Monday 11 May 2015

ஊழல் செய்ய ஊக்கமளிக்கும் தீர்ப்பு பற்றிய சிறப்பு பார்வை..

பண பலமும் மத்தியில் ஆளும் குள்ளநரி கூட்டத்தின் கபட நாடகமே இந்த தீர்ப்பு .ஒரே குற்ற வழக்கில் இரண்டு நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேர் மாறுபட்ட தீர்ப்பு சொல்லியிருப்பது அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு ஓட்டைகள் நிறைந்தது என்பதை காட்டுகிறது. 18 வருடமாக விசாரணை நடத்தி 1500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சொன்ன நீதிபதி கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறார்.. பணமும் அதிகாரமும் இருந்தால் எத்தகைய தீர்ப்பும் பெற முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.. 


4 ஆண்டுகள் சிரை தன்டனையும்,100கோடி அபராதம் எப்படி தன்டனையை விதித்தது .தற்ப்போது ஏன் இப்படி மாரியது இதன் அடிப்படை பணம் பலமா?அல்லது அரசியலின் சூழ்ச்சியா இதுதான் ஊழலற்ற அரசியலா இல்லை லஞ்சத்தை முறியடிக்கும் அரசியலா? இதை நான் முன்பே எதிர்பார்ததுதான்.!!
காரணம்....

  •  நீதிமன்றத்தினால் 18 வருட விசாரணைக்குப்பின் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவி பறிக்கபட்ட,சிறை தண்டனையும் பெற்ற ஜெ. யை அவருடைய வீட்டிற்கே தனது முக்கியமான மந்திரியை மோடி அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
  • நடந்த பேரம் என்ன?
  • தற்போது நடந்த 3 மாத விசாரனையில் அரசு வழக்கறிஞ்சருக்கு பதில் அளிக்க வெறும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

1. நான் குற்றவாளி இல்லையென்றால் 18 வருடம் ஏன் இழுக்க வேண்டும்?
2. 18 வருட வழக்கு செலவு யாருடைய பணம்? 
3. குற்றவாளி இல்லை என்றபிறகு JJ அவர்கள் குற்றம் சுமத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார், காரணம் நிறைய loss?

4. பொய்யான வழக்கு என்றால் வழக்கு தொடுத்தவர்கள்தான் அரசுக்கு ஏற்பட்ட செலவினத்தை ஏற்க வேண்டும்?


சாதாரண பாமரனுக்கு ஒரு நீதி, சல்மான்கான் மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஒன்று உண்மையிலேயே அனைவருக்கும் பொருந்துகிறதா? இந்திய நாடே எதிர்பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 3 நிமிடத்தில் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி எழுந்து ஓடியது ஏன்? முழுதீர்ப்பையும் படிக்க கூச்சமா? அல்லது வெட்கமா? இரு நீதிபதிகளும் சேர்ந்து ஒரு வழக்கில் ஒருமித்த கருத்தை தெரிவிக்க முடியாத அளவிற்கு நம் நாட்டு சட்டம் அவ்வளவு கேடுகெட்டதா? தீர்ப்புகள் தகுதியற்றதா? அல்லது தீர்ப்பு வழங்கும் நீதிபதி தகுதியற்றவரா? மக்களை ஒரு கேலிப்பொருளாக்குகிறதா இந்த நீதிமன்றங்கள்? ஜெயலலிதா வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு என்றால் அது உண்மை என தீர்ப்பளித்த நீதிபதி டி குன்ஹா தவறு செய்துள்ளாரா? சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நான்கு மணிநேரத்தில் நிறுத்திய பாம்பே உயர்நீதிமன்றம், இதே போல் சாதாரண ஒரு குப்பன் சுப்பனுக்கு என்றால் நிறுத்திவைக்குமா இந்த நீதிமன்றங்கள்? அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே அவருக்கு அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்த நீதிபதிகளை நாம் இன்னும் மறந்துவிடவில்லை! ஒரு நீதிபதி தன் பேனாவால் ஒரு முதல் அமைச்சரையே சிறையில் அடைக்கிறார், அதே வழக்கில் வேறு நீதிபதி அதே முதல் அமைச்சர் பதவியை தன் பேனாவால் தருகிறார், அய்யகோ இது என்ன கொடுமை! இது என்ன விளையாட்டு? மக்கள் நீதித்துறையையும், நீதிபதிகளையும் என்ன நினைப்பார்கள், இது என்ன காக்க முக்கா விளையாட்டா? அல்லது காசு பணம் விளையாட்டா? அரசியல்வாதிகள் அனைவருக்கும் இந்த தீர்ப்பு மிக மகிழ்ச்சி தரக்கூடியதே ஏனென்றால் அனைத்து அரசியல் வாதிகளும் ஊழல் புகாரில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பவர்களே, அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பூஸ்ட் ஆக இருக்கும், அவர்களுடைய ஊழல் வழக்கிலும் இப்படி ஒரு நீதிபதி கண்டிப்பாக கிடைப்பார் என நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. இது மனுநீதி சோழன் வாழ்ந்த நாடா? அல்லது மானங்கெட்டவன் வாழ்ந்த நாடா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை? 

பணம் இருந்தால் எவ்வளவு பெரிய தவறு வேண்டுமலும் செய்யலாம் பணத்திற்கு நீதி அடிமையாகி விட்டது..இதற்கு மத்திய அரசு வாழ்த்து வேற சொல்லி இருக்கு. இதுவே மிக சரியான எடுத்துகாட்டு இந்தியாவில் எப்படி பட்ட ஆட்சி இருக்கிறது என்று. இது  ஆதிமுக கூட்டணியை உறுதி செய்வது போல் உள்ளது . அம்மாவின் விடுதலைக்கு விலை 70 சட்டமன்ற தொகுதிகள் என்று  ஒரு செய்தி பரவியுள்ளது .மேலும் இந்த தீர்ப்பு ஊழல்  செய்யும்  சாமானியருக்கு மற்றும் அரசியல் தலைவர்கழுக்கு ஓரு ஊட்டச்சத்து மாத்திரையாக உள்ளது.நீதி மன்றங்கள் இனி பெயர் மாற்றப்பட்டு நிதி மன்றங்கள் என பெயரிடப்படலாம்.இனிமே பணம், பதவி, செல்வாக்கு, புகழ் இவற்றில் எதாவது ஒன்று இருந்தால் இந்தியாவில் தைரியமாக எது வேணாலும் செய்யலாம்.


கடவுளை நம்புவது மட்டுமே மூடநம்பிக்கை அல்ல ..இந்தியாவில் நீதிமன்றங்கள் நீதியை வழங்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கைதான் நீதி என்பது சாதி சார்ந்த பொருளாதார பின்னணி சார்ந்த ஒன்று என்பது இங்கு எழுதப்படாத விதி..

நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது இந்தியவில் சட்டம் படித்த அத்தனை வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளை மறுஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு வழங்க பட்ட தீர்ப்புபானது அரசியல் பலத்தாலும், பணபலத்தாலும். வழங்க பட்டாதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment