Friday 30 December 2011

இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா? ...

இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா?

இதை ஒரு ஆலிமிடம் நீங்கள் கேட்டால் அவர் சட்டென இஸ்லாமியக் கல்வியென்று பதில் சொல்வார். ஆனால் இந்த விடை நிச்சயமாக தவறு.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இருவிதமான கல்வி என்ற பாகுபாடே கிடையாது.இஸ்லாமியக் கல்வியும் சரி உலகக் கல்வியும் சரி சமமே. இந்த பாகுபாடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கவில்லை. இது பிற்பாடு மாற்றுமதத்தவர்களால் குறிப்பாக மேற்கத்தியர்களால் தோற்றுவிக்கப்பட்டது.எதற்காக இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக!

ஆங்கிலத்திலே ஒரு வாக்கியம் உண்டு "Give to Caesar what is Caesar's and to God what is God's" அதாவது "அரசருக்கு கொடுப்பதை அரசருக்கு கொடு கடவுளுக்கு கொடுப்பதை கடவுளுக்கு கொடு".

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவழிபாடு, மதம், அரசியல், குடும்பம் என அனைத்துமே ஒன்றுதான். இதன் காரணமாகவே இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் மிக வேகமாக அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறக் கூடியளவு வளர்ந்தது.இதை நன்கு உணர்ந்த மேற்கத்தியர்கள் முஸ்லிம்களை இதுபோன்ற நிலையில் நிச்சயம் வெற்றிகொள்ள முடியாது என முடிவு செய்து அவர்கள் செய்த குழப்பமே இன்று நாம் இஸ்லாமியக் கல்வியா உலகக் கல்வியா என்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கல்வியை பிரித்துப் பார்த்ததின் விளைவு இன்று ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கின்றோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரிலே சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை தங்களுக்கு தெரிந்த கல்வியை தம் மக்களுக்கு கற்றுக்கொடுக்கச் சொல்லி விடுவித்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சற்று சிந்தித்து பாருங்கள் காபிர்களிடம் மார்க்கக் கல்வியா அந்த ஸ்ஹாபாக்கள் கற்றிருப்பார்கள்.

சீனா சென்றாயினும் கல்வியை பயின்றுகொள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களே அதுவும் என்ன மார்க்கக் கல்வியை கற்கவா? முஹம்மது (ஸல்) அவர்களைவிட வேறு யாரிடம் அந்த ஸஹாபாக்கள் மார்க்கம் பயிலப்போகிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பார்த்தோமேயானால் நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் யூதனால் கழுத்தை நெறிக்கப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
அகல்போரின் போது ஸஹாபாக்கள் தங்களது வயிற்றிலே ஒரு கல்லை கட்டிக் கொண்டு அகல் தோண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இரண்டு கற்களை கட்டிக்கொண்டு அகல் தோண்டினார்களே அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் புராக் வாகனத்திலே விண்ணுலகப் பயணம் சென்றார்கள் என்பதை நம்மால் ம்றுக்க முடியுமா?

அனைத்திற்கும் மேலாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்ற மக்கா வெற்றியைச் சிந்தித்துப்பாருங்கள். இஸ்லாத்தை எத்தி வைத்ததற்காக தங்களை கல்லால் அடித்தவர்கள், தங்களை ஊரை விட்டே துரத்தியவர்கள், மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்று தெரிந்து ஓடி ஒழிந்து கொண்டார்கள். எந்தவித சண்டையும் இல்லாமல் மக்கா வெற்றிகொள்ளப்படுகிறது.வெற்றிகொண்டுவிட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து குறைஷிகளையும் மன்னித்தார்கள் என்பதை எந்த சரித்திர ஆய்வாளர்களும் ஆச்சரியத்துடன் குறிபிட மறந்ததில்லை.இது உலக சரித்திரத்தில் எங்கும் நடந்ததில்லை நடக்கப்போவதுமில்லை என்பதே உண்மை. அன்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அத்தனை மக்காவாசிகளையும் கொன்று குவித்திருக்கலாம் ஆனால் இஸ்லாம் வளர்ந்திருக்காது.

இதன் மூலம் முஹம்மது நபி (ஸல்) இஸ்லாம் உலகம் என்று எதையுமே பிரித்துப்பார்த்ததில்லை என்பதை நாம் உணர முடியும். அதன் காரணமாகவே பிற்காலத்தில் இஸ்லாம் மத்திய ஆசியா முழுவதும் பரவிற்று என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்பொழுது இன்று நாம் இஸ்லாமியக் கல்வி உலகக் கல்வியென்று பிரித்துப்பார்ததினால் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை பாருங்கள். பெற்ற மகனை கணிப்பொறி விஞ்ஞானியாக படிக்கவைத்தோம் ஆனால் இஸ்லாத்தை விட்டுவிட்டொம் விளைவு நிறைய சம்பாதிக்கிறான் ஆனால் பப் என்றும் டிச்கோ என்றும் சுற்றி வாழ்க்கையை இழந்து நிற்கக்காண்கிறோம். பெற்ற மகளை கல்லூரியிலே படிக்க வைத்தோம் இஸ்லாத்தை விட்டுவிட்டோம் விளைவு யாரோ ஒரு காபிருடன் குடும்பம் நடத்தும் இழிநிலையை காண்கின்றோம்.
சரி இதுதான் இப்படி மார்கக்கல்வி பயின்றவர்களாவது நன்றாக இருக்கிறார்களா என்றால் நிச்சயம் அதுவுமில்லை. ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஜமாத் கடிதத்தை கொடுத்து என் பெண் பிள்ளைக்கு கல்யாணம் உதவி செய்யுங்கள் என்று கையேந்த விட்டுவிட்டோம்.
சற்று சிந்தித்த்ப்பாருங்கள் சகோதரர்களே உங்களுடைய பிள்ளை கணிப்பொறி விஞ்ஞானியாக அதே சமயம் மார்க்கமும் தெரிந்திருந்தால் நிச்சயம் பப், டிஸ்கோ என்று வாழ்க்கை சீரழிந்திருக்குமா? உங்கள் பெண் பிள்ளை காபிருடன் ஓடிப்போகும் இழிநிலைதான் ஏற்பட்டிருக்குமா? அதுபோல இமாம்கள் உலகக் கல்வி பயின்றிருந்தால் இப்படி கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?
ஆகவே இனிமேலாவாது நாம் அனைவரும் உலகக் கல்வி இஸ்லாமியக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்தையும் கற்று அல்லாஹ்வும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன வழிமுறைப்படி வாழ ஏக இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்.

No comments:

Post a Comment