Friday 19 December 2014

கிறிஸ்மஸ் மரம் பற்றிய வரலாறு மற்றும் சிறப்பு பார்வை ..

கிறிஸ்மஸ் மரம் தற்போதைய நவீன யுகத்தில், மின்விளக்குகளின் வர்ண ஜாலத்தோடும், விலையுயர்ந்த அலங்காரப் பொருட்களோடும் காட்சியளிக்கிறது. அர்த்தத்தோடு கொண்டாடப்பட்டு வந்த பசுமை விழா, பின் ஒரு அடையாளத்துக்காக என உருமாறி, தற்போது அந்தஸ்தின் சின்னங்களாகிவிட்டன. அடையாளங்களை அணிந்து வாழ்வதை விட, அர்த்தத்தை அறிந்து வாழ நமக்கு வழங்கப்படுவதே விழாக்காலங்கள்.

உலகில் இன்றைக்கு கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடி புது வருடத்தை வரவேற்பதற்கு நாம் தயாராகியிருக்கும்  " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்" இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்மஸ் மரம் பற்றி சில தகவல்களை நாம் பார்ப்போம்.

கிறிஸ்மஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்மஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்மஸ் மரம் என அழைக்கப்படுகின்றது. பிர் (பிir) மரங்களை கிறிஸ்மஸ¥டன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜேர்மனியரைச் சேரும். \


 கிறிஸ்தவர்களிடையே எப்படி யிந்தப் பழக்கம் உருவானது? அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் இதன்பாற்பட்டதுதானோ!


நதிமூலம்..

வரலாறுகளில் நாம் பின்னோக்கி வழுக்கியபோது, சிக்கிய தடயங்களை, இயந்திரகதியாய்  இயங்கும் இன்றைய  இளம் தலைமுறையினருக்குச் சொல்லி வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்ததன் விளைவுதான் இங்கே.. இந்தக் " கிறிஸ்மஸ் மரம் " முளைவிடக் காரணமாகிப் போனது.

"கிறிஸ்மஸ் மரம்" ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் போனியாஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியார் ஜேர்மனிக்கு இறை சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்மஸ் நாளில் இவர் ஒரு பிர் மரத்தை ஆசீர்வதித்து குழந்தை யேசுவுக்கு அதனை ஒப்புக் கொடுத்தார்.

அது முதல் பிர் மரம் கிறிஸ்மஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போதும் இம்மரம் வீடுகளில் நடப்பட்டது. இதன்பிறகு ஜேர்மானிய இளவரசர் அல்பர்டுக்கும், இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர். கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.

15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம் - ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியைக் நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்த "கனி" மரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.

முதல் மரம்..

"கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.

பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து அதில் பல பரிசுப் பொருள்களை கட்டித் தொங்கவிட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தார். பின்பு நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது.   இதன் பின்னரே கிறிஸ்மஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. இத்தாலியில் கிறிஸ்மஸ் மரத்தை ப்ரெஸ்பியோ என அழைக்கின்றனர். இம்மரத்தைச் சுற்றிலும் வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பாடல்களைப் பாடி மகிழ்க்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக  இந்த மரத்தை அளித்தனர். இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

அறுவடைத் திருநாள்..

இங்கிலாந்தில் பாகான் என்ற யினத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில் திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும் யிடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக் மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள்அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.

ரோமானியர்கள், சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள்  இனிப்பு வகைகளை வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லது ·பர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.

உலகின் மிக விலை உயர்ந்த கிறிஸ்மஸ் மரம்..

உலகின் மிக விலை உயர்ந்த கிறிஸ்மஸ் மரம் அபுதாபியில் உள்ள ஒரு ‌நட்சத்திர ஹோட்டலில்  ரூ.49.5 கோடி மதிப்பில் கிறிஸ்மஸ் மரத்தை தங்கம், ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 11 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமிரகத்தின் அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் விடுதியில் சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியின் பொது முகாமையாளர் ஹான்ஸ் ஒல்பர்ட்ஸ் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில், இந்த மரத்தின் சிறப்பம்சம் குறித்து விளக்கியுள்ளார்.
மூன்று கிளைகளை கொண்டு ஒவ்வொரு கிளையில் பந்து வடிவிலான விலையுர்ந்த 181 வகையான வைரம், முத்துக்கள், பவள கற்கள் என இம்மரம் முழுவதும் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு சாதாரண கிறிஸ்மஸ் மரம் வைத்த‌தாகவும் இந்தாண்டு எதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகளை கவர வேண்டும் என்பதற்காக இம்முயற்சியை மேற்கொண்டதாகவும் கின்னஸ் சாதனை புத்தக்கத்திலும் இடம் பெறும் என எதிர்பார்ப்பதாகவும் ஒல்பர்ட்ஸ் கூறியுள்ளார்.

உலகின் அதிக உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்மஸ் மரம்..
 இது பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

202ecad7-1ed1-4ade-85ce-61cd185a810f_S_secvpf85 மீட்டர் உயரமும், 542 டன் எடையும் கொண்ட இந்த மரம், 3.1 மில்லியன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் கிறிஸ்மஸ் மரம் ‘லகுவா’ என்று பரவலாக அழைக்கப்படும் ரோட்ரிகோ டீ ஃப்ரெய்டாஸ் லகூன் என்ற ஏரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸை ஈர்க்கும் நகரின் பாரம்பரியமான இடங்களில் ஒன்றான இங்கு நடந்த மின்விளக்குத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஜனவரி 6 ஆம் தேதி வரை தினமும் இரவில் ஜொலித்தபடி இருக்கும் இந்த மிதக்கும் மரம், இதன் பிரம்மாண்டத்தின் காரணமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மில்லியன் மின் குமிழ்கள் பயன்படுத்தபட்ட கிறிஸ்மஸ் மரம்..
அமெரிக்காவின்  Nashville   பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வளர்க்கப்பட்டுவரும் கிறிஸ்மஸ் மரமொன்று இரண்டு மில்லியன் மின் குமிழ்கள் பயன்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2 மில்லியன் மின்குமிழ்களால் ஒளிரூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம்கடந்த சில தினங்களாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமை மின்குமிழ்கள் ஒளிர்ந்தன.  Nashville  பகுதியிலுள்ள  Gaylord Opryland என்ற விடுதியின் முன்பக்க பகுதியிலேயே இந்த கிறிஸ்மஸ் மரம் காணப்படுகின்றது.
மேலும் அந்த வளாகத்தில் வளர்க்கப்படும் ஏனைய மரங்களுக்கும் மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டு ஒளிரூட்டப்பட்டுள்ளன.

தங்க கிறிஸ்துமஸ் மரம்...
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டது. அலங்கார பொருட்கள் மற்றும் குடில்களை அமைப்பதற்கான பொருட்களை இப்போதே மக்கள் வாங்க தொடங்கி விட்டனர்.
பல்வேறு நகரங்களில் வண்ணமிகு அழகிய கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
2.4 மீற்றர் உயரத்தினால் ஆன இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது
சுமார் 12 கிலோ தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தின் மதிப்பு ரூ.10 கோடி(இந்திய ரூபாய்) ஆகும்.
இந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் 4 1/2 மாதங்கள் இரவு, பகலாக சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.


இலங்கை கிளிநொச்சியில் தெற்காசியாவின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம்..
தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்   கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் உருவாக்கியுள்ளனர்.

50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் நிகழ்வுகள்  இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கல் மற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் மரங்கள் வியாபாரம்..


சுமார் மூன்று கோடியே முப்பது இலட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில்வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கொரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும், கனடாவிலும் கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மரம் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். பல வகையான கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. செயற்கை மரங்கள் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் தன்மை உடையவையாதலால் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.கிறிஸ்மஸ் மரத்தைக் குறிவைத்தே கிறிஸ்மஸ் விழாக்காலத்தில் வியாபாரமும் மும்முரமாக நடக்கிறது. மரத்தை அலங்கரிப்பதற்காக என்றே தயாரிக்கப்படும் சிறப்பு மின் விளக்குகளும், மரத்தின் உச்சியில் வைக்கப்படும் நட்சத்திரமும், மரத்தில் தொங்கவிடப்படும் பொருட்களும், மரத்தைச் சுற்ற விதவிதமான வண்ணக் காகிதங்களும் என கிறிஸ்மஸ் மரம் ஒரு மிகப்பெரிய வியாபாரத் தளத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. 

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment