Sunday 15 January 2012

முகத்தில் கருமை நீங்க





  • முகத்தின் கருமை வர முதல் காரனமே உடலின் நீர்ச்சத்து குறைவது தான்.
  • உடலின் நீர்ச்சத்து குறைந்தால் முதுமையான முகத்தோற்றம் வரும்.
  • இதனை தடுக்க முதலில் தண்ணீர் ஓர் நாளுக்கு 12 டம்ளர் குடிக்கவும். வெளி அழகில் மட்டும் அக்கரை காட்டாமல் நாம் சாப்பிடும் உணவிலும் நிறைய அக்கரை காட்டனும்.
  • நிறைய விட்டமின்கள் நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவும்.
  • டீ.வீயில் வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு வாங்காமல் உங்கள் சருமத்துக்கு ஏற்ற தரமான சோப்பை பயன்படுத்தவும்.


கருமையினை போக்க நீங்கள் செய்யவேண்டியவை:

  •  வெள்ளரிக்காயினை தோல் சீவி நன்றாக நைசாக அரைத்து முகத்துக்கு பேக் போடவும்.. வாரம் 2 முறை போடலாம். அதிகமாக பாதிப்பு இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடலாம். சருமமும் நல்ல குளிர்ச்சியாகும்.
  • இரவில் படுக்கும் முன்பு வெறும் பசும் பாலை பஞ்சில் முக்கி முகத்தை துடைக்கவும்.
  • 1ஸூபூன் ஓட்ஸ், 2 பாதம் பருப்பை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து பேக் கோடலாம்.
  • ஐஸ் கட்டிகளை ஒரு மெல்லிய துணியில் போட்டு அடிக்கடி ஓத்தடம் கொடுக்கலாம்.




  • மசித்த பப்பாளி பழத்தை முகம், கழுத்து, கை என்று வெயில் படும் இடங்களில் பூசி 30நிமிடம் கழித்து குளிர்க்கவும். கருமை மாரும்..
  • புளித்த தயிர்/மோர் கடலைமாவு சேர்த்து மிக்ஸ் செய்து தினமும் குளிக்கும் முன்பு 15 நிமிடம் பேஷ் பேக் போட்டு பின்பு குளிக்கலாம்
  • நேரம் கிடைக்கும் பொழுது பப்பாளி, ஆப்பிள் கூழாக்கி அத்துடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவவும்.
  • தர்பூசினிபழச்சாறு, மற்றும் பயத்தமாவு சேர்ந்து நன்றாக குழைத்து முகத்துக்கு பேக் போடலாம்। முகம் பொலிவாக இருக்கும்


முகத்தில் திட்டு திட்டாக கருமையிருக்கும் அதனை போக்க சில வழிகள்


  • காலிப்ஃபளவரை சிறிது நசுக்கி ஜீஸ்சாக்கி அதனை முகத்தில் தடவலாம். அல்லது சிகப்பு முள்ளங்கிச்சாறு, பாலும் கலந்து தேய்க்கலாம். பலன் கிடைக்கும்.
  • சந்தனம், ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து சரிசமமாக எடுத்து சிறிது தண்ணீர் அரைத்து கருமையுள்ள இடங்களில் தேய்க்கலாம்.
  • கருஞ்சீரகம்தூள், ஆலீவ் ஆயில் கலந்து முகத்தில் தடவினாலும் கருமை திட்டுகள் மறையும்.
  • உருளைக் கிழக்கு சாறு, பால் சிறிது, பயத்த மாவு 1ஸ்பூன் நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போடலாம் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
  • இங்கு கொடுக்கும் டிப்ஸில் உங்கள் உடல் நலனுக்கு ஏற்றதை மட்டும் எடுத்து செய்யவும்..

No comments:

Post a Comment