Monday 17 September 2012

அமெரிக்காவில் நடைபெறும் தலையணை சண்டை போட்டி - ஒரு விளையாட்டு பார்வை ....


 என் பள்ளி நண்பன் ஒருத்தன்  நேற்று அழைத்து பேசினான் .  'அஜ்மல், நீ உன் ப்லாக்ல வித்தியாசமான ஊர்கள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள் பற்றி எழுதுறியே.  இன்னைக்கு நான் ஒரு விஷயம் சொல்றேன் .நான் ப்ராஜெக்ட் விசயமாக California மாநிலத்தில் உள்ள Kenwood என்ற இடத்தில்  தங்கினேன் . அங்கு தலையணை சண்டைபோட்டி,  36 வருடங்களாக நடத்தப்படுகிறது.  உடனே உன் நினைப்பு வந்துச்சு.  அந்த விஷயத்தை பற்றி எல்லா தகவல்களும் தொகுத்து உனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கேன். பாத்துட்டு ப்ளாக்குல போடு ," என்று உற்சாகத்துடன் பில்ட்-அப் கொடுத்தான்.

இதோ, அவன்  அனுப்பிய இன்றைய டாபிக்:

WORLD (???)  PILLOW FIGHTING CHAMPIONSHIPS:

 14 வயதிற்கு மேற்பட்ட "பெரியவங்க" மட்டுமே பங்கு பெறும்  இந்த போட்டி,  36 வருடங்களாக நடத்தப்படுகிறது. 
பெரும்பாலும் 20 + தான் போட்டிக்கு வராங்க. 
California மாநிலத்தில் உள்ள Kenwood என்ற இடத்தில் தான் இந்த "அறிவுபூர்வமான" போட்டி நடக்க ஆரம்பிச்சுதாம். இப்போ,  நிறைய இடங்களில்  நடக்குதாம். 
பெரிய புள்ளத்தனம் எல்லாத்தையும் அரங்குக்கு வெளியே கழட்டி  வச்சுட்டு வந்து விளையாடுற ஒரு சின்னப்புள்ளத்தனமான போட்டியாம்.  விளங்குனாப்புல தான்!

சொதசொதனு ஈரத்துடன்  இருக்கிற ஒரு களிமண்ணு பரப்பு  (pit of mud).  அதுக்கு மேல, வழுவழுனு இருக்கிற ஒரு மரக்கட்டை.  

போட்டியாளர் கையில், ஒரு தலையணை - வாத்து இறைக்கைகளால்  (Goose feathers - not duck feathers) நிரப்பப்பட்ட தலையணையை தண்ணீரில் முக்கி, ஈரப்படுத்தி கொடுத்து இருப்பார்கள். தலையணையை ஒரு கையில் மட்டுமே பிடித்த படி, கட்டையின் ஒரு முனையில் இருந்து நடுவில் -  களிமண்ணுக்குள் விழாமல் - வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.  அதே போல, மறுமுனையில் இருந்து இன்னொரு போட்டியாளர் வருவார்.  அடுத்த கையையோ காலையோ உபயோகிக்காமல்,  இந்த ஈரத் தலையணையை வைத்து அடித்தே அடுத்தவரை, களிமண்ணுக்குள் விழ வைக்க வேண்டும்.   

முப்பது வினாடிக்கு மேலாக அடிக்காமல் டபாய்க்க கூடாது.  ஒரு நிமிடத்துக்குள் யாரும் விழாவிட்டால், ஒரு கையை பின்னால் வைத்து கொண்டே, மறு கையில் தலையணையுடன் அடுத்தவரை தள்ள முயல வேண்டும்.  


இப்போவே  முட்டிக்கணும் போல இருக்கிறவர்கள்,  அந்த பக்கமா போய் சுவத்துல  முட்டிக்குங்க. கம்ப்யூட்டர் ல முட்டி கிட்டி வச்சு, damage ஆனா கம்பெனி பொறுப்பு எடுக்காது.  

சரி, அது ஒரு பக்கம் என்றால்,  Michigan மாநிலத்தில் Grand Rapids என்ற இடத்தில் நடந்த தலையணை சண்டையை பாருங்க:  



பி.கு. இந்த மாதிரி தலையணை சண்டை அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளில் இப்படி தெருக்களில் "தலையணை சண்டை" நடக்குது என்பது கொசுறு செய்தி.   உலக நாடுகளில் உள்ள சுமார் 25 பெரிய நகரங்களில்,  நடந்து இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Pillow_fight_flash_mob

நாளைக்கு உங்களுக்கு யாருடனாவது  என்ன பிரச்சனை என்றாலும்,  தெருவுல தலையணை சண்டை போட்டு தீத்துக்கோங்க. ஏதோ "உலக அமைதி"க்காக, என்னால ஆன கடமை உணர்ச்சியில், சொல்லிட்டேன்.   சரியா, மக்கா!
 இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!

நன்றி : ராம்குமார் ,ஹைதராபாத்.(ஹோம் டவுன் - காரைக்குடி)

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment