Wednesday 11 March 2009

விஞ்ஞானி கலிலியோ வரலாறு...

கலிலியோ கலிலீ (Galileo Galilei) இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் கி.பி.1564 - ஆம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை வின்சென்சோ கலிலீ. சிறந்த இசைமேதை. கலிலியோ ஆறு பிள்ளைகளில் மூத்தவர்.

முற்காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிவைத்தபடி ஆண்களுக்கு 32 பற்கள் உண்டு என்றும், பெண்களுக்கு 28 பற்கள் தான் உண்டு என்றும் நம்பிவந்தனர். அதையே, கலிலியோவின் பள்ளியிலும் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். கலிலியோ அதை பரிசோதனை செய்துபார்த்தார். வீட்டில் அவரது அம்மா மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பற்களையும், ஆண்களின் பற்களையும் எண்ணிப்பார்த்து அரிஸ்டாட்டில் கூறியது தவறு. ஆண், பெண் அனைவருக்கும் 32 பற்கள் உண்டு என்ற உண்மையைக் கூறினார்.

கலிலியோவின் தந்தை அவரை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் பைசா நகரத்திலுள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (University of Pisa) 1581 - ல் சேர்ந்தார். கலிலியோவுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை, கணிதத்தைக் கற்றார். இயல்பிலேயே கலிலியோவுக்கு இயந்திர இயலிலும், இசையிலும், ஓவியத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.


 
 
 
மாபெரும் விஞ்ஞானி கலிலியோ--- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய் யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை. அவர்க ளது கண்டுபிடிப்புகள் மதநம் பிக்கைகளுக்கு விரோதமான தாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளி யிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப் படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ கலிலி தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண் டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

 
1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்....

No comments:

Post a Comment