Sunday 18 November 2012

உலகில் இப்படியும் ஒரு கடற்கரையா ?

நெதர்லாண்ட்ஸ் அண்டிலீஸ்சில் உள்ள செயின்ட் மார்டேன்னில் உள்ளது. இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றது ஏன் எனில் இங்கு அமைந்து உள்ள பிரின்சஸ் ஜூலியன சர்வதேச விமானநிலையம் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்தது உள்ளது.

இந்த விமானதளத்தின் ஓடுதளம் மிகவும் நீளம் குறைவான ஒன்று (2180 மீட்டர்). ஆதலால் தரையில் இறங்கும் விமானங்கள் கடற்கரையின் வெகு அருகிலேயே மிக தாழ்வான உயரத்திற்கு வந்து விடும்.

இந்த கடற்கையும், தரையிறங்கும் விமானங்களின் புகைப்படங்கள்.மகோ கடற்கரை ( Macho Beech ) 
இங்கு வரும் விமானங்கள் பத்தாவது ஓடுபாதைக்கு ஆரம்பத்தில் இருந்தே இறங்க முற்படும். ஏன் எனில் இந்த ஓடுபாதையின் அளவு 2,180 meter/7,152 ft ஆகும், இதனால் விமானங்கள் கடற்கரைக்கு மிகவும் நெருக்கமாக வந்து தரை இறங்கும். மிகபெரிய விமானங்கள் Boing 747 உட்பட பெரிய விமானங்கள் மிகவும் நெருக்கமாக வந்தே தரை இறங்கும் விமானங்கள் ஓடு பாதையில் இருந்து புறப்படும் போது கடற்கரையில் நிற்கும் மனிதர்கள் கூட தண்ணீரில் தூக்கி வீச கூடிய அபாயம் உள்ளது. .
விமானங்கள் இறங்குவதை மிகவும் அருகில் இருந்து பார்ப்பதற்கு இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.

நன்றி : www.youtube.com, www.airliners.net ,
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment