Wednesday 10 September 2014

லெக்கின்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள்!!

லெக்கின்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா? - தெரிந்துகொள்வோம்
Image may contain: one or more people and textபெண்கள் லெக்கின்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கின்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா? லெக்கின்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?
உடல் சூடாகிறது :-
இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கின்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது. இது சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வியற்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.
பாக்டிரியா மற்றும் பூஞ்சைகள் :-
இறுக்கமான உடைகளை அணிவதால் சில இடங்களில் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டிரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. இரவிலாவது தளர்ச்சியான உடைகளை அணிவது சிறந்தது.
படர்தாமரை :-
பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு காரணமாக உள்ளது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. மேலும் அதிகப்படியான வியற்வையும் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது. இது படர்தாமரை வர காரணமாக உள்ளது. படர்தாமரையால் உண்டாகும் அரிப்பு தாங்கமுடியாதது. மேலும் இது பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிவது அதிகமான வியற்வை தேங்க வழிவகுக்கும்.
அரிப்பு :-
படர்தாமரையை விட கொடுமையானது அரிப்பு தான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடல்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கின்ஸ் அணிவதால் அதிகமான வியற்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது, மேலும் சுத்தமாக குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.
ஈஸ்ட் தொற்று :-
அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கின்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கின்ஸ் உடன் இருப்பது தவறானது.
வறட்சியை உண்டாக்குகிறது :-
லெக்கின்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், லெக்கின்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடைய வைக்கிறது. இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களை உண்டாக்குகிறது. லெக்கின்ஸை கழட்டிய உடன் குளிக்க வேண்டியது அவசியம்.
உடல் எடையை அதிகரிக்கிறது :-
லெக்கின்ஸ் அணிவதால் உடல் அதிகரிக்கிறது. சதைகள் இறுக்கமாகி தோற்றத்தையும் கெடுக்கிறது.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment