Tuesday 18 September 2012

உங்கள் குழந்தைகளை வளர்ப்பது எப்படி(டீன் ஏஜில் உள்ள பிள்ளைகளின் சுயமதிப்பு)?- பகுதி-5...


டீன் ஏஜில் உள்ள ஒரு இளைஞனோ, யுவதியோ தன்னைத் தானே எந்தளவுக்கு ஆற்றல் கொண்டவராகவும் நேசிக்கபட்டவராகவும் மதிப்பிடுகிறார்கள் என்பதே சுய மதிப்பீடு என்கிறோம் .

இதை பற்றி இங்கு ஆராய்வோம் 










பொதுவில் பிள்ளைகள் இரண்டே ரகம்!

சுயமதிப்பை உணர்ந்தவர்கள் ஒரு ரகம். சுயமதிப்பு குறைவாக உள்ளவர்கள் இன்னொரு ரகம்! இந்த வித்யாசத்தை உணர்ந்து, அதற்கேற்ப பிள்ளைகளை அணுகினாலே, பெற்றோரின் வளர்ப்பு பாரம் பாதி குறையும்.

சுய மதிப்பை உணர்ந்த பிள்ளைகளுக்கு அதுவே உலக சவால்களை சந்திப்பதற்கான கவசமாக அமையும். அப்படிப் பட்ட பிள்ளைகள் தமது பலம், பலவீனங்களை உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கை சுமைகளையும், பிரச்னைகளையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்கள். யதார்த்தவாதிகளாகவும்,      நற்சிந்தனையாளர்களாகவும் நன்னோக்குடனும் இருப்பார்கள்.

சுயமதிப்பை அறியாதவர்கள் இதற்கு நேரெதிராக, எப்போதும் பதற்றத்துடனும், சலிப்புடனும் இருப்பார்கள். தம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனைகளே இருக்காது. எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கண்டுபிடிக்கத் தெரியாமல் தடுமாறுவார்கள். 'நான் சரியில்லை...' 'என்னால எதையும் சரியா பண்ண முடியாது' என்கிற எண்ணங்கள் அவர்களுக்குள் எழுந்தால் அவர்கள் உள்ளடங்கி மனச்சோர்வுடன் விளங்குவார்கள். ஏதேனும் ஒரு புதிய சவாலை அவர்களுக்கு முன் வைத்தால், அவர்களது உடனடி பதில் 'என்னால முடியாது' என்பதாகத் தான் இருக்கும்.

சரி அதென்ன சுய மதிப்பீடு?

டீன் ஏஜில் உள்ள ஒரு இளைஞனோ, யுவதியோ தன்னைத் தானே எந்தளவுக்கு ஆற்றல் கொண்டவராகவும் நேசிக்கபட்டவராகவும் மதிப்பிடுகிறார்கள் என்பதே சுய மதிப்பீடு.  இது குழந்தைப் பருவத்தில் தொடங்கி, பெரியவர்களாக பக்குவமடையும் வரை தொடரக் கூடியதானாலும் அவ்வப்போது மாறிக்கொடிருக்கும்.
ஒரு குழந்தை எதையோ பெரிதாக சாதிக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை நினைத்து அந்தக் குழந்தைக்கு எக்கச்சக்க பெருமையாக இருந்தாலும் அந்தக் குழந்தைக்கு எதிர்பார்த்த அன்பு கிடைக்கவில்லை என்றால், அதன் சுயமதிப்பீடு குறைந்துவிடும். அதே போல் மிகவும் நேசிக்கப்படும் குழந்தை, தனக்கு ஆற்றல் குறைவு என உணர்ந்தால் அதன் சுய மதிப்பீடு குறையவே செய்யும். நேசமும் ஆற்றலும் சமமாக உள்ள போதுதான் பக்குவமான சுயமதிப்பீடு உருவாகும்.

சுயமதிப்பீட்டு வளற்சி வாழ்க்கையில் வெகு சீக்கிரமே ஆரம்பிக்கப் பட வேண்டும். வளர்ந்து பெரியவர்களான பிறகு, நாம் நம்மை எந்த கண்ணோட்டதில் பார்க்கிறோம், எப்படி மதிப்பிடுகிறோம் என்பதை மாற்றிக் கொள்வது அத்தனை சுலபமானதில்லை.
குழந்தைகள் ஒரு விஷயத்தில் தோல்வியை சந்திக்து தொடர்ந்து முயற்சி செய்து மறுபடி தோல்வியை சந்திக்து இருதியில் வெற்றியை சந்திக்கும் நிலையில்தான் அவர்களுக்கு தமது திறமைகள் மற்றும் தகுதிகள் குறித்த எண்ணங்கள் வளரும். அது குறித்து மற்றவர்களுடன் விவாதிக்கவும் செய்வார்கள். அவ்வாரு மற்றவர்களுடன் கலந்தாலோசிக்கும் பொழுது தண்ணுணர்வு வளரும். இந்த இடத்தில்தான் பெற்றோரின் பங்கு முக்கியமானதாகிறது. தோல்வியை சந்திப்பதற்கு காரணங்களும் அவற்றை எதிர்கொள்ள வழிமுறைகளைப்பற்றியும் வாழ்க்கையில் சந்தோஷங்களை தரக்கூடிய  வழிமுறைகளைப்பற்றியும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விவாதித்தால் அவர்களிடம் தன்னம்பிக்கையும் சுய மதிப்பீடும் வளரும். மாறாக பிள்ளையின் கஷ்டங்களையும் பலங்களையும் கண்டு கொள்ளாமல் உங்களுக்கு தேவையான விஷயத்தை மட்டும் அவைர்கள் மீது திணித்தல் தன்னம்பிக்கை குறைந்து சுய மதிப்பீடு அடிபடும்.

உதாரணத்துக்கு உங்கள் குழந்தையை சதா சர்வ காலமும் 'படி, படி' என்று விரட்டிக் கொண்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கக் கட்டாயப்படுத் துகிறீர்களா? தனது தகுதிகளையும், திறமைகளையும் புறக்கணித்து தான் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே தம்மை எடைபோடுவதாக உங்கள் பிள்ளையின் மனத்தில் தாழ்வு மனப்பான்மை உருவாகும். படிப்பில் சாதனையை தவிற்த்து பிள்ளையின் மற்ற திறமைகளையும் சாதனைகளையும் புகழுங்கள். படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும், வாழ்க்கையின் வேறு பகுதிகளையும் பார்த்து பரவசப்பட உங்கள் பிள்ளைகளை ஊக்கப் படுத்துங்கள்.

சுயமதிப்பீடு குறைவாக உள்ள பிள்ளைகள், வாழ்க்கையில் எந்தப் புதிய விஷயங்களையும் முயற்சி செய்யத் தயங்குவார்கள். 'நான் வேஸ்ட்...', 'என்னைப் பத்தி யாருக்கும் அக்கறையில்லை', 'எனக்கு இது வரவே வராது' என தன்னை மட்டப்படுதிப் பேசுவார்கள். இவர்களுக்கு சகிப்புத் தன்மை மிகக் குறைவாக இருக்கும். நம்பிக்கையின்மை அதிகமிருக்கும். ஏமாற்ற குணத்துக்கும் குறைவிருக்காது. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்காலிகத் தீர்வையே யோசிப்பார்கள். இது காலப்போக்கில் அவர்களுக்குள் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தி, வேறு வேறு பிரச்னைகளையும், சவால்களையும் சந்திக்கிற துணிச்சலே இல்லாதவர்களாகச் செய்து விடும்.

அதுவே ஆரோக்கியமான சுய மதிப்பீடுள்ள பிள்ளைகள், மற்றவர்களுடன் கலந்து பழகத் தயங்க மாட்டார்கள். தனியாகவோ, குழுவினராகவோ இயங்குவதில் இவர்களுக்குத் தயக்கமிருக்காது. பிரச்னை என்று வரும் போது, அதற்கான தீர்வுகளை ஆராய்வார்கள்.

ஒரு கேள்விக்கு தனக்கு பதில் தெரியவில்லை என்றால் சுயமதிப்பீடு குறைவாக உள்ள குழந்தை 'நான் ஒரு முட்டாள்' என்று சொல்லும். அதிகமான சுயமதிப்பீடுள்ளவர்களோ, 'எனக்கு இது புரியவில்லை' என்பார்கள். பலம், பலவீனங்களை அறிந்து, அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். இவர்களது அணுகுமுறையில் நற்சிந்தனை (positive) மனப்பான்மையை மற்றவர்கள் உணரலாம்.
ஆரோக்யமான சுயமதிப்பீட்டைப் புகுத்துவதில், பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?

பேசுகிற வார்த்தைகளில் மிகுந்த கவனம் அவசியம். பெற்றோரோ, மற்றவரோ சொல்லும் மட்டம் தட்டும் வாத்தைகளைக் குழந்தைகளால் சகித்துக் கொள்ள முடியாது. ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடிக்கிரார்களோ இல்லையோ, அதற்கான முயற்சியை மேற்கொண்டதற்காக உங்கள் பிள்ளையைப் பாராட்டுங்கள்.

பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு போட்டி... உங்கள் பிள்ளை பரிசு வாங்கவில்லை. 'அடுத்தவாட்டி இன்னும் கஷ்டப்பட்டு, விட்டதைப் பிடிக்கப் பார்' எனச் சொல்வதற்குப் பதில், 'பரிசு வாங்காட்டா என்ன...? உன் முயற்சியைப் பார்த்து நான் ரொம்பப் பெருமைப்படறேன்' எனச் சொல்லிப் பாருங்கள். அதாவது அவர்களது வெற்றியைப் பார்க்காமல், முயற்சியை பாராட்டுங்கள்.

உங்கள் பிள்ளைகள் எந்த விஷயத்தில் வல்லவர்கள், எந்த விஷயத்தில் திறமையற்றவர்கள் என்பதை அடையாளம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, அவர்களை வழிநடத்தினாலே, ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

 உங்களை பிள்ளைகளும் அப்படியே பிரதிபலிப்பார்கள் என்பதை மரந்துவிடாதீர்கள். நீங்கள் தன்னம்பிக்கை குறைந்தவராக, வழ்க்கையை தவராக எடை போடுபவராக, தொல்வி நோக்குள்ளவராக இருந்தால் உங்கள் பிள்ளைகளும் அதே போல் வளர்ந்து விடுவார்கள்.பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கு முன் உங்களுடைய சுயமதிப்பீட்டை நீங்கள் சீர்செய்ய வேண்டும்.

பிள்ளைகளின் தவறான கண்ணோட்டங்களையும், நம்பிக்கைகளையும் தகர்த்து, தெளிவுப்படுத்த வேண்டியது பெற்றோரினொரு மிக முக்கியமான பொறுப்பாகும். 'ஐயோ... எனக்கு கணக்கே வராது... நான் மக்கு...' என்று உங்கள் குழந்தை நினைக்கத் தொடங்கி விட்டால், அந்த எண்ணம் அந்த குழந்தயை தோல்வியை நோக்கித் துரத்தும். அதற்கு மாராக, 'நீ பிரமாதமான ஸ்டூடன்ட். சூப்பரா படிக்கிறே.... கணக்குப் பாடத்துக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் ஒதுக்கினா போதும். நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்'' என நீங்கள் நம்பிக்கையளித்தால் அந்த குழந்தையின் சுயமதிபீடு அடிப்படாது.

ஆனால் ஒரு warning. புகழ்கிறேன் பேர்வழி என்கிற பெயரில், அதை அதீதமாகவும் செய்ய வேண்டாம். பாராட்டோ, திட்டோ... அளவோடு இருக்கட்டும்.

பிள்ளயை கண்டிக்கும் பழுது நீங்கள் எந்த வார்தைகளை உபயோகிக்கிறீர்கள் என்பது முக்கியம். 'எப்போ பார்த்தாலும் கத்தறதும், அலறி அலறிப் பேசறதுமே உன் வேலை' என்று சொல்லும் போது, அது, அந்தப் பிள்ளைக்கு, தன் மீதோ, தன் கோபத்தின் மீதோ தனக்கு கட்டுப்பாடு இல்லை என்று நினைக்கச் செய்யும். அதுவே, 'கத்தாம, அலறாம, அமைதியா உன்னலே பேச முடியுமே. அப்படி வெளிப்படுத்தினா  நல்லாருக்கும்' என எடுத்துச் சொன்னால், அடுத்த முறை கோபப்படும் போது, அதை அந்தப் பிள்ளை பரிசீலிக்கும்.

வீட்டுச் சூழலானது அன்பு நிறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியம். வீட்டுக்குள்ளேயே தனக்கு அன்பும் பாதுகாப்பும் இல்லை என்று உணரும் பிள்ளைகள்தான், தம்மைப் பற்றி குரைந்த மதிப்பீடுள்ளவர்களாக வளர்வார்கள். சதா சர்வ காலமும் அம்மா & அப்பா சண்டை போடுவதையும், வாக்குவாதம் செய்வதையும் பார்த்து வளரும் பிள்ளைகள் மன அழுத்தத்திற்க்கு ஆழாவார்கள். ஆதலால் இதை தவிற்கவும்.

பள்ளிக்கூடத்திலோ, வீட்டுக்கு வெளியிலோ, நண்பர்கள் மத்தியிலோ நடக்கிற விஷயங்களின் விளைவாகவும் உங்கள் குழந்தைகளின் சுய மதிப்பீடு பாதிக்கப்படலாம். அப்படி ஏதேனும் நடக்கிற போது பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரிய மூத்தவர்களிடமோ அதைப் பகிர்ந்து கொள்ளவும், தீர்வுகள் தேடவும் பிள்ளைகளைப் பழக்குங்கள்.

இத்தனைக்கும் மீறி, உங்கள் பிள்ளையின் சுய மதிப்பீடு மிக மோசமாக இருப்பதாக உணர்ந்தால், குழந்தைகள் மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள். அவரது உதவியுடன், உங்கள் பிள்ளையின் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறியலாம். தம்மைத் தாமே கவனிக்கவும், உலகத்தைப் பற்றிய யதார்த்த பார்வையை வளர்த்துக் கொள்ளவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் அந்த சிகிச்சை உதவியாக இருக்கும்.
பிரச்னை என்று வரும் போது, அதை எப்போது சுயமாகக் கையாளலாம், எப்போது உதவியை நாடலாம் என்பதற்கான பாடம்கூட, சுயமதிப்பீட்டு போதிப்புக்கு மிக முக்கியம்.

தன்னை உணர்கிற பொறுப்பையும், அதில் ஒருவித பெருமையையும் உணரச் செய்து, அதன் மூலம் ஆரோக்யமான சுயமதிப்பீட்டை வளர்த்துக் கொள்ளும் கலையைக் கற்றுத் தருவதுதான், பெற்றோர், பிள்ளைகளுக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு!

நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன்.  DD CBFD
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment