Sunday 31 May 2015

ஷஅபான் மாதம் 15 நாள் ஷபே பராஅத் பாவம் போக்குமா இந்த பராஅத் இரவு?

Image result for shab e baratஇஸ்லாத்தில் இல்லாத வணக்கங்களை உருவாக்கிய பெருமை நமது உலமா பெருமக்களுக்கு உண்டு. அறிந்தே அறியாம லோ செய்த இந்த தவறை திருத்திக் கொண்டு மக்களிடம் உண்மையை உரைக்க வேண்டிய உலமாக்கள் மீண்டும் மீண்டும் செய்த தவறை நியாயப்படுத்தும் வேலைகளைசெய்து வருகிறார்கள் சில உலமாக்கள் என்ற பெயரில் உலாவருபவர்கள்.

ஷஅபான் மாதம் 15 நாள் ஷபே பராஅத், பராஅத் இரவு என சொல்லிக்குக் கொண்டு புதிய பல வணக்கங்களை செய்துவருகிறார்கள்.


ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை.


ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர்.

அவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக மாதத்தின் மத்தியில் என்று தவறாக மொழி பெயர்த்து இந்தக் குழப்பத்துக்கு வித்திட்டுள்ளனர்.
இவர்கள் சுட்டிக் காட்டும் மூன்று ஹதீஸ்களின் அரபு மூலத்தையும் அதன் தமிழாக்கத்தையும் காண்போம். நாமாக தமிழாக்கம் செய்வதை விட மற்றவர்கள் செய்த தமிழாக்கத்தையே இங்கே பயன்படுத்தியுள்ளோம்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களுக்கும் ரஹ்மத் ட்ரஸ்ட் செய்துள்ள தமிழாக்கம் இது தான்.
حدثنا هداب بن خالد حدثنا حماد بن سلمة عن ثابت عن مطرف ولم أفهم مطرفا من هداب عن عمران بن حصين رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين

2154 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "மற்றொரு மனிதரிடம்', "நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை' என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற் பீராக!'' என்று கூறினார்கள்.

இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.90
முஸ்லிம் 2154 (2743)

و حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يزيد بن هارون عن الجريري عن أبي العلاء عن مطرف عن عمران بن حصين رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لرجل هل صمت من سرر هذا الشهر شيئا قال لا فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أفطرت من رمضان فصم يومين مكانه

2155 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதே னும் நோன்பு நோற்றீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர், "இல்லை' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள்.

இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் 2155 (2744)

حدثنا محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن ابن أخي مطرف بن الشخير قال سمعت مطرفا يحدث عن عمران بن حصين رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لرجل هل صمت من سرر هذا الشهر شيئا يعني شعبان قال لا قال فقال له إذا أفطرت رمضان فصم يوما أو يومين شعبة الذي شك فيه قال وأظنه قال يومين و حدثني محمد بن قدامة ويحيى اللؤلؤي قالا أخبرنا النضر أخبرنا شعبة حدثنا عبد الله بن هانئ ابن أخي مطرف في هذا الإسناد بمثله

2156 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "இந்த மாதத்தின் -அதாவது ஷஅபான்- இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "இல்லை' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் "ஒரு நாள்', அல்லது "இரண்டு நாட்கள்' நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) "இரண்டு நாட்கள்' என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
முஸ்லிம் 2156 (2745)

மேற்கண்ட மூன்று அறிவிப்புகளிலும் கடைசி என்று உள்ள இடத்தில் நடுப்பகுதி என்று இவர்கள் மாற்றிக் கொண்டு புது நோன்பை உருவாக்க முயன்றுள்ளனர்.

இதே ஹதீஸ் புகாரியிலும் உள்ளது. அதற்கு ரஹ்மத் ட்ரஸ்ட் செய்துள்ள தமிழாக்கம் இதோ:

1983 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க மற்றொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள், இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? என்று கேட்டார்கள். அம்மனிதர் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் நோன்பை விட்டு விட்டால் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே, இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன்! என்று அபுந்நுஃமான் கூறுகிறார்.

நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு இம்மாதம்' என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்! என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸல்த்' என்பார் கூறவில்லை.
ஷஅபானின் கடைசி' என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

புகாரி 1983

புகாரியில் இடம் பெற்ற மேற்கண்ட அறிவிப்பிலும் முஸ்லிமில் உள்ள அறிவிப்பிலும் இறுதி என்று தமிழாக்கம் செய்த இடத்தில் சரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் பரவலாக மக்கள் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்தி வந்த சொல்லாகும். இதனால் இதன் பொருள் என்ன என்பதில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு உள்ளன.

மேற்கண்ட புகாரி அறிவிப்பின் விளக்க உரையான பத்ஹுல்பாரியில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

وَالسَّرَر بِفَتْحِ السِّين الْمُهْمَلَة وَيَجُوزُ كَسْرُهَا وَضَمُّهَا جَمْعُ سُرَّةٍ وَيُقَال أَيْضًا سِرَار بِفَتْحِ أَوَّله وَكَسْرِهِ , وَرَجَّحَ الْفَرَّاء الْفَتْح , وَهُوَ مِنْ الِاسْتِسْرَار , قَالَ أَبُو عُبَيْد وَالْجُمْهُور : الْمُرَاد بِالسُّرَرِ هُنَا آخِر الشَّهْر , سُمِّيَتْ بِذَلِكَ لِاسْتِسْرَارِ الْقَمَر فِيهَا وَهِيَ لَيْلَة ثَمَانٍ وَعِشْرِينَ وَتِسْع وَعِشْرِينَ وَثَلَاثِينَ . وَنَقَلَ أَبُو دَاوُدَ عَنْ الْأَوْزَاعِيِّ وَسَعِيد بْن عَبْد الْعَزِيز أَنَّ سُرَره أَوَّله , وَنَقَلَ الْخَطَّابِيُّ عَنْ الْأَوْزَاعِيِّ كَالْجُمْهُورِ , وَقِيلَ السُّرَر وَسَطُ الشَّهْر حَكَاهُ أَبُو دَاوُدَ أَيْضًا وَرَجَّحَهُ بَعْضهمْ , وَوَجَّهَهُ بِأَنَّ السُّرَر جَمْع سُرَّة وَسُرَّة الشَّيْء وَسَطه , وَيُؤَيِّدُهُ النَّدْبُ إِلَى صِيَام الْبِيضِ وَهِيَ وَسَط الشَّهْر وَأَنَّهُ لَمْ يَرِد فِي صِيَام آخِر الشَّهْر نَدْب , بَلْ وَرَدَ فِيهِ نَهْيٌ خَاصٌّ وَهُوَ آخِر شَعْبَان لِمَنْ صَامَهُ لِأَجْلِ رَمَضَان , وَرَجَّحَهُ النَّوَوِيّ بِأَنَّ مُسْلِمًا أَفْرَدَ الرِّوَايَة الَّتِي فِيهَا سُرَّة هَذَا الشَّهْر عَنْ بَقِيَّة الرِّوَايَات وَأَرْدَفَ بِهَا الرِّوَايَات الَّتِي فِيهَا الْحَضّ عَلَى صِيَام الْبِيض وَهِيَ وَسَط الشَّهْر كَمَا تَقَدَّمَ , لَكِنْ لَمْ أَرَهُ فِي جَمِيع طُرُق الْحَدِيث بِاللَّفْظِ الَّذِي ذَكَرَهُ وَهُوَ " سُرَّة " بَلْ هُوَ عِنْد أَحْمَد مِنْ وَجْهَيْنِ بِلَفْظِ " سِرَار " وَأَخْرَجَهُ مِنْ طُرُق عَنْ سُلَيْمَان التَّيْمِيِّ فِي بَعْضهَا سُرَر وَفِي بَعْضهَا سِرَار , وَهَذَا يَدُلّ عَلَى أَنَّ الْمُرَاد آخِر الشَّهْر ,

அபூஅபூ உபைத் அவர்களும் பெரும்பாலான மொழி வல்லுனர்கள் சரர் என்பதன் பொருள் இறுதி எனக் கூறுகின்றனர். சரர் என்றால் மறைதல் எனப் பொருள். 28 ஆம் நாள் சந்திரன் மறைந்து விடுவதால் இறுதி நாளுக்கு சரர் எனக் கூறப்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவ்சாயீ, ஸயீத் பின் அப்துல் அஸீஸ் ஆகியோர் மாதத்தின் ஆரம்பம் என்று பொருள் கொண்டதாக அபூதாவூத் கூறுகிறார். ஆனால் அவ்ஸாயீ மாதத்தின் இறுதி என்று பெரும்பாலோர் பொருள் கொண்டது போல் பொருள் கொண்டதாக கத்தாபி கூறுகிறார்.

மாதத்தில் நடுப்பகுதி என்று சிலர் பொருள் கொண்டதாக அபூதாவூத் கூறுகிறார்
இப்படி மூன்று அர்த்தம் சொல்லப்பட்டாலும் மூன்றாவது அர்த்த்தை சொன்ன அறிஞர் கணக்கில் கொள்ளப்படத் தக்கவர் அல்ல என்பதால் தான் சிலர் என்று சொல்லப்படுகிறது. மொழிப் பிரச்சனையில் சர்ச்சை வந்தால் மற்றவர்களை விட அபூ உபைத் கருத்துக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அத்துடன் பெரும்பாலான அறிஞர்கள் அவரது கருத்தையே வழி மொழிந்துள்ளனர். இதன் பின்னர் நடுப்பகுதி என்று மொழி பெயர்ப்பது அறியாமையாகவே கருதப்பட வேண்டும்.

முஸ்லிம் விளக்க உரை நூலான நவவி அவர்களின் ஷரஹ் முஸ்லிமிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

(ضَبَطُوا ( سَرَر ) بِفَتْحِ السِّين وَكَسْرهَا , وَحَكَى الْقَاضِي ضَمَّهَا , قَالَ : وَهُوَ جَمْع ( سُرَّة ) وَيُقَال : أَيْضًا سَرَار وَسِرَار بِفَتْحِ السِّين وَكَسْرهَا وَكُلّه مِنْ الِاسْتِسْرَار , قَالَ الْأَوْزَاعِيُّ وَأَبُو عُبَيْد وَجُمْهُور الْعُلَمَاء مِنْ أَهْل اللُّغَة وَالْحَدِيث وَالْغَرِيب : الْمُرَاد بِالسُّرَرِ آخِر الشَّهْر , سُمِّيَتْ بِذَلِكَ لِاسْتِسْرَارِ الْقَمَر فِيهَا , قَالَ الْقَاضِي : قَالَ أَبُو عُبَيْد وَأَهْل اللُّغَة : السُّرَر آخِر الشَّهْر , قَالَ : وَأَنْكَرَ بَعْضهمْ هَذَا , وَقَالَ : الْمُرَاد وَسَط الشَّهْر , قَالَ : وَسِرَار كُلّ شَيْء وَسَطه , قَالَ هَذَا الْقَائِل : لَمْ يَأْتِ فِي صِيَام آخِر الشَّهْر نَدْب فَلَا يُحْمَل الْحَدِيث عَلَيْهِ , بِخِلَافِ وَسَطه فَإِنَّهَا أَيَّام الْبِيض , وَرَوَى أَبُو دَاوُدَ عَنْ الْأَوْزَاعِيِّ سُرَره : أَوَّله , وَنَقَلَ الْخَطَّابِيُّ عَنْ الْأَوْزَاعِيِّ سُرَره : آخِره , قَالَ الْبَيْهَقِيُّ فِي السُّنَن الْكَبِير بَعْد أَنْ رَوَى الرِّوَايَتَيْنِ عَنْ الْأَوْزَاعِيِّ : الصَّحِيح آخِره , وَلَمْ يَعْرِف الْأَزْهَرِيّ أَنَّ سُرَره أَوَّله , قَالَ الْهَرَوِيُّ : وَاَلَّذِي يَعْرِفهُ النَّاس أَنَّ سُرَره آخِره , وَيُعْضَد مِنْ فَسِرّه بِوَسَطِهِ الرِّوَايَة السَّابِقَة فِي الْبَاب قَبْله : " سُرَّة هَذَا الشَّهْر " , وَسَرَارَة الْوَادِي وَسَطُه وَخِيَاره , وَقَالَ اِبْن السِّكِّيت : سِرَار الْأَرْض : أَكْرَمهَا وَوَسَطهَا , وَسِرَار كُلّ شَيْء : وَسَطه وَأَفْضَله , فَقَدْ يَكُون سِرَار الشَّهْر مِنْ هَذَا , قَالَ الْقَاضِي : وَالْأَشْهَر أَنَّ الْمُرَاد آخِر الشَّهْر كَمَا قَالَهُ أَبُو عُبَيْد وَالْأَكْثَرُونَ

நடுப்பநவவி இமாம் அவர்கள் மூன்று கருத்துக்களையும் எடுத்துக் காட்டி விட்டு காரண காரியத்துடன் அபூ உபைத் கூறும் பொருளே சரியானது என்று நிறுவுகிறார்.

நடுப்பகுதியில் விட்ட நோன்பை அந்த மாதமே நோற்க இயலும். ரமளான் கழித்து நோற்குமாறு கூறத் தேவை இல்லை. அந்த மாதத்தின் கடைசியில் நோன்பு வைக்காவிட்டால் தான் ரமலான் மாதம் முடிந்து அதை நோற்குமாறு கூற முடியும்.

இதைச் சிந்தித்தாலும் இவர்கள் செய்துள்ள அர்த்தம் தவறானது என்பதும் அதன் அடிப்படையில் இவர்கள் நிறுவிய வாதமும் தவறானது என்பதும் உறுதியாகிறது.

1 அவர்களின் ஆதாரம் :  பாரஅத் இரவு
ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம்தஃப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலானதுஹ்பத்துல் அஹ்வதியிலும் மற்றும் பிரபல்யமான பலநூற்களிலம் இடம்பெற்றுள்ளது.

நமது விளக்கம்
பராஅத் இரவு என்ற பெயர் திருக்குர்ஆனிலோ நபிமொழியிலோஇல்லை என்பதை தெளிவாக ஒத்துக் கொண்டுள்ளதைஅவர்களின் வாசகம் விளக்குகிறது. தப்ஸீர் நூல்களிலும்திர்மிதியின் விரிவுரை நூ-லிலும்தான் உள்ளது. நபிகளார் இந்தவாசகத்தை பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்கள். நபிமொழியில் இவை இல்லைஎன்பதிலிருந்து பின்னால் வந்தவர்கள் உருவாக்கிய பித்அத்என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவர்களின் ஆதாரம் பெயர்க்காரணி
பராஅத் எனும் அரபுச் சொல்லுக்கு விடுதலை என்பதுபொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலைபெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைத்துல் பராஅத்(விடுதலை பெறும் இரவு) எனப் பெயர் வந்தது.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள்.இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கைஅளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலைவழங்குகிறான்.
நூல் : பைஹகீ இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல்ஈமான், ஹதீஸ் எண் : 3837

நமது விளக்கம்
ஷஅபான் 15ம் நாள் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலைசெய்கிறான் என்று அவர்கள் எடுத்துக்காட்டிய செய்தியின் அரபிமூலம் இதோ :
3677 - أخبرنا أبو عبد الله الحافظ ، ومحمد بن موسى ، قالا : حدثنا أبو العباس محمد بن يعقوب ، حدثنا محمد بن عيسى بن حيان المدائني ، حدثنا سلام بن سليمان ، أخبرنا سلام الطويل ، عن وهيب المكي ، عن أبي رهم ، أن أبا سعيد الخدري ... قَالَتْ عَائِشَةُ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ عَنْهُ ثَوْبَيْهِ ثُمَّ لَمْ يَسْتَتِمَّ أَنْ قَامَ فَلَبِسَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ ظَنَنْتُ أَنَّهُ يَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي فَخَرَجْتُ أَتْبَعَهُ فَأَدْرَكْتُهُ بِالْبَقِيعِ بَقِيعِ الْغَرْقَدِ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالشُّهَدَاءِ، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَنْتَ فِي حَاجَةِ رَبِّكَ، وَأَنَا فِي حَاجَةِ الدُّنْيَا فَانْصَرَفْتُ، فَدَخَلْتُ حُجْرَتِي وَلِي نَفَسٌ عَالٍ، وَلَحِقَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " مَا هَذَا النَّفَسُ يَا عَائِشَةُ ؟ "، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَتَيْتَنِي فَوَضَعْتَ عَنْكَ ثَوْبَيْكَ ثُمَّ لَمْ تَسْتَتِمَّ أَنْ قُمْتَ فَلَبِسْتَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ، ظَنَنْتُ أَنَّكَ تَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي حَتَّى رَأَيْتُكَ بِالْبَقِيعِ تَصْنَعُ مَا تَصْنَعُ، قَالَ: " يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللهُ عَلَيْكِ وَرَسُولُهُ، بَلْ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: هَذِهِ اللَّيْلَةُ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلِلَّهِ فِيهَا عُتَقَاءُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ، لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ "... هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ
இமாம் பைஹகீ அவர்களின் ஷ‚அபுல் ஈமான் என்ற நூலி-ருந்துஎடுத்துக்காட்டியவர்கள் அந்த செய்தியின் இறுதியில் இமாம்பைஹகீ அவர்களின் அந்த செய்தியின் தரத்தைப் பற்றிகூறியதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

அதன் இறுதியில் هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் கொண்டதாகும் என்று குறிப்பிட்டு இந்த செய்திஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இந்த விஷயத்தை கூறினால் அவர்களின் ஆதாரத்தின் தகுதிமக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தெரிந்து கொண்டேமறைத்திருக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ''முஹம்மத் பின் ஈஸா பின்ஹய்யான்'' என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலைவல்லுநர்கள் மிகக் கடுமையாக குறைகூறியுள்ளனர்.
171 - محمد بن عيسى بن حيان أبو عبد الله المدائني متروك الحديث  (سؤالات الحاكم - (ج 1 / ص 135)
இவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்டவராவார் என இமாம் ஹாகிம்குறைகூறியுள்ளார்கள்.
(நூல் : ஸ‚ஆலாத்துல் ஹாகிம்  பாகம் : 1 பக்கம் : 135)
وسألته عن محمد بن عيسى بن حيان الرازي ، فقال : لا شيء . ( سؤالات السلمي للدارقطني - (ج  / ص )
இவர் எந்த ஒன்றுக்கும் தகுதியில்லாதவர் என இமாம் தாரகுத்னீவிமர்சித்துள்ளார்கள்.
(நூல் : சுஆலாத்துஸ் சுலமீ)
மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ''ஸல்லாம் பின்சுலைமான்'' என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும்பலவீனமானவராவார்.
2704- سلام بن سليمان بن سوار المدائني ابن أخي شبابة نزيل دمشق وقد ينسب إلى جده ضعيف من صغار التاسعة مات سنة عشر ومائتين أو بعدها ق - تقريب التهذيب : ابن حجر 1 /261
ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார்என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1,பக்கம் : 261

2 அவர்களின் ஆதாரம்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்கூறினார்கள்
ஷஃபான் மாதத்தின் 15ம் இரவில் இறைவன் தன் அடியார்களைநெருங்கி வருகிறான். இûவைப்பவன் மற்றும் விரோதம்கொள்பவன், இவ்விருவரைத் தவிர மற்ற எல்லோரையும்மன்னனிக்கிறான்.
அறிவிப்பாளர் : ஹஜ்ரத் முஆத் பின் ஜபல் (ரளியல்லாஹஅன்ஹு)
நூற்கள் : இப்னுஹிப்பான் எண் : 5665, தப்ராணி (முஃஜமுல்அவ்ஸதி எண் : 6776
அறிவிப்பாளர் : ஹஜ்ரத் அபூ மூஸல் அஷ்அரீ (ரளியல்லாஹஅன்ஹு)
நூல் : இப்னுமாஜா எண் : 1390

நமது விளக்கம் :
அவர்கள் ஆதாரமாக காட்டும்  செய்தியின் அரபி மூலம் இதோ :
5665 - أخبرنا محمد بن المعافى العابد بصيدا و ابن قتيبة وغيره قالوا : حدثنا هشام بن خالد الأزرق قال : حدثنا أبو خليد عتبة بن حماد عن الأوزاعي و ابن ثوبان عن أبيه عن مكحول عنمالك بن يخامر عن معاذ بن جبل عن النبي صلى الله عليه و سلم قال : ( يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ) صحيح ابن حبان 12 /481
இந்தசெய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஏரளாமானகுளறுபடிகள் நிறைந்துள்ளன. இதை ஹதீஸ் கலை நிபுணர்இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது அல்இலல் என்ற நூலி-ல்தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த செய்தி மக்கூல் என்பவரிடமிருந்து இரண்டு வழிகளில்அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அறிவிப்பாளர்தொடர்வரிசையும் சரியானது அல்ல என்று இமாம் தாரகுத்னீஅவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
كلاهما غير محفوظ
இவ்விரு வழிகளும் சரியானது அல்ல
நூல் : இல்இலல் -தாரகுத்னீ, பாகம் 6, பக்கம் :50
وقد روى عن مكحول في هذا روايات وقال هشام بن الغاز عن مكحول عن عائشة وقيل عن الأحوص بن حكيم عن مكحول عنأبي ثعلبة وقيل عن الأحوص عن حبيب بن صهيب عن أبي ثعلبة وقيل عن مكحول عن أبي إدريس مرسلا وقال الحجاج بن أرطأة عن مكحول عن كثير بن مرة مرسلا أن النبي صلى الله عليه و سلم قال وقيل عن مكحول من قوله والحديث غير ثابت - العلل للدارقطني 6 /50
மேலும் மக்கூல் வழியாக  பல அறிவிப்புகள் கூறப்படுகிறது.ஆயிஷா (ர-லி) அவர்கள் அறிவித்ததாகவும், அபீ ஸஅலபா (ர-லி)அவர்கள் அறிவித்ததாகவும், மக்கூல், அபூ இத்ரீஸ் வழியாகமுர்ஸலாகவும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் மக்கூல்வழியாக கஸீர் பின் முர்ரா என்பவரிடமிருந்து முர்ஸலாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது. (மொத்தத்தில்) இந்த செய்திஉறுதியானது அல்ல.
நூல் : இல்இலல் -தாரகுத்னீ,பாகம் 6, பக்கம் :50
இந்த செய்தியைப்பற்றி இமாம் அபூஹாத்திம் அவர்களிடம்கேட்கப்பட்ட போது அளித்த விடை :
2012- وسألت أبي عن حديث رواه أبو خليد القاري ، عن الأوزاعي ، عن مكحول وعن ابن ثوبان ، عن أبيه ، عن مكحول ، عنمالكبن يخامر ، عن معاذ بن جبل ، قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى ليلة النصف من شعبان إلى خلقه   قال أبي هذا حديث منكر بهذا الإسناد ولم يرو بهذا الإسناد عن أبي خليد ولا أدري من أين جاء به  -علل الحديث لابن أبي حاتم 2059
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை தொடர்மறுக்கப்படவேண்டியதாகும். இந்த அறிவிப்பாளர்தொடர்வரிசையை அபூகலீத் என்பவரைத் தவிர வேறு யாரும்அறிவிக்கவில்லை. இதை இவர் எங்கிருந்து கொண்டுவந்தார்என்று எனக்குத் தெரியவில்லை.
நூல் : இலலுல் ஹதீஸ்- இப்னு அபீ ஹாத்திம், பக்கம் : 2059
அவர்கள் குறிப்பிட்ட இப்னுமாஜா நூலில் இடம்பெற்ற செய்திஇதோ
1380 حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ رواه ابن ماجة
இமாம் இப்னுமாஜா அவர்கள் இந்த செய்தியை இரண்டுஅறிவிப்பாளர் வழியாக இடம்பெறச் செய்துள்ளார்கள்.
முதல் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளர்ளஹ்ஹாக் பின் அய்மன் என்ற அறிவிப்பாளர்இடம்பெற்றுள்ளார். அவர் யாரென அறியப்படாதவர். இவரின்நம்பகத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.
3928 - الضحاك بن أيمن الكلبى  د .شيخ لابن لهيعة .لا يدرى من ذا. له في ليلة نصف شعبان. (ميزان الاعتدال - الذهبي 2 /322
ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இப்னு லஹீஆவின் ஆசிரியர்.இவர் யார் என அறியப்படாதவர். ஷஅபான் பாதி இரவு (சிறப்பு)தொடர்பாக இவர் ஒரு செய்தியை அறிவித்துள்ளார்.
நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322
இப்னுமாஜாவின் நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆஎன்பவரும் பலவீனமானவராவார்.
346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف - الضعفاء والمتروكين - النسائي ளص 64ன
அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்றுஇமாம் நஸயீ கூறினார்கள்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64
533  قلت: كيف رواية بن لهيعة عن أبي الزبير عن جابر فقال: بن لهيعة ضعيف الحديث- تاريخ ابن معين - الدارمي 153
அபூஸுபைர் வழியாக இப்னு லஹீஆ அறிவிக்கும் செய்தி பற்றிநான் கேட்டேன்.  அதற்கு இப்னு மயீன் அவர்கள், இப்னு லஹீஆஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153
5388 - سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه - تاريخ ابن معين - رواية الدوري 4 /481
இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான்செவியுற்றுள்ளேன்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 481
قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا... قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا - المجروحين - ابن حبان 2 /12

"இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ(எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்' என்று அப்துர்ரஹ்மான்பின் மஹ்தி கூறுகின்றார்கள்.

"நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால்அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதேஎன்று பிஷ்ர் என்னிடம் கூறினார்' என்று யஹ்யா பின் ஸயீத்கூறுகின்றார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 14
عبدالله ابن لهيعة بفتح اللام وكسر الهاء ابن عقبة الحضرمي أبو عبدالرحمن المصري القاضي صدوق من السابعة خلط بعد احتراق كتبه ورواية ابن المبارك وابن وهب عنه أعدل من غيرهما وله في مسلم بعض شيء مقرون - تقريب التهذيب : ابن حجر 2 /319
அப்துல்லாஹ் பின் லஹீஆ, எகிப்து நாட்டைச் சார்ந்தநீதிபதியாவார்.  அவர் நல்லவர். அவருடைய நூற்கள் எரிந்தபிறகு மூளை குழம்பி விட்டது.  (இவரிடமிருந்து) இப்னுல்முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அறிவிப்பது இவ்விருவர்அல்லாதோர் அறிவிப்பை விட உறுதியானது, வலுவானது.
(இவரல்லாத மற்றவர்கள் இவருடைய செயதியைப் போன்றுஅறிவிக்கும் போது) இணைப்பாக இவருடைய சில செய்திகள்முஸ்-ம் என்ற நூ-ல் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னுஹஜர் குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 319

இப்னு லஹீஆ என்பவர் மூத்த தாபியீன் ஆவார். இவர் தனக்குக்கிடைத்த செய்திகளை எழுதி வைத்துக் கொண்டு அதி-ருந்துஅறிவித்து வந்தார்.  ஒருநாள் அவருடைய வீடு எரிந்த போதுஅவர் எழுதி வைத்த நூற்களும் சாம்பலாயின!  பின்னர் அவர்மூளை குழம்பி விட்டார்.  இதனால் இவருடைய பிந்தியஅறிவிப்புக்கள் மிகவும் குளறுபடி நிறைந்ததாக காணப்பட்டது. 
எனவே இவருடைய ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள்நிராகரித்தனர். மூளை குழம்புவதற்கும், இவரது நூற்கள்எரிவதற்கும் முன்பு இவரிடம் கேட்ட இப்னுல் முபாரக், இப்னுவஹப் ஆகியோரின் செய்திகளை மட்டுமே ஏற்கலாம் என்று சிலர் முடிவு செய்தனர்.  பெரும்பாலும் இவருடைய செய்திகளைஹதீஸ கலை அறிஞர்கள் நிராகரித்துள்ளனர்.  இவரைப்பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர்.

ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமதுபுகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பலஇடங்களில் இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள். அதில் ஒன்று இதோ:
وأخرجه الطبري من طريق أبي سلمة عن عائشة مرفوعا أيضا وفيه بن لهيعة وهو ضعيف - فتحالباري - ابن حجر 4 /184
அபூ ஸலமா வழியாக ஆயிஷா (ர-) அவர்கள் மூலம் நபி (ஸல்)அவர்கள் கூறியதாக (ஒரு செய்தியை) தப்ரீ பதிவுசெய்துள்ளார்கள்.  இதில் இப்னு லஹீஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
ஃபத்ஹுல் பாரி, பாகம் : 4, பக்கம் : 184
இதைப் போன்றே திர்மிதி இமாம் அவர்களும் பல இடங்களில்இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.
وابن لهيعة ضعيف عند أهل الحديث ضعفه يحيى بن سعيد القطان وغيره ள من قبل حفظه - سنن الترمذي1 /15
  இப்னு லஹீஆ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம்பலவீனமானவர்.  யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மற்றும்பலரும் இவரது நினைவாற்றல் அடிப்படையில் இவரைப்பலவீனமானவர் என்று முடிவு செய்துள்ளனர்.  (திர்மிதீ10)
மேலும் திர்மிதீ ஹதீஸ் எண் 576, 1036 ஆகிய ஹதீஸ்களில் இதேபோன்று இடம்பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட இப்னு லஹீஆ என்பவரைப் பற்றியவிமர்சனங்கள் அவர் பலவீனமானவர் என்பதைத்தெளிவுபடுத்துகின்றது.  அவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமானால் (சிலரின் கூற்றுப்படி) இப்னுல் முபாரக், இப்னுவஹப் ஆகியோர் அவரிடமிருந்து அறிவித்திருக்க வேண்டும்.

இந்த செய்தியில் சிலரின் கூற்றுப்படிகூட இப்னுலஹீஆவிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப்போன்றோர் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமானசெய்தியாகும்.

இப்னு மாஜாவின் இன்னொரு அறிவிப்பாளர் தொடரில் இதேஇப்னு லஹீஆ என்பவரே இடம்பெற்றுள்ளார்.
மேலும் ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இடத்தில் ஸுபைர்பின் சுலைம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரெனஅறியப்படாதவர்.
2837 - الزبير بن سليم ள ق ன. شيخ لا يعرف.- ميزان الاعتدال - الذهبي 2 /67
ஸுபைர் பின் சுலைம் என்பவர் யாரென அறியப்படாத நபர் என்றுதஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.
நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322

3 அவர்களின் வாதம் :
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களைநெருங்கி வருகிறான். இவ்விருவரைத் தவிர மற்றஎல்லோரையும் மன்னிக்கிறான். 1. பகைமை பாரட்டுபவன் 2.கொலை செய்தவன் (இவ்விருவரையும் இறைவன்மன்னிப்பதில்லை)
அறிவிப்பவர் : ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர்  (ரளியல்லாஹ அன்ஹு),
நூல் :அஹ்மத் (6642)

நமது விளக்கம் :
அஹ்மதில் இடம்பெற்றதாக அவர்கள் எழுதிய செய்தியின்அறிவிப்பாளர் வரிசையை கவனியுங்கள்.
6642 - حدثنا عبد الله حدثني أبي ثنا حسن ثنا بن لهيعة ثنا حيي بن عبد الله عن أبي عبد الرحمن الحبلي عن عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه و سلم قال : يطلع الله عز و جل إلى خلقة ليلة النصف من شعبان فيغفر لعباده الا لاثنين مشاحن وقاتل نفس - مسند أحمد بن حنبل 2 /176
இந்த செய்தியிலும் நாம் முன்னர் விமர்சனம் செய்த அதே இப்னுலஹீஆ என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம்பெற்றுள்ளார்.எனவே இந்த செய்தி அடிப்படையாகக் கொண்டு செயல்படமுடியாது.

4 அவர்களின் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள்அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர்(ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களைபடுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில்சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃஅடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்)சொன்னார்கள்.
(ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும்உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா?
நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள்துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான்கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாகஇறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவின் போதுமுதல்வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில்அடியார்களை மன்னிக்கிறான்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)
நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதி எண் : 739, இப்னுமாஜாஎண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858

நமது விளக்கம் :
இவர்கள் எடுத்துரைத்த இந்த செய்தி இமாம் புகாரி அவர்களால்பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்டசெய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீஅவர்கள் இந்த செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோதுஇது ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
739 - حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون أخبرنا الحجاج بن أرطاه عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة : قالت فقدت رسول الله صلى الله عليه و سلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نساءك فقال إن الله عز و جل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيفغر لأكثر من عدد شعر غنم كلب وفي الباب عن أبي بكر الصديق
 قال أبو عيسى حديث عائشة لا نعرفه إلا من هذا الوجه من حديث الحجاج وسمعت محمدا يضعف هذا الحديث وقال يحيى بن أبي كثير لم يسمع من عروة و الحجاج بن أرطاه لم يسمع من يحيى بن أبي كثير - سنن الترمذي 3 /116
இந்த செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள்கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்த செய்தியில்இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின்அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர்என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை.இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத்அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து(நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ தமிழ் ஹதீஸ் எண் : 670
இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாகஎடுத்துரைத்த இந்த கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம்மறைத்துவிட்டார்கள். ஆதாரமற்றது என்று தெளிவாகஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா?

மேலும் அவர்கள் காட்டிய அஹ்மத், இப்னுமாஜா, இப்னுஅபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர்வரிசையே இடம்பெற்றுள்ளது என்பதை கவனிக்க.
அஹ்மதின் அறிவிப்பு :
26060 - حدثنا عبد الله حدثني أبى ثنا يزيد بن هارون قال أنا الحجاج بن أرطاة عن يحيى بن أبى كثير عن عروة عن عائشة قالت : فقدت رسول الله صلى الله عليه و سلم ذات ليلة .... - مسند أحمد بن حنبل 6 /238
இப்னுமாஜாவின்அறிவிப்பு :
1389 - حدثنا عبدة بن عبد الله الخزاعي ومحمد بن عبد الملك أبو بكر . قالا حدثنا يزيد بن هارون  أنبأنا حجاج عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قالت  : - فقدت النبي صلى الله عليه و سلم ذات ليلة . فخرجت أطلبه  .... سنن ابن ماجه 1 /444
இப்னு அபீஷைபாவின் அறிவிப்பு :
29858 - حدثنا أبو خالد الأحمر عن حجاج عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قالت كنت إلى جنب النبي صلى الله عليه و سلم ففقدته فاتبعته فإذا هو بالبقيع - مصنف ابن أبي شيبة 6 /108
அனைத்து அறிவிப்புகளிலும் இமாம் புகாரி அவர்கள்குறைகூறியுள்ள அறிவிப்பாளர் தொடரே இடம்பெற்றிருப்பதைபார்க்கலாம்.

5 அவர்களின் ஆதாரம்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள்நவின்றார்கள் : ஷஃபான் மாதத்தின்  15 ம் நாள் வந்துவிட்டால்அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்புவையுங்கள்! ஏனென்றால் நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்)கூறுகிறான் : என்னிடம் பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா?அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன். என்னிடம் ரிஜ்க்வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஜ்க் தருகிறேன்.என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான்வழங்குகிறேன். சுப்ஹ் தொழுகையில் நேரம் வரும் வரைஇவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக்கொண்டேயிருப்பான்.
அறிவிப்பவர் : ஹஜ்ரத் அலீ  (ரளியல்லாஹ அன்ஹு)
நூல்கள் : இப்னுமாஜா எண் : 1388, இமாம் பைஹகீஅவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான் ஹதீஸ் எண் : 3822

நமது விளக்கம் :
இவர்கள் பெரிய ஆதாரமாக காட்டும் இந்த செய்தியும்ஆதாரமற்று என்று ஹதீஸ்களை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.அவர்கள் ஆதாரமாக காட்டிய இரண்டு நூல்களின் அரபி மூலம்இதோ :
இப்னுமாஜா அறிவிப்பு:
1378 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ رواه ابن ماجة
ஷுஅபுல் ஈமான் அறிவிப்பு :
3664 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الأَصْبَهَانِيُّ ، أنا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ فِرَاسٍ الْمَكِّيُّ ، نا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ زَيْدٍ الصَّائِغُ ، نا الْحَسَنُ بْنُ عَلِيٍّ ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ ، نا ابْنُ أَبِي سَبْرَةَ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قال : قال رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَتَهَا ، وَصُومُوا يَوْمَهَا ، فَإِنَّ اللَّهَ تَعَالَى ، يَقُولُ : أَلا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ ، أَلا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَهُ ، أَلا مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ ، أَلا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ " ، -شعب الإيمان للبيهقي ள8 /343ன
இந்த இரண்டு அறிவிப்புகளிலும் இப்னு அபீ ஸப்ரா என்றுஅறிவிப்பாளர் இடம்பெற்றுளார். இவர் நபி (ஸல்) அவர்கள்பெயரால் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாகஹதீஸ்கலை வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டவர். அவரின்விமர்சனங்கள் இதோ :
وقال صالح بن أحمد بن حنبل (1)، عن أبيه: أبو بكر محمد ابن عبدالله بن أبي سبرة يضع الحديث،... وقال عبدالله بن أحمد بن حنبل (2)، عن أبيه: ليس بشئ كان يضع الحديث ويكذب... وقال عباس الدوري : سئل يحيى عن أبي بكر السبري، فقال: ليس حديثه بشئ ... وقال البخاري: ضعيف. وقال في موضع آخر : منكر الحديث… وقال النسائي : متروك الحديث... وقال أبو أحمد بن عدي : عامة ما يرويه غير محفوظ، وهو في جملة من يضع الحديث.- تهذيب الكمال للمزي ள33 /105ன
இப்னு ஸப்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர் என்றுஇமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்கூறியுள்ளார்கள்.மற்றொரு இடத்தில் இவர் மதிப்பற்றவர்,ஹதீஸ்களை இட்டுகட்டுபவர், பொய் சொல்பவர் என்றும்கூறியுள்ளார்கள். இப்னு ஸப்ராவை பற்றி யஹ்யா (பின் மயீன்)அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கவர்கள் ; அவருடையஹதீஸ்கள் எந்த மதிப்பும் அற்றது என்று கூறினார்கள். இமாம்புகாரி அவர்கள் இவரை பலவீனமானவர் என்றும் மற்றொருஇடத்தில் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்றும்கூறியுள்ளார்கள். ஹதீஸ்கலையில் விடப்பட்டவர் என்று இமாம்நஸாயீ அவர்கள் கூறினார்கள். இவருடைய பெரும்பாலானசெய்திகள் ஆதாரமற்றவை. இவர் இட்டுக்கட்டிச் சொல்வர்களில்ஒருவர் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 33, பக்கம் :105
இப்னு ஸப்ரா என்பவரைப்பற்றி இன்னும் பல அறிஞர்கள்விமர்சனம் செய்துள்ளார்கள். இது ஆதாரமற்ற மிகவும்பலவீனமான செய்திகளில் ஒன்றாகும்.

6 அவர்களின் ஆதாரம்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் இயம்பினார்கள் :
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்!
அறிவிப்பவர் : ஹஜ்ரத் மஃகில் இப்னு யஸார் (ரளியல்லாஹுஅன்ஹு)
நூற்கள் : அஹ்மத் எண் : 19842, அபூதாவூத் எண் : 2717,இப்னுமாஜா எண் : 1438, இப்னு அபீஷய்பா எண் : 10473

நமது விளக்கம் :
யாஸீன் ஓதவேண்டும் என்று இவர்கள் காட்டும் ஆதாரத்தில்ஷஅபான் 15 ம் நாள் யாஸீன் ஓதவேண்டும் என்று இல்லைஎன்பதையும் அதுவும் மூன்று யாஸீன் ஓதவேண்டும் என்றும்இல்லை என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை ஹதீஸ்கலைவல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அவர்கள் கூறிய செய்திகளின் அரபி மூலங்கள்:
அஹ்மத் அறிவிப்பு :
20316 - حدثنا عبد الله حدثني أبي ثنا عارم ثنا عبد الله بن المبارك ثنا سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه و سلم : اقرءوها على موتاكم يعني يس - مسند أحمد بن حنبل 5 /26
அபூதாவூத் அறிவிப்பு :
3121 - حدثنا محمد بن العلاء ومحمد بن مكي المروزي المعنى قالا ثنا ابن المبارك عن سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال  : قال النبي صلى الله عليه و سلم " اقرءوا { يس } على موتاكم " وهذا لفظ ابن العلاء . - سنن أبي داود 2 /208
இப்னு மாஜா அறிவிப்பு :
1448 - حدثنا أبو بكر بن أبي شيبة . حدثنا علي بن الحسن بن شقيق عن ابن المبارك عن سليمان التيمي عن أبي عثمان ( وليس بالنهدي ) عن أبيه عن معقل بن يسار قال  : - قال رسول الله صلى الله عليه و سلم ( اقرءوها عند موتاكم ) يعني ياسين . - سنن ابن ماجه 1 /466
இப்னு அபீஷைபா அறிவிப்பு :
10853 - حدثنا علي بن الحسن بن شقيق عن بن المبارك عن التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه و سلم اقرءوها عند موتاكم يعني يس  - مصنف ابن أبي شيبة 2 /445
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்!என்று இவர்கள் செய்த பொருளும் தவறானது என்று இந்தசெய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுஹிப்பான் கூறியுள்ளார்கள்.
قال أبو حاتم رضي الله عنه : قوله : ( اقرؤوا على موتاكم يس ) : أراد به من حضرته المنية لا أن الميت يقرأ عليه  - صحيح ابن حبان 7 /269
اقرؤوا على موتاكم يس இந்த வாசகத்தின் மூலம் நாடப்படுவது இறக்கும்நிலையில் உள்ளவரைத்தான். (ஏனெனில்) இறந்தவருக்கு(எதுவும்) ஓதப்படாது.
நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் :7, பக்கம் : 269
மேலும் அவர்கள் காட்டிய நான்கு நூல்களின் அறிவிப்பும், ஒரேஅறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும்.
இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉஸ்மான்என்பவரும் அவருடைய தந்தையும் யாரெனஅறியப்படாதவர்கள். இவரின் நம்பத்தன்மைஉறுதிபடுத்தப்படவில்லை.
734 - حديث روي أنه صلى الله عليه و سلم قال اقرءوا يس على موتاكم أحمد وأبو داود والنسائي وابن ماجة وابن حبان والحاكم ... وأعله بن القطان بالاضطراب وبالوقف وبجهالة حال أبي عثمان وأبيه ونقل أبو بكر بن العربي عن الدارقطني أنه قال هذا حديث ضعيف الإسناد مجهول المتن ولا يصح في الباب حديث- تلخيص الحبير - ابن حجر 2 /104
இந்த செய்தியை இப்னுல் கத்தான் அவர்கள் இதுகுளறுபடியானவை என்றும் நபித்தோழரின் கூற்றாகவும்இடம்பெற்றுள்ளது என்றும் அபூஉஸ்மான் என்பவரும்அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர் என்றுகுறைகூறியுள்ளார்கள். மேலும் இந்த செய்தி அறிவிப்பாளர்பலவீனமானவர் செய்தி விளங்காதவை. இந்த கருத்தில்ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியும் இல்லை என்று இமாம்தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னுஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நூல் : தல்கீஸுல் ஹபீர், பாகம் :2, பக்கம் : 104

7 அவர்களின் ஆதாரம் :
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :
யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாஸீன் (சூராவை)ஓதுகிறாரோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பாளர் : ஹஜ்ரத் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு
நூற்கள் : இப்னுஹிப்பான் எண் : 2639, தாரமீ எண் : 3322

நமது விளக்கம் :
இப்னு ஹிப்பானின் அறிவிப்பு :
2574 - أخبرنا محمد بن إسحاق بن إبراهيم مولى ثقيف حدثنا الوليد بن شجاع بن الوليد السكوني حدثنا أبي حدثنا زياد بن خيثمة حدثنا محمد بن جحادة عن الحسن عن جندب قال : قال رسول الله صلى الله عليه و سلم : من قرأ يس في ليلة ابتغاء وجه الله غفر له - صحيح ابن حبان (6 /312)

தாரமியின் அறிவிப்பு :
3281 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ مُوسَى بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ أَبِيهِ قَالَ بَلَغَنِي عَنْ الْحَسَنِ قَالَ مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ أَوْ مَرْضَاةِ اللَّهِ غُفِرَ لَهُ وَقَالَ بَلَغَنِي أَنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ كُلَّهُ رواه الدارمي
இப்னுஹிப்பான் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள இரண்டாவதுஅறிவிப்பாளர் அல்ஹஸன் (பஸரீ) அவர்கள் அடுத்து வரும்நபித்தோழரான ஜுன்துப் (ர-லி) அவர்களிடம் செவியுற்றதில்லை.இடையில் (குறைந்தது) ஒரு அறிவிப்பாளர் விடுப்பட்டுள்ளார்.
ولا يصح له السماع من جندب ولا من معقل بن يسار ولا من عمران بن حصين ولا من أبي هريرة - تهذيب التهذيب - ابن حجر 2 /232
ஜுன்துப் (ரலி), மஃகில் பின் யஸார் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோரிடம் ஹஸன்பஸரீ செவியேற்றல் என்பது சரியானது அல்ல.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 232
ஹஸன் பஸரீ என்ற தாபியீ நபித்தோழர்களான ஜுன்துப் (ரலி),மஃகில் பின் யஸார் (ரலி), இம்ரான் பின்  ஹுஸைன் (ரலி-),அபூஹுரைரா (ரலி)ஆகியோரிடம் நபிமொழிகளை கேட்டுள்ளார்என்பதற்கு சான்றுகள் இல்லை என்று ஹதீஸ்கலைவல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே ஹஸன் பஸரீஅவர்களுக்கும் ஜுன்துப் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோவிடுபட்டுள்ளார். 

அவர் யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன?என்பது நிரூபணமாகாததால் இந்த செய்தி முன்கதிவு (தொடர்புஅறுந்த) பலவீனமான செய்தியாகிறது.
தாரமீயில் இடம்பெற்ற செய்தியில் ஹஸன் அவர்கள் நேரடியாகநபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக இடம்பெற்றுள்ளது.இதுவும் (குறைந்தது) இரண்டு அறிவிப்பாளர்கள்தொடர்ந்தாற்போல் விடுபட்ட (முஃலல்) வகையைச்சார்ந்தமிகவும் பலவீனமான செய்தியாகும். எனவே இந்த செய்திகளைஆதாரமாகக் கொண்டு நாம் செயல்படமுடியாது.

ஷஅபான் மாதம் 15 ம் நாளுக்கு என சிறப்பு உண்டு என்றுஅறிவிக்கும் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியையும் நாம்காணமுடியவில்லை. திருப்பூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமாகாட்டிய அனைத்து செய்திகளும் பலவீனமான அல்லது மிகவும்பலவீனமான செய்தியாகவே உள்ளது.
பலவீனமான செய்திகளை பின்பற்றினால் என்ன? என்றுசிலருக்கு தோன்றலாம். பலவீனமான செய்திகளை பின்பற்றத்தொடங்கினால் இஸ்லாத்தின் தூய்மையை இழக்க நேரிடும்.இதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியை தருகிறோம்.
2810 - النظر إلى الوجه الحسن يجلو البصر رواه أبو نعيم بسند ضعيف - كشف الخفاء 2 /317
அழகிய முகத்தை பார்ப்பது பார்வையை கூர்மையாக்கும் என்றநபிமொழி அபூநுஐம் அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர்வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள்.
(நூல் : கஷ்புல் கஃபா, பாகம் : 2, பக்கம் : 317)
இந்த செய்தி பலவீனமாதாக உள்ளது. பலவீனமான செய்தியைஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைக்கு நாம் வந்தால் பெண்களைசைட் அடிப்பது சுன்னத் என்று கூறவேண்டிய நிலை ஏற்படும்.இது ஒரு உதாரணத்திற்காக கூறியுள்ளோம். இதுபோன்றஏராளமான பலவீனமான செய்திகள் பல நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பலவீனமான செய்திகளை பின்பற்றக்கூடாது என்று நாம்கூறுவதை விட ஹதீஸ்கலை மேதை இமாம் முஸ்லிம்அவர்களின் கூற்றை அப்படி தருகிறோம் அதை படியுங்கள் :
அடுத்து -அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!- தம்மைஹதீஸ் அறிவிப்பாளர் என்று காட்டிக்கொள்வோரில் பலர் ஒருவிஷயத்தை நன்கறிந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதாவது அவர்கள் அப்பாவி மக்களுக்கு அறிவிக்கும்ஹதீஸ்களில் பெரும்பாலானவை நிராகரிப்பட்டவையும்திருப்தியற்றோரிடமிருந்து அறிவிக்கப்படுபவையும் ஆகும்.மாலிரிக் பின் அனஸ் (ரஹ்), ஷுஅபாபின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), சுஃப்யான் பின் உயைனா (ரஹ்),யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின்மஹ்தீ (ரஹ்) போன்ற நபிமொழி வல்லுநர்கள் யாரிடமிருந்துஅறிவிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார்களோஅவர்களிடமிருந்தே தாங்கள் ஹதீஸ்களை அறிவிப்பதாகஇவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பலவீனமான ஹதீஸ்களையும்மறுக்கப்பட்ட அறிவிப்புகளையும் கைவிட்டு, உண்மை, நாணயம்ஆகியவற்றில் பெயர் பெற்ற நம்பத் தகுந்தோர் அறிவித்துள்ளபிரபலமான சரியான தகவல்களை மட்டுமே அறிவிப்பதுஇவர்களின் கடமையாயிருக்க, அதில் முறை தவறிநடந்துகொள்கிறார்கள். 

இந்நிலையை நாம் கண்டதால்தான்நீங்கள் கோரியபடி ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் காட்டிச்சரியானவற்றைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. பலவீனமானதும் அறியப்படாததுமான அறிவிப்பாளர் தொடர்களில் வரும் மறுக்கப்பட்ட செய்திகளை,அவற்றின் குறைகளைக் கண்டறிய முடியா மக்களிடம் அவர்கள்பரப்பிவருவதால்தான் உங்கள் கோரிக்கையை ஏற்பது நமக்குஎளிதாயிற்று.

(நூல் : ஸஹீஹ் முஸ்-லிம் முன்னுரை)
எனவே பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துஅமல் செய்வது கண்டிப்பாக கூடுடாது.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.