Friday 1 May 2015

தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினத்தின் வரலாறு !! ஒரு வரலாற்று பார்வை...

Image result for மே தினம்நாம் தற்போது கொண்டாடும் மே தினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர்.
ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.





நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International working  Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday " என்று மாற்றிற்று.
ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.


எத்தனைபேர் அறிவார் இனிய இந்த மே தினம் !!
கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்
நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்
மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்
உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்
உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்
இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம் 
இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்.!!


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

1 comment: