Wednesday 17 June 2015

சினிமாவும் இன்றைய மனித சமூகமும்! ஒரு இஸ்லாமிய பார்வை...

சினிமாவும் இன்றைய மனித சமூகமும்!
{ ﺎَّﻣَﺃَﻭ َﻑﺎَﺧ ْﻦَﻣ َﻡﺎَﻘَﻣ ﻰَﻬَﻧَﻭ ِﻪِّﺑَﺭ َﺲْﻔَّﻨﻟﺍ ِﻦَﻋ .ﻯَﻮَﻬْﻟﺍ َّﻥِﺈَﻓ َﺔَّﻨَﺠْﻟﺍ َﻲِﻫ ﻯَﻭْﺄَﻤْﻟﺍ }
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். 79:40,41
﴿ ِﺱﺎَّﻨﻟﺍ َﻦِﻣَﻭ ْﻦَﻣ َﻮْﻬَﻟ ﻱِﺮَﺘْﺸَﻳ ِﺚﻳِﺪَﺤْﻟﺍ َّﻞِﻀُﻴِﻟ ْﻦَﻋ ِﻞﻴِﺒَﺳ ِﻪَّﻠﻟﺍ ٍﻢْﻠِﻋ ِﺮْﻴَﻐِﺑ ﺎَﻫَﺬِﺨَّﺘَﻳَﻭ ًﺍﻭُﺰُﻫ َﻚِﺌَﻟﻭُﺃ ْﻢُﻬَﻟ ٌﺏﺍَﺬَﻋ ٌﻦﻴِﻬُﻣ * ﺍَﺫِﺇَﻭ ﻰَﻠْﺘُﺗ ﺎَﻨُﺗﺎَﻳَﺁ ِﻪْﻴَﻠَﻋ ﻰَّﻟَﻭ ًﺍﺮِﺒْﻜَﺘْﺴُﻣ ْﻥَﺄَﻛ ْﻢَﻟ ﺎَﻬْﻌَﻤْﺴَﻳ ﻲِﻓ َّﻥَﺄَﻛ ِﻪْﻴَﻧُﺫُﺃ ًﺍﺮْﻗَﻭ ُﻩْﺮِّﺸَﺒَﻓ ٍﻢﻴِﻟَﺃ ٍﺏﺍَﺬَﻌِﺑ ﴾
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்)  
.
இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31 : 6
இன்றைய மனித சமூகம் தனது வாழ்வின் முக்கிய அங்கமாக இந்த சினிமாவை வைத்திருக்கிறது.
இறைவனுக்கு அஞ்சிவாழும் சிலரை தவிர பெரும்பான்மை மக்கள்
.
.
தங்களை சினிமாவுக்கு அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
.
அதன் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க மறுக்கிறது.
.
.
சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ???
.
1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா !
.
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா !
.
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா !
.
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா !
.
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா !
.
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா !
.
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா !
.
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா !
.
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா !
.
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா !
.
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா !
.
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா !
.
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா !
....
14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா !
.
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா !
.
16) இறைவனின் சட்டங்களை புறக்கணிக்க செய்து மனித சட்டங்களின் பக்கம் மக்களை திருப்பியது இந்த சினிமா !
.
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
.
மொத்தத்தில் சினிமா என்பது ஓழுக்கச்சீர்கேடடின் "கையேடு "
.
விபச்சாரத்தின் "நுழைவாயில்"சமூக சீர் குலைவிற்கான " ஆயுதம் "
என்று இந்த மனித சமூகம் சினிமாவை தடை செய்கிறதோ அன்றுதான் நாம் இறைவன் கூறும் பண்புகளை அடைவோம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
.
.
இனியாவது சிந்தியுங்கள் இந்த சினிமாவினால் நாம் அடைந்த நன்மைகள் என்ன ??
.
"விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 516
ْﻦَﻤِﻟَﻭ َﻑﺎَﺧ ﻡﺎَﻘَﻣ ﻪّﺑَﺭ ِﻥﺎَﺘَّﻨَﺟ
.
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. 55:46

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment