Monday 10 September 2012

சூரிய ஒளியில் இயங்கும் பொருட்கள் -ஒரு சிறப்பு பார்வை.....


சூரிய சக்தியில் ஓடும் "சைக்கிள்'

நம்ம ஊரு விஞ்ஞானி
பூபதிராஜ்
சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர்
 பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார். porutkal

இவர் நான் பிறந்த ஊரை சேர்ந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜினியரிங் படித்துள்ள இவர், 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட 

அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் 
அலாரம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் 
காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை 
முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம்
இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனம்..


முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் மதுரை மாணவர் சண்முகப் பிரியன்.எலக்ட்ரிக் பைக்கோட ரீ மாடல்தான் இது. மொத்தம் 5 சோலார் பேனல் இதுல இணைக்கப்பட்டிருக்கு. இந்தப் பேனல்தான் டூவீலர் இயங்கத் தேவையான ஆற்றலைக் கிரகித்துக் கொடுக்கிறது. வண்டியில் ஃபிட் பண்ணியிருக்கிற பேட்டரி தேவையான ஆற்றலைச் சேமித்து வைத்துக் கொள்ளும். வண்டி ஓட... ஓட... சோலார் பேனல் மூலம் பேட்டரி சார்ஜாகிக் கொண்டே இருக்கும்.காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் முழுத்திறனோட பேனல்ஸ் சார்ஜ் பண்ணும். இதற்குப் பிறகு பேனல்ஸ் வொர்க் பண்ணாது. ஃபுல்லா சார்ஜ் ஆகியிருக்கிற பேட்டரியை வைத்துக்கொண்டு இரவில் 70 கி.மீ. வரைக்கும் சவாரி செய்யலாம்."

மல்ட்டி சோலார் டூவீலர்?


யெஸ்! இந்த டூவீலர்லயே இன்டக்ஷன் ஸ்டவ் ஒண்ணும் செட் பண்ணியிருக்கேன். வெளியில போனா, நாமே சமைச்சுச் சாப்பிடலாம். வழக்கமா, நம்ம வீட்டுல இருக்கிற இன்டக்ஷன் ஸ்டவ் 2000 வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கக் கூடியது. என்னதான் மட்டன் சமைக்க 600 வாட்ஸ்ன்னு அட்ஜஸ்ட் பண்ணாலும் அதுல 2000 வாட்ஸ் கரண்ட் போயிட்டே இருக்கும். இந்த இன்டக்ஷன் ஸ்டவ்ல சின்ன அளவுல ஆல்ட்டர் பண்ணியிருக்கேன். ஆனால், பெரிய லாபம். வெறும் 300 வாட்ஸில் நம்ம இன்டக்ஷன் ஸ்டவ் வொர்க் பண்ணும். தேவைப்பட்டா இந்த இன்டக்ஷன் ஸ்டவ்வைக் கழற்றி எடுத்துட்டு வந்து உங்க வீட்டு கிச்சன்ல மாட்டிக்கலாம். இப்பவும் 300 வாட்ஸ் கரண்ட்ல வொர்க் ஆகும். ஃபைனலா இதுல ஒரு ஸ்மார்ட் டச் ஒண்ணு இருக்குது. அதான் டி.வி.டி. பிளேயர். கூலா பாட்டுக் கேட்டுட்டே ரைடு பண்ணலாம்," என்கிறார் சண்முகப் பிரியன். 

விஸ்வரூப விஷ்ணுராம்


சிறிய கஷ்டம் வந்தால்கூட நம்மில் பல பேர் சோர்ந்து துவண்டு விடுவோம். ஆதரவாக சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஆனால், காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவன் இந்தக் குறைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்காமல், தேசிய அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணுராம் தான் அந்த சாதனை மாணவன்.அம்மா வாய் பேச முடியாதவர். மூளை நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பா கூலித் தொழிலாளி. சாதிப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் முடங்கிக் கிடந்த விஷ்ணுராம், அப்பாவின் தீவிர பயிற்சியினாலும் இடைவிடாத ஊக்கத்தினாலும் கூடைப்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்ட விஷ்ணுராம், இந்த விளையாட்டுத் துறையின் சிறந்த ஆட்டக்காரருக்கான (மேன் ஆப் தி சீரீஸ்) விருது பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.தமது சாதனை குறித்து விஷ்ணுராம் சைகையிலேயே நம்மிடம் பேசினார்.அம்மா அப்பாவின் ஊக்கம் தான் என்னுடைய இந்த சாதனைக்குக் காரணம். நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளி மாணவன் என்று சிந்தித்தது இல்லை. இது என்னுடைய சாதனையின் தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்து, என் பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பேன்," பெற்றோரைக் கட்டிக் கொள்கிறார் விஷ்ணு ராம்.விஷ்ணுராமிடமிருந்து நாம் இன்னும் நிறைய விளங்கிக் கொள்ள வேண்டும்.

சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’

பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை  அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான‘www.earnwhileyoudrive.in-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக  வைத்துக் கொள்ளலாம். 




சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் 

 திட்டக்குடியைச் சேர்ந்த, ராஜசேகரன் வடிவமைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், ராஜசேகரன். இவர், திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிகிறார்.
இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்க, "டிஜிட்டல் இன்வெர்ட்டர்' பொருத்தப்பட்டுள்ளது. 
இதன் மூலம், இரவு நேரத்திலும், தடையற்ற பயணத்தை தொடர முடியும்.இந்த கார், 30 கி.மீ., வேகத்தில் தினம், 200 கி.மீ., வரை செல்லக் கூடியது. காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடு, 25 ஆண்டுகள் வரை பழுதடையாது. காரில் உள்ள பேட்டரி மூலம் சேமித்த மின்சாரத்தை கொண்டு, வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில், மிக்சி, டேபிள் டாப் கிரைண்டர், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்கிக் கொள்ளலாம். ராஜகேரன் கூறியதாவது:"மின்சாரம், பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல், சூரிய ஒளியில் இயங்குவதால், செலவு இல்லை. 
சுற்றுச்சூழல் மாசுபடுவது இல்லை. சூரிய ஒளியில் இருந்து சேமிக்கப்பட்ட மின்சாரம், மின் சப்ளை இல்லாத நேரங்களில், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுகிறது. சிறிய வகையில் வடிவமைத்துள்ள இந்த காரை தொடர்ந்து, அனைத்து கனரக வாகனங்களும், எரிபொருள் செலவின்றி இயக்க, முயற்சி எடுத்து வருகிறேன்.இந்த காரை உருவாக்க, 45 ஆயிரம் ரூபாய் செலவானது. தற்போது, ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் உள்ள இந்த காரை, விரைவில் இரண்டு பேர் பயணம் செய்யும் வகையில், வடிவமைக்க உள்ளேன்.'இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.



சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து...
சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவையை தொடக்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது சீனா.

சீனாவின் ஹெய்லான்ஜியாங் மாகாணத்தில், லாங்குவா நியூ எனர்ஜி ஆட்‌டோமொபைல் நிறுவனத்தினரால் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து 100 பயணிகளை கொண்ட முதல் சேவையை, நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள நகரத்தில் தொடங்கி உள்ளது.
சோலார் சக்தியை பயன்படுத்துவதன் மூலம் லித்தியம் பேட்டரியின் ஆயுட்காலம் 35 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும், இந்த பேருந்து ஒரு கிலோமீட்டருக்கு 0.6 முதல் 0.7 கிலோவாட்ஸ் சக்தியை பயன்படுத்துவதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.



சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்...

cplane1
பெட்ரோல் இன்றி சூரிய ஒளியில் இயங்கும் அதிநவீன விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஏர்பஸ் ஏ340’ என்ற இந்த விமானம் மிகவும் எடை குறைந்தது.
அந்த விமானத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் சாகச வீரர் பெர்டிராண்ட் பிக்கார்டு (54) நேற்று பறந்தார். இவர் ஒரு மனநல மருத்துவர் ஆவார். மேலும் பலூன்களில் பயணம் செய்து சாகசம் படைத்து வருகிறார்.
நேற்று காலை 5.22 மணிக்கு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அங்கிருந்து தெற்கு கடலோரம் வழியாக மொரோக்கோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.
3,600 மீட்டர் உயரத்தில் 40 கி.மீட்டர் தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். தற்போது இதைதான் சோதனை ஓட்டமாக கருதுவதாக பிக்கார்டு தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் இதன் மூலம் உலகம் முழுவதும் 2,500 கி.மீட்டர் தூரம் பறக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.


சூரிய மின் சக்தியில் இயங்கும்மொபைல் போன்...
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்து
 வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் 
தயாரித்து வழங்க இருக்கிறது. இந்த போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை
 உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், 
போனில்உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 
90 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதிக நேரம் மின்சக்தி தரும் பேட்டரிகள்,
இரண்டு சிம் பயன்பாடு ஆகியவற்றை இந்தியாவில் முதலில் வழங்கிய தங்கள் நிறுவனம், 
இப்போது இந்த வகை மொபைல் போன்களையும் மக்களுக்கு வழங்க உள்ளது என 
இந்நிறுவன செயல் இயக்குநர் ராகுல் சர்மா தெரிவித்தார்.

இந்த வகை மொபைல் போன் வழக்கம் போல வசதிகளைக் கொண்டதாக இருக்குமா 
அல்லது ஸ்மார்ட் போனாக இருக்குமா என்ற தகவல் இல்லை. இருப்பினும் விரைவில் 
விற்பனைக்கு இந்த போன்களை எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் வி.எப். 247 என்ற மாடல் பின்புறமாக
 சோலார் பேனலுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் வசதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ, வண்ணத்திரையும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,500. மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் மாடலில் கூடுதல் வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான். 

No comments:

Post a Comment