Sunday 29 September 2013

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை !!

 




ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில்  உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன். அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும். அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும். அப்போதிருந்தே நான் ஆப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட ஆப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன். 


கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே ஆப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க ஆப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என்கிறார் பெருமையுடன்.  இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர்.

பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு ஆய்வு !!! ஒரு சிறப்பு பார்வை....

பாம்பு என்றால் படையும் நடுங்கும், என்ற பழமொழி அதன் தோற்றத்திலும், விஷம் சார்ந்தும் வருவது, நமது சமூகத்தில் பாம்பு கடிக்கு இறப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பயத்திலும், சரியான சிகிச்சை இல்லாமையாலும் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.விலங்குகளிலேயே பாம்புகளின் மேல்தான் அதிகமான மூடநம்பிக்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். 


பாம்பு என்ற சொல் இந்திய சமூகத்தில் இரு வேறு கருத்து நிலைகளில் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, கடவுளாக கடவுகளின் அவதாரமாக, விசேட நாட்களில் பூசை செய்வது, பயபக்தியுடன் பாம்பை வணங்குவது, பாம்பின் இயல்பான உணவில் இல்லாத (முட்டை, பால்) பொருட்களை படைப்பது என பாம்பை இறை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


அடுத்தாக, அச்சத்தின் குறியீடாக, பார்க்கும் இடத்தில் கையில் கிடைக்கும் பொருளைக்(கம்பு, தடி) கொண்டு பல பேர் சூழ்ந்து அடித்துக் கொல்கின்றனர். 

இறைநிலையில் வைத்து வணங்ககப் பெறும் காட்டுயிர், நேரில் பார்க்கும் போது கொல்வது- என முரணான (அ) எதிர் நிலைப்பட்ட கருத்துக்கள் இந்திய சமூகத்தில் மக்களிடையே நிலவ எது காரணம்? பன்னெடுங்காலமாக மக்கள் மனதில் புரையோடி இருக்கும் மூட நம்பிக்கைகள் , பழமைவாத கருத்துகள் முன்பிறவி, மறுஜென்மம், பாவம், புண்ணியம் போன்ற அச்சமூட்டும், மக்களை பயத்தில் ஆழ்த்தும் கருத்துக்கள் போன்றவைகளால் மக்களின் உளவியல் சீர்கெட்டுள்ளது.

விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளோ, தேடல்களோ இல்லாதது, எதையும் ஏன்? என்ற கேள்வியுடன் விவாதமோ இல்லாதது மட்டுமல்லாது, மக்களை அறியாமையில் ஆழ்த்தியிருக்கும் அரசியல்வாதிகளும் மக்களின் உளவிய்ல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்களாகும்.
அந்த வகையில், தோழர், ச.முகமது அலி எழுத்தில் வெளி வந்துள்ளது பாம்பு என்றால்? நூல் முக்கிய இடத்தை பெறுகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்காகவும், காட்டுயிர்களுக்காகவும் தொடர்ந்து பணியற்றி வரும், இடதுசாரி சிந்தனையாளரும், பெரியாரியவாதியுமான தோழர்.ச.முகமது அலி, ஏற்கனவே " நெருப்புக் குழியில் குருவி", " அழியும் பேருயிர் யானைகள்", "இயற்கை செய்திகள், சிந்தனைகள்" போன்ற நூல்கள் வழியாக தமிழக வாசகர்களுக்கு அறிமுகமானவரே.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? 

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


பாம்புகள் வரலாறு :
                                            பாம்புகளை பற்றிய பழமைவாத கருத்துக்கள், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, அறிவியல்துறை கொண்டு, தரவுகளின் அடிப்படையில் கருத்துகளை நூலில் பதிவு செய்துள்ளார். பாம்புகளின் பரிணாமம், வாழ்வியல், நடத்தைகள் என தலைமுறைகளில் பறந்த தளங்களில் விரிகிறது.

13 கோடி வருடங்களுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் பாம்புகள் , உலகம் முழுக்க சுமார் 3000 வகைகளாக பரவியுள்ளன (பக்.9) என்று கூறும் ஆசிரியர், இ.ந்தியாவில் காணப்படும் 270 வகைப் பாம்புகளில் 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தது, (பக்.29) என கூறி பொது புத்தியில் பதிந்துள்ள கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சீரிக்கும், பாம்புக்கும் போராட்டம் நடக்கும் போது, பாம்பு , கீரியை கடித்து விட்டால் விஷம் பரவாமல் இருக்க ஒரு வகை வேரைத் தின்று, வேரில் புரளும் என்பதெல்லாம் புகழ்பெற்ற பொய்களே, கீரி, பாம்பை தன் உணவுக்காக பிடிக்க முற்படும் போது மிக விரைவாக, லாவகமாக செயல்பட்டு, அதன் கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன் இறையையும் வெற்றிகரமாகக் கொல்கிறது. (பக்.100 என்று பாம்புகள் மேலிருக்கும் பொய்களை தோலுரித்துக் காட்டுகிறார்.

உலகிலேயே நீளமான பாம்பு -17 மீட்டர் நீளமுள்ள ஆசிய பாம்பு இவற்றிற்கு விஷம் இல்லை. உலகிலேயே மிக சிறிய பாம்பு-17செ.மீட்டர் நீளமுள்ள சிறு பாம்பு இவை நமது தமிழ்நாட்டிலும் காணப்படுகிறது. பாம்புகளின் ஆயுள் சராசரி 20 வருடம் வரை அரிதாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். சிறு பாம்பு- மண்புழவைப் போல் ஆணின் துணையின்றியே குட்டிகளை பெற முடியும். பாம்புகள் 100 முதல் 700 அதிர்வெண் வரை, ஒலியை உணரும் சக்தி படைத்தவை.



 உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளவை. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன். நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் 

கூடியது

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. 


கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன


சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.


தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. 


பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.


விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:
                                                                                                                  பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.* கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

பாம்
பின்பண்புகள் :
                                   பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.


பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.


பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.


பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.


பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.


மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.


பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.



பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

"பாம்புக்கடி" பற்றிய சில தகவல்கள்:

கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதென்றால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்த்து காணப்படுகிறதென்றால், கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி) கடுமையான வலி உண்டானால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும்.

பாம்பு கடிக்கு முதலுதவி :
                                              பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டி எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அவரைக் காப்பாற்றும் வாய்ப்புள்ளது.

பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு 
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்து உடலில் விஷம் பரவிவிட்டால் கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.


நன்றி : பாம்புகளை பற்றிய எண்ணற்ற செய்திகளையும், தகவல்களையும் கூறி, பாம்புகளை பற்றிய நேர்மறை கருத்துக்களை மனதில் ஏற்படுத்திய நூலாசிரியர் தோழர்.ச.முகமது அலி. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

ஹஜ் புனிதப் பயணம் வியாபாரமாக்கப்படுகிறதா ? ஹாஜிகளுக்காண ஒரு விழிப்புணர்வு ஆய்வு......

ஐம்பெருங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை இனிதே முடித்து,வந்த ஹாஜியாரிடம்,  “ஹஜ் கடமைகள் சிறப்பாக முடிந்ததா? மக்கா ஹரமில் எல்லா நாளும் ஐவேளையும் தொழுதீர்களா? தங்குமிடம், பயணங்கள் வசதியாக இருந்தனவா?” என்று நலம் விசாரிக்க முற்படுகையில், அவரது கண்களில் பல்வித உணர்ச்சிகளும் கலவையாய்க் காணலாம். பின்னர், வலிந்து, மகிழ்ச்சியை மட்டுமே கண்களில் காட்டி, “எல்லாம் இறையருளால் சிறப்பாய் நடந்தது” என ஒற்றைவரியில் பதிலை முடித்துக் கொள்வார். இதை வாசிக்கும் நீங்கள், ஒருவேளை ஹஜ் கமிட்டி வழி சென்ற ஹாஜியோ என நினைப்பீர்கள். இல்லை. நான் மதினாவில்லிருந்து 225K.M. தொலைவில்  வசித்து வருகிறேன்..இன்னமும் பலமுறை உம்ராக்களும்,மதினாவிர்க்கு  தொழுவதற்கும்   சென்றுள்ளேன். 
 

இன்று ஹஜ் பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் அறுபது வயதைக் கடந்த முதியவர்களே என்பதால், அவர்களைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்கும் அவர்களது உறவினர்களும், பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை. முதியவர்களுக்கு தரமான கவனிப்பும், சேவையும், பாதுகாப்பும் வேண்டும் என்பதற்காகவே, அரசு-சார் ஹஜ் கமிட்டியினைத் தவிர்த்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனங்கள் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில்லை என்பதே வருத்தமான உண்மை.

சில காலம் முன்பு, தனியார் ஹஜ் பயண நிறுவனங்கள் என்பவை மிக அரிதாகத்தான் இருந்தன. ஆனால், புற்றீசல் போல, இன்று தெருவுக்கொன்றாக முளைத்துவிட்ட தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கைகளே சொல்லும், ஹஜ் பயணம் என்பது எவ்வளவும் லாபம் கொழிக்கும் பிஸினஸாக மாறிவிட்டது என்பதை.  ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் கடமையாகக் கருதும் ஹஜ்ஜை நிறைவேற்ற உதவுவதை, இவர்கள் லாப நோக்குடன் தொழிலாகச் செய்வது தவறில்லை என்றாலும், அதில் நியாயத்துடன் செயல்படுவது மிக அவசியமல்லவா? கிட்டத்தட்ட, வெளிநாட்டு வேலை பெற்றுத் தர உறுதியளிக்கும் ஏஜெண்டுகள் போல இவர்களும், சொல்வதொன்று, செய்வதொன்றாக மாறிவருவது வேதனையிலும் வேதனை.

ஹஜ் பயணம் செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகும் தருணங்கள்:

1. மக்காவில் தங்குமிடம்:

தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் பொதுவாக 40 நாட்கள் பயணமாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பணம் செலவழித்து, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செல்லக்கூடியதாக இருப்பதால், கிடைத்த வாய்ப்பிலேயே அதிக நாட்கள் மக்காவில் தங்கி அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து, அதிகம் நன்மைகள் பெற்றுக் கொள்ளலாமே என்ற ஆவல்தான் காரணம். ஆனால், அங்ஙனம் அழைத்துச் செல்லப்படும் பயணிகள், மக்காவில் ஹரமில் இருந்து ஏழெட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அஸீஸியா, ருஸைஃபா போன்ற இடங்களில்தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அங்கிருந்து கஃபா ஆலய ஹரமிற்குத் தினமும் ஐவேளை வந்து தொழுவதற்கு உரிய போக்குவரத்து வசதிகளும் நிறுவனத்தாரால் செய்துதரப்படுவதில்லை. ஹஜ் பயணி தன் தனிப்பட்ட ஆர்வத்தால், வாடகைக்கார் பிடித்து சென்றுகொண்டால் உண்டு.  அதுவும் ஹஜ் காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஹரத்திற்கு வர இலகுவில் சம்மதிப்பதும் இல்லை; சம்மதித்தாலும் பெருந்தொகை - 30 ரியால் முதல் 75 ரியால் வரை கேட்பர்!!

மொழி தெரியா ஊரில், ஒரு முதியவர் எப்படி தினமும்  சென்று வர முடியும்? உடல்நிலையோடு, பொருளாதார நிலையும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அது பெரும்பாலும் முடியாததாகையால், வாரத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் சென்றுவிட்டு, மீதி 20 நாட்கள் வரை ரூமில் அடைந்து கிடக்கின்றனர். வேளா வேளைக்கு உணவுண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்காகவா 2 முதல் 3 லட்சம் கொடுத்து அவர்கள் தனியார் ஹஜ் நிறுவனத்தில் புனிதத்தலமான மக்கத்திற்கு வந்தனர்?

இதிலே, மக்காவின் எல்கைக்குள் எங்கு தொழுதாலும், ஹரத்தில் தொழுவதற்கு ஈடாக ஒரு லட்சம் நன்மைகள் கிட்டும்  என்று சொல்லி ஏமாற்றுபவர்களும் உண்டு; அதை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் உண்டு!!

2. முஜ்தலிஃபாவிலிருந்து மினா வருகை:

ஹஜ்ஜின் 10-ம் நாளன்று, முஜ்தலிஃபாவில் ஃப்ஜ்ர் தொழுதுவிட்டு, மினாவுக்கு சுமார் 3 முதல் 5 கிமீ தூரம் நடந்து வரவேண்டும். நடப்பதில் சிரமம் இல்லை. ஆனால், வரும் வழியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில், கல் எறிய ஜமராத்தை நோக்கிச் செல்லும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கடந்து வரவேண்டும். இது மிகவும் அபாயகரமான நெரிசல் ஏற்படும் இடம் என்பதால், கூட்டத்தில் மாட்டி ஹாஜிகள் பலர் தொலைந்து போவதும் இந்த இடத்தில்தான். அப்படிப்பட்ட இடத்தில், இவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, திடகாத்திரமானவர்களைக் கொண்டு சங்கிலி வளையம் அமைத்து,  ஜனத்திரளைக் கடக்க வைக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், முதிர்ந்தவர்களையும், பெண்களையும்கூட தம் பொறுப்பில் ஏற்காமல் விட்டுவிடுகின்றனர். நெரிசலில் சிக்கி, நைந்து போய் தப்பி வருகிறவர்கள் சிலரென்றால், பலர் தொலைந்தே போய்விடுகிறார்கள். அவர்கள் வழி அறியாமல், எங்கெங்கோ அலைந்து, திரிந்து வந்து சேருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருபவர்களும் உண்டு. அதிலும், பிபி, சுகர் உள்ளவர்கள் என்றால் வந்துசேரும்போது அவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

அவர்களின் பாதுகாப்புக்கும் சேர்த்துத்தானே பொறுப்பேற்று, பணம் பெறுகிறார்கள் இந்நிறுவனத்தினர்?

3.  ஹஜ்ஜின் தவாஃப்: 


துல் ஹஜ் 10-ம் நாள் அல்லது 11-ல் ஹஜ்ஜின் பகுதியாக தவாஃப், சயீ செய்ய ஹாஜிகள் மினாவிலிருந்து மக்கா வரவேண்டும். சுமார் 10 முதல் 12 கி.மீ. தூரமுள்ள இந்தப் பயணத்திற்கும், ஹாஜிகள் தாங்களே வாகனம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அல்லது நடந்து வர வேண்டும். ஹஜ்ஜிற்கு வந்த அனைத்து லட்சக்கணக்கான மக்களும் இந்நாட்களில் தவாஃப், சயீ செய்ய மினாவிலிருந்து செல்வார்கள் என்பதால் வாகனங்கள் வாடகைக்கு கிட்டுவதும் மிக மிகச் சிரமம். அதனால் அடையும் தாமதத்தின் காரணமாய், மினாவில் இரவின் பெரும்பகுதியைச் செலவழிக்க வேண்டும் என்ற ஹஜ்ஜின் விதியை மீற வேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்பட்டு, ’தம்’ கொடுக்க வேண்டியவர்களாகிறார்கள்.

கட்டணம் வாங்கிக் கொண்டாவது,  நிறுவனத்தினர் இந்நாட்களில் தம் குழுவினருக்காக வாகனம் ஏற்பாடு செய்து தரலாமே என்பதே வயதான ஹாஜிகளின் ஏக்கக் கேள்வி.

4. மஹரமில்லாப் பெண்கள்:

ஹஜ்ஜின் விதிகளில், தகுந்த மஹரமில்லாமல், பெண் பயணிகளைத் தனியே அழைத்து வரும் பாவத்திற்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உடந்தையாகிறார்கள் நிறுவனத்தினர் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் முதிய பெண்கள் என்றால், அது பெருங்கொடுமை!!  மேற்சொல்லிய மூன்று சூழல்களிலும் அதிகமதிகப் பாதிப்பிற்குள்ளாவது தனியே வரும் முதிய பெண்கள்தான்!! அவர்களால் தனியாகவும் செல்லமுடியாது; அழைத்து வரும் நிறுவனமும் பொறுப்பேற்காது; குழுவில் உடன் வருபவர்களும் அப்பெண்களின் உடல்நிலை அல்லது தத்தம் சூழ்நிலை காரணமாய் உதவிட முடியாத நிலை எனும்போது, ஹஜ்ஜின் கட்டாயக் கடமைகளிலேயே குறை ஏற்பட்டு, ஹஜ் முழுமையடைவதே கேள்விக்குறியாகிறது!! பெரும்பாலும் இப்பெண்களின் ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்ற உதவுவது, மனிதாபிமானமுள்ள சக பயணிகளே தவிர அழைத்துச் சென்ற நிறுவனமல்ல!!

5. தவறான வழிகாட்டுதல்கள்:

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக, ஹஜ்ஜின் கிரியைகள், பிரார்த்தனைகள் சிலவற்றில் ஒருசில நிறுவனங்களின் ஹஸரத்துகள் தவறுதலாக வழிகாட்டுவதும் நடக்கிறது. உதாரணமாக, அரஃபா தினத்தன்று, மதியம் லுஹர் வேளையிலேயே லுஹர் மற்றும் அஸரைக் கஸராகச் சேர்த்துத் தொழுதுகொள்வதுதான் நபி காட்டிய வழி. ஆனால், சிலர் லுஹரையும், அஸரையும் தனித்தனியே அவற்றின் வேளைகளில் தொழச் செய்கின்றனர்!! மேலும், இஹ்ராம் துணியை கபன் துணியாகப் பயன்படுத்த வேண்டி ஜம்ஜம் நீரில் நனைத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் ஃபித்-அத்தான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன!!

6. கூடுதல் பணம் கேட்பது,  கடைசி நேரத்தில் பயணம் கேன்ஸலாவது:

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போக, கிளம்பும் நேரத்தில் கூடுதல் தொகையாக 25,000 முதல் 50,000 கேட்பதும் ஒரு புதிய பழக்கமாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே லட்சங்களில் பணம்புரட்டி கட்டிய வசதியற்றவர்கள், கடைசி நேரத்தில் அவசரமாகக் கேட்கப்படுவதால், கடன் வாங்கித்தான் கொடுக்க நேரிடுகிறது. இதனால், ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கடன்களை அடைத்துவிடவேண்டும் என்ற விதியை மீறும் நிலை ஏற்படுகிறது!!

பயணிகள், சவூதியில் மேல்செலவுக்காகக் கொண்டுபோகும் பணத்தை நிறுவத்தினர் இங்கு ரூபாயாக வாங்கி, சவூதி வந்து ரியாலாகத் தந்துவிடுகிறோம் என்று வாங்கிவிட்டு, சொன்னபடி தராமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு!!

முறையான திட்டமிடுதல் இல்லாமை, நிறுவனத்திற்கு உரிய லைசன்ஸுகள் இல்லாமை, தமக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கதிகமான ஆட்களை ஓவர்புக்கிங் செய்வது போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் பலரின் பயணங்களை ரத்து செய்வதும் ஆண்டுதோறும் நடந்து  வருவதைப் பார்க்கிறோம். ஆவலோடு தம் வாழ்நாள் கடமைப் பயணத்திற்குத் தயாராகி, கடைசி நிமிடத்தில் இல்லையென ஆகும்போது அவர்களின் ஏமாற்றம் சொல்லமுடியாதது. ”இந்த வருடம் அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை நாடவில்லை போல! அடுத்த வருடம் நாங்களே அழைத்துச் செல்கிறோம்” என்று சால்ஜாப்பு சொல்கின்றனர். அடுத்த வருடம்வரை, அப்பயணிகளின் உயிருக்கோ, உடல்நிலைக்கோ உத்தரவாதம் தர முடியுமா இவர்களா?

ஏன் இப்படி?

இவற்றையெல்லாம் குறித்து, ஹாஜிகள் அவர்களிடம் கேள்வி கேட்பார்களானால், அவர்களின் பதில் இப்படித்தானிருக்கும்: “ஹஜ் என்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி நிறைவேற்ற வேண்டிய கடமை. உங்கள் ஈமானைச் சோதிக்க இறைவன் தரும் சோதனைகள் இவை. எவ்வளவுக்கெவ்வளவு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளைக் கடந்து, கடமைகளை நிறைவேற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் ஹஜ் சிறப்புறும்; உங்கள் ஈமான் உறுதி பெறும். உறுதியில்லாத ஈமான் உள்ளவர்கள்தான் இவையெல்லாம் சிரமம், சிரமம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” என்று அவர்கள் வாயை அடைப்பார்கள்!! தம் ஈமானையே கேள்விக்குறியாக்கும்பொழுது, அவர்கள் பின் வாயைத் திறப்பார்களா? 

எனில், “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” என்று தன் வேதத்திலும்(2:185);   ”(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று இறைத்தூதரும்(ஸல்)   ஏன் சொன்னார்கள்? வல்ல இறைவனும், அவன் தூதரும் இஸ்லாமை எளிமையாக்கியிருக்க, இவர்களோ கடினமானதாகக் காட்ட  முயல்கிறார்கள். 



 முடிவு :
                  இறைவன் ஒருவனே நம் ஈமானை அறிபவன். அவனே நம் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றையும் அறிபவன். அப்படியிருக்க,  இவர்கள் தம் தவறுகளை மறைப்பதற்காக, ஹாஜிகளின் ஈமானுக்கு அக்னிப் பரிட்சை நடத்துகிறார்களா?

தாயகம் திரும்பிய ஹாஜிகள் இதுகுறித்து யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்வதுமில்லை. வேறு யாரேனும் ஹஜ் பயணம் செல்லும்போது இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிப்பதுமில்லை. சிரமப்பட்டேன் என்று சொன்னால், எங்கே தன் ஈமான் சந்தேகத்திற்குள்ளாக்கப்படுமோ என்ற பயத்தால் அமைதி காக்கிறார்கள். இதுவே இந்நிறுவனத்தினருக்கு வசதியாகி, கேள்வி கேட்போரில்லாமல் தம் ”சேவை”களை வழக்கம்போலத் தொடருகின்றனர்.

எனவே பொதுமக்களாகிய நாமே நம்மைத் தயார் செய்து கொள்வோம். முதிய வயது வரை காத்திருக்காமல், உலகக் கடமைகளின்மீது பழி போடாமல், உடல் உறுதியாய் இருக்கும் காலத்தே ஹஜ் செய்வோம். முதியவர்களை, குறிப்பாக  பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம். இறைவன் நம் முயற்சிகளுக்கு பலம் சேர்த்து, பயன் அளிப்பானாக!!


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday 28 September 2013

Expats Guide line for How to Cancel Visa & Get Visa, Tenants and Rules in U.A.E...

Prior to samsung , One of my friends working with me in Arabian Air-conditioning Contracting. Doha. I would like to share his story  of his visa problem in U.A.E. This will be helpful all of U.A.E. Expats. He was called by a private company from  Dubai  for a job with visit visa. Later on, He got employment visa after probation period. But after getting employment visa, He has a personal problem in the family. So he handed over the job and  came to India for emergency vacation. After that, he could not able to go back to Dubai.  But now he got the new job from U.A.E. Thus I would like to advise the following points to check related the Visas..
He does not enter UAE within 6 months from the date of exit from UAE, the visa will automatically get cancelled. 
 People who have been slapped with a six-month labor ban for breaking their contracts before the expiry of two years can work for a new company, provided they hold at least a high school diploma and have been offered a good position and salary from the new company, employers were told by the Ministry of Labor last week.

To lift the ban, an employee should have been offered a minimum salary of Dh5,000 for high school graduates, Dh7,000 for diploma holders and Dh12,000 for bachelor's degree holders.

The salary must be mentioned in the labor contract.

No fee will be imposed for lifting the ban when these conditions are met, Ali Al Shehi, Senior Administrator at the ministry, said in a seminar held to inform employers about their rights and duties as well as recent ministerial decisions.
 To check his previous employer  cancel his visa. 

 His employer reported he absconded. Means, He will get punished in jail right after arriving at the airport.  His employer filed an absconding case because that way your visa can get cancelled without the original passport. In this case you are blacklisted as long as this absconding file exists. Contact his former employer to find an amicable solution. 

  

 Visa Status....
If you have been given a yellow sheet of paper during your visa interview, you will find your visa case number written at the top of the paper. Please click here to check the status of your visa application and follow the instructions for your case. If your Visa is approved please click here for instruction on how to submit your passport to the consulate.
New Visa System...
With the introduction of the new Visa application system, all visa applicants who applied from 01 Jan 2013 must follow the steps below to obtain their visas.
1)    WHEN THE VISA IS READY: Once it is indicated on our website that your visa is ready for processing, applicants must drop off their passports at the U.S. Consulate General in Dubai. Please note if you fail to drop off the passport (AFTER receiving notification) before  6 Month  your case will be administratively closed and you will need to reapply.
CHECK CASE STATUS WEBSITE ADDRESS:http://dubai.usconsulate.gov/dubai/visa_status3.html
DROP OFF TIMING/LOCATION: 02:00 PM – 03:30 PM on any working day at Passport pass back booth (located outside the main entrance) 
2)    WHEN THE VISA NOT READY: Applicants who do not receive their visa clearance before 30 March 2013 will be provided instructions on how to submit their passport in order to obtain their  visa. The U.S. Consulate General in Dubai will continue processing these cases and they will NOT be administratively closed.

CHECK CASE STATUS: http://dubai.usconsulate.gov/dubai/visa_status3.html
DROP OFF TIMING/LOCATION: 02:00 PM – 03:30 PM on any working day at Passport pass back booth (located outside the main entrance) 
3)    WHEN ADDITIONAL DOCUMENTS ARE REQUIRED: Applicants that are required to drop off additional documents in order to process their visa will need to submit the documents directly at the US Consulate General in Dubai.

Please note if you fail to submit additional documentation in a timely manner your case will be administratively closed and you will have to reapply if you still wish to obtain  a  visa. 
Additional documents can also be sent via email to:Dubaivisa@state.gov.
DROP OFF TIMING/LOCATION: 02:00 PM – 03:30 PM on any working day at Passport Pass back booth (located outside the main entrance)

The New Rules in U.A.E....

The everywhere comes with a series of changes, from the way you rent an apartment, carry out banking transactions and buy a cell phone to paying your traffic fines or buying a new car. Gulf News puts together a quick reference list on procedure changes worthy of a spot on your fridge...

ID cards must.. 
                      What: Fines and denial of government services to those not having a national ID will make it an unavoidable document in 2012. Emirates Identity Authority started issuing cards to Emiratis in 2006 and to expatriates in 2008. The majority of Emiratis has already registered and their deadline has been extended several times since 2008. 

When: The authority has linked ID card registration and visa processing across the country except in Dubai which was implemented it in April 2012. Fines were imposed on Emiratis from November 1 and expatriates in four northern emirates (Fujairah, Ras Al Khaimah, Umm Al Quwain and Ajman), and all expatriates working in the government sector across the country since December 1 was the final push. The film will have been applied for expatriates in Sharjah, Abu Dhabi and Dubai from February 1, 2012, April 1, 2012 and June 1, 2012 respectively. October 31, 2011 was the deadline for renewing all identity cards expiring up to that date. The delay attracts a Dh20 fine per day, up to a maximum of Dh1, 000.

Why: A deadline for professional expatriates in 2008 and denial of any government services also started encouraging expatriates to taken action. The card is now mandatory across the country except in Dubai to access Ministry of Interior services including that of the Traffic Department. The rule began in four emirates — Umm Al Quwain, Ajman, Ras Al Khaimah and Fujairah in November 2009. Dubai  implemented it in mid-2012. Ajman Government and many federal and local government organizations have made the card compulsory to access their services and others will follow suit soon. 


Child safety campaign :

What: A safety awareness campaign as a first step towards protecting children in high-rise buildings.

Why: In view of the increasing number of children falling from high-rises recently.
When: Ongoing ..

The tragic spate of children falling to their deaths alarmed authorities across the UAE, who took measures to ensure that children are safe. Authorities and safety experts have asserted the need to keep children under the supervision of parents or guardians at all times, generating awareness, while, at the same time, taking measures to ensure that houses and buildings are safe.

The Municipal Council of Sharjah has announced that local authorities will soon launch a safety awareness campaign as a first step towards protecting children in high-rise buildings. The Child Protection Higher Committee and the Ministry of Interior Child Protection Centre are also considering issuing a new set of codes regarding construction and safety specifications in high-rise buildings to promote child safety. The Ministry of Interior's child protection center called for balconies to be covered with Perspex sheets. Balcony doors should remain closed at all times and locked and keys have to be kept in a place that cannot be reached by children. The Department of Municipal Affairs, Abu Dhabi, is working to put in place a unified set of codes, known as the Abu Dhabi Building Codes, to address this issue.


3. Traffic fines :
                                  In 2012, drivers and vehicle owners who have accumulated traffic fines will have a chance to pay them at a discounted rate in most emirates. In Abu Dhabi, drivers can still pay their fines at 50 per cent discount with no deadline given so far for the grace period, while in Dubai, the 40 percent discount on traffic violations committed  on December 2, 2011 to January 12. Drivers with offenses in Sharjah and Ras Al Khaimah have until the end of April to pay their fines at a 50 per cent discount, while in Ajman, the same discount will apply only until the end of February. The 50 per cent discount on traffic fines in Umm Al Quwain ended on December 31, while those who committed traffic violations in Fujairah will continue to pay their fines in full, as no discount has been announced so far. 


4. IBAN 

              What: The International Bank Account (IBAN) number is required to conduct any local or international transactions. The IBAN is a unique 23-digit long, internationally recognized code assigned to each bank account. It is required if salaries are processed through UAEWPS, whereby the employer is registered with the Ministry of Labor, and UAEFTS, whereby the employer is outside the purview of the Ministry of Labor and the accounts of the employer and employee are with different banks. The IBAN is not required if the salary is processed through an internal transfer, which means the employer is outside the purview of the Ministry of Labor and the accounts of the employer and employee are with the same bank.
Who: Mandatory for all UAE bank account holders.

WhenIBAN launched on November 2011.

Why: To ensure efficient and speedy payment transactions and minimize the risk of transcription errors in cross-border transactions, according to the Central Bank.

5. Rent registration

                                      What: Registering rent contracts with the Dubai Land Department (DLD) through Ejari.ae. This will be a pre-requisite to accessing other government services. Failure to comply will result in a penalty. 

Who: Dubai tenants and landlords only.

When: Effective for new contracts registered since 2012. Tenants with existing contracts can wait until their contract renewal date to seek registration. 

Why: To help the government monitor the property market and offer better insights through its rental index while ensuring all tenants pay their housing fees regularly.

6. Unified car purchase contract 

What: The new unified auto purchase contract clearly states the rights of the customers and dealers' obligations in terms of warranties, after-sales service and maintenance, among others. Officials expect disputes between car dealers and consumers to drop by 30 per cent with the implementation of the unified contract. The unified contract for sales comprises an invoice (containing the vehicle code, vehicle specifications, color, engine capacity and checklist), warranty provided and a delivery acknowledgment from the customer. All printed documents should be in both Arabic and English. A service contract must include a service invoice, regular service check sheet, job cards and customer acknowledgment of the documents. For a parts contract, there should be an invoice with the service provider's name and address, description of the goods or services provided, sales unit, price in local currency and Arabic enabled documentation.

When:  Since January 2012 

Why: To help the UAE's automobile sector by making buying and selling activity more transparent, for the benefit of customer, officials say.

7. Fake mobile phones :
                                       What: UAE telecommunication service providers etisalat and duo will suspend all services to mobile phone subscribers who use counterfeit handsets. Users of fake devices will be contacted by their service providers and all phones that are not type approved will be disconnected from all telecom services, including calls, texts and the internet, the Telecommunications Regulatory Authority (TRA) said.

When:  Since January 1, 2012.

Why: Officials say fake phones could be hazardous as they may not meet safety standards.


8 - Things you should know before signing a new lease
Thinking of moving into a new pad? Well, don’t even pick up a pen to sign that lease until you’ve read our checklist

By now, we all know that Dubai is a tenants’ market. With the demand-supply equation tilted strongly against the landlords, tenants are in a position to be more aggressive in negotiating rent and facilities. However, the fact remains that tenants are not fully equipped to demand what could rightly be theirs because of lack of awareness. Property, in association with Ludmila Yamalova, managing partner, Yamalova Plewka JLT, brings you the low-down on what every tenant in this market must know 


1. Ask for a customized tenancy contract :
                                                                      Remember, a standard tenancy contract does not really exist. “Whenever you enter into a negotiation with a landlord or real estate agent, just make it very clear that you want a contract that is specifically drafted for you,” says Ludmila. “There is a standard tenancy contract commonly used in Dubai, but that’s only a template. You can draft your own or make changes to it. The existing template is a one-page document which is limited and unhelpful. Today, tenants have the leverage to dictate or set their own terms. Some landlords and real estate agents will tell you it is not done that way. The truth is they don’t want it to be done that way.” 

2. Read the contract closely before you sign :
                                                                                        Ludmila advises tenants to read the contract thoroughly. “You must read the contract and if you don’t understand it, then don’t sign it,” she says. It is better to include a termination clause in the contract so that it becomes easier for both parties to terminate the deal if the need arises. Generally, the exit clause comprises the notice period and the penalty payable to the landlord. “You have to be fair and the term should allow you to terminate the contract with some sort of penalty. During the notice period, you should also give the landlord access to the property so that he can show it to other clients. If the landlord finds another tenant during the notice period, then he may not want to penalize you. Not every landlord wants to penalize just because they can,” says Ludmila.

3. Get the contract registered :
                                                       Make sure the contracts are registered. Many people think it is the landlord’s responsibility to do it but this is unrealistic. Tenants should also be aware of this process. It is important — if anything goes wrong, you are not allowed to file a case against the landlord if the tenancy contract is not registered. 

4. Have your deposit held in an escrow account : 
                                                                                            Many landlords ask for a guarantee deposit but at the same time refuse to return the deposit to the tenants when they vacate. “It is better to make sure that the deposit is held in an escrow account or with a real estate agent or lawyers,” says Ludmila. “Damages are bound to happen in the unit that you stay in and it is only fair that landlords have a security deposit which they can use for maintenance. Try to document everything.” Documentation is a vital aspect as there may be unforeseen situations where the landlord is unavailable and there is something wrong with the air conditioning or electricity. In such a situation, the tenant should be able to get the work done and then the cost should be reimbursed by the landlord. The whole process will be smooth if it is properly documented in the contract. “Another thing is to have the authority to deal with the service management company on behalf of the landlord. Get some sort of authorization or power of attorney from the landlord,” adds Ludmila.

5. Never pay in one cheque :

                                                             During the boom time, tenants used to pay rent for the whole year in advance as the sector was dominated by single cheque payments. However, when the market crashed and the demand for units came down drastically, landlords and real estate agents were forced to accept more cheques — some even offering payment option in many as 12 cheques. “Landlords can no longer dictate the terms as they used to. As a legal practitioner, my strongest advice is never paid in one cheek,” Ludmila says. She advises those who pay in one cheque to ask for a guarantee deposit from the landlord so that they can be held accountable for any damage or disturbance that may come up before the end of the lease. “You have to decide whether the guarantee deposit will be held by the real estate agency or the lawyers who are involved in it or an escrow account. While there are no escrow services in the UAE as such, real estate agents and lawyers can hold investment funds,” she explains. 

6. Know your landlord :
                                           Make sure you know everything about your landlord because the UAE many of them are absentee landlords who are represented either by licensed real estate agents or somebody else acting on behalf of the landlord. This actually means that you very rarely deal with the landlord directly. Ludmila says it is a problem if you don’t have the landlord’s contact details. “You are entitled to get this info and I suggest you don’t sign any kind of contract before you receive this information. You should also be provided with a copy of the landlord’s passport and visa page, and more importantly contact details,” she explains. If a situation arises, without the details of the landlord it is not possible to file a suit against the landlord or lodge a complaint with the rent committee, simply because without the physical address the notice cannot be served. Tenants also need to make sure these contact details belong to the landlord and not some of his representatives or real estate agents, which is the case most of the time. 

7. Get proof of authorization :
                                                   In Dubai, it is very rare for tenants to deal with the landlord directly, so it is imperative that whoever you are dealing with should show you some proof that he or she is authorized to conduct the transactions and dealings on behalf of the landlord. “For example, if it is a real estate company, you need to see some kind of documents that show that this company is authorized to act on behalf of the landlord. If it is a representative of the landlord, then a power of attorney, which is a legally binding document, is an absolute must,” says Ludmila. 
8. Document expenses in the contract :
                                                                   Tenants should make sure that they look at all the expenses such as water and electricity bills, housing fees, air conditioning/chiller/district cooling charges and service fees. “Generally, service fees are paid by the landlord while some others want to pass it on to the tenants,” says Ludmila. The issue of service charges must be discussed with the landlord in advance as it is something which will affect the tenants directly. If the landlord doesn’t pay the service fees, then the tenant’s rights to the property or amenities could be curtailed. Before signing the deal, the tenant and the landlord should make a decision as to who will pay the Dewa (Dubai Water and Electricity Authority) bill, which also includes the housing fee which is 5 per cent of the annual rent — a substantial amount. “Air conditioning is a big expense too and you need to decide who will pay for it because if you don’t pay and the landlord doesn’t pay either, it gets cut off” says Ludmila. “You need to discuss instruments such as access cards, parking access cards and parking numbers. If these get lost, how can you get a replacement? These are some of the issues that need to be addressed.”

9. Plan for the unexpected :
                                                       There should be provisions in the contract for unforeseen issues such as power or water leaks, which can be a major cause of concern sometimes. Tenants need to discuss with their landlord who will be responsible in case of such an event. Ludmila recollects the plight of one of her clients who was forced to pay Dh10,000 every month as a Dewa bill because of some leaks. “Ultimately it affects the tenants and it is their name that is there on the Dewa account. Landlords may return this amount after finding out what the issue is but that’s only a hope. That’s why I insist on taking a deposit from the landlord as well.” 

10. Make sure all bills have been settled :
                                                                       Ludmila advises tenants to conduct proper due diligence before they sign the deal and money exchanges hands. “Make sure all the accounts are settled by the previous tenant. There are many instances when tenants go to set up utility or telecom accounts only to find that the previous tenants haven’t paid their dues.” In such cases, the new tenants will be on a hook because on the one hand the dues of the previous tenant are standing unpaid while on the other the new lease agreement has been signed and deposit paid, she adds.

11. Have automatic provisions in the contract :
                                                                                              Having automatic provisions in the tenancy contract allows the tenant to take appropriate decisions in case of any problem related to the unit even in the absence of the landlord. “Try to make an automatic provision where if the landlord doesn’t respond in two weeks, then the tenant gets the right to contact the contractors,” Ludmila concludes.

  Collection & WrittenBy M.Ajmal Khan.