Sunday 15 January 2012

உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் ரஷ்யாவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.




இரத்தினக்கற்களாலும்,தங்கத்தாலும் அழகுபடுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ரஷ்யாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புனித அல்குர்ஆனானது 800கிலோகிராம் எடை கொண்டதுடன் 632பக்கங்களைக் கொண்டுள்ளது.இது 2மீற்றர் நீளமும்,1.5மீற்றர்அகலமும் கொண்டது. தங்கம் மற்றும்வெள்ளியினால் இதன் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. பெறுமதியான நீலப்பச்சையான இரத்தினக் கற்களால் இப்புனித அல்குர்ஆனின் முன்அட்டை அழகுபடுத்தப்பட்டுள்ளது.  மேலும் இதன்பெறுமதி இன்னும் அறியப்படவில்லை.நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்தஇப்புனித நூலானது ரஷ்யாவின் கலாச்சார மற்றும் மரபுரிமைகள் நிதியத்தின் வேண்டுகோளிக்கு இணங்க இத்தாலியில் உருவாக்கப்பட்டதாகும். பெறுமதிவாய்ந்த இக்குர்ஆன் பிரதியானது ரஷ்யா முஸ்லிம்களுக்குப் பெரும் பரிசாகும் என ரஷ்யாவின் டடர்ஸ்தான் முஸ்லிம்களின் ஆன்மீகத்தலைவரான ஐதூஸ் பைதூஸ் தெரிவித்துள்ளார்.



உலகின் இரண்டவாது மிகப்பெரிய அல்குர்ஆனானது இந்தோனேஷியாவின் சுமத்ராபிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1.77மீற்றர் நீளமும்,1.4மீற்றர் அகலமும் உடையது.

No comments:

Post a Comment