Saturday, August 9, 2014

ஐந்து நிமிடங்களில் மயோனைஸ் (mayonnaise) எப்படி தயார் செய்யலாம்? ஒரு தவகல்...

வெளிநாட்டில்  வேலை பார்த்தவர்களுக்கும் , பார்ப்பவர்களுக்கும்    முக்கியமான காலை உணவு  சாண்ட்விட்ச்(Sandwich) ஆகும். இதில் கண்டிப்பாக மயோனைசை தடவித்தான் மற்றதை (முட்டை,பிலாபில்,கீமா,வெஜிடபில் ) சேர்த்துதான் செய்வார்கள்.
கெட்சப்பை போலவே சுவைக்காகத் தொட்டுக்கொள்ளப்படும் இன்னொரு பொருள் மயோனைஸ். இதனை வொயிட் சாஸ் என்றும் அழைக்கிறார்கள். பொறித்த கோழிக்கறி சாப்பிடப் போகிற இடத்தில் கூடுதலாக மயோனைஸ் வேண்டும் எனக் கேட்கிறார்கள் இளைஞர்கள்.
மயோனைஸ் என்பது முட்டை கருவுடன் வினி​கர், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்துச் செய்வதாகும். அது வெள்ளை அல்லது இளமஞ்சள் நிறத்தி​லிருக்கிறது. மயோனைஸ் பிரெஞ்சு உணவு பண்பாட்டில் இருந்து உருவானது. முட்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்காக முட்டை கலக்காத மயோனைஸ்களும் தயாரிக்கப்படுகின்றன.
18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் மயோனைஸ் சாப்பிடுகிற பழக்கம் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்தது.ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் எனப்படும் உருளைக் கிழங்கு சிப்ஸுக்குத் தொட்டுக்கொள்ள மயோனைஸ் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உலகில் அதிகம் மயோனைஸ் சாப்பிடும் நாடுகளில் ஒன்று சிலி. 1905-க்கு பிறகே இது அமெரிக்காவில் புகழ்பெறத் தொடங்கியது. 1926-ல் டின்களில் அடைக்கப்பட்ட மயோனைஸ் விற்பனை செய்யப்பட்டன.
ரஷ்யாவில் சூரியகாந்தி எண்ணெய்யைக்​கொண்டு மயோனைஸ் தயாரிக்கிறார்கள். ரஷ்யாவில் கெட்சப்பை விட மயோனைஸ் விற்பனை அதிகம்.
மயோனைஸின் மூலம் தலைமுடியைத் தூய்மைப்படுத்தும் கண்டிஷனர் போன்றது. மயோனைஸ் கொண்டு கூந்தலை அலசினால், பொலிவடையும் என்கிறார்கள்.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 200 கோடி டாலர் மயோனைஸ் விற்பனையாகிறது. இந்தியாவில் இதன் விற்பனை ஆண்டுக்கு 12 கோடி. இதன் 90 சதவிகிதம் பெருநகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாகச் சாலட் மீது பரவவிடுவதற்கும், பர்கர் உடன் சேர்க்கவும், கோழி மற்றும் மீன் வறுவலுடன் தொட்டுக் கொள்ளவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகக் கொழுப்பு சத்து உள்ளதால், மிகுதியாகச் சாப்பிட்டால் ரத்த உயர் அழுத்தம் வர வாய்ப்பு  உள்ளது .
என்ன, இப்பொழுது தெரிந்ததா  மயோனிசின்  வரலாறு ..பள்ளிப் பிள்ளைகள் இருக்கின்ற வீடுகளின் ஃபிரிட்ஜில் தவறாமல் இடம்  பெற வேண்டிய  முக்கியமான கேட்ச் அப்  மயோனிஸ் ஆகும் .செலவும் மிச்சம்.. சூப்பர் மார்க்கெட்டில் போய் வாங்கினால் அநியாய விலையாக இருக்கிறது .  இந்த மயோனைசை வீட்டிலேயே ஐந்து நிமிடங்களில்  எப்படி தயார் செய்யலாம் என்பதை  இங்கு பார்போம்.வீட்டில் நீங்களே செய்துப் பாருங்களேன் .. 
மயோனைஸ் (home made mayonnaise )
தேவையான பொருட்கள் :
இரண்டு முட்டையின் மஞ்சள் கரு( வெள்ளைக் கருவை வீணாக்காமல் கார்லிக் சாஸ் செய்ய பயன்படுத்தலாம்.ஒரே நேரத்தில் இரண்டு சாஸையும் தயாரிப்பது நேரம் மிச்சம்).
ஒரு கப் சனோலா அல்லது ரீபைண்ட் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில்.
கொஞ்சம் உப்பு மிளகுத் தூள்.
2 ஸ்பூண் வினிகர் ..அரை ஸ்பூண் சர்க்கரை ..
செய்முறை..
மிக்ஸியில் உள்ள சிறிய பிளண்டரில் முட்டை மஞ்சள் கரு, வினிகர் ,உப்பு,மிளகுத் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்ததும் கால் கப் எண்ணெய் சேர்த்து high speedல் அரைத்து கொண்டிருக்கும் போதே மீதி எண்ணெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும் ..இப்படியே சிறிது இடைவெளி விட்டு ஐந்து நிமிடங்கள் வரை அரைத்து எடுக்கவும்.
இப்பொழுது மயோனிஸ் ரெடி..ரெம்பவும் கட்டியாக இருந்தால் சிறிது வெண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கார்லிக் flavour வேண்டும் என்றால் முதலில் அரைக்கும் போது 2 பல் பூண்டு சேர்த்து கொள்ளவும் …
இவ்வாறுதான்  துபாய் மற்றும் கர்த்தாரில் இருந்தபோது  என் கணவருக்கும் , இப்பொழுது மதுரையில் என் குழந்தைகளுக்கும்  வாரம் ஒரு முறை செய்து கொடுக்கிறேன்.
ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment