Saturday 2 January 2010

கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் ?

*வயிற்றைக் கிழிக்காத சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பும்.
‘‘சுகப்பிரசவம் நல்லதுதான். ஆனா, பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

*‘‘பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேத்தறது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை லூசாக்கும். பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாம இருக்கிறது, எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிடும்.
*கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றோட ஒரு முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தச்சிட்டா, கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.
*கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டா, அது தனக்குப் பக்கத்துல உள்ள மூத்திரப்பை, மலப் பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும்.சிறுநீர் பை இறங்கத் தொடங்கினா, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள்ள
*எப்போதும் சிறுநீர் தங்கி, இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் வரும். கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யறப்ப, சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும்.
*எதையுமே கவனிக்காம விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம்.பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள்
பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும்’’ என்கிறார் மாலா ராஜ்.

No comments:

Post a Comment