Sunday 1 March 2015

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த யார் இந்த டாக்டர் ஜாகிர் நாயக் !!

யார்  இந்த டாக்டர் ஜாகிர் நாயக் ...
இஸ்லாத்தை மாற்றுமதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மாத்திரம் மாற்று மதத்தவர்களில் ஏரானமானபேர் உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில்இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகள் நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. மாற்று மதத்தவர்கள் நம்முடைய வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்படும் அதே வேளையில் 'ஓ..! ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள்தானே நீங்கள பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து - பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள்'- 'அடிப்படைவாதக் கொள்கைகளை உடையவர்கள்தானே நீங்கள்' என்று நம்மைக் கேட்கக் கூடும்.

நான் மாற்றுமத சகோதரர்களை சந்திக்கும் போது இஸ்லாத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். மிகக் குறைந்த அளவில் அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்து வைத்திருக்கும் செய்திகளைக் கொண்டு - அது சரியோ - தவறோ - மேற்படி செய்தி எந்த வழியில் அல்லது எந்த விதத்தில் பெறப்பட்டிருந்தாலும் - இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். அவ்வாறு நான் கேட்பது அவர்களை வெளிப்படையாக பேசத் தூண்டும். அவர்கள் சிலவேளைகளில் இஸ்லாத்தை விமரிசித்தாலும் மனோதிடத்துடன் அதனை நான் சகித்துக் கொள்வேன்.

இஸ்லாமிய மார்க்கம் பற்றி மாற்று மதத்தவருக்கு இருக்கும் மொத்தச் சந்தேகங்களையும் இருபது கேள்விகளில்; அடக்கிவிடலாம் என்பது கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் பணியில் நான் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை. இஸ்லாமிய மார்க்கத்தில் நீங்கள் காணும் தவறு என்ன? என்று மாற்று மதத்தவரை நீங்கள் எப்போது கேட்டாலும் அவர்கள் ஐந்து அல்லது ஆறு கேள்விகளை உங்களிடம் எடுத்து வைப்பார்கள். அவர்கள் கேட்ட அந்த ஐந்து அல்லது ஆறு கேள்விகளும் பொதுவாக உள்ள இந்த இருபது கேள்விகளுக்குள் அடங்கி விடும்.

நீங்கள் அளிக்கும் தர்க்க ரீதியான பதில்கள் பெரும்பான்மையோர் உண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்ய வழிவகுக்கும்.

இந்த பொதுவான இருபது கேள்விகளுக்கும் - அதற்கான காரண காரியங்களுடனும் தர்க்க ரீதியாகவும் பதிலளிப்பது சிறந்த வழிமுறையாகும். இஸ்லாமியர்கள், நான் இத்துடன் அளித்திருக்கும் பதில்களை நினைவில் வைத்துக்கொண்டால் - அல்லது மனப்பாடம் செய்து கொண்டால் மாற்று மதத்தவருக்கு பதிலளிப்பதில் இறைநாட்டத்தில் நிச்சயமாக நாம் வெற்றிபெறலாம். நாம் அவர்களுக்கு அளிக்கும் பதிலில் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய முழு உண்மைகளைப் தெரிந்து கொண்டு திருப்தியடையாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் அவர்களின் உள்ளங்களிலிருந்து அகற்றப்படும் என்பது திண்ணம். ஒரு சில மாற்று மதத்தவர்கள் வேண்டுமெனில் உங்களது வாதத்திற்கு எதிர்வாதம் புரிய முன்வரலாம். அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தை எடுத்து வைக்க நமக்கு மேலும் சில விபரங்கள் தேவைப்படும்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த  டாக்டர் ஜாகிர் நாயக் ..
உலகமே உற்றி நோக்கி கொண்டிருக்கும் சர்வ சாம்ராஜியாமான சவுதி அரேபியாவால் சிறந்த மார்க்க பேச்சாளர் சிறந்த மார்க்க அறிஞர் சிறந்த மார்க்க தாவா அழைப்பாளர் என்பதால் சிறப்பு விருது சவுதி அரசால் வழங்க பட்டு வருகிறது.இவருடைய தாவா அழைப்பு பணியால் பல்வேறு மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கதுபல்வேறு நாடுகளில் இவர் மாணவர்கள் தாவா பணியில் ஈடுபட்டு கொண்டுரிக்கிரார்கள். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய சேவை புரிந்தமைக்காக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் உயரிய விருதான மன்னர் பைசல் விருதை அரசர் சல்மான் வழங்கி கௌரவித்தார்.24 கேரட் 200 கிராம் தங்க பதக்கம், 7 லட்சத்தி 50 ஆயிரம் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 20 லட்சம்) மற்றும் அரபியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இஸ்லாம் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம், இந்த உலகுக்கு அமைதி வேண்டுமென்றால் அது இஸ்லாத்தினால் மட்டுமே முடியும், இஸ்லாத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்று தெரிவித்தார்.மேலும் தாம் பெற்ற ரூ1.கோடி 20 லட்சம் ரூபாய் பணத்தை வக்பு சொத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment