட்டையாட்டத்தில் வீரர்களுக்கு கொட்டும் பணம் ஒலிம்பிக் போட்டிகளில் கொட்டிவிடாது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் தவிர்த்து நல்ல உடல் தகுதி உள்ள மற்ற இளைஞர்களுக்கு மட்டையாட்டம் தவிர்த்த விளையாட்டுக்களில் ஆர்வம் வராமல் போனதற்கு காரணம் அதனால் பெரிய அளவில் பணமோ புகழோ கிடைக்காது,  ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் மாநில அரசு விளையாட்டு ஆசிரியர் வேலையும், ஒரு வீடும் கொடுக்கும், மத்திய அரசு எதோ பணமுடிப்பு கொடுப்பார்கள். பத்மஸ்ரீ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று அந்த போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்றால் தான் இவையெல்லாம். பெறாவிட்டால் நாய் கூட திரும்பிப் பார்க்காது, கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு ஆண்டுகணக்கில் ரிஸ்க் எடுத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாது வாழ்வை வீணாக்கிக் கொள்ளவேண்டுமா என்று தான் இளைஞர்களும் நினைப்பார்கள். இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நடப்பு நன்றாக தெரிவதால் பையன் படித்து நாலு காசு சொந்தமாக சம்பாதித்து நம்ம கையை எதிர்பார்க்கமல் இருந்தாலே போதும், என்று சொல்லி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தடை செய்துவிடுவார்கள்.

பள்ளிகளில் சாம்பியனாக வரும் மாணவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்ததும் முற்றிலும் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒலிம்பிக்கில் மிகுந்த தங்கம் பெற வேண்டும் என்ற 100 கோடி இந்தியர்களின் கனவு, விளையாட 10 பேரை அனுப்பி வைத்துவிட்டு எப்படி நிறைவேற்றுவது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாணவர்களை மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்க வேண்டும். விளையாட்டுக்கென்றே மாநிலம் தோறும் தனிக் கல்லூரிகள் அமைத்து பட்டப்படிப்பாகவும், பல்வேறு மாநில போட்டிகளை பல்வேறு விளையாட்டுக்களின் வழி நடத்தினால், படிப்பில் ஆர்வம் இல்லாத விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்கள் பயன்பெறுவர், அவர்களால் நாடும் பயன்பெறும்.

வெறும் மட்டையாட்டமே போதும் என்று இந்தியா நினைத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர விளையாட்டாக மாறி வீட்டுக்குள் இளைஞர்ர்களை முடக்கிப் போட்டு, இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் எந்த ஆர்வமும் இல்லாது செய்துவிடும். 

வெறும் 10 பேரே கலந்து கொள்ளச் செல்ல அனுப்பிவிட்டு 10 பேரும் தங்கம் பெற்று திரும்பவேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் ஞாயம். இவர்களுக்காவது கலந்து கொள்ளத் தகுதி இருக்கிறதே என்ற பெருமூச்சே வருகிறது.

ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.

Sunday 20 July 2008

தர்மம் செய்வதன் முக்கியத்துவம்....

அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அதி (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவசியமாகும்,'' நான் வினாவினேன்:
""ஒருவரிடம் செல்வம் இல்லையென்றால்...?'' அண்ணலார் (ஸல்): அவன் சம்பாதித்து தானும் உண்ணாவேண்டும்; ஏழைகளுக்கும் தரவேண்டும்!'' நான்: ""அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால்...?'' அண்ணலார் (ஸல்): ""தேவையுள்ள, துன்பத்திற்குள்ளான மனிதர் எவருக்கேனும் உதவட்டும்!''
நான்: ""அதுவும் அவரால் முடியவில்லையென்றால்...?'' அண்ணல்நபி (ஸல்): ""மக்களை நன்மை புரியும்படி அவர் தூண்டட்டும்!''

அண்ணல் நபி (ஸல்): ""மக்களுக்குத் தீங்கிழைக்காதிருக்கட்டும்! இதுவும் ஒரு நற்செயலே!'' (முஸ்லீம்) அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""எவர் தன் சகோதரருக்குத் தேவையேற்படும் நேரத்தில் அவருக்கு உதவுகின்றாரோ அவருக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் அல்லாஹ் உதவி புரிவான்!'' (புகாரி, முஸ்லீம்) விளக்கம்: ஒரு நபிமொழியில் கூறப் பட்டுள்ளது: ""அல்லாஹ் தன் அடியார்கள் சிலரை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் படைத்துள்ளான். மக்கள் தம் தேவைகளை அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அவற்றை நிறைவு செய்து விடுகின்றார்கள். இத்தகையோர் இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும், அவன் தரும் வேதனையி லிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள்,'' புகழ்பெறும் நோக்கம் வேண்டாம் அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ""மனிதர்களால் கற்பிக்கப்பட்ட பிற கடவுளர்களை என்னோடு இணைசேர்ப்பதை விட்டு நான் மிகவும் தேவையற்றவனாவேன். எவன் ஒரு நற்செயல் புரிகின்றானோ, அதில் என்னுடன் வேறொருவனையும் இணையாக்கிவிட்டானோ, அத்தகையவனின் செயலுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நான் அவனது செயலைக் குறித்து வெறுப்படைந்துள்ளேன். அந்தச் செயல், என்னுடன் அவன் யாரை இணைவைத்தானோ அவனுக்குரியதாகும்!'' (முஸ்லீம்)

தொழுகையே முக்கியம் : தொழுகையை அதிகப்படுத்த வேண்டும். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், இதுபற்றி கூறும் போது, ""எனக்கு காற்று பாரிச வாய்வு (பீடிப்பு) ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அண்ணல் நாயகம்(ஸல்) அவர்களிடம், தொழுகை செய்வது பற்றி வினவிய போது, "நின்று தொழுவீர்! முடியாவிடில் உட்கார்ந்து தொழுவீர்! இதுவும் முடியாவிடில் ஒருக்கணித்துப் படுத்துத் தொழுவீர்!'' என்றார்கள்.எந்த நிலையிலும் தொழுகையைக் கைக்கொள்ள வேண்டும் என்பது அண்ணலாரின் கருத்தாக இருந்தது. 

தேவையுள்ளோருக்கு உதவுங்கள் ! அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்: ""எந்தச் செயல் சிறந்தது...? தரமானது....?'' அண்ணல் நபி(ஸல்): ""இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும், இறைவழியில் அறப்போர் புரிவதும்!'' நான்: ""எத்தகைய அடிமைகளை விடுவிப்பது சிறந்தது...?'' அண்ணல் நபி(ஸல்): ""விலை அதிகமாயிருக்கின்ற, தம் உரிமையாளனின் பார்வையில் சிறந்தவர்களாயிருக்கின்ற அடிமைகளை விடுவிப்பது சிறந்தது!'' நான்: ""என்னால் அது இயலவில்லையெனில்?'' அண்ணல் நபி(ஸல்): ""ஒரு பணியைச் செய்பவனுக்கு நீர் உதவி புரியும்; அல்லது தன் பணியைச் சரிவர செய்ய முடியாதவனின் வேலையை நீர் செய்து கொடும்!'' நான்:""அதுவும் என்னால் முடியவில்லையென்றால்...?''
அண்ணல் நபி(ஸல்) :  ""மக்களுக்குத் துன்பம் தராதீர்! இது உமக்கு தர்மமாகத் திகழும்; இதற்காக உமக்கு நற்கூலி கிடைக்கும்!'' (புகாரி, முஸ்லிம்) விளக்கம்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதன் கருத்து, ஏகத்துவ மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகும். ஜிஹாத்- அறப்போரின் பொருள், சத்திய மார்க்கத்தை அழித்திட நினைப்போரை எதிர்த்துப் போராடுவதாகும். எதிரிகள் சத்திய மார்க்கத்தை, சத்திய அழைப்பாளர்களை அழித்திட வாளை ஏந்தினால், தானும் வாளேந்தி, ""எங்கள் உயிர்களையும், உங்கள் உயிர்களையும் விட சத்திய மார்க்கமே உயர்வானது; நீங்கள் அழித்திட முனைந்தால் நாங்கள் உங்களை மாய்த்திடுவோம், அல்லது அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் மாய்ந்து விடுவோம்,'' என்று பிரகடனம் செய்வது ஓர்இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். அரபு நாட்டில் அன்று அடிமை முறை அமலில் இருந்தது. அக்காலத்தில் நாகரிகச் சமுதாயங்கள் அனைத்திலும் இந்தச் சாபக்கேடு நிலவி வந்தது. இஸ்லாம் வருகை தந்தபோது அடக்குமுறைக்கு ஆளான, தாழ்த்தப்பட்ட மனிதர்களை மேம்படுத்துவதற்காகவும், மனிதகுல சகோதரத்துவத்தில் அவர்களை இணைப்பதற்காகவும் அடிமைகளை விடுவிப்பதை தன் சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக ஆக்கிக் கொண்டது. அதனைமாபெரும் நற்செயல் என்று கூறியது. தேவையுள்ளோருக்கு உதவி புரிவதும், ஒரு மனிதன் செய்ய முடியாத அல்லது வகை தெரியாமல் செய்கின்ற பணியை முடித்துக் கொடுப்பதும் சிறந்த நற்செயலாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிய ஓர் அடிமையை விடுதலை செய்வானாயின் அவ்வடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக அம்மனிதனின் ஒவ்வோர் உறுப்பையும் அல்லாஹ், நரக நெருப்பிலிருந்து விடுவிப்பான்!''

அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...நூலில் இருந்து.

Saturday 19 July 2008

இஸ்லாத்தில் கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்-ஒரு பார்வை .....

 
அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலு இம்ரான்3 :180)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)

மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்:ஒரு மனிதனிடம் இன்னொருவர் வாங்கிய தொகையை தரவில்லை என்றால், எவ்வளவு கோபப்படுகிறான் அந்த மனிதன். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கின்றி பெற்றுக்கொண்ட நாம் அவன் ஏவல் விலக்கள்களை ஏற்று நடக்கின்றோமா என்றால் இல்லை. ஆதனால் தான் வல்ல ரஹ்மான் இப்படிப்பட்ட குணமுடையவர்களை நன்றி கெட்டவர்கள் என்றும், இந்த நன்றி கெட்டத் தனத்திர்க்கு அவனே சாட்சியாக இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்,அல்ஆதியாத்100:6,7,8)

தனக்கே கேடு:கஞ்சத்தனம் செய்வதால் நம்முடைய செல்வம் நம்முடனேயே இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அந்த செல்வமே தனக்கு கேடாக மறுமையில் நிற்கும் என்பதையும், பெரும் அழிவைத் தரும் என்பதையும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பது சத்தியத்தை புரக்கனிக்கும் செயல் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.
هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன், முஹம்மத்47:38)
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவசல்லம் கூறினார்கள்..
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.”என அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.(நூல் புகாரி 5299)

கஞ்சத்தனம் செய்ய தூண்டுபவருக்கும் கேடு:நம்மில் சிலர் இருக்கின்றார்கள், தானதர்மம் செய்பவர்களையும் கண்டிப்பதுடன், இப்படியெல்லாம் செலவு செய்தால் வருமை நிலைக்கு வந்துவிடுவாய் என அச்சுருத்தி, ஏதோ நன்மையான காரியம் செய்துவிட்டது போல் திருப்திபட்டுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நாளை மறுமையில் நரக வேதனையுண்டு என அல்லாஹ் வண்மையாக கண்டிக்கின்றான்.
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ! – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் . (அல்குர்ஆன், அல்ஹதீத்57:24)

திடீரென வரும் அல்லாஹ்வின் தன்டணை:பொருளாதாரம் நிறைந்திருக்கக்கூடியவர்கள், உல்லாச வாழ்கையையும், சுகபோக வாழ்கையையும் அனுபவிப்பதை பார்த்து நம்மில் பலர் பெருமூச்சு விடுவதை பார்க்கின்றோம். அல்லாஹ்வின் போதனைகளை, கட்டலைகளை மறந்து வாழ்கின்ற இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அல்லாஹ் செல்வவத்தின் வாசலை திறந்து விடுவதாக கூறுகின்றான். ஆனால், இவர்களின் இந்த உல்லாச வாழ்கையும், செல்வமும் நிரந்தரமானது அல்ல. மாராக அல்லாஹ்வின் தன்டணையைதான் கொண்டுவரும்.
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர் (அல்குர்ஆன்,அன்ஆம் 6:44)
மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்…
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
(அத்தகையவன் செல்வமே சதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் காக்கும்) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்றும் அவன் எண்ணுகிறான்.
كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
அது (உடலில் பட்டதும்) இருதயத்தில் பாயும்.
(அல்குர்ஆன்,ஸூரத்துல் ஹுமஜா 104: 2-7)

தயால குணம்:ஜாபிர்(ரலி) கூறினார்கள்…நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்’ என்றார்கள்” என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள்.

கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு தேடல்:நபி(ஸல்)அவர்கள்.. கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்… நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்;… நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன்.
அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். (நூல் புகாரி 2893)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)

எழுதியவர்-சகோதரர்: M.S.ரஹ்மத்துல்லாஹ்


அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

Friday 18 July 2008

ஒரு நாள் வரும்...அன்று ? விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்...


ஒரு நாள் வரும்...அன்று!!!!!!!!!!!!!!!!!!

நீ குளிக்க மாட்டாய் , உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அனுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ மாட்டாய் ! உன்னை பள்ளிக்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு , உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.அது எந்நேரமும், எங்கிருந்தாலும், வந்து விடும், அது தான் மௌவுத் (மரணம்)
----------------------------------------------------
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

1. அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?2. ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?3. இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?4. ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?5. தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?6. தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?7. மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?8. மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?9. யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
10. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?11. தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?12. தேவையில்லாத அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?13. செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?14. இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?15. உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?16. பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?17. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?18. ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?19. நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?20. இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
21. மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?22. உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?23. இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?24. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
25. இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?26. உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?27. மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?28. உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?29. இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?30. யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""
31. இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?32. மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""
33. யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக

Friday 11 July 2008

இறைதூதர்களின் கவ்முகள் (Prophet Followers Names)

இறைதூதர்களின் கவ்முகள் (சமுதாயத்தினர்)
குர்ஆனில் ஒவ்வொரு இறைதூதர்களை எதிர்த்த பல சமுகத்தினரைப்பற்றிக் கூறப்படுகின்றன? அவர்கள் யாவர் ?
1. கவ்மு நூஹ் (நூஹ் நபியின் சமூகத்தார்)
2. கவ்மு ஆது (ஹீது நபியின் ஆது மக்கள்)
3. கவ்மு தமூது (ஸாலிஹ் நபியின் தமூது மக்கள்)
4. கவ்மு இப்றாஹீம் (இப்றாஹீம் நபியின் சமூகத்தார்)
5. அஸ்ஹாபு மத்யன் (ஷீஐப் நபியின் மத்யன்வாசிகள்)
6. அஸ்ஹாபுல்முஃதபிகாத் (லூத் நபியின் மக்கள்) ஆதாரம்: அல்குர்ஆன் 9:70
(தலைகீழாக புரட்டப்பட்ட ஐந்து நகரங்கள். அவை: ஸதூம்,ஸாமூரா,ஸாபூரா, தூமா, ஆமூரா)
7. அஸ்ஹாபுர்ரஸ் (கிணற்று வாசிகள்) 25:38, 50:12,
8. அஸ்ஹாபுல் கர்யத் (கிராம வாசிகள்) 36:13
9.அஸ்ஹாபுல் அய்கத் (தோட்டவாசிகள்) 50:14, 15:78, 26:176, 38:13
10.கவ்மு துப்பவு (துப்பவு மன்னரின் மக்கள்) 50:14
11. கவ்மு ஃபிர்அவன் (பிர்அவனின் மக்கள்) 38:12
13. அஸ்ஹாபுல் உக்தூத் (குண்டத்தையுடையோர்) 85:4

Wednesday 2 July 2008

போலீஸ் முத்திரை குறியீடுகள்!! ஒரு சிறப்பு பார்வை..

சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே !

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினர் அணிந்துருக்கின்ற ஆடை ஒரே தோற்றத்துடன் இருப்பாதால் சில நேரங்களில் நம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்படுவதுண்டு.

சரி எவ்வாறு அவர்களை இனங்காணுவது ?
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.

இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  

Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]

Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia 

தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .