Tuesday 31 May 2011

சமசீர் கல்வி-ஒரு சிறப்பு பார்வை....

தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், சிபிஎஸ்ஈ மற்றும் மெட்ரிகுலேஷன் என 5ந்து வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது . இந்த பாடத்திட்ட முறைகளால் , பல ஆண்டுகளாக ஏகபட்ட குழப்பங்கள் நீடித்துவந்தன.

மேலும், சமூகத்தில் மாணவர்களிடையே பெரும் ஏற்றதாழ்வை உருவாக்கி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கண்மூடித்தனமான கட்டண கொள்ளைகலை இந்த கல்வி முறைகள் ஊக்கப் படுத்தியும் வந்தன.

இந்திய அரசியல் அமைப்பு_சட்டத்தின் 14ம் பிரிவு அனைவரும் சமம் என தெரிவித்தாலும் , சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக, பணகாரர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத மக்களின் பிள்ளைகள், தரம் குறைந்த கல்வியையும் பெறும்சூழல் நிலவிவருகிறது .இது சாதி, மத பேதத்தை விட கொடியது,

"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றால் ஔவை_இன்று
English Medium_களில் குழந்தையை படிக்கவிட்டு_ பிச்சைக்காரர்கள்
ஆவதுதான்_ உண்மை.

அமெரிக்க N.C.A.E.R- நீயூயார்க் என்ற அமைப்பு, இந்திய_மக்களின் சேமிக்கும் திறன் பற்றிய ஒருஆய்வை நடத்தியது. இதில் யா‌ர்யா‌ர் பணம் சேமிக்கிறார்கள் என சர்வே எடுத்துள்ளது அதில் கிடைததகவலின்படி மாதசம்பளம் பெறுபவர்களே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் என்று தெரியவருகிறது எதற்கு என்றால் தங்கள் குழந்தையின் கல்விக்கு என வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் கல்விக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறார்கள் என்பது புரியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் பாசாகவே கஷ்ட்ட படும் ஒரு டாக்டரின் (அல்லது) ஒரு பெரும் செல்வந்தரின் பிள்ளை தனியார் மருத்துவ கல்லூரியில் பல லட்சங்களை தந்து கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றும் வந்து விடுகிறார் ? வந்தவுடனேயே தங்களது பண பலத்தால் ஒரு பெரிய மருத்துவ மனைக்கு சொந்தகாரராகவும் ஆகிவிடுகிறார்

அனால் ஒரு ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அறிவாளி மாணவன் மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து அவன் தனியாக ஒரு சாதாரண கிளினிக் வைப்பதற்குள் அவன் படும் கஷ்ட்டம் சொல்லிமாளாது , இதுவே இந்தியாவில் அறிவு செல்வங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை

இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வு உள்ள நாட்டில் "சமச்சீர் கல்வி" என்பது அவசியத் தேவையாகும்.



சமசீர் கல்வி என்றால் எல்லோருக்கும் சமமான கல்வி எ‌ன்பதாகும். இந்த சமசீர் எப்படிபட்ட கல்வியாக இருக்கவேண்டும்? இதன் அவ‌சிய‌ம் என்ன? இந்த கல்வியின் பயன் என்ன? என்று மக்களுக்கு தெரியவேண்டும்.
கல்வியில் எங்கும் சமசீர் நிலவவேண்டும். அந்நிய தேசத்துடன் அறிவில் போட்டிப்போட நம் நாட்டு குழந்தைகளுக்கு கல்வியை தரமுள்ளதாக தரவேண்டும். அதற்க்கு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அணைத்திலும் உயர்தரமான கல்வி 
வழங்கவேண்டும். அதற்க்கு மாணவ,மாணவிகள் தங்கள் தாய்மொழியை முதல் மொழியாகவும், இரண்டவதாக தேசிய மொழி இந்தியையும், முன்றாவதாக உலகளாவிய மொழி ஆங்கிலத்தையும் தெளிவாக எழதவும் பேசவும் பழக வேண்டும்.

ஏன்ணென்றால் நம் நா‌ட்டி‌ன் பிரதமர், மத்திய மந்திரிகள் பாராளுமண்றத்தில் மற்றும் மேடை விழாக்களில் என்ன பேசுகிறார்கள் என்று மற்றவர் மொழி பெயர்த்து கூறாமல்
தாங்களே தெறிந்துக்கொள்ள முடியும். மேலும் படிக்கும் மாணவ,மாணவிகள் மொழிவரிசை(Language) பாடங்கள் தவிர மற்ற(Maths,Science&Socialscience..)பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்கவேண்டும். அப்பொழுதான் அவர்கள் நம் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகளாவிய அவர்களின் படிப்பு மற்றும் படிப்பு சமந்தமில்லாத பயனுள்ள தகவல்களை அடுத்தவரின் உதவியின்றி அவர்கள் மொழியிலே படித்து உணரஏதுவாகும்.
மேலும் உய‌ர்நிலைப்பயிலும்(HighSchool) மாணவ,மாணவிகளுக்கு கணிணிப்பயிற்சி மற்றும் ஆய்வகப்பயிற்சி பயிற்றுவிக்கவேண்டும். இந்த அடிப்படை கல்வி மிக தரமுள்ளதாக இருக்கும்படி கல்வித்துறை பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு அடிப்படைக்கல்வி நம் வளரும் தலைமுறைக்கு வாயிக்கப்பெற்றால் அவர்களிடையே உள்ள கூச்சசுபாவம் விட்டு போகும் தன்நம்பிக்கை வளரும். அ‌ண்டை மா‌நிலங்களையும் தன் மா‌நிலம்போல என்னவழி பிறக்கும். பொதுநல குணம் வளரும். இப்படி கிடைக்கப்படும் அல்லது கொடுக்கப்படும் கல்விதான் உண்மையில் சமசீர்கல்வியாகும்

Wednesday 25 May 2011

பிளாஸ்டிக் கழிவுகளால் தார் சாலை திட்டம்!! நன்மையா /தீமையா? ஒரு அலசல் !!

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சி முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை முழுமையாக மறு சுழற்சி செய்வதில்லை. இதனால், ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் கழிவுகளை, பயன்படுத்தி பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, தார் சாலை அமைக்கும் திட்டம் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செயல்படஉள்ளது .

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் வழிகாட்டுதலின் படி, 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, நிறுவன வளாகத்தினுள் 200 மீட்டருக்கு பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட்டது.

குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்பு தூள் அடைக்கப்பட்டபிளாஸ்டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத்தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள்களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங்கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும்.சாலைகள், இயந்திரத்தால் தோண்டப்பட்டு, 5 செ.மீ. அளவுக்கு சரளைக் கற்கள் கொட்டிச் சமன் செய்யப்பட்டு. இதன் மேல், 4 செ.மீ. அளவில் பிளாஸ்டிக், தார் கலந்த சிறு சிப்ஸ் கற்கள் கொண்டு சாலை போடப்படுகிறது.இத்துடன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும்.இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்புசெலவு குறைவானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும் என்று மதுரை தியாகராஜர் இன்ஜி., வேதியல் துறை பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்தார். மேலும் பிளாஸ்டிக் தார் சாலையை, குளிர் பிரதேசங்களில் அமைக்க ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசு 42 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பிளாஸ்டிக் கழிவுகளான கேரி பேக், கப், தர்மகோல் ஆகியவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் தார் சாலையை பேராசிரியர் வாசுதேவன் கண்டறிந்தார். இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார கேடுகளை அகற்றவும், தட்பவெட்ப நிலையை சீராக்கவும், பூமி அதிக வெப்பமாவதை தடுக்க முடியும் என வாசுதேவன் ஆய்வில் நிரூபித்தார்.


பயன்கள்..
  • இயந்திரத்தில் போட்ட சாலை போடும் சிறு சரளைக் கற்கள், 170 டிகிரி செல்சியஸ் சூடானதும், சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தூவப்படுகிறது. அவை உருகியதும், தார் ஊற்றிக் கலவை தயாரிக்கப்பட்டு, சாலை போடப்படுகிறது. பிளாஸ்டிக்கின் பிடிப்புத் தன்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலைகள் சேதமடையாமல் இருக்கும்.
  • பிளாஸ்டிக் சாலைகளால் பொருளாதார ரீதியாகவும் பலனுள்ளது. ஒரு சாலை அமைக்கப் பத்து டன் தார் தேவை என்றால் பிளாஸ்டிக் சாலைக்கு ஒன்பது டன் போதும். மீதி ஒரு டன்னுக்குப் பிளாஸ்டிக் போடலாம். ஒரு டன் தார் விலை 46 ஆயிரம் ரூபாய். ஒரு டன் பிளாஸ்டிக் குப்பை 16 ஆயிரம் ரூபாய். சென்னையில், சேகரிக்கப்படும் குப்பையில், 3 சதவீதம் பிளாஸ்டிக், 60 சதவீதம் தாவரம் சார்ந்த பொருட்கள் உள்ளன. பிளாஸ்டிக்குகளை சாலை போடவும், தாவரப் பொருட்களை உரம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
  • ஒரு சாதாரண தார் சாலை, தார் சாலை 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். தார் சாலையில் மழை நீர் தேங்கினால் ஜல்லிகளுக்கும், தாருக்கும் இடையிலான பிணைப்பு குறைந்து, தார் சாலை விரைவில் குண்டும் குழியுமாக மாறிவிடும்.ஆனால், இது போன்ற, எந்த விளைவு களும், பிளாஸ்டிக் சாலையில் ஏற்படாது. சாலையில் பள்ளம், விரிசல் விழாமல், உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கும். தார் சாலையை விட, இரண்டு மடங்குஉறுதியானது. கல்லை, 170 டிகிரி சென்டிகிரேடில் சூடேற்றி, அதன் மீது, பிளாஸ்டிக் துகள்களை தூவுவதால், பிளாஸ்டிக் உருகி, கல் மீது"லேமினேட்' செய்தது போல் ஒட்டிக் கொள்ளும். அதன் மேல், உருகிய தாரை ஊற்றினால், லேமினேட் செய்யப்பட்ட கோட்டிங் கல்லுக்கும், தாருக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டு, சாலையின் தரமும் அதிகரிக்கும்.பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி போடப்படும் தார் சாலைகள் குறைந்தது 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதனால், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளும் அப்புறப்படுத்தப்படும்..அதில் உள்ள நன்மையை விட தீமையை நன்கு அலசி ஆராய வேண்டும்.


தீமைகள்...
  • பிளாஸ்டிக் எப்படி பூமியில் கலக்காமல் இருக்கும்.இது ஒரு பிளாஸ்டிக் குப்பை தொட்டிதான் சாலை வடிவில். மெல்ல சாலையில்  கலக்கப்படும் பிளாஸ்டிக்தூள் சாலையில் ஓடும் வாகன உராய்வினால் துகளாய் மாறி எழும்பி நிலம் நீர் வாயு வில் கலந்து பிரிக்க முடியாத அங்கம் ஆகிவிடும்.  ரோடு தேய்மானம் ஆகும் போது பிளாஸ்டிக் நச்சு நம்முடைய சுவாசத்தில் கலந்து நம் உடல் நலத்தை பாதிக்கும்.மனிதன் சுவாசத்திலும் கலக்கும். இது எப்படி ரயில் பயணிகளுக்கு, அருகில் உள்ளோருக்கு பயணிகள் வெளியிடும் மலம் சிறுநீர் காத்தில் கலந்து நோய் பரப்புகிறதோ அதைபோல் மெல்ல மனித நுரையீரலை பதம் பார்க்கும். இது நம் பூமியை பாதிக்க வைக்கும் அல்லவா. .இதற்கு 5 வருடம் ஆகும். 
  • பிளாஸ்டிக் நுரையீரலில் கலந்தால் வரும் விளைவுகள் எவை? மருத்துவர்கள்தான் விடைகூற வேண்டும். கான்க்ரீட் சாலைகள் ஒருமுறை போட்டால் பல வருடம் தாக்கு பிடிக்கும். கருப்பு சாலைகள் கதிரவன் சூட்டை பூமிக்கு கொண்டுவரும் வரவேற்பு கம்பளம். அதில் புதிதாக இணைந்துள்ளது பிளாஸ்டிக் கலவை. முன்பு வாகனம் செல்லும் பொது தூசி வரும் கண் மூக்கு வழியாக தாக்கும். இனி பிளாஸ்டிக் கலவை தூசியாக பறந்து வந்து தாக்கும். சாலை பிரயாணம் தவிர்பீர். சாலைகள் கான்க்ரீட் ஆகும் வரை. பிளாஸ்டிக் பயன் பாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் மனிதனும் பிற ஊயிர் இனம்களும் அழியும். பறந்து வந்து தாங்கும் கண்ணனுக்கு மறைவான பிளாஸ்டிக் துகள்கள் புல் பூண்டுகளில் தங்கி உண்ணும் கால்நடைகளை பாதிக்கும். கறி பால் இவற்றின் வழியக்க நமக்குள் புகும். ஆக இது கண்டுபிடிப்பல்ல பிளாஸ்டிக் ஒளித்து வைக்கபட்டு பிறகு வெளிபடுத்த படும் ஒரு முறை.
  • வாசுதேவன் " ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதலாக உழைக்கும்" என்கிறார். அப்படிஎன்றால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த பிளாஸ்டிக் பொருட்கள் சுற்று சூழலுடன் கலந்துவிடும். அதன்பின் அதனை பிரிப்பதென்பது இயலாத காரியம். இதனால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். சாலையில் பயணிப்பவர்கள், அருகமையில் குடியிருப்பவர்கள் மற்றும் நிலம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கண்ணுக்கு தெரியும் பிளாஸ்டிக் பொருட்கள் தெரியாத பொருட்களாக மாறி பேராபத்தை உருவாக்கும். 
  • இந்த திட்டம் நம் மண்ணை மலடாக்கி விடுமா? ஏனெனில் தண்ணீர் ரோடுக்குள் உடுருவவில்லை என்றால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நாளடைவில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரு நகரங்களில் ஏற்கெனவே 40% இடம் சாலையாக உள்ளதால் இந்த புதிய பிளாஸ்டிக் சாலைகள் பெரிய இழப்புகளை வருங்காலத்தில் நமக்கு கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த சாலைகள் உள்ள இடங்கள் எல்லாம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் வளர்ந்த நாடுகளில் இந்த முறை பின்பற்றபட்டுள்ளதா என்பதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.



இந்த முறையை பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம் 1999 - 2000 ம் ஆண்டு இதை பயன்படுத்தி ரோடுகளை போட்டு வருகிறது. இதற்காக காப்புரிமையும் அவர்கள் பெறவில்லை. யார் வேண்டுமானாலும் இதை சுற்று புற சூழ்நிலையை கருதி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டது, - இது நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் படிச்சது.இதை இவர் கண்டுபிடித்ததாக தினமலர் வெளியிட்டுள்ளது - 
 http://en.wikipedia.org/wiki/K._Ahmed_Khan


என் கருத்து :
நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மருத்துவம், இயற்பியல், வேதியல், தொல்லியல், உயிரியல், நிலவியல், வேளாண்மையியல், தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அறிவியல்மேதைகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. பல சோதனைகளைக் கடந்து அவர்கள் படைத்துள்ள சாதனைகளால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர்கள்கூட வாழாத சொகுசு வாழ்க்கையை இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியும், பிளாஸ்டிக் தார் சாலை வசதிகளைத் தந்தும், எண்ணெய் விளக்குகூட எரிய வழியில்லாதிருந்த கிராமங்களில் மின்விளக்கை எரியச் செய்தும் மக்கள் வாழ்வை வளப்படுத்தியுள்ளது அறிவியல். ஆனால் அமெரிக்ககாரன் இந்தியா அழியனும்னு பிளாஸ்டிக் கொண்டு வந்தான். ஆனால் நம்ம ஆளு அதையும் நமக்கு சாதகமா மாத்திட்டாரு. சாலெயின் லைப் முடிந்தவுடன் அந்த கழிவுகளை என்ன செய்வதி என்று அதற்கும் ஒரு வழி வகை கண்டுபிடிக்க வேண்டும்..ஒன்று மட்டும் உண்மை  தொழில்நுட்பம்  வளர  வளர  இந்த  உலகம்  அழிவை நோக்கி செல்கிறது என்பதை நாம்  ஒப்பு கொண்டுதான் ஆகவேண்டும்.இவை மனிதரின் அன்றாட வாழ்வுக்கும், நலவாழ்வுக்கும் கடும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன. புதுப்புது நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கத்திற்கு வழிவகுக்கும் அறிவியல், அழிவிற்கும் துணைபோகின்றது என்பதை நாம் மறுக்க இயலாது. 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday 22 May 2011

SUCCESS....

Dear All,
            When I was young I had thoughts about what constituted success. I remember telling someone, as an elementary school student, I would have “Doctor” as a title. I did not know or care in what field I would be “Doctor.”

When I got to middle school I defined success in three stages. First, in college I would be an Indian Cricket Player. Then, I would turn pro and become a millionaire. Finally, I would be elected  as  chief Minister of Tamilnadu.India.

Now as I live in my autumn years (the best and brightest color is yet to come), I reflect on where I have been. I did not become “Doctor.” However, I did earn a Engineering’s degree. Though I still love  cricket, I did not go far with my skills. I did have a college roommate who was a three-time Tamilnadu team  in  cricket. I did not become a millionaire. Yet I often tell people I am a very rich man, though I have little money. I am thankful I lost interest in politics.

I take solace in two poems about “Success.” It is unclear who the author of the first one was. Apparently it has been erroneously attributed to Ralph Waldo Emerson. A similar but longer poem was written by Bessie Anderson Stanley in 1904. The words in both poems speak encouragement and truth to me.

“What is Success”
by Ralph Waldo Emerson (?)

To laugh often and love much;
To win the respect of intelligent people and the affection of children;
To earn the approval of honest critics and endure the betrayal of false friends;
To appreciate beauty;
To find the best in others;
To give of one’s self;
To leave the world a bit better, whether by a healthy child, a garden patch, or a redeemed social condition;
To have played and laughed with enthusiasm and sung with exultation;
To know even one life has breathed easier because you have lived…
This is to have succeeded.

“Success”
by Bessie Stanley

He has achieved success
who has lived well,
laughed often, and loved much;
who has enjoyed the trust of pure women,
the respect of intelligent men
and the love of little children;
who has filled his niche and accomplished his task;
who has left the world better than he found it
whether by an improved poppy,
a perfect poem, or a rescued soul;
who has never lacked appreciation of Earth's beauty
or failed to express it;
who has always looked for the best in others
and given them the best he had;
whose life was an inspiration;
whose memory a benediction.

Below is a slideshow with descriptions of success.