Friday 3 August 2012

நமது குடும்ப நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்-ஒரு இஸ்லாமிய பார்வை ....


மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.

o  பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
o  பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
o  பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
o  ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
o  பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
o  குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
o  குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
o  பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
o  திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
o  மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
o  பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
o  பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
o  பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
o  பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
o  பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
o  பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது :
o  திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
o  பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
o  திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
o  சில குறிப்பிட்ட நேரங்களில், நாள்களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
o  துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
o  பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
o  பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
o  பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
o  கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
o  மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
o  பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
o  ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
o  நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
o  இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
o  நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
o  கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
o  பெண்கள் நடனமாடுவது.
o  வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
o  படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
o  தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
பாவமன்னிப்புக் கோர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த துஆக்கள் :
o  யா அல்லாஹ்! நீயே எனது இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்னை நீயே படைத்தாய். நான் உன்னுடைய அடிமை. என்னால் முடிந்த அளவு உனது உடன்படிக்கையின் மீதும் உன் வாக்குறுதியின் மீதும் (நிலைத்து) இருக்கிறேன். நான் செய்த செயல்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாது காவல் தேடுகிறேன். நீ என்மீது அருளிய அருட் கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் நான் என் பாவத்தையும் ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)
o  யா அல்லாஹ்! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் நீ தூரத்தை ஏற்படுத்தியது போல் எனக்கும் என் தவறுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ்! வெண்மை யான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவது போல் என் தவறுகளிலிருந்து என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! யா அல்லாஹ்! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டி யாலும் என் தவறுகளை கழுவிடுவாயாக! (புகாரி, முஸ்லிம்)
o  யா அல்லாஹ்! எனது தவறுகளையும் அறியாமல் செய்த பாவங்களையும் மன்னிப் பாயாக! எனது செயல்பாடுகளில் நான் வரம்பு கடந்தவற்றையும் மன்னிப்பாயாக! என்னைவிட அதிகமாக நீ அறிந்திருக்கும் எனது பாவங்களையும் மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களில் விரும்பிச் செய்தவற்றையும், விளை யாட்டாகக் கருதிச் செய்தவற்றையும், தெரிந்து செய்தவற்றையும், தெரியாமல் செய்தவற்றையும், இன்னும் என்னிடம் நிகழ்ந்த எல்லாப் பாவங்களையும் மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! நான் முற்காலத்தில் செய்த பாவங்களையும், பிற் காலத்தில் செய்த பாவங்களையும், மறைமுகமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக! நீயே முதலானவன்! நீயே முடிவானவன்! இன்னும் அனைத்தின் மீதும் நீயே பேராற்றல் உள்ளவன். (புகாரி, முஸ்லிம்)
o  யா அல்லாஹ்! கஷ்டமான சோதனைகளை விட்டும், தீமைகள் பீடிப்பதை விட்டும், மோசமான தீய முடிவை விட்டும், (நான் கஷ்டப்படுவது கண்டு) எதிரிகள் மகிழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி, முஸ்லிம்)
o  யா அல்லாஹ்! எனது செயல்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும் எனது மார்க்கக் கடமைகளை எனக்கு சீர்படுத்தித் தருவாயாக! நான் வாழக்கூடிய என் உலக வாழ்க்கையையும் சீர்படுத்துவாயாக! நான் மீண்டு செல்லக்கூடிய எனது மறுமை வாழ்க்கையையும் சீர்படுத்து வாயாக! எனது வாழ்நாளை நான் அதிகம் நன்மைகளை சேகரித்துக் கொள்வதற்குத் தகுந்ததாக ஆக்குவாயாக! எல்லா தீமைகளி லிருந்து எனக்கு விடுதலையாக எனது மரணத்தை ஆக்குவாயாக! (முஸ்லிம்)
o  யா அல்லாஹ்! நான் உன்னிடம் நேர் வழியையும், இறையச்சத்தையும், நல்லொழுக் கத்தையும் செல்வச் செழிப்பையும் வேண்டு கிறேன். (முஸ்லிம், திர்மிதி)
o  யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள்புரிவாயாக! எனக்கு சுகமளிப்பாயாக! எனக்கு இரணமளிப்பாயாக! (முஸ்லிம்)
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

جَزَاكَ اللَّهُ خَيْرًا - ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித்,
தமிழில்: அ. உமர் ஷரீஃப், வெளியீடு: மதாருல் வதன் கல்வி ஆராய்ச்சி நிலையம்.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment