Sunday 28 December 2014

மீத்தேன் எரிவாயு திட்டத்தை பற்றிய சிறப்பு பார்வை...

நண்பர்களே, நீங்கள் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. ஒட்டு மொத்த தமிழகமும், தமிழக மக்களுக்கும் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பேராபத்து இந்த மீத்தேன் திட்டம்...

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?
2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார். அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 



இதற்காக நடத்திய ஏலத்தில் வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.

1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் - Oil and Natural Gas Corporation Ltd.  (ONGC)

2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் - Gas Authority of India Ltd (GAIL) 

3.கிழக்கத்திய எரிசக்தி  நிறுவனம் - Great Eastern Energy Corporation Ltd (GEECL)

இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. எந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும்அந்த நிலப் பரப்பில் எத்தனை  மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அங்கு கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்


நமது நாட்டில் உள்ள கால் நடைகளின் சாணம் என்பது ஏற்கனவே மீத்தேன் எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவானது திடீரென்று தானே தீப்பற்றி எரிந்ததை அந்த நாட்களில் மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன் என்பர். இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக உண்மையை உணர்ந்து கோபார் காஸ் என்று மக்களிடம் விளக்கி அந்த சாணத்தையே தொட்டியில் சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவை வீட்டிற்கான சமையல் வாயுவாகப் பயன்படுத்த 1970 -களில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசாங்கம் முயன்று ஓரளவு வெற்றி பெற்றது. பின்னர் இந்த எளிதில் தீ பற்றும் வாயுவினால் பல விபத்துகள் ஏற்பட்டதால் இத் திட்டம் கைவிடப் பட்டது.


ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம். இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது. இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை யன்படுத்துவார்கள்.ஆழ்துளை கிணறு மூலம் பூமியின் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கும்,பாறைகளுக்கும் இடையே பரவியுள்ள மீத்தேனை வெளியே எடுப்பதற்காக சுமார் ஆறாயிரம் அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு,பின் அதிலிருந்து பல்லாயிரம் மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டில் துளையிடப்படும். பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள். பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.


வெளியே எடுக்கபட்டபின் அந்த ரசாயன கலவையிலிருந்து மீத்தேன் மட்டும் தனியே பிரிக்கப்படும்.மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.இப்படி ஒரு ஆழ்துளை கிணறிலிருந்து மீத்தேனை எடுக்கும் Process-க்கு ஆண்டொன்றிற்கு நானூறு டேங்கர் லாரி அளவிற்கு தண்ணீர் தேவை.ஒரு ஆழ்துளை கிணற்றிற்கு மட்டும் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நீரியல் விரிசல் முறைக்கு 5கோடியே 66லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேல் காவேரி டெல்டாவை சுற்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாய் திட்டமாம்.அதுமட்டுமில்லாது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு இப்பகுதியிலிருந்து மீத்தேனை உறிஞ்சி எடுக்கப்போகிறார்கள்.
உங்கள் சிந்தனைக்கு...
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.நிலம் உள்வாங்கும்.பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........

நமக்கு என்ன? நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மையை முதலில் விட வேன்டும்......

அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் பயன்படாது..
காவிரி டெல்டா மாவட்டங்கள் தானே நமக்கு என்ன?
தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்கள் தானே நமக்கு என்ன?
அறியாமையால் பல படித்தவர்களே இப்படி நினைப்பது வருத்தமளிக்கிறது.....

மெத்த படித்தவர்களே இதை பற்றி அறியாமலும் உணராமல் இருப்பது வேதனைக்குரியது.....

நாளைய தலைமுறை நம்மை பார்த்து சிரிக்கும் நமது தமிழ்நாட்டை பாலைவனமாக்க போவது தெரிந்தும் நீங்கல் வேடிக்கை பார்த்த கோழைகள் என்று இன்று நாம் மீத்தேன் திட்டத்தை தடுக்காவிட்டால் நாளைய தமிழின வரலாறு அழிந்து போகும்..

இணையத்தில் சொல்வதால்/எழுதுவதால்  என்ன ஆகிவிடப்போகிறது என்றெல்லாம் எண்ணுவதை விடுங்கள்.மிகப்பெரிய காட்டுத்தீ ஒரு சிறு நெருப்பு பொறியிலிருந்து தான் உருவாகிறது.அதனால் முடிந்தவரை இதை பகிருங்கள்/விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..நம்மால் முடிந்ததை செய்வோம்.நிச்சயம் முடியும் என்று செய்வோம்.

ஜனவரி 4, மீதேன் திட்ட ஒப்பந்தம் காலாவதியாகும் நாளாக அமைட்டும். அதை புதுப்பிக்கும் முயற்சியில் அனைத்து காரியங்களையும் முன்னெடுத்து செல்வார்கள், அதனை தடுத்து நிறுத்தி நம் மண்வளத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமை!
மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்! 

இதற்கு மேல் ஒரு வாய்ப்பு கிடைக்காது, கிடைத்த வாய்பை தவறவிட கூடாது. 
ஒன்று திரட்டுவோம், ஒன்று திரள்வோம், மீதேன் கொடுமையை மக்களுக்கு உணர்த்துவோம்..
இதைப்பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்த வேன்டும்......

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .



No comments:

Post a Comment