Monday, December 15, 2014

மதம் மாறுவது நியாயமா ? மத மாற்றம் செய்வது சரியா ? ஒரு சமூக சிறப்பு பார்வை..

பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே மோடி அரசு இந்துத்துவ சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது. சங்கப்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சு நாளுக்கு நாள் விவாதத்திற்குரிய பேச் சாகவே மாறிவருகிறது. அரசியல் சாசனப்படி உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களே தங்களது நிலை மறந்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தங்களது பிரிவினைவாத பேச்சுக்களால் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பஜ்ரங்க் தள் அமைப்பு உத்திரப் பிரதேச நகரமான ஆக்ரா வில் அதிக எண்ணிக்கை யில் முஸ்லீம்களை இந்து மத்திற்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முத் தாய்ப்பாக மத்தியில் ஆளும் பாஜகவை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அலிகார் நக ரத்தில் (உத்திரப்பிரதே சம்) கிறிஸ்து பிறந்த தினத்தன்று ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் முஸ் லீம்களை மதமாற்றம் செய்ய வைக்கப் போவ தாக மாநிலமெங்கும் பிரச் சாரம் செய்து வருகிறது. 
வி.எச்.பி. என்ன கூறுகிறது?
வி.எச்.பி என்ற மற் றொரு சங்பரிவார்க் கூட் டம் மதமாற்றம் பற்றிக் கூறும் போது பலகோடி வேற்றுமதக்காரர்கள் இருக்கும் போது சில ஆயிரம் பேர் தங்களது தாய்மத்திற்கு திரும்ப முன்வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன் றாகும், வெளியில் இருந்து வந்த வேற்று மதக்காரர் கள் இங்கும் வந்து தங் களது மதத்தைப் பரப்பி மக்களை மாற்றியுள்ளனர். நாங்கள் முன்பு எங்கள் மதத்தில் இருந்து பிரிந் தவர்களைத்தான் மீண்டும் ஒன்றிணைத்து வருகி றோம். அவர்கள் தங்களின் தாய்மதத்திற்கு திரும்பிய தால் இந்தியாவின் முதல் தர குடிமகன்களாகி விட்டனர் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள். இந்தியா முழுவதை யுமே காவிமயகாக்கிக் கொண்டு வரும் இந்துத் துவ அமைப்புகளின் ஆட் டம் இத்துடன் அடங் கவில்லை. மகராஷ்டிர மாநில வி.எச்.பி திடீரென அறிககை ஒன்றை வெளி யிட்டுள்ளது, அதாவது இனி மசூதிகளில் தொழு கைக்கான பாங்கை ஒலி பெருக்கி மூலம் ஓதுவதை தவிர்க்கவேண்டுமாம்.

அண்ணல் அம்பேத்கர் கூறியது என்ன?
மதமாற்றம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதாவது, மதமாற்றம் ஒரு தனிமனித சுதந்திரம் ஆகும், அது அடிமைத் தளையில் இருந்து விடு பட்டு, சுதந்திர உணர்வை வளர்ப்பதற்கும், அதே நேரத்தில் சமூகத்தில் சமமாக வாழ்வதற்கும் கிடைத்த நல்வாய்ப்பாகும் என்றார். காரணம் இந்து மதத்தில் பெருகி இருக்கும் வருணபேதம் மற்றும் தீண்டாமை காரணமாக இந்துமதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறிச் செல்வதை அவர் ஒருவித சமூக விடுதலையாகவே பார்த்தார். இதே இந்து அமைப் புகள் மதமாற்றம் குறித்து கடுமையாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்தன, மேலும் மதமாற்றம் குறித்து அவை கூறும் போது ஆசைகாட்டி, பணம் கொடுத்து, இலவ சங்களை அள்ளித்தந்து மதம் மாறவைக்கிறார்கள் என்று இன்றளவும் கூறிக் கொண்டுவருகிறது, ஆனால், அதே இந்துத் துவ அமைப்புகள் இன்று அவர்களுக்கு ஆதரவான அரசு முழு பெரும்பான் மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும், அரசின் உதவிகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மதம் மாறினால் உங்களுக்குச் சலுகை என்ற தோர ணையில் மிரட்டி கட் டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைக்கின்றனர். மதச்சார்பின்மைக்கு ஆபத்து!
இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய மடத்தனமான செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகளை மதிக்காத தன்மை மற்றும் பல்வேறு இன, மத, மொழி, மற்றும் சமூக அமைப்புகளைக் கொண்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, நாட் டின் அமைதியை கெடுத்து விடும். இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய செயல் நாட்டின் மதச்சார்பின் மையை கொள்கையை கெடுத்துவிடும்.

மத மாற்றம் செய்வது சரியா ? மதம் மாறுவது நியாயமா ? இந்த இரண்டு கேள்விகளும் ஒருப்போல் தெரிந்தாலும் ஒன்றல்ல ..

மதமாற்றம் சுயமாகவோஅல்லது ஏதோ புற நிர்ப்பந்தத்தாலோ நிகழ்வது ஏன் ?
ஒவ்வொரு நிகழ்விலும் தனித்த காரணங்கள் இருக்கும் . ஆயினும் மூன்று வகையில் மதமாற்றம் நிகழ்வதாக அவதானிக்கலாம்.
முதல் வகை , தத்துவ ரீதியாக ஒரு மதக் கோட்பாட்டைவிட இன்னொரு மதக் கோட்பாடு உயர்வாக உள்ளதாக படித்து - விவாதித்து - புரிந்து மதம் மாறுவது . இது சுய விருப்பத்தினால் ஆனாது . இது மிகமிக சொற்பமாகவே நடக்கும் . இப்போது அதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட அருகிவிட்டது . ஏனெனில் மதக் கோட்பாடுகளைவிட சடங்குகளும் வெறும் வெளிவேஷமும் போலித்தனமும் நிறுவன ஒடுக்குமுறை ஒழுங்கும் மட்டுமே இன்றைக்கு மதமாகிப் போனது .
இரண்டாவது வகை , அரசியல் அதிகாரத்துக்கு பயந்தோ - சலுகைகளை எதிர்பார்த்தோ - பணம் பதவிக்காகாவோ மதம் மாறுவது ; இன்னும் சொல்லப்போனால் இது சுயவிருப்பமான மாற்றம் அல்ல புறநிர்ப்பந்தத்தினால் மதம் மாற்றுவது . இதனை யார் செய்தாலும் தவறே ! ஆயின் இப்படி மாறுகிறவர்கள் முதுகெலும்பில்லாக் கோழைகள் . வரலாறு நெடுக இத்தகையவர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டே இருப்பார்கள் !! அதே சமயம் அதிகார பலத்தோடு நடக்கும் இத்தகைய முயற்சிகளை ஜனநாயக உள்ளம் கொண்டோர் எதிர்ப்பர் . முஸ்லீம்கள் நெடுங்காலம் இந்தியாவை ஆண்டும் இந்தியா முஸ்லீம் நாடாக மாறவில்லை . பெரும்பாலோர் இந்துக்களாகவே தொடர்ந்தனர் .அதேபோல் பிரிட்டிஸார் ஆண்ட போதும் எல்லோரும் கிறுத்துவராகிவிடவில்லை . அதிகார பலத்தால் எல்லோரையும் வாங்கிவிட முடியாது .
மூன்றாவது வகை , தாங்கள் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்படுகிறோம் என்கிற இயல்பான கோபத்தின் எதிர்விளைவாய் உருவாகும் கலகநடவடிக்கையான மதமாற்றங்கள் .அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் என்கிற போராளி கறுப்பு இன மக்கள் கிறுத்துவத்தில் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து முஸ்லீமாக மாறியதும் ; அங்கும் தம்மைச் சுற்றி தனிப்பாதை வகுத்ததும் ஆகும் . [ இவர் வாழ்க்கைவரலாறு படிக்கவும் அல்லது திரைப்படம் பார்க்கவும்] அடுத்து அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறியதும் ஒரு எதிர்வினையே . கலக நடவடிக்கையே . விவேகானந்தரிடம் மதமாற்றம் பற்றிக் கேட்ட போது , நாம் தாழ்த்தப்பட்ட மக்களையும் பழங்குடியினரையும் பிறரையும் சாதிரீதியாக புறக்கணித்ததால்தான் அவர்கள் மாறினர் என்பதை உணரவேண்டும் என்றார் . மதமாற்ற தடைச் சட்டத்தை அவர் ஏற்கவில்லை . முதலில் ஆதிக்கம் செய்வோர் மனம் திருந்துங்கள் என்றார் . கலக நடவடிக்கை என்பது சமூக ஒடுக்குமுறையின் எதிர்வினை என்பதால் ஒடுக்குமுறை இருக்கும் வரை ஆங்காங்கே வெடிப்புகள் தோன்றவே செய்யும் .
இறுதியாக ; எந்த மதத்துக்கு மாறினாலும் மாறாவிட்டாலும் மதம் ஒடுக்குமுறையை ஒழிக்காது - நியாயப்படுத்தும் . மதம் சமூக ஏற்ற தாழ்வைப் போக்காது மாறாக அதனை பாதுகாக்கும். மதம் வறுமையை வியாக்கியானம் செய்யும் - சில நேரங்களில் கண்ணீர்கூட வடிக்கும் ஆயினும் அதனை மாற்ற முயலவே செய்யாது .

 என் கருத்து :
அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யும் இந்துத்துவா சக்திகள்,RSS உங்களை மதமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற செய்தி தொடர்ச்சியாக வெளியேறும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவிக்கும்.
மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதற்காக மட்டுமே இந்த மாதிரியான பூச்சாண்டிகளை RSS செய்து வருகிறது.

சமூகமாற்றமே ஒட்டுமொத்த சமூகமும் சமத்துவத்துடனும் சரிநிகராகவும் வாழ ஒரே வழி . எனவே உண் மதத்தை மதி  ! சாதியை உதறு ! உழைப்பை நம்பு ! அறிவைத் தேடிக்கொண்டே இரு ! அநீதியை எதிர்த்துக் கொண்டே இரு !

அக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment