Friday 29 March 2013

அரபு நாடுகளில் பணிப்பெண்களுக்கு தொடரும் கொடூரங்கள்!!ஒரு சிறப்பு பார்வை...

அரபு நாடுகளில்  பணிப் பெண்கள் படும் பாட்டை பல முறை நேரிலேயே பார்த்துள்ளேன். ஆனால் சில வீடுகளில் நன்கு ருசியாக சமைக்கத்தெரிந்த பணிப் பெண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வதையும் பார்த்துள்ளேன்.எல்லா நாட்டிலும் எல்லா சமூகங்களிலும்   நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.

முதலில் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து விடுங்கள்..
செய்தி ஒன்று: 13 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை அடைத்து வைத்து வேலை வாங்கியும், சம்பளமும் இந்த 13 ஆண்டுகளாக தராமல் கொடுமை செய்திருக்கிறார் ஒரு சவுதியைச் சேர்ந்த ஒரு அரபி. இந்த முறையும் ஒரு இலங்கைப் பெண்தான் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்.
Ariyawathi-nail-tortured-maid-saudi-arabiaசெய்தி இரண்டு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு சவூதி குடும்பம் தன்னிடம் வேலை பார்க்கும் இலங்கை பணிப்பெண்ணை 24 ஆணிகளை உடல் முழுதும் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து. ஒரு சக மனிதனை / மனுஷியை சாதாரணமாக குடும்பம் நடத்தும் கணவனும், மனைவியும் சேர்ந்து உடலில் ஆணி அடிப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? எல். பி. ஆரியவதி என்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

செய்தி மூன்று
: ஒரு இந்தோனேஷியப் பெண்ணை முகம் எல்லாம் கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி எடுத்திருக்கின்றனர் இன்னொரு சவூதி தம்பதியினர். உடலெங்கும் ஆங்காங்கே சூடு போட்டிருக்கின்றனர். தலை முதல் கால் வரை அந்தப் பெண்ணை கொடுமை செய்திருக்கின்றனர்.
செய்தி நான்கு: இன்னொரு அன்பு மிக்க சவூதி தன்னிடம் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை ரோட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தோனேசிய அரசு இதை மனிதத் தன்மையற்ற செயலுக்கும் அப்பாற்பட்டது இவர்கள் இழைத்திருக்கும் கொடுமைகள் என்கிறது. மனிதத் தன்மையற்ற செயலை விட மோசம் எனில் எவ்வளவு கொடூரர்களாய் இருக்க வேண்டும்?
செய்தி ஐந்து: முகத்தில் குத்தியே வீட்டு வேலைக்கு வந்தப் பெண்ணை கொலை செய்த அரபி.
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுதல் தொடரும் சம்பவம். அரபிகளின் உடல் ரீதியான கொடுமையையும், வெறியையும் தாங்க முடியாமல்.



இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். சவூதி, குவைத், கத்தார், எமன், போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவித பெண்களின் வேலை அவர்களுக்குச் சொன்னது போல இருக்காது. குறைந்தது தினமும் 16 மணி நேர வேலை, அதுவும் சகிக்க முடியாத அளவு உடல்வேலை. மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். வாய்ப்புக் கிடைத்தால் கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள் மற்றும் கற்பழிப்புகள். இவ்வளவு கொடுமையையும் தாண்டித்தான் அவர்கள் அங்கு வேலை பார்க்கின்றனர், தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு.

maid_in_arab_countriesவீட்டில் வேலைசெய்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசினால் மறுநாளே நடுத்தெருவில். வேலை பார்க்கும் பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை எல்லாம் அரபிகளின் கைகளில் இருக்கும். வெளியே துரத்திய மறு நிமிடமே போலிசுக்கு இவர்களே தகவல் சொல்லி பிடித்துப் போக வைத்து அடையாள அட்டை இல்லாமலிருந்த குற்றத்திற்காகவும், வேலை செய்யும் வீட்டில் இருந்து ஓடி வந்ததற்காகவும் தண்டனை உண்டு.
இன்னும் சில கேவலமான மிருகங்கள் இருக்கின்றன. சம்பளம் பாக்கி இருந்து அதைத் தர விரும்பாமல் வீட்டில் வேலை செய்யும் பெண் திருடி விட்டதாக ஒரு குற்றச் சாட்டை போலிசில் வைப்பார்கள். அதிலிருந்து மீள வேண்டுமெனில் அரபி மன்னிக்க வேண்டும். அல்லது தொலைந்த பொருள் கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். சம்பளம் போனாலும் பரவாயில்லை, உயிரோடும், கைகால்கள் ஒச்சமின்றியும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பயத்தில் சம்பளத்தைக் கூட முழுதும் பெற்றுக் கொண்டதாய் கையொப்பம் இட்டு விடுவார்கள்.
கொஞ்சம் தைரியமாய் ஒரு பெண் போலிசுக்கு சென்று வேலைக்கு வைத்திருப்பவர் கற்பழித்து விட்டார் என செல்லப் போகிறார் எனத் தெரிந்துவிட்டால், இவர்களே காவல் நிலையம் சென்று சென்று அந்தப் பெண்ணை ஒரு விபச்சாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள். அதன் பின்னர் அவள் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை. பிற நாடு மற்றும் நமது இந்தியத் தூதரகங்களும் அதிக பட்சமாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவதையே மிக முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவதில்லை. அந்த அரபிக்கு இந்தப் பெண் போனால் வேறு ஒரு பெண் கிடைப்பாள்.
உலக மனித உரிமைகள் கழகம் 2004 ல் செய்த ஆய்வின்படி சவுதியில் பணிப்பெண்களை திட்டமிட்டு , மாட்டிக் கொள்ளாத வகையில், வஞ்சிக்கின்றனர், சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்று சொல்கிறது. முறையற்ற கர்ப்பம் ஏற்பட்டு அதற்கும் பெண்களே பலிகடாவாக்கப் படுகிறார்கள். (குற்றம் நடந்ததைப் பார்த்த சாட்சிகள் வேண்டும்) பல நேரங்களில் மிக கேவலமாக நடத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மிக மோசமாக தண்டிக்கப்பட்டு கொலைக் களத்திற்கு அனுப்பப் படுகின்றனர் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.

இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு நினைப்பது, பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது. பாதிக்கப்பட்ட நாடுகள் செய்யமுடிந்ததெல்லாம் நமது முன்னாள் முதல்வர் செய்ததுபோல கடிதம் எழுதுவதும், வன்மையாக கண்டிப்பதும்தான். மனசாட்சியற்ற அந்த மிருகங்களை இந்த கண்டிப்புகளும், கடிதங்களும் ஒன்றும் செய்வதில்லை.

மேலும் பாதிக்கப் பட்டவருக்கே அபராதம் விதிப்பதையும் செய்கின்றன அரபு நாடுகளின் அரசுகள். கொடுமை செய்தோருக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதும், சிக்கலில் மாட்டி கொடுமையை அனுபவிப்போர் காவல்துறைக்குச் சென்று புகாரளித்தால் அவர்களுக்கு முறையான உதவிகள் காவல் துறையிலிருந்து கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது அவ்வறிக்கை.
இவ்வளவு கேவலமாக நமது மக்களை நடத்தும் சவூதி நாட்டின் மன்னரை குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராய் அழைக்கும் நமது ஆட்சியாளர்களை என்ன சொல்வது? இத்தனைக்கும் அப்போது ஒரு இந்தியனின் தலையை வெட்ட ஆணை பிறப்பிந்திருந்தார் சவூதி மன்னர். இன்றைக்கும் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதில் முதலில் இருப்பது சவுதி அரேபியாதான்.
maid - abuse - saudi - arabiaஇதே சவூதி மன்னர் ஒரு அமெரிக்கனையோ, அல்லது பிரிட்டிஷ்காரனையோ இப்படி கொல்ல முடியுமா? அல்லது கொடுமைப் படுத்தத்தான் முடியுமா? அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள். இவர்கள் தங்கள் நாட்டில் பிழைக்க வரும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேட்டிமைத் தனத்தை காட்டிக்கொள்ள முயன்று உலகின் முன்னர் கேவலமாகவும், கொடூரர்களாகவும் தெரிகிறார்கள்.

பணிப்பெண்கள் வீட்டில் தனியே இருக்கும் நேரங்களில் வீட்டிலுள்ள மைனர் குஞ்சுகளையும் சமாளிக்க வேண்டும். அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே, பெரிய பெரிய வண்டிகள், மொபைல் போன் மற்றும் பெண்கள். அதுவும் இப்படி அநாதரவாய் இருக்கும் பெண்கள்தான் இவர்களின் இலக்கு. கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும். அடையாளம் தெரியாத பிணமாகவே வழக்கம்போல சொல்லப்படும்.
சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் சாலையில் செல்லும் லேண்ட்க்ரூசரோ, வேறு பெரிய வண்டிகளோ அந்தப் பெண்ணை பயமுறுத்துவதுபோல ஓட்டி பக்கத்தில் வந்து வண்டியில் ஏறு என மிரட்டுவர். கண்ணுக்குத் தெரிந்து யாருமில்லை எனில் உடனே வண்டியில் தூக்கிச் சென்றுவிடுவர். இதெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் இல்லை. மத்திய கிழக்கில் வெளிவரும் செய்தித் தாள்களை வாசித்தாலே போதும்.

வன்முறை அளவு மீறும் போது, கொடுமைகள் தாங்க முடியாமல் ஆகும்போது வேலை செய்யும் பெண்ணே எஜமானரான சவுதியையும், அவர்களது மனைவியரையும் கொலை செய்வதும் இப்போது கணிசமாக நடக்கிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் எனில் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும்? அவளுக்குத் தெரியாதா கொலைக்குப் பின்னர் சிறையும், அதன் பின்னர் தலை வெட்டும்தான் என? இருப்பினும் அப்படிச் செய்கிறாள் எனில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாள்?
உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு என்று சொல்லிக்கொண்டே இதர மதத்தினரையும் பர்தா போட்டுத்தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். சாத்தான் வேதம் ஓதுவதுபோல.
இவ்வளவு தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இதுவரை இப்படிப்பட்ட கொடுமைகளை இழைத்துவிட்டு தண்டனை அடையாமல் இருக்கும் சில நூறு பேர்களைப் பார்க்கும் பலர் தண்டனை இல்லை எனும்போது, கொடுமைகளைச் செய்கின்றனர்.
இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லும் “இஸ்லாமிய மாதிரி அரசாங்கமான” சவூதி அரசாங்கம். தனது உழைப்பால் கிடைக்காத, அனாமத்தாய்க் கிடைத்த வளத்தையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அவர்களிடம் வேலை செய்து பிழைக்க வரும் இதர நாட்டினரை குறைந்த பட்ச அடிப்படை மனித உணர்வுடன் மனிதர்களாக நடத்துமளவுக்கு மனிதத்தன்மையை  கடைபிடிக்க வேண்டும் .இது போன்ற கொடுமைகள எல்லாம் தடுக்க வேண்டுமானால் நமது அரசு பணிப்பெண் வேலைக்கு அரபு நாடுகளுக்கு எந்த வகையிலும் அனுப்ப ஒப்புதல் அளிக்கக் கூடாது. தற்போது அனுமதி தருவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அவலங்களை தெரிந்தும் தங்களின் வருமானத்துக்காக அனுமதிக்கின்றனர். இது அந்த நாடுகள் செய்யும் தவறு.
இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ”கதாமா” ( Gaddama, The House Maid) என்ற மலையாளத் திரைப் படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. கதாமா என்ற சொல்லுக்கு அரபி மொழியில் “வீட்டு வேலைக்காரி” என்று பொருள்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ஏற்பட்ட கடன்களுக்காகவும், எதிர்பாராத விதமாக கணவனைப் பறிகொடுத்து விட்டதாலும் தெரிந்தவர் மூலமாக சவுதிக்கு வீட்டு வேலைக்கு வருகிறாள் ஒரு பெண். அவளுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே கதாமா என்ற திரைப்படம்.
மத்திய கிழக்கில் வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் உண்மைக்கு அருகில் இதுவரை எந்தப் படமும் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை.
”கதாமா” விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு இருக்கும் இதர நாட்டிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் பெண்களுடன் நடக்கும் உரையாடல்களிலேயே அவர்களின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது. (ஸ்பான்ஸர் இரண்டு நாள் கழித்தோ அல்லது நினைக்கும்போது வந்தோ அழைத்துச் செல்வான். பாஸ்போர்ட் எல்லாம் அவனது கைக்குச் சென்றுவிடும். இனி அடுத்த இரு ஆண்டுகள் கழிந்தபின்தான் நாம் வெளியுலகையே பார்போம் – இப்படியாக)

Gaddaama_malayalam_movieவேலைக்குச் சென்றபின்னர் அவளுக்கு நடக்கும் கொடுமைகள் பதற வைப்பவை. துணியை சரியாக அயர்ன் செய்யவில்லை என அயன்பாக்சாலாயே உடம்பில் சூடுவைக்கிறார்கள் அரபு எஜமானர்கள். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும் ஏற்படும் கள்ளத் தொடர்பைக் குறித்து ஏன் சொல்லவில்லை என ஒரு நாள் இரவு முழுவதும் சாட்டையால் அடிக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே ஓட வைக்கிறது. கையில் பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி தன்னை வேலைக்கு அழைத்து வந்த ஆளும் நிராதரவாய் கைவிட்ட பின்னர் வேலைக்காரி என்ன ஆகிறாள் என்பதே திரைப்படம். 
நம்மூரில் கைக்காசை செலவிட்டு பிறருக்கு உதவுபவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள்”. அப்படி ஒரு பிழைக்கத் தெரியாதவராய் வருகிறாய் ஸ்ரீநிவாசன். கிட்டத்தட்ட அரபு நாடுகளில் வேலைக்கு வரும் நமது ஆட்களின் நிலையை சில சம்பவங்களில் சொல்லி விடுகின்றனர்.ஆடு மேய்ப்பவராக வருபவரும், பாலைவனத்தில் ஆடு மற்றும் ஒட்டகப் பண்ணைக்கு புல் சப்ளை செய்பவராக வருபவரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.அரபிகளின் குணம், அவர்களின் கண்ணில்லாத சட்டங்கள், புணர்வதற்காக மட்டுமே பெண்கள் என்ற அவர்களது மனநிலை, எல்லாம் மிக துல்லியமாக சொல்லப் பட்டுள்ளது. படத்தின் இசை படத்திற்கு மிக்க துணையாய் இருக்கிறது. அரபி இசையை மிகப்பொருத்தமாய் கையாண்டிருப்பது சிறப்பு. 
வேலைக்காரியாக ஒரு பாவமான முகத்திற்கு காவ்யா மாதவன் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார். எத்தனை விதமான மனிதர்கள்! தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிடுவதும், அதே ஊரில் தனது தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட செல்ல முடியாமல் இருப்பினும் பிறருக்கு உதவும் ஸ்ரீநிவாசனும், அரபிகள் வேலைக்காரப் பெண்ணை வன்புணர்வு செய்துவிடாமல் காப்பாற்றி அரபியின் கையில் அடிவாங்கி இறந்துபோகும் ஆடுமேய்ப்பவரும் எல்லோரும் அவரவர் பகுதியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலைக்கு, அதுவும் இப்படியான வேலைகளுக்குச் சென்று நினைத்தே பார்க்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் சக இந்தியர்களூக்கு இந்தப் படம் சமர்ப்பனம்.  


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


Thursday 28 March 2013

சவுதி அரேபியாவில் குடும்ப வருகை முறை !! ஒரு சிறப்பு பார்வை...


Saudi Arabia

அன்புடையீர், நான் கடந்த 4வருடங்களாக சவுதி அரேபியாவில் ஒரு பெரிய  நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.துபாய் மற்றும் கத்தார் நாட்டில் குடுபத்துடன் வசித்து த்து வந்தேன்.ஆகையால் 
நான் சவுதியில் குடும்ப வருகை பற்றி தகவல்களை சேகரிக்கும் போது ,மற்றவர்களுக்கும் சொல்லும் மற்றும் தெரிவிக்கும் ஒரு பெரிய பதிவு.இது . சவுதி அரேபியாவில் வாழ்பவர்கள்  அங்கு அவர்களது குடும்பங்கள் கொண்டு வர   பேரரசில் வழிகாட்டும் நடை முறைகளை பற்றிய  தவகல். 

நீங்கள் உங்கள் குடும்பத்தில் அல்லது,  குடும்பத்தை கொண்டுவர முடியும் என்பதை முடிவு செய்யும் மிக முக்கியமான காரணி உங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது தொழில் iqama அல்லது குடியிருப்பு அனுமதி. இந்த உங்கள் உண்மையான வேலை தலைப்பு இல்லை என்பதை நினைவில். உதாரணமாக, ஒரு தொழிலாளர் visa.This மீது அமர்த்தி வேண்டும் ஒரு பொறியாளர் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது மிகவும் பொதுவான முன்னர். ஆனால் அனைத்து அரசாங்க நடவடிக்கைகள், அது உங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது தொழில் iqama உங்கள் வேலை தலைப்பு, அல்ல இது!
துரதிருஷ்டவசமாக, நீங்கள் மட்டும் விசாக்கள் சில வகையான (பொறியாளர் போன்ற, மருத்துவர், தொழில்நுட்ப, போன்றவை) உங்கள் குடும்பத்தை கொண்டு தகுதியுடையவை. உங்கள் ஒரு தொழிலாளர் விசா மீது வந்துவிட்டார்கள் என்றால், நீங்கள் முற்றிலும் உங்கள் குடும்பத்தை கொண்டு வாய்ப்பு உள்ளது, அது தொழில் வேறு சில வகை மாற்றம் பெற சிறந்தது - இந்த இருப்பினும் ஒரு எளிதான பணி அல்ல.
பேரரசு உங்கள் குடும்பத்தை கொண்டு வந்து வருகை விசா நடைமுறை வர, நான் செயல்முறை தன்னை மிகவும் எளிது என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்த விரும்புகிறேன். தான் கடினமான பகுதி உங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது தொழில் iqama ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி.

ஆன்லைன் மூலம் நிரப்ப தொடர முன், நீங்கள் பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  1. உங்கள் அசல் iqama (பதிவுகள் உங்களை ஒரு நகலை வைத்து)
  2. உங்கள் பாஸ்போர்ட் நகல்
  3. உங்கள் சம்பளம் பற்றிய விவரங்களை கொடுத்து உங்கள் முதலாளி இருந்து அரபு மொழியில் அறிமுகம் கடிதம்
  4. வருகை உறுப்பினர் (பெற்றோர் / குழந்தைகள் / மாமியார்) ஒரு பாஸ்போர்ட் நகல் (தனி பயன்பாடு நீங்கள் ஸ்பான்சர் செய்ய போகிறீர்கள் யாரை ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் செய்யப்படும் வேண்டும் என்று குறிப்பு)
உன் மாமியார் நிதியுதவி, பின்வரும் கூடுதல் ஆவணங்கள் தேவை:
  • உங்கள் மனைவி எந்த காரணம் ஆதரவு தேவை வழக்கில் ஒரு மருத்துவமனையில் இருந்து சான்றிதழ், எ.கா.., கர்ப்ப
  • மனைவியின் பாஸ்போர்ட் நகல் - இந்த உன் மனைவி மற்றும் அவரது தந்தை / தாய் இடையிலான உறவை நிரூபிக்க வேண்டும்
  • உங்கள் திருமண சான்றிதழ் நகல், அரபு மொழியில் மொழி மற்றும் உங்கள் வீட்டில் நாட்டில் சவுதி தூதரகத்தில் / தூதரகம் சான்றளிக்கிறது

நீங்கள் மேலே அனைத்து தயார், கீழே அடுத்த நடவடிக்கை தொடர. உங்களுக்கு அடுத்த அரபு படிக்க முடியும் ஒரு நபர் வேண்டும். பின்னர் இந்த இணைப்பை கிளிக் https://visa.mofa.gov.sa/VisaFamilyApp/FamilyApp.asp . உங்கள் குடும்ப உறுப்பினர் பெயர் மற்றும் ஆதரவாளரை பெயர் (அதாவது, நீங்கள்) மட்டுமே ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் . அனைத்து மீதமுள்ள தரவு அரபு பூர்த்தி வேண்டும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள்உங்கள் குடும்பத்திற்கு நிதியுதவி, மற்றும் உங்கள் முதலாளி இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் நீங்கள் பார்வையிடும் மற்றும் அதே விமானத்தில் வருகிறார்கள் வழக்கில், அதே வடிவத்தில் தங்கள் பெயர்களை உள்ளிடவும், இல்லையெனில் தனி படிவங்களை பயன்படுத்த.
தேவையான விசா நாட்கள் எண்ணிக்கை கேட்டு பத்தியில், "90" தட்டச்சு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் ஒரு 3 மாத பயணத்திற்கு விசா பெற, இல்லையெனில் அது ஒரு 1 மாத விசா இருக்கும். எந்த கடினமான மற்றும் வேகமாக விதி உள்ளது. எல்லாம் விசா செல்லுபடியாகும் முடிவு செய்த அதிகாரியின் மனநிலையை பொறுத்தது. இருப்பினும், நீங்கள் எப்போதும் இருமுறை விஜயம் விசா புதுப்பிக்க முடியாது, மற்றும் ஒவ்வொரு நீட்டிப்பு ஒரே ஒரு மாதம் ஆகும். வருகையின் நோக்கம், அரபு மொழியில் "famly வருகை" என வகை கேட்டு நிரலில்.
இந்த படிவத்தை பூர்த்தி சமர்ப்பிக்கவும் முறை, நீங்கள் திரையில் ஒரு ஒப்புகை எண் கிடைக்கும். இந்த இரண்டு பிரதிகள் அச்சிட. குறிப்பாக உங்களை ஒரு நகலை வைத்து. நீங்கள் விரைவில் இந்த தேவைப்படும். , உங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து தேதி சேர்ந்து கீழே குறிப்பிட்டுள்ள இடத்தில் கையெழுத்து. உங்கள் நிறுவனம் ஸ்பான்சர் கையொப்பம் மற்றும் முத்திரை எடுக்க மறக்க வேண்டாம். ஒருமுறை இந்த செய்யப்படுகிறது, மீதமுள்ள ஆவணங்களை இந்த சேர்த்து இணைத்து மேலே குறிப்பிடப்பட்ட மற்றும் வெளியுறவு அலுவலகம் (பாஸ்போர்ட் அலுவலகம் (குழப்பி கொள்ள வேண்டாம் என்று உங்கள் அருகில் உள்ள அமைச்சு இது 'to Jawasat , அதை உள்நாட்டில் அழைக்கப்படும்). புதுப்பித்தல் செய்யலாம் Jawasat, ஆனால் முதல் முறையாக, நீங்கள் MOFA அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மிக முக்கியமான புள்ளி: நீங்கள் ஆன்லைன் வடிவம் பூர்த்தி 3 நாட்களுக்குள் மேலே ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது வேறு உங்கள் முயற்சியில் ஒரு கழிவு உள்ளது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரசு துறைகளில் வாராந்திர டர்ன் பேரரசில், அதனால் வடிவம் பூர்த்தி முன் இதை மனதில் வைத்து.
மீண்டும் ஒரு வாரம் வருகை மேலே குறிப்பிட்ட இணைப்பு பற்றி காத்திருக்க. உங்கள் தட்டச்சு iqama எண் மற்றும் நீங்கள் முந்தைய எடுத்து நகல் குறிப்பிடப்பட்டுள்ளது இது ஒப்புகை எண். நீங்கள் உங்கள் விசைப்பலகையில் 'Enter' பொத்தானை கிளிக் செய்து, பின்னர் அதே பக்கம் கிடைக்கும் என்றால், அது உங்கள் விசா செயலாக்க உள்ளது என்று அர்த்தம். இல்லையென்றால், நீங்கள் ஒரு என்று அழைக்கப்படும் 'மஞ்சள் துண்டு சீட்டு' பெற வேண்டும். இந்த இரண்டு 'COLOR' அச்செடுத்த எடுத்து, உங்கள் குறிப்பு ஒன்று வைத்து, மற்றும் ஐ விலாசத்தை.
நீங்கள் இப்போது அரை பயணம் மீறிவிட்டாய். அடுத்த படி உங்கள் வீட்டில் நாட்டின் பின்வரும் ஆவணங்களை அனுப்ப உள்ளது.
  1. 'மஞ்சள் ஸ்லிப்' வண்ண நகல் மேலே குறிப்பிட்டுள்ள
  2. உங்கள் நகல் Iqama
  3. உங்கள் பாஸ்போர்ட் நகல் (நினைவில், நீங்கள் ஆதரவாளரை இருக்கும்) 
  4. உங்கள் திருமண சான்றிதழ் நகல் (உங்கள் மனைவி மற்றும் அவரது பெற்றோர் (கள்) இடையே உள்ள உறவை நிரூபிக்க உன் மாமியார் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் போது மட்டுமே தேவை - இந்த பார்வையாளர் உண்மையில் உன் மாமியார் என்று உறுதி வேண்டும்
  5. உங்கள் கடந்த 3 மாதங்களில் 'வங்கி அறிக்கையின் நகல்
  6. ஆங்கிலத்தில் ஒரு கடிதம் உங்கள் விருந்தினர் பெற இருப்பதாக கூறி உங்கள் வீட்டில் நாட்டின் சவுதி தூதரகத்தில் / தூதரகம் என்ற முகவரியுடன்
  7. உங்கள் சம்பளம் பற்றிய விவரங்களை கொடுத்து உங்கள் முதலாளி இருந்து அரபு மொழியில் அறிமுகம் கடிதம்
உங்கள் வீட்டில் நாடு கூரியர் மூலம் மேலே அனைத்து அனுப்ப. மேலே ஆவணங்களை சேர்த்து, பின்வரும் உங்கள் குடும்ப உறுப்பினர் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வீட்டில் நாட்டில் சவுதி தூதரகத்தில் / தூதரகம் சமர்ப்பிக்க வேண்டும்:
  1. வருகை திட்டமிட்டுள்ளது ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் அசல் பாஸ்போர்ட்
  2. உங்கள் மனைவியின் பாஸ்போர்ட் நகல் (உன் மாமியார் incase பார்வையிடும் - இந்த பார்வையாளர் உண்மையில் உன் மாமியார் என்று நிரூபிக்க வேண்டும்)
பேரரசு(Kingdom) உங்கள் குடும்பத்தை கொண்டு உங்கள் முயற்சிகள் நல்ல அதிர்ஷ்டம். இந்த பயனுள்ளதாக இருந்தால், உங்கள் கருத்துக்களில் அனுப்ப வேண்டாம். உங்கள் பாராட்டு மேலும் எழுத என் நோக்கம்.
தொகுப்பு & ஆக்கம் : மு.அஜ்மல் கான்.

Wednesday 27 March 2013

ENSURE HALAL FOODS IN YOUR AIRLINE VIA SRI LANKA


SriLankan Airlines Limited (previously known as Air Lanka) is the flag carrier airline of Sri Lanka. It operates a fleet of 14 Airbus aircraft to destinations in Asia and Europe from its main base and hub at Colombo - Bandaranaike International Airport. The airline's trademark phrase is 'You're Our World', and the company's logo features a stylized peacock.


Sri Lankan Airlines Catering service makes all efforts to provide HALAL meat products. But the situation is explained as follows..


We would like to bring your kind attention that halal certification system is withdrawal by ALL CEYLON JAMMIYATHUL ULAMA after pressures from hardliners Buddhist groups. Therefore there is no proper mechanism for ensure halal foods or halal products in Sri Lanka. If you are buying foods from Sri Lankan Catering, please make sure of its halal status. Or please make alternative arrangements to provide Halal food your passengers who use your airlines.
One of evidence is mentioned here. It published in local news 

http://www.adaderana.lk/news.php?nid=21981

CANTEEN OWNERS TO BOYCOTT HALAAL PRODUCTS
March 15, 2013 11:52 am

All Ceylon Canteen Owners Association has decided to refrain from selling any products with the ‘Halaal’ logo with effect from April 01.

The association’s national organizer Asela Sampath stated that canteen owners faced various difficulties in recent times due to the Halaal certificate.

He stated that a majority of Sinhalese and Tamil customers rejected the products with Halaal certificate resulting in a drop in revenue of canteens.

All Ceylon Canteen Owners Association states that although canteen owners spend large sums on their canteens the income they generate has drastically reduced. 







The following airline not only belongs to Muslim  majority country. All of the served food are suppose to  halal. It is written in the menu distributed to all passenger. For flights departing from all continent , all food are prepared by Airline`s own catering or Contracting company, where they have been certified by HALAL AUTHORITIES.

Manufacturers and their products are often certified halal by qualified halal certification agencies. Many of these agencies have different approaches to certification and here, you can browse agencies worldwide and see how they influence the industry through acceptance of their standards. With halal authorities, the halal chain is complete - outlining the process from authority to manufacturer to product to consumer.