Friday 2 May 2014

துபாயில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!


துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே1 முதல் வரும் 80 நாட்களுக்கு விமானநிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் சில குறிப்பிட்ட விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பராமரிப்புப் பணி இரண்டு இரண்டு ஓடுதளங்களில் மாற்றி மாற்றி நடைபெற உள்ளதால், முதல்கட்டமாக தெற்குப்பகுதி ஓடுதளம் வரும் மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், வடக்குப் பகுதி ஓடுதளம் மே 31ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.             
இந்தக் காலகட்டத்தில் துபாய் வந்து செல்லும் விமானங்கள் 26 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் விமான சேவைகளும் அருகில் உள்ள மற்ற விமான நிலைங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விமான புறப்படும் 3 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை சென்றடைவது மிகவும் நல்லது.
EMIRATES AIRLINES..
துபாயில் (Dubai Airport Termial 3) இருந்து சென்னை செல்லும் எமீரேட்ஸ் விமானத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
1. தினமும் அதிகாலை 2.45 புறப்பட்டு காலை 8.20 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
2. தினமும் மதியம் 2.45 புறப்பட்டு இரவு 8.20 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
3. தினமும் இரவு 9.25 புறப்பட்டு அதிகாலை 3.00 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
இண்டிகோ விமானம்:
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இருந்து இதுவரை 56 ஏர்லைன் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அவை தற்போது 37 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் இந்த புதிய சேவையை மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் துபாய் டெர்மினல் ஒன்று (Dubai Airport Termial 1) இருந்து தினமும் இரவு 10.20 புறப்பட்டு காலை 4.15 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்….
அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில், துபாய் விமான நிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகளால் இதுவரை துபாயிலிருந்து அமிர்தசரஸ், லக்னோ, திருச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புனே வரை செல்லும் விமானங்கள், இந்த 80 நாட்களுக்கு சார்ஜாவிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருத்து தினமும் காலை 8.00 புறப்பட்டு மதியம் 01.40 மணியளவில் திருச்சி சென்றடையும்.
ஏர் இந்தியா
துபாயில் விமான நிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகளால் இதுவரை துபாயிலிருந்து சென்னை செல்லும் விமானம், இந்த 80 நாட்களுக்கு சார்ஜாவிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருத்து தினமும் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 3.50 மணியளவில் சென்னை சென்றடையும்.
ஏர் அரேபியா
தினமும் சார்ஜாவில் இருந்து சென்னை செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
சார்ஜாவில் இருத்து தினமும் இரவு 10.10 புறப்பட்டு அதிகாலை 3.40 மணியளவில் சென்னை சென்றடையும்.
ஜெட் ஏர்வேஸ் உறுதி…
விமான பயணப் பாதை மாற்றப்பட்டுள்ளதால் தங்களது விமானங்கள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை என பயணிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றும் இதர விமானம் பற்றிய தகவல்களை அறிய துபாய் ஏர்போர்ட் (www.dubaiairport.ae) அல்லது டிராவல் ஏஜேன்ஸிஸை தொர்பு கொள்ளவும்.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment