Thursday 5 July 2012

இலண்டன் 2012 ஒலிம்பிக்-ஒரு சிறப்பு பார்வை ...




ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர்நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ளஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர்பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

ஒலிம்பிக்ஸ் நடந்த மற்றும் நடைபெறுகின்ற இடங்கள்....

வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
 
இதே  ஆண்டில் ஜூலை 27 முதல் கஸ்ட் 12 வரை இலண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

ஏன் இலண்டனில்?

2012 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு 2003 இல் 9 வேறுபட்ட நகரங்கள் தேர்வுக் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC)தீவிர மதிப்பீட்டின் பின்னர் அந்த எண்ணிக்கை இலண்டன் மட்றிஸ் மொஸ்கோ நியூயோர்க் மற்றும் பாரிஸ் எனக் 5 ஆகக் குறைக்கப்பட்டது. மட்றிஸ் மற்றும் பாரிஸ் உறுதியான சாத்தியத்தைக் கொண்டிருந்த போதிலும் சிறிய இடைவெளியில் இலண்டன் தேர்வுக் கோரலில் வெற்றி கொண்டது என 2005 இல் அறிவிக்கப்பட்டது.
இலண்டனிற்கான வெற்றி ஒலிம்பிக் விளையாட்டுக்களை மூன்றாவது தடைவ நடத்துவதற்கு உலகில் முதலாவது நகரமாக அதனைத் தேர்ந்தெடுத்தமை அதன் பாரிய வெற்றியைக் குறிக்கிறது.

ஆயத்தங்கள்

தேர்வுக் கோரிக்கையை வென்றதில் இருந்து, பிரமாண்டமான  விளையாட்டுடன் கூடிய, சமூக, கலாசார நிகழ்வொன்றினை இலண்டன் ஒலிம்பிக்கில் நடாத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒலிம்பிக் குழுக்களும் அமைப்புக்களும்
பல கம்பனிகள் விளையாட்டுக்குப் பங்களிப்புச் செய்கின்ற போதிலும் இவை முக்கிய நிறுவனங்களாகும்:
• ஒலிம்பிக் விளையாட்டுக்கான இலண்டன் ஒழுங்கமைப்புக் குழு (LOCOG) விளையாட்டுப் போட்டிகளைத் திட்டமிடுதலையும் முன்னேற்ற மேற்பார்வையையும் செய்கிறது. இந்தக் குழுவானது முன்னாள் சிறந்த தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவரும் பின்னர் அரசியல்வாதியாக மாறியவருமான லோர்ட் ஒஸ்ரியன் கோ வினால் தலைமை தாங்கப்பட்டது.
• ஒலிம்பிக்கை வழங்கும் அதிகார சபை (ODA) இது ஒலிம்பிக் விளையாட்டுக்கான இலண்டன் ஒழுங்கமைப்புக் குழுவுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது. ஒலிம்பிக்கை வழங்கும் அதிகார சபையானது (ODA) விளையாட்டுப் போட்டிகளுக்கான இடங்கள் தேவையான உட்புறக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கிறது.
• அரசாங்க ஒலிம்பிக் நிறைவேற்றுகை (Government Olympic Executive) ஐக்கிய இராச்சிய அரசாங்க அமைப்பு இலண்டன் 2012 ஒலிம்பிக் இணைப்பில் தலைமை வகிக்கின்றது. இந்தப் பிரிவு கலாசாரம்  ஊடகம் மற்றும் விளையாட்டுகளுக்கான திணைக்களத்தின் (DCMS) அடிப்படையில் அமைந்திருக்கின்றது.  

நிதி

விளையாட்டுப்போட்டிகளுக்கான மொத்தச் செலவு 9 பில்லியன் பவுண்ஸ்சிற்கும் மேற்பட்டதென மதிப்பிடப்பட்டுள்ளது.  ஒலிம்பிக் அமைவிடங்களை உருவாக்குவது மற்றும் விளையாட்டுக்கள் நடைபெறும் இடத்தின் சரியான உட்கட்டமைப்பினை உறுதிசெய்வது என்பவற்றிற்கு ஆரம்பத்தில் பொதுமக்களின் வரிகளில் இருந்து நிதியிடப்படும்.  விளையாட்டுப்போட்டிகளுக்குப் பிரதானமாக தனியார் துறையினரால் நிதியிடப்படும்.

அமைவிடங்கள்

இலண்டன் விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கு ஏதவாக முழுத் தயார்ப்படுத்தலைச் செய்துகொண்டிருக்கின்றது.  புதிய பழைய வரலாற்று, தற்காலிகக் கட்டடங்கள் மற்றும் கட்டடத் தொகுதிகள்ஒலிம்பிக் அமைவிடங்களாகபயன்படுத்தப்படுகின்றன.  
பெரிய இலண்டன் 3 வலயங்களாகப் பிரிக்கப்படும்.

• ஒலிம்பிக் வலயம்: வீணான தொழிற்றுறை சார்ந்த நிலத்தில் கிழக்கு இலண்டன் ஸ்ரட்போட்டில் ஒலிம்பிக் பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பூங்கா ஒலிம்பிக் அரங்கு - நிலையம் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களுக்கான தங்குமிடத்தினைக் கொண்ட ஒலிம்பிக் கிராமம் என்பவற்றினைக் கொண்டிருக்கும்.  

• ஆற்று வலயம்:  முன்னர் மிலேனியம் மண்டபம் மற்றும் Excel கண்காட்சி நிலையமாக அறியப்பட்ட போட்டி நடக்கும் இடங்கள் 02 உள்ளடங்களாக ஆற்றுவலயம் என 05 பிரதான இடங்களாகும்.  

• மத்திய வலயம்:  வெம்பில அங்கம், ஹைப்பூங்கா போன்ற பிரதானமான இலண்டன் மத்தி மற்றும் மேற்கினைச் சூழவுள்ள அமைவிடங்கள்
ஏனைய சில விடயங்கள், நிகழ்ச்சிகள் இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் உள்ள டேரர்சேற்றியிலுள்ள ‘வெமவுத்தைச்’ சூழ நடக்கவுள்ள Rowing & sailing  போன்றவையும் இலண்டனுக்கு வெளியே நடைபெறவுள்ளன.


போக்குவரத்து

இலண்டனில் பொதுப் போக்குவரத்து ஏற்கனவே பலமான நிலையிலுள்ளது. ஆனால் பொதுமக்கள் அமைவிடங்களுக்கு நேரத்திற்கும் வசதியாகவும் வருகை தருவதனை உறுதி செய்வதற்காக மேலும் வசதி செய்யப்படுகின்றது. இலண்டன் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு, இலண்டன் நிலத்திற்குக் கீழான தள அமைப்பை  கிழக்கு இலண்டன் எல்லை வரையாக  விரிவாக்குவதன் மூலம் மேம்படுத்தப்படும். ‘டோக்லாண்ட்ஸ் சிறியரக புகையிரத வழி (Docklands Light Railway) தரமுயர்த்தப்படும்.
பயணிகள் St.Pancras International (Euro star அமைந்துள்ள) இலிருந்து ஒலிம்பிக் பூங்காவிற்கு ஏற்றிச் செல்கின்ற ஒலிம்பிக் ஜவ்லின் புகையிரத சேவையை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த புகையினை வெளிவிடும் வாகனங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் M 25 (Motorway circling Greater London) சில எண்ணிக்கையான தரிப்பிடம் ஓட்டப்பாதைகள் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.
இலண்டனுக்கான போக்குவரத்து, போக்குவரத்துத் திணைக்களம் அதி வேக வீதி முகவர்கள் உள்ளடங்கலான முக்கிய பங்குதாரர்கள் போக்குவரத்துக் கட்டமைப்பை அமைக்கின்றன.

உத்தியோகபூர்வ ஒலிம்பிக் முத்திரை

2012 இல் ஒலிம்பிக்கிற்கான உத்தியோகபூர்வ முத்திரையானது வோல்வ் ஒலின்ஸ் (Wolff Olins) என்ற குறி (Brand) அமைக்கும் ஆலோசகரினால் வடிவமைக்கப்பட்டு 2007 யூன் மாதம் வெளியிடப்பட்டது. இது நிறங்களில் கிடைக்கப்படுகிறது.  முதன் முறையாக ஒலிம்பிக், பராலிம்பிக் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
பசுமை ஒலிம்பிக்

நிலையான ஒலிம்பிக் போட்டியொன்றினை 2012 இல் இலண்டனில் செய்வதற்கு திட்டங்கள் நடைபெறுகின்றன. நிலையான இலண்டன் 2012 இற்கான ஆணைக்குழு விளையாட்டுப் போட்டிக்கு மிகவும் வசதியான திகதியை உறுதிப்படுத்துவதற்கு 2007 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதான நோக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

• ஒலிம்பிக் பூங்கா மற்றும் அமைவிடங்களில் குறைந்தளவு கார்பனை வெளியேற்றும் கட்டிடங்களைப் பயன்படுத்தல்

• அரங்குகளை அமைக்கும் போது கழிவுகளைக் குறைத்தல்

• புவியியல் வளங்களைப் பயன்படுத்தல்

• ஆரோக்கிய வாழ்வை சீர்ப்படுத்தலும் மேம்படுத்தலும்

• புதிய ஒலிம்பிக் பூங்காவிற்குள்ளேயும் வெளியேயும் உள்ள சமூகங்களுடன் செயற்படுதல்

விளையாட்டுச் செயற்பாடுகள்

வில்லாண்மையிலிருந்து தடகள விளையாட்டுப் போட்டிகள் வரை 26 விளையாட்டுச் செயற்பாடுகள் ஒலிம்பிக் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்படுகின்றன. 20 நிகழ்ச்சிகள் ஒலிம்பிக் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 5 பேரை ஒரு பக்கத்தில் கொண்ட உதைப்பந்தாட்டம் மற்றும் சக்கரநாற்காலி, மென்பந்து உள்ளடங்கலான சில எண்ணிக்கையான விளையாட்டுப் போட்டிகள் பரா ஒலிம்பிக்கிற்காகப் பட்டியற்படுத்தப்படுகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக மேலும் அறிவதற்கு  ஒலிம்பிக்  இணையத்தளத்தைப் பார்க்கவும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment