Thursday 16 August 2012

நோன்பு என்றால் பட்டினி கிடப்பதா ? ஏன் ? எதற்கு ?எப்படி ?





நண்பர்களே 
சகோதர சகோதரிகளே 

உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த மாதம் விரதம் இருப்பது உங்கள் நண்பர்கள் அண்டை வீட்டார்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள்.
அவங்க ஏன் இப்படி பட்டினி கிடக்கனும்?

ராத்திரி பூரா FULL கட்டு கட்டிட்டு காலையில விரதமா நல்ல கதை ?

இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம் அதை எடுத்து சொல்லி 
நன்மையை கொள்ளை அடிக்க சித்தம் இன்று ...

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் கட்டளையின் அடிபடையில தான் முஸ்லிம்கள் விரதம் இருக்கிறார்கலாம் .அதாவது சூரியன் உதயாமாகியது முதல் ( உண்ணாமல்  பருகாமல் இருப்பார்கள் சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை. இது ஒவ்வரு நாட்டிற்கும் டைம் வேறுபாடு ஆகும். உதாரணமாக வெயில் காலங்களில் இந்தியாவில் சரசரியாக  13 மணி நேரம், அராபிய நாடுகளில் 14  மணி நேரம்,ஐரோப்பா கண்டகளில் 15  மணி நேரம் ஆகிறது.அப்ப ராத்திரியில FULL கட்டு கட்டிட்டு கவுந்து படுத்துருவாங்கலான்னா ? 

இல்லையாம் . இந்த மாதம் முடிந்த வரை தூங்காமல் விழித்து இருந்து தொழுகையில் ஈடுபடுவான்கலாம் .

ஏன் ?
                         இந்த மனித வாழ்க்கை ஒரு பரிட்ச்சை என்றும் அதில் பாஸ் பண்ணுனா சுவர்க்கம் பெயில் ஆனா நரகம் என்றும் முஸ்லிம்கள் நம்புறாங்க.பாஸ் பண்ணுறதுக்கு நம்மை படைத்த இறைவன்  ஒருவனே என்றும் அவனோட வேதம் உண்மைன்னும் நம்பி தன் விருப்பங்களை இறைவனிடம்  சமர்பிக்கணும் நல்லவனா  வாழனும் பொய் சொல்லாம , திருடாமல், அளவு நிறுவைகளில் வியாபாரத்தில் நேர்மையா இருந்து ,அடுத்தவுங்க சொத்தை அபகரிக்காமல்,எந்த அப்பாவி உயிர்களுக்கும்  தீங்கு விளைவிக்காமல் வாழனும்.இறைவனை தொழுது வணங்கி வரணும் அப்ப தான் நீங்க பாஸ் 
      
இப்படி செய்ய சொல்லுறதுல  அவங்க அல்லாவுக்கு என்ன பயன் ?    
             நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும்   நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.

ஒரு நாளின் ஒழுக்கத்திற்கு ஐந்து வேலை தொழுகையும்,அடுத்து  வரும் ஒரு வருட ஒழுக்கமான வாழ்வுக்கு இந்த நோன்பும் மனிதனுக்கு பெரிய உதவி செய்யுறதா மனோத்தத்துவ ஆய்வுகள் கூறுதாம்.

இப்படி நல்லதே போதிக்குற மார்க்கத்துக்கு சில கருப்பு ஆடுகளால் கெட்ட பேர் ,அவங்க  கூட இந்த ரமலான் மாசத்தை  பயன் படுத்தி திருந்தி வாழ இது ஒரு வாய்ப்பாம்.


எப்படி ?

  இப்போ சில புகை பிடிக்கும் நபர்கள் கூட இந்த ஒரு மாத நேரத்தில் பக்தி முத்தி  புகை பிடிபிப்பதை நிறுத்திடு வாங்க ,அதை அப்படியே தொடர்ந்தால் யாருக்கு நல்லது யோசிச்சு பாருங்க. இப்படி எல்லா கெட்ட பழக்கத்துக்கும் குட் பை சொல்லாமாம் ..
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...
அப்படின்னா இந்த பயிற்சி காலத்தில இருக்குற எல்லா நண்பர்களும் நோன்பு நோற்று அதன் பயனை முழுமையா பெறுவதற்கு வாழ்த்துக்கள் கூறிட்டு ஆபீட்டு ஆயிடுவோம் சரியா 


தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

1 comment:

  1. what ever said above is correct,but after sunset breaking the fast, most of people they live routine life, like smoking, eating Ghat(IN YEMEN), Smoking is kukka... and what ever they do as usual... is it correct.. pls explain to them how to behave in ramadan month after sunset also..

    ReplyDelete