Saturday 2 February 2013

கொள்ளு!!! லொள்ளு வாழ்க்கையில் கடைபிடிக்க இதுவும் ஒண்ணு ....



ணவே மருந்து, மருந்தே உணவு’ என்றது நம் பாரம்பரிய ரகசியம்... அதனை அச்சுப்பிசகாமல் மொழிபெயர்த்துக் கொண்டுபோய் ‘உணவு என்பது சுவைக்காக மட்டுமல்ல நோய் வராமல் தடுக்கவும்தான்’ என்று அரிதாரம் பூசிக்கொண்டு ஆங்கிலத்தில் functional foods என்று கூறும்போது நம் மனம் சட்டென்று ஏற்றுக்கொள்கிறது. 




இந்தியா முழுதும் பரவிக் காணப்படும் குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.
கொள்ளுவை ஒரு உணவாகவே நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். இடைப்பட்ட காலத்தில் கொள்ளுவின் பயன்பாடு குறைந்து போனது. காரணம் கொள்ளுவில் உள்ள சத்துக்கள் பற்றி இடைக்கால மக்கள் தெரிந்துகொள்ளாமல் போனதுதான்.
கொள்ளுவை காணம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

காஃபிக்குப் பதில் cornflakes, மதிய உணவுக்கு. burgerம் என்று வேகமாக வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் இட்லியும், அரிசி சோறும் அந்நியன் ஆகிவிட்டது. அதிலும் சிறுதானியங்களின் மகத்துவத்தை சிறுமையாகவே கருதும் மேற்கத்திய மோகம் நம்மை இறுக்கமாக பற்றிக்கொண்டது.

தினை, அரிசி, கம்பு, சோளம்... என நீளும் இந்த சிறுதானியப் பட்டியலில் கொள்ளு என்ற தானியத்தை குதிரைக்கு மட்டுமே என பட்டா செய்துவிட்டோம். கொள்ளில் லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது.


தொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்க..
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 

மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டுமூலையில் படுத்துவிடவேண்டாம்இதற்கு எனக்கு தெரிந்தமுறைகளை சொல்கிறேன்அதை பயன்படுத்தி பயன்அடைந்தால் மகிழ்ச்சியே.
1. 
மிளகைத் தூளாக்கிவெல்லம்நெய் சேர்த்துப் பிசைந்துசாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. 
அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில்முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி,தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. 
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால்இருமல்தொண்டை வலிமார்பு சளிமூக்கு ஒழுகுதல் மற்றும்மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம்கிடைக்கும்

4. 
நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்குசுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. 
கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும்சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையானமருந்து.

6.
கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. 
தூதுவளைக் கீரையை சுத்தம் செய்துதுவையல் செய்துசாப்பிட்டால் சளி குணமாகும்.

8. 
மழைக் காலத்திலும்பனிக்காலத்திலும் பகல் வேளையில்தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. 
வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுதுசின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால்சளி கரையும்.

10.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்அப்படிப்பட்டவர்கள்நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளதுஅதில்வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம்பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. 
துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. 
சிறு வெங்காயச் சாறு (20 மிலி)தேன் (20 மிலி)இஞ்சிச்சாறு (20மிலிஇம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம்தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்தபலனைத் தரும்.

13. 
ஓமம் பொடி (10 கி.)மஞ்சள்பொடி (20 கி.)பனங்கற்கண்டு (40கி.)மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறியநான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளைகாலைமாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14. 
தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி)சிறு வெங்காயச்சாறு (10 மிலி)தேன் (மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக்கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன்தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. 
சளிதடுமன்ஜலதோசம்அதிகமாக இருந்தால்மிளகு ஒருஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்துவைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன்பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்லகுணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில்அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. 
நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில்கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டுநாளில் சரியாகப்போயிரும்.


கொள்ளுவின் மருத்துவத் தன்மை!!

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு
பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு 

என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

குடல் வாதங் குன்மமுண்டாங் கொள்மருந்தோ நாசம்
அடலேறு பித்தமிக ஆகுங்-கடுகடுத்த
வாதநீ ரேற்றமொடு மன்னுகுளிர் காய்ச்சலும்போகுஞ்
சாதிநறுங் கொள்ளுக்குத் தான்(அகத்தியர் குணபாடம்)


வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி
சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்
உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்
பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்


உடல் வலுப்பெற..

சிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள் கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் உடல் நன்கு வலுப்பெறும், புத்துணர்வு பெறும். 

கொள்ளுவை அரிசியுடன் சேர்த்தும் கஞ்சி செய்யலாம். மேலும் கொள்ளுவை வறுத்து துவையலாகவும் பயன்படுத்தலாம். 

நன்கு பசியைத் தூண்ட..

சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

மலச்சிக்கல் தீர..

மலச்சிக்கல் என்பது ஒரு நோய் என்றால் சிரிப்பார்கள். மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டுமே நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகும். மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் தானாகவே வந்துவிடும். மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கலும் கூடவே வரும்.

இந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீர் பெருக்க..

சிறுநீர் நன்கு பிரிந்தால்தான் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். இரத்தம் சுத்தமடையும். 

சிறுநீரகச் செயல்பாட்டிற்கு கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். 

இடுப்பு வலி மூட்டு வலி மாற..

இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்.

பெண்களுக்கு..

நீண்ட நாட்களுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதும், அதிகமான உதிரப்போக்கும் இருப்பதற்குக் காரணம் உடலில் வலு இல்லாமையே. இவர்கள் கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

கொள்ளுவில் புரதச் சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.

இருமல் சளி நீங்க..

1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கும்.

கொள்ளுவை அரைத்து வீக்கக் கட்டிகள் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.


கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகள், அனைவரும் உண்ணும் அமிர்தமானாலும் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சரி... கொள்ளு ரெசிபிக்களை எந்த பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென குழம்பவேண்டாம். உங்களுக்காக சில ரெசிபிக்கள்.....

கொள்ளு இரசம்..


கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.




Posted Image
பாட்டன் சொத்தாக காணிநிலம் வருதோ இல்லையோ, பரம்பரை வழியாக இந்த நீரிழிவு நோய் பலருக்கும் முப்பதுகளிலேயே வந்துவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கண்ட கண்ட மசாலாக்களைக் கொட்டித் தயாராகும் ஃபாஸ்ட் ஃபுட்டும், முறையான தூக்கமில்லாத உழைப்பும்தான்.
சர்க்கரை நோயாளிகள், பருமனான உடல் வாகு கொண்டவர்கள், அரிசிக்கு மாற்று என கோதுமையில் தவம் கிடப்பதைக் காட்டிலும், கம்பங் களியும் கொள்ளு ரசமும் வாரம் 1-2 நாட்கள் மாற்றிக் கொள்வது நல்லது. உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

ஆங்கிலத்தில் Longer the waist line. shorter the life line என்று மருத்துவத்துறை அச்சமூட்டும் இக்காலகட்டத்தில், கொள்ளினால் செய்யப்பட்ட கொள்ளு பருப்புப் பொடி, கொள்ளுச் சட்னி, கொள்ளு வடை ஆகியவை நம் உடல் எடையைக் குறைக்க நம் முன்னோர்கள் வகுத்த அருமையான ரெசிபீஸ் என்றே சொல்ல வேண்டும். உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நம் பாக்கெட்டின் எடையை மட்டுமே குறைக்கின்றன. குண்டு உடம்பு இளைப்பதென்பது பலருக்கு பகல்கனவாகிவிட்ட சமயத்தில் கொள்ளினால் செய்யப்படும் உணவு வகைகள் need of the hour ஆகிவிட்டன. இன்று கல்லூரிப் பெண்கள் பலர் கலோரி கணக்குப் பார்த்து உண்ணும் கலாச்சாரத்தில்... கொள்ளு ரசம், கொள்ளுப் பருப்புப் பொடி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

காலைக்கடன் என்று சொன்னவுடன்,அதனை தினசரி வெளியேற்றாவிட்டால் வட்டியுடன் சோதனை தரும் என அறியாமல் மலச்சிக்கலுடன் மல்யுத்தம் செய்வோர் நிறையப் பேர் உண்டு. கொள்ளில் உள்ள நார்ச் சத்துக்களால் சிரமமின்றி முழுமையாக மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியத்தின் முதல் படி
.
Posted Image


கொள்ளு சூப் தயாரிக்கும் முறை:-
கொள்ளு - தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்1/2 தேக்கரண்டி
பூண்டு - பல்
தக்காளி - 1கொத்தமல்லித்தழைசிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லதுமிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில்கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள்பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கிதேவையானஅளவு உப்பு போட்டு குடிக்கவும்சிறிய குழந்தைகள் முதல்வயதானவர்கள் வரை அருந்தலாம்குளிர் காலங்களில் இந்த சூப்குடித்தால் சளி பிடிக்காது.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 

தவிர, கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், குளிர்காலங்களுக்கு ஏற்ற உணவாகிறது. கொள்ளு ரசத்தினால் தொண்டையில் கட்டும் கோழை, சிறுநீரக கல்லடைப்பு போன்ற நோய்களுக்கு குட்பை சொல்லிவிடலாம்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment