Friday 7 November 2014

"பத்மபூஷண்" டாக்டர் கமல்ஹாசனின் ஆறில் இருந்து அறுபது வரை !! ஒரு சிறப்பு பார்வை...

Kamal Haasan FICCI event.jpg உலக சினிமா வரலாறு என்ற புத்தகம் ஒன்றை எழுதினால் அதில் இடம் பெறக்கூடிய தகுதி படைத்த முதல் இந்திய நடிகர், ஆஸ்கார் விருதை நெருங்கி வரும் ஒரே இந்திய நடிகர், மூன்று முறை தேசிய விருது மற்றும் பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரார், இவையெல்லாவற்றையும் விட ரசிகர்கள் அவருக்கு கொடுத்த உலக நாயகன் பட்டம் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குனர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து ஒரு நடமாடும் சினிமா பல்கலைக்கழகமாக வாழ்ந்து வருகிறார்.நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக இருந்தாலும் அவரைக் காட்டிலும் கலைத்தாகம் கொண்ட நடிகர், ஒவ்வொரு படத்துக்கான தேடல்தான் மனிதரை இத்தனை வருடங்களாக சினிமாவில் நிறுத்தி... உலக நாயகன் ஆக்கியிருக்கிறது. எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் அந்த கடின உழைப்பும் இன்று வரும் நடிகர்களிடம் இருந்தாலும் இந்தளவுக்கு இவரைத் தவிர வேறு எவரிடமும் இல்லை என்று சொல்லலாம். எத்தனை விதமான கெட்டப்புக்கள், எப்படிப்பட்ட நடிப்பு. பார்த்து வியக்க வைக்கும் நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். 


பிறப்பு & இளமை பருவம் 

நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். 


தனது ஆறாவது வயதில் டி.கே.சண்முகம் அவர்கள் நடத்தி வந்த டி.கே.எஸ். நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்பு, நடனம், மேக்கப் போன்ற கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நாடக கம்பெனியில் தன்னுடைய நடிப்பு பசியை தீர்த்து கொண்ட கமல் பின்னர் திரைப்படங்களை நோக்கி தனது கவனத்தை திருப்பினார்.


1970ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் தலைகாட்ட துவங்கிய கமல்ஹாசனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த திரைப்படம்தான். இந்த படத்தில்தான் நடிகை சுஜாதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசனை ஒரு முழு நாயகனாக மாற்றிய திரைப்படம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த மன்மதலீலை திரைப்படம்தான். பார்க்கும் பெண்களை எல்லாம் மோகம் கொள்ளும் பெண்பித்தனாக அந்த படத்தில் கமல் அற்புதமாக நடித்திருப்பார். அதன்பின்னர் மூன்று முடிச்சு, அவர்கள் போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த கமல்ஹாசனுக்கு பெரும் புகழை தேடித்தந்த திரைப்படம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' என்ற திரைப்படம்தான்.
 




வாங்கிய விருதுகள்

     நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக நடிகன் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 7 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.2014 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மபூஷண்  விருதை அளித்து கௌரவித்துள்ளது. ... கமல்.




கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்

1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா- தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 
   (சிவாஜியுடன் நடித்த முதல் படம்,முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி தமிழ் - 1963 7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974
22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974
23. ஆயினா - ஹிந்தி - 1974
24. பணத்துக்காக - தமிழ் - 1974
25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975
26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975
27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975
28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975
29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975
30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975
31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975
32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975
33. மாலை சூட வா - தமிழ் - 1975
34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975
35. திருவோணம் - மலையாளம் - 1975
36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975
37. ராசலீலா - மலையாளம் - 1975
38. அந்தரங்கம் - தமிழ் - 1975
39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976
40. அப்பூப்பான் - மலையாளம் - 1976
41. சமசியா - மலையாளம் - 1976
42. மன்மத லீலை - தமிழ் - 1976
43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976
44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)
45. சத்தியம் - தமிழ் - 1976
46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976
47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976
48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976
49. குமார விஜயம் - தமிழ் - 1976
50. இதய மலர் - தமிழ் - 1976
51. பொன்னி - மலையாளம் - 1976
52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976
53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976
54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976
55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)
56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977
57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977
58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977
59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977
60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)
61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977
62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977
63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977
64. கபிதா - வங்காளம் - 1977
65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
66. நிறைகுடம் - மலையாளம் - 1977
67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
68. 16 வயதினிலே - தமிழ் - 1977
69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977
70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977
72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)
73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977
74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978
76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978
77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978
78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)
79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978
80. அனுமோதனம் - மலையாளம் - 1978
81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978
82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978
83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978
84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978
85. ஏட்டா - மலையாளம் - 1978
86. மதனோட்சவம் - மலையாளம் - 1978
87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)
88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)
89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)
90. இரு நிலவுகள் - தமிழ் - 1979
91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979
92. நீயா - தமிழ் - 1979
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979
94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979
95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979
96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979
97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979
98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979
99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979
100. இடிகாதா காது - தெலுங்கு - 1979
101. கல்யாணராமன் - தமிழ் - 1979
102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979
103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979
105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)

106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980
107. குரு - தமிழ் - 1980
108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980
109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980
110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980
111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)
112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)
113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981
114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981
115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981
116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981
117. ராஜ பார்வை - தமிழ் - 1981
118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981
119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981
120. கடல் மீன்கள் - தமிழ் - 1981
121. சவால் - தமிழ் - 1981
122. சங்கர்லால் - தமிழ் - 1981
123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981
125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981
124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981
125. தோ தில் தீவானே - இந்தி - 1981
126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982
127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982
128. அந்தகடு - தெலுங்கு - 1982
129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982
130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)
131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982
132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982
133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982
134. சனம் தேரி கசம் - இந்தி - 1982
135. பாடகன் - தமிழ் - 1982
136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982
137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982
138. தில் கா சாதி தில் - இந்தி - 1982
139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982
140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)
142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982
143. பியாரா தரானா - இந்தி - 1982
144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983
146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)
147. சட்டம் - தமிழ் - 1983
148. சினேக பந்தம் - மலையாளம் - 1983
149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983
150. சத்மா - இந்தி - 1983
151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)
152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983
153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983
154. பியாசா சைத்தான் - இந்தி - 1984
154. யே தேஷ் - இந்தி - 1984
155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984
156. யாத்கார் - இந்தி - 1984
157. ராஜ் திலக் - இந்தி - 1984
158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984
159. கரிஷ்மா - இந்தி - 1984
160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984
161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984
162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985
163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985
164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985
165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985
166. சாகர் - இந்தி - 1985
167. கிரப்தார் - இந்தி - 1985
168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985
169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985
170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985
171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)
172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986
173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986
174. ஈஷ்வர் - இந்தி - 1986
175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986
176. விக்ரம் - தமிழ் - 1986
177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986
178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986
179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986
180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)
181. காதல் பரிசு - தமிழ் - 1987
182. விரதம் - மலையாளம் - 1987
183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987
184. வெற்றி விழா - தமிழ் - 1987
185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987
186. நாயகன் - தமிழ் - 1987
187. வேலு நாயக்கன் - இந்தி - 1987
188. நாயக்குடு - தெலுங்கு - 1987
189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)
189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988
190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988
191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988
192. புஷ்பக் - இந்தி - 1988
193. பேசும் படம் - தமிழ் - 1988
194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988
195. சத்யா - தமிழ் - 1988
196. டெய்சி - மலையாளம் - 1988
197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988
198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988
199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989
200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989
201. அப்பு ராஜா - இந்தி - 1989
202. சாணக்யன் - மலையாளம் - 1989
203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989
204. மேயர் சாப் - இந்தி - 1989
205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989

207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990
208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990
209. குணா - தமிழ் - 1991
210. சிங்காரவேலன் - தமிழ் - 1992
211. தேவர் மகன் - தமிழ் - 1992
212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992
213. மகராசன் - தமிழ் - 1993
214. கலைஞன் - தமிழ் - 1993
215. மகாநதி - தமிழ் - 1994
216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)
217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)
218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)
219. நம்மவர் - தமிழ் - 1994
220. சதி லீலாவதி - தமிழ் - 1995
221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995
222. குருதிப்புனல் - தமிழ் - 1995
223. துரோகி - தெலுங்கு - 1995
224. இந்தியன் - தமிழ் - 1996
225. பாரதீயுடு - தெலுங்கு - 1996
226. இந்துஸ்தானி - இந்தி - 1996
227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996
228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996
229. சாச்சி 420 - இந்தி - 1998
230. காதலா காதலா - தமிழ் - 1998
231. ஹே ராம் - தமிழ் - 2000
232. ஹே ராம் - இந்தி - 2000
233. தெனாலி - தமிழ் - 2000
234. தெனாலி - தெலுங்கு - 2000
235. ஆளவந்தான் - தமிழ் - 2001
236. அபே - இந்தி - 2001
237. அபே - தெலுங்கு - 2001
238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)
239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)
240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002
241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002
242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002
243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002
244. அன்பே சிவம் - தமிழ் - 2003
245. சத்யமே சிவம் - தமிழ் - 2003
246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)
247. விருமாண்டி - தமிழ் - 2004
248. பொதுராஜு - தெலுங்கு - 2004
249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004
250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005
251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005
252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005
253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005
254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006
255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)
256. உன்னைப்போல் ஒருவன்
257. மன்மத அம்பு 
258. விஸ்வரூபம் 

கமல் பற்றிய முக்கிய  தொகுப்பு ..


1  முதல் படம் களத்தூர் கண்ணம்மா
முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
4  எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
5  ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்
6  முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்
7  முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
8  முதல் வங்க மொழிப் படம் கபிதா
9  முதல் கன்னடப் படம் கோகிலா
10  முதல் தெலுங்குப் படம் பொன்னி
11  கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
12  முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்
13  முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
14  மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
15  நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்
16  பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
17  பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே
18  வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்
19  மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
20  மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.
21  இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
22  ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.
23  சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.
24  கமலின் 100வது படம் ராஜ பார்வை
25  கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை
26  ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
27  ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
28  அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
29  பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
30  சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.
31  இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.
32  முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
33  முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34  ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
35  மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
36  கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37  பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38  இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
39  கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
40  இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
41  ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42  ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.
43  ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
44  பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.
45  கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46  கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47  ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48  நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49  ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50  ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51  ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
52  இயக்கியப் படங்கள் இரண்டு
53  ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54  சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,
55  தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.
56  தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57  சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
58  ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
59  நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
60  தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.
61  தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.
62  ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
63  ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
64  ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.
65  அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.
66  அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
67  சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.
68  அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
69  பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.
70  முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.
71  ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.
72  ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
73  ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.
74  ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.
75  டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
76  அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.
77  விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.
78  ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.
79  ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
80  முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.
81  திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
82  கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.
83  இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.
84  பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)
85  மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.
86  ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.
87  சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.
88  பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.
89  பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
90  ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
91  ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.
92  தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.
93  படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.
94  கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.
95  கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
96  கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
97  கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
98  ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.
99  இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.
100  கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.
101  பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
102  கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.
103  சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.
104  62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.


திருமண வாழ்க்கை ..

 தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள். இப்போது கௌதமியுடன்  லிவிங் டுகதர்  பாலிசியில் வாழ்ந்து வருகிறார்.

60வது  பிறந்தநாள் ..

கமல் தனது அறுபதாண்டு நடிப்புலகில் பல வித்தியாசமான அனுபவங்கள பெற்றுள்ளார், அனுபவித்துள்ளார். அந்த அனுபவங்களை சமீபத்தில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சியில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

கமல்ஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சவரத்தொழிலாளியாக நடித்திருப்பார். இதுகுறித்து அவர் கூறியபோது அந்த சலூன் கடையில் தான் உண்மையிலேயே சிறுவயதில் வேலை பார்த்ததாக கூறியுள்ளார். சிறுவயதில் வேலைவெட்டி இல்லாமல் இருந்தபோது தன்னுடைய தாயார் திட்டியதால், தங்களுடைய எதிர்வீட்டில் உள்ள சலூனில் வேலை பார்த்ததாகவும், அதே கடையில் தன்னுடைய படத்தின் கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டதையும் நினைத்து தான் பூரித்ததாகவும் கூறிய அவர், அந்த கடையின் பெயர் அம்புலி சலூன் என்றும் நினைவு கூர்ந்தார்.

கமல்ஹாசனிடம் யாரும் நடிப்புபோட்டியில் ஈடுபட முடியாது. ஆனால் அவரையே வெற்றி கொண்டவர் நாகேஷ் என்று கமல்ஹாசனே கூறியுள்ளார். அவரிடம் பலர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷை ஏன் வில்லனாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, என்னுடைய உண்மையான வில்லனே நாகேஷ்தான். அதனால்தான் அவரை எனது படத்தில் வில்லனாக போட்டேன் என்று கூறினாராம். அந்த அளவுக்கு கமல் நாகேஷ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதை இது குறிக்கின்றது.

இதேபோல் பலரும் கமலிடம் கேட்ட கேள்வி, நடிப்பில் இருதுருவமாக இருக்கும் நீங்களும் ரஜினியும் எப்படி நண்பர்களாக இருக்கின்றீர்கள் என்பதுதான். அதற்கு கமல் கூறியபதில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்ற எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து திரும்பி வந்த பிறகு மீண்டும் எம்.ஜி.ஆரிடம் நட்பாக பழகினார். கொலை செய்ய முயன்றவரே நட்புடன் பழகும்போது நானும் ரஜினியும் பாலசந்தர் என்ற பள்ளியில் ஒன்றாக பாடம் படித்தவர்கள், நாங்கள் ஏன் நண்பர்களாக இருக்ககூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டு கேள்வி கேட்டவர்களின் வாயை அடைத்தவர் கமல்.

மேலும் கமல் ஒரு பகுத்தறிவாளர் என்பது அனைவருக்கும் தெரியும். எம்.ஆர்.ராதா அளவுக்கு கோபமாக ஆன்மீகத்தை விமர்சிக்காவிட்டாலும், அவர் கிண்டலும் கேலியுமாக பல திரைப்படங்களில் ஆன்மீகத்தை விமர்ச்சித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆன்மீகத்தில் உள்ள நல்ல விஷயங்களை அவர் ஏற்றுக்கொள்ள தவறியதில்லை. நல்ல தொண்டு புரியும் ஆன்மீகவாதிகளை அவர் மரியாதை கொடுக்கவும் தவறுவதில்லை.  இயேசு கிறிஸ்துவும், நபிகள் நாயகமும் அவரவர் காலங்களில் பகுத்தறிவாளர்களாக இருந்தவர்கள் என்றும், அதன்பின்னர் வந்தவர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களது கொள்கைகளை மாற்றி ஆன்மீகத்தை திசைதிருப்பிவிட்டனர் என்றும் கமல் கூறுவதுண்டு,

சமீபத்தில் பாபநாசம் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் தென்காசி சென்றிருந்தபோது, நான்குனேரி வானமாமலை ஜீயர் என்ற ஆன்மீகவாதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராமானுஜம் அவர்களின் சீர்திருத்த கொள்கைகளினால் மிகவும் கவர்ந்தவர்களுள் கமல்ஹாசனும் ஒருவர்.இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனை பற்றி முழுவதும் கூறவேண்டுமானால் இந்த இணையதளம் முழுவற்றையும் பயன்படுத்தினாலும் இடம் போதாது. நாங்கள் எடுத்து கூறியவை கமல்ஹாசன் என்னும்  கடலில் உள்ள சிலதுளிகள் என்று கூறிக்கொண்டு உலக நாயகனுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாளை நட்புடன் கூறிக்கொள்கிறோம்.


நானும் கமல் சாரும்..
கமல்ஹாசன் 
ஒரு முழுமை பெற்ற தமிழ்க் கலைஞன் என்பதில் நான் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அறிந்ததே அவரின் மாறுபட்ட சிந்தனைகள், எமக்கு என்றுமே பிடிக்கும் சிறந்த எழுத்தாளரும்கூட சினிமாவில் 90 சதவீதம் மூக்கை நுனைத்தவர் இந்தத் தமிழனை நினைத்து நிறைய பெருமைப்பட்டுள்ளேன், சிறிது சிறுமையும் கொண்டுள்ளேன் ஒருமுறை 1993 காரைக்குடியில் ரசிகர் மன்ற விழாவிற்கு வருகிறார் முதல் வராண்டாவில் நானும் ஒருபெண்ணும் மட்டுமே தொடும் தூரத்தில் நின்றிருந்தோம் என்னுடன் நின்ற கமல் சுப்பு  கமலை கட்டிப்பிடிக்காத குறையாக பிடித்து நிற்கிறார் கண்ணாடியால் வேய்ந்த அடுத்த வராண்டாவில் எல்லோரும் இவரை பிரமாண்டமாய் பார்க்க இவர் என்னை தீர்க்கமாய் பார்த்தார் காரணம் நான் அவரை இயல்பாய் பார்த்தேன் தலையை அசைத்து அழைத்தார் நான் கை கொடுத்து ‘’நான் உங்க ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் ‘’தெரியும் உனது பார்வையே சொல்லுச்சு, ரஜினி ரசிகரா ?’’ ‘’இல்லை ஸார்’’ ‘’பின்னே ?’’ ‘’நான் யாருக்குமே ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் உடன் அவர் கையை பிடித்து குலுக்கினார் ‘’நல்லது இப்படியே இரு’’ இது ஐந்து நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது கூட்டம்கூட நான் நசுக்கி தூரத்தில் தள்ளப்பட்டேன் எனது பார்வையில் எனது மனதை படித்த கமலை அன்றிலிருந்து கவனமாக பார்த்துக்கொண்டு வருகிறேன்  இன்றுவரை அவருக்கு நான் ரசிகர்.

கமல்ஹாசனுக்கு இன்று 60வது பிறந்தநாள். தனது பிறந்தநாளிலேயே தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார். சென்னை அடுத்த மாடம்பாக்கம் ஏரியை நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களுடன் சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் தனது ரசிகர்கள் இதுபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஏரிகளையும் தூய்மை செய்ய வேண்டும் கேட்டு கொண்டார்.

நடிகர்களால் சமூகத்திற்க்கு பிரயோசனம் இல்லையெனினும் இந்தத் தமிழன் நீடூழி வாழ வாழ்த்துவோமாக

கனொலியை காண..
http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=30718&ta=V

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment