Sunday 1 December 2013

நீங்கள் தொழில் வரி/வருமானவரி கட்டுபவரா ? ஒரு தவகல்..

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.



புரபஷனல் வரி(தொழில் வரி)!!

நிரந்தர பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் அரையாண்டுக்கு ஒரு முறை தொழில் வரி (புரபஷனல் வரி) பிடிக்கப்படுகிறது.
 இது எதற்காக பிடிக்கப்படுகிறது?
இந்தத் தொகை யாருக்கு போய் சேருகிறது?
எதன் அடிப்படையில் இந்த தொழில்வரி பிடிக்கப்படுகிறது?

தொழில் வரி கட்டுவோருக்கு இந்தச் சந்தேகங்கள் இருந்தாலும், இதன் பதில்கள் பலரும் அறியாத விஷயமாக இருக்கிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் சம்பளப் பட்டுவாடா செய்யும் அலுவலர்கள், மத்திய, மாநில அரசுக்  கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், தொழில் புரிவோர், தமிழ்நாடு அரசுக்கு விற்பனை வரி செலுத்தும் நபர்கள், மற்றும் சொந்தமாக தொழில் புரிவோர் இந்தத் தொழில் வரி கட்ட வேண்டும். இந்த வரியை கொண்டு மாநகராட்சிகள் 
அவற்றின் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.

அடிப்படை தகுதி..

தொழில்புரிபவர் அல்லது பணியாளரின் அரையாண்டு வருமானம் / சம்பளம் 21,001 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் தொழில்வரி செலுத்த வேண்டும்.
ஆறு மாத சம்பளம் 20,000 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் இந்தத் தொழில் வரி கட்டத் தேவையில்லை. மேலும், தற்காலிக பணியில் இருப்பவர்கள் இந்த வரி கட்டத் தேவையில்லை.

வரி எவ்வளவு?
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் ஒருவர் செலுத்த வேண்டிய தொழில்வரி விவரம் வருமாறு:
அரையாண்டு வருமானம் (ரூ.)     அரையாண்டுக்கான வரி (ரூ.)
21,001 முதல் 30,000 வரை   -          100
30,001 முதல் 45,000 வரை   -          235
45,001 முதல் 60,000 வரை   -          510
61,001 முதல் 75,000 வரை   -          760
75,001 மேல்                                    -        1,095
இந்தக் கணக்குப்படி ஒருவர் ஒரு முழு ஆண்டில் எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும் அதிகபட்சம் 2,190 ரூபாய்தான் வரி கட்ட வேண்டி வரும்.
மற்ற மாநகராட்சிகளில் இதே அளவோ இதைவிட சிறிது குறைவாகவோ அல்லது சிறிது அதிகமாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்தத் தொழில்வரி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
உரிய காலத்திற்குள் தொழில்வரியினை செலுத்தத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
நிறுவனங்களை பொறுத்த வரையில் அவை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இந்த வரியை பிடித்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை மாநகராட்சிக்கு கட்டிவிடுவதால் அவர்களுக்கு சுமை எதுவும் இல்லை.

வரி செலுத்த விரும்புவோர், மாநகராட்சியின் பெயரில் காசோலை அல்லது கேட்பு காசோலையாக (டி.டி) செலுத்தலாம். வரி கட்டும் போது அதற்கான படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு தொழில் வரி விதிப்பு எண் மற்றும் ரசீது தரப்படும்.

வருமானவரி :
வருமான வரி சட்டத்தின் படி ஐந்து தலைப்புகளில் ஒவ்வொரு விதமாக வருமானம் கணக்கிடப்படுகிறது எல்லாவிதமான வருமானங்களையும் பணப் பரிமாற்றங்களையும் இதில் அடக்கி விடலாம்.
1. சம்பள வருமானம்  (Income from Salary)
2. வீட்டு வாடகை வருமானம்  (Income from House Property)
3. மூலதன ( பரிமாற்ற) வருமானம்) (Income from Capital Gains)
4. வியாபாரம் மற்றும் தொழில் வருமானம் (Income from Business and Profession)
5. இதர இனங்களின் மூலமாக வருமானம் (Income from Other Sources)
தனிநபர் (Individual), கூட்டு நிறுவனம் (Patrnership Firm), கம்பெனி (company), மூலதன  பரிமாற்றம், இதர வருமானம் ஆகிய வருமானத்திற்கு ஒவ்வொருவிதமான விகிதத்தில் வரி கணக்கீடு உண்டு.

இதில் தனிநபர் வருமானம் மூன்று விதமாக பிரிக்கப்படும்
1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்
2. 60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்
3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்

பொதுவாக தனிநபருடைய வருமானம் என்பது பெரும்பாலும் சம்பளம் மூலமாகவே வரும். அவ்வருமானத்திற்கு வருமான வரியை எப்படி கணக்கிடுவது என்பது மிகவும் எளிமையனது அதற்கு வருமானவரி படிவம் தாக்கல் செய்வதும் மிகவும் எளிமையானதே. ஒருவருடைய ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் வரை இருந்தால் அவருக்கு வருமானவரி கிடையாது, அதற்கு மேல் இருந்தால் கீழ்கண்ட விகிதத்தில் வருமான வரி கணக்கிடப்படும்.

1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்:
வருமானம்                                        வருமானவரி சதவீதம்
2,00,000                                                இல்லை
2,00,000-5,00,000                          2,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%
5,00,000-10,00,000                       30,000+ 5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000க்கு மேல்                        1,30,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%

2.  60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்:
வருமானம்                                          வருமானவரி சதவீதம்
2,50,000                                                 இல்லை
2,50,000-5,00,000                            2,50,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%
5,00,000-10,00,000                         25,000+ 5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000 க்கு மேல்                        1,25,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான 
தொகைக்கு 30%

3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்:
வருமானம்                                        வருமானவரி சதவீதம்
5,00,000                                                இல்லை
5,00,000-10,00,000                       5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%
10,00,000 க்கு மேல்                       1,00,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%
இத்தோடு கல்விக்கு என கூடுதலாக 2%, மேல்நிலைக்க் கல்வி மற்றும் உயர்கல்விக்கு
என 1% கூடுதலாக மொத்த வரியில் இருந்து வசூலிக்கப்படுகிறது.


வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.



பொதுவாக பெரிய நிறுவனங்கள், பதிவு பெற்ற நிறுவனங்கள் என்ற இந்த பட்டியலில் வருகின்றது. ஆனால் எனக்குத் தெரிந்து வீட்டு வாடகை மூலம் லட்சகணக்காக சம்பாரிப்பவர்கள் ஒவ்வொரு பெரிய நகரங்களிலும்அதிகம்.

நண்பர் அடிக்கடிச் சொல்வார். திருப்பூரில் மட்டும் மாதம் தோறும் தங்கள் கட்டி வைத்துள்ள வீடுகள் மூலம் 5 லட்சம் வீட்டு வாடகை வாங்குபவர் மட்டும் ஏறக்குறைய 10 000 பேர்கள் வருவார்கள். இதே போல மாதம் 50 லட்சம் என்று வீட்டு வாடகை (பெரிய நிறுவனங்களை கட்டிக் கொடுத்து இருப்பவர்கள்) 50 லட்சம் வாங்குபவர்கள் கூட 100 பேர்கள் தேறுவார்கள்.

நண்பர் வேறு விதமாக சொல்லி சிரித்தார்.

பெங்களூரில் பத்து கோடி அளவுக்கு வசூலிப்பவர்கள் லட்சக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள் என்றார்.

பலர் அறக்கட்டளை என்ற பெயரில் இதை மாற்றம் செய்து தப்பிப்பது போன்ற செயல் மூலம் தப்பித்தாலும் மொத்தமாக இந்தியா முழுக்க உருப்படியாக அதிரடியாக கவனித்து வரி வசூல் செய்தால் நம் நாட்டில் ஒரு ஐந்தாண்டுதிட்டம் போட பணம் எளிதாக கிடைக்கும் என்பது என் எண்ணம்.

அற்புதமான சட்டங்கள் இருந்தாலும் அதை முறையாக பயன் படுத்த இங்கு மக்களுக்கு மனமில்லை. அதற்கு காரணம் மூட நம்பிக்கை, ஜாதி மத தடைகள் . இவை ஒழிந்தால் சட்டம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரி எயிப்பு ஒழியும். நல திட்டம் மக்களை அடையும் . மக்கள் வறுமை ஒழிந்து எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டும்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.





தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

                 

No comments:

Post a Comment