Friday 2 May 2014

நாம் அடித்து நொறுக்கப்பட வேண்டிய தனியார் சுங்கச் சாவடிகள்...!

'எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை 'எனச் சொல்ல முடியாமல் இருக்கும் ஒரு அமைப்பு என்றால் அது ; டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி  மையங்கள்தான். கோடிக்கால் பூதம் போல் இந்த வழியா வந்தாலும் டோல்கேட், அந்த வழியாக வந்தாலும், குறைந்த அளவு தூரத்திலும் டோல்கேட் . இதில் 'NEXT  TOLL PLAZA 500 METERS 'என மிரட்டும் எச்சரிக்கை பலகை வேறு. 

ஒருவேளை நம் நேரத்தையும் பணத்தையும் சாவடிப்பதால் இப்படி 'சாவடி' என பேர் வந்ததோ? எனத் தெரிய வில்லை. 

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட வாஜ்பாய்   தலைமையிலான  பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாவடி அமைத்தது.சாலைகள் சிறப்புற அமைந்ததால்தான் இன்று எளிதில் பயணிக்க முடிகிறது. நேரம் மிச்சமாகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. வாகன பழுது குறைவாகிறது.

இப்படியாக  ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறை யில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப்படுத்தியது. சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப்பட்டது. 

ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிட பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன தனியார் நிறுவனங்கள். 
சுங்கச் சாவடி மையங்களுக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு மேலும் நீட்டித்துக் கொண்டு போவது நியாயமில்லை.  இந்த  தனியார் நிறுவனங்கள், அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்து வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நாடு முழுவதுமுள்ள 62 சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 2 சுங்க சாவடிகளும் அடக்கமாகும். 50 கோடி ரூபாய்க்கு குறைவான செலவில் மேம்படுத்தப்பட்ட சாலைகளில், சுங்கச் சாவடிகள் இருக்காது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதனிடையே நாகப்பட்டினம் -& மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை, பொங்கலூர் ஆகிய இரு இடங்களில், கடந்த மாதம் புதிதாக சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்கு எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த 2 சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கும் முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது.அடிக்கும் கொள்ளை கொஞ்சமா.? நஞ்சமா.?
உதாரணத்திற்கு செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடி குறித்துப் பார்ப்போம்...

90 கி.மீ தூரம் சாலை போட இவர்கள் போட்ட முதலீடு 80 கோடி ரூபாய்...
10 வருடத்தில் இவர்கள் சுங்கச்சாவடியில் வசூல் செய்தது 2268 கோடி...
நாள் ஒன்றுக்கு 90000 வாகனங்கள் செல்கிறது.,ஒரு வாகனத்திற்கு சராசரியாக 70 ரூபாய் என வைத்து கொண்டால், நாள் ஒன்றுக்கு 63 லட்சம் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது...

மாதம் 18 கோடியே 90 லட்சம்.. வருடத்திற்கு 226 கோடியே 80 லட்சம்..
10 வருடத்திற்கு.....
கார் - 35 ரூ,
நடுத்தர வாகனங்கள் - 70 ரூ,
லாரி, பஸ் - 110,
கண்டய்னர் போன்றவைகளுக்கு 210 ரூபாய்...
இதில் இவர்களாகவே சொல்லாமல் கொள்ளாமல் சுங்க வரியை வேறு உயர்த்தி கொள்வார்கள்...
2014ம் ஆண்டு, விடுமுறைகால அமர்வு நீதிபதிகளான நீதிபதி ஆர்.சுதாகர், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் - இது ஒரு இல்லீகள் பிசினஸ் என்று தீர்ப்பு வழங்கி அந்த வசூலை நிறுத்தும்படியும் கூறி உள்ளார்கள்...


“நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை” என்று பராசக்தி வசனம் போல் அனைத்து சுங்க சாவடிகளையும் மூட வேண்டாம். ஆட்டுக்கு தாடி போல தேவையற்று உருவாகியிருக்கும் சில சுங்க சாவடிகளை மூட வேண்டும். பல சாவடிகளில் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கக் கூடாது. 

ஒரு சுங்கச்சாவடியில் இவ்வளவு கொள்ளை என்றால்.,
தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுங்கச்சாவடிகள்,
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சுங்கச் சாவடிகளில்....
கொள்ளை எவ்வளவு என்பது கணக்கில் அடங்காது...
புதிதாக வாங்குகிற வாகனங்களுக்கு சாலை வரி கட்டுகிறோம்..
அந்த வாகனத்துக்காக போடும் பெட்ரோலில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் சாலை வரியாக கொடுக்கிறோம்..

சாலைவரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், என் தேசத்துக்குள் நான் நடமாட ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

சாலைகள் அரசுக்கு சொந்தம் - இது ""welfare state " கிடையாதா? என மக்கள் நினைப்பதை , கேட்பதை அரசு செயல்படுத்த வேண்டும்.

இதுவும் போதாதென்று இது போன்ற சுங்கச்சாவடிகளில் சாலைக்காக தனியே சுங்கவரி வாங்கி மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்கள்...
அரசின் உதவியோடு இப்படி பட்ட கொள்ளைகள் நடத்தப்படுகிறது.. - தடுத்து நிறுத்துவார் யார்? 

நாமேதான் ...

No comments:

Post a Comment