Tuesday 4 August 2009

உலகின் அதிவேக கான்கார்ட் விமானம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை !!

பண்டைய காலங்களில் மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு செல்ல ஆண்டு கணக்கில் ஆனது, சக்கரத்தை கண்டறிந்து அவற்றை மாதக்கணக்குக்கு இட்டு வந்தான் நாகரீக மனிதன். தொழில் நுட்பவசதி பெருகியவுடன் அவை நாட்கணக்கு வந்தன. 19-ம் நூற்றாண்டுக்கு பின் ரைட் சகோதரர்களால் அது மணிக்கனக்குக்கு வந்தன. ஆனாலும் ஒலியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் எந்திரத்தை உண்டாக்குவது என்பது 1970-ஆம் ஆண்டுவரை மனிதனின் கனவாகவே இருந்து வந்தது எனலாம். பியர்ரி சாத்ர் என்பவர்தான் இக்கனவு திட்டத்தை செயல் முறைக்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் ஆவார்.

1950-களில் பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒலி மிஞ்சு வேக பயணிகள் வானூர்திகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தன, போட்டியில் வென்றது பிரான்சும் பிரிட்டனுமே. பிரான்சின் சட் வானூர்தி நிறுவனம் சுப்பர் கேரவெல்-223 என்ற மின்னல் வேக பயணிகள் விமானத்தை உருவாக்கி சோதனை செய்தது. இவ்வேளையில் பிரிட்டனின் அதிவிரைவு விமானம வடிவமைப்பு சுமார் 100 பேரை சுமந்து செல்லும் முக்கோண வடிவிலான மெல்லிய இறக்கை கொண்டதாக இருந்தது. 1960-களின் தொடக்கத்திலேயே இருவித வடிவமைப்புகளும் வியாபார நோக்கில் உற்பத்தியை துவக்க தயாராய் இருந்தன. ஆனால்உற்பத்தி செலவு மிக அதிகமாக இருந்ததால் பிரிட்டன் சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பை கோரியது. பிரான்சு மட்டுமே இதில் ஆர்வமாக இருந்ததனால் அது மட்டுமே முன்வந்தது. பிரிட்டிஷ் வானூர்தி நிறுவனத்துக்கும் (British Aircraft Corporation) பிரான்சின் ஏரோச்பேஷியேல் நிறுவனத்துக்கும் (Aerospatiale) இடையே கான்கார்ட் ஒப்பந்தம் 28-நவம்பர்-1962 ல் கையெழுத்தானது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தமாக அல்லாமல் இருநாடுகளுக்கிடையேயான சர்வதேச உடன்பாடாகவே அதிவேக விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் எந்தக் காரணத்தினாலும் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேர்ந்தால் விலகும் நாடு மற்ற நாட்டுக்கு பெரும் தொகையை தருமாறு ஒப்பந்தம் எழுதப்பட்டது. இக்கூட்டமைப்பு முதலில் நீண்டதூர வானூர்தியும் பின்னர் குருந்தொலைவு வானூர்தியும் தயாரிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் குருந்தொலைவு வானூர்திக்கு வாங்குவோரிடம் வரவேற்பு இல்லாததால் நீண்டதூர வானூர்தி மட்டும் உற்பத்தி செய்வதென முடிவு செய்யப்பட்டது.

1965-பிப்ரவரியில் அதிவேக விமான தயாரிப்பின் கட்டுமானம் தொடங்கியது. ஒரு விமானம் (001) பிரான்சிலும் மற்றொரு விமானம் (002) பிரிட்டனிலும் கட்டப்பட்டன. மார்ச் 7, 1969 ல் முதல் விமானம் கான்கார்-001 சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் விமானி ஆந்த்ரே துர்காட் ஆவார். கான்கார்டின் முதல் ஒலி மிஞ்சு வேக பயணம் 1-அக்டோபரில் நிகழ்ந்தது அதன் பின்னர் 2000-க்கும் மேற்பட்ட மணி நேரங்கள் விண்ணில் ஒலி மிஞ்சு வேகத்தில் பறந்து சோதனை நிகழ்த்தப்பட்டது.
கான்கார்ட்நான்கு ஒலிம்பஸ் எந்திரங்களைக் கொண்ட முக்கோண இறக்கை கொண்ட வானூர்தியாகும். ஒலிம்பஸ் எந்திரங்கள் முதலில் அவ்ரோ வல்கன் குண்டுவீசும் போர்விமானத்துக்காக தயாரிக்கப்பட்டவையாகும். கான்கார்ட் உயர் வேகத்துக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டிருந்தது அவற்றில் முக்கியமாக கருதபடுபவை, இரட்டை முக்கோண வடிவ இறக்கை, மாறுபடும் காற்று உட்கொள்ளும் வடிவமைப்பு, மின் கட்டுப்பாட்டில் இயங்கும் உந்து-எந்திரங்கள் ஆகியவை ஆகும்.

உலக உருண்டையை வலம் வர மனிதன் பல மாதங்கள் எடுத்துக்கொண்ட காலம் போய் சில மணி நேரங்களில் உலகைச் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. கன்கார்டு விமானத்தின் வருகைக்குப் பின்னர்தான் இது சாத்தியப்பட்டது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளின் விந்தை தயாரிப்பான இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு ஆயிரத்து 179 கிலோ மீட்டர். அதாவது காற்றில் ஒலி பரவும் வேகத்தைவிட இது மடங்கு அதிகம் மேலும் தற்போதுவரையுள்ள ஏணைய பயணிகள் விமானங்களின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 700kmh தான் என்பது குறிப்பிடதக்கது.

லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு ஒரு கான்கார்ட் விமானம் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விடும். இதற்கான பயணக்கட்டணம் லட்ச ரூபாய். வேகமான வான் பயணத்தில் கன்கார்டு பல சாதனைகளைப் படைத்தது. 1970-களிலேயே கன்கார்டு உருவாக்கப்பட்டு விட்டாலும் வர்த்தகரீதியாக இது 1976-ல் தான் தனது சேவையை தொடங்கியது.மொத்தம் 20 கன்கார்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பிரபல விமான நிறுவனங்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி இயக்கின. ஆனால் லண்டன்-பாரீஸ்லண்டன்-நியூயார்க் மார்க்கங்கள் தவிர மற்ற மார்க்கங்களில் இது பெரும் நஷ்டத்தையே தந்தது. எரிபொருளை பீப்பாய் பீப்பாயாக குடித்ததும்கட்டணங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததும்தான் இந்த நஷ்டத்துக்கு காரணம். இதனால் கன்கார்டு விமானங்கள் மெல்ல மெல்ல சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

கடைசியாக 2003-ம் ஆண்டுதான் கன்கார்டு பறந்தது. அதற்குப் பிறகு பறக்கவேயில்லை. அதாவது கன்கார்டு விமானம் கடைசியில் காயலான் கடை சரக்காகிவிட்டது. வர்த்தகரீதியில் கன்கார்டு ஜெயிக்காவிட்டாலும் கூட தொழில்நுட்பரீதியில் இது உலக அதிசயங்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த விமானத்தில் பெரிய அளவு லாபம் வரவில்லை என்பதால், பயனிகள் வரத்தைவிட செலவு அதிகமாக இருந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டது
இப்போதுள்ள எல்லா பயனிகள் விமானமுமே ஏறக்குறைய ஒரே வேகம்தான். Mach 0.8
X%2043.gifஇல் இருந்து Mach 0.85 ற்குள்
1 Mach= Velocity of sound = 1225 km/h or 761.2 mph
ஆனால் பயணிகள் அல்லாத விமானங்களில் சூபர்சானிக், ஐப்பர் சானிக் விமானம் உள்ளது. நாசா பயன்படுத்தும் X-43 என்ற இந்த ஆளில்லாத விமானம் பயனிக்கும் வேகம் என்ன தெரியுமா? Mach 9.8 . ராக்கெட் இஞ்சின் அல்லாத ஜெட் இஞ்சினை வைத்து இவ்வளவு வேகத்தில் போகும் ஒரே விமானம் இதுதான்..
ஆளுள்ள வேகமாக போகும் விமானம் X-15 என்ற நாசா பயன்படுத்தும் விமானம் இது போகும் வேகம் Mach 6.72 . ஆனால் இதில் ஜெட் இஞ்சின் அல்ல, ராக்கெட் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஜெட் இஞ்சினில், ஆளுடன் வேகமான போகும் விமானம் SR-71 Blackbird (YF-12) என்ற போர் விமானம்(உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது- reconnaissance aircraft ) , இதன் வேகம் Mach 3.2+
ராக்கெட்கள் பொதுவாக எல்லா விமானங்களைவிடவும் வேகமானது, மனிதன் கண்டுபிடித்த வேகமான என்சின் இப்போதைக்கு ராக்கெட் இன்சின் தான். அதைவிட வேகமான இஞ்சின்ங்கள் தோன்றவில்லை (ராக்கெட் இன்சினில் கூட பயன்படுத்தும் எரிபொருளை பொருத்து பல வகைகள் உள்ளது).
ஜெட் இஞ்சினுக்கும் ராக்கெட் இன்சினுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், ஜெட் இன்சின் காற்றை உள்ளிழுத்துக்கொண்டு அதை வேகமாக விசிரி மூலம் வெளியேற்றி முன்னே செல்கிறது. ராக்கெட் இஞ்சின் எரிபொருளை எரித்து அதிலிருந்தும் அபரிமிதமான புகை மற்றும் வாயுக்களை வேகமாக வெளியேற்றி முன்னே செல்கிறது

ஜெட் இன்சின் ஓட காற்று தேவை, ராக்கெட் இன்சினால் காற்று இல்லாத இடத்தில் கூட ஓட முடியும். பொதுவாக ராக்கெட் இன்சினில் திரவ வடிவில் ஆக்சிஜனும் இருக்கும், அதனால் எரிபொருளௌ எரிப்பதற்கு தெவையான ஆக்சிஜனை அதிலிருந்தே பெற்றுக்கொள்ளும், காற்று தேவை இல்லை.

தொகுப்பு : மு அஜ்மல் கான்.

No comments:

Post a Comment