Thursday, September 3, 2015

கட்டுமானத்துறையில் விபத்து ஒரு சாபக்கேடா? விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ்கள்!! ஒரு சமூக பார்வை..

கட்டுமானத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறையில் விபத்துகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும். விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் கவனமுடன் செய்வது
அதிகப்படியான ஆட்கள் பணிபுரியும் இடத்தில் தேவையான அளவு மேற்பார்வையாளரை அமர்த்துவதன் மூலமும், ஆபத்தான மின்சாரப்பணி, தீ சம்பந்தப்பட்ட பணியை தேர்ந்த தொழிலாளர்கள் கொண்டு செய்வதன் மூலமும், ஒவ்வொரு வேலையின் தன்மைக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் பணி செய்வதன் மூலமும் பெரும்பாலான விபத்தை தவிர்த்து விடலாம்.பணி பாதுகாப்பு அதிகாரி என்று ஒருவரை அமர்த்தி, அவர் அடிக்கடி பணிப்பகுதியை ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டும். எல்லா துறைகளிலும் விபத்துக்கள் இருந்தாலும் கட்டுமானத்துறையில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு.எப்போது வேண்டுமானலும் வரலாம்.


பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் என்பவை யாவை? 

1. நெரிசல் நிறைந்த பணிசெய்யும் இடங்கள்.
2. சரியான காற்றோட்டமோ அல்லது வெளிச்சமோ இல்லாமை. 
3. சகிக்கமுடியாத அளவிற்கு சத்தம், ஈரத்தன்மை, குலுக்கல்கள் போன்றவை. 4. தீயணைப்பான்கள் இல்லாமலோ அல்லது செயல் இழந்த நிலையிலோ உள்ள இடங்கள். 
5. மின்சாரம் தொட்டால் பாயக்கூடிய நிலையில் மின் கம்பிகள். 
6. பாதுகாப்புத் தடுப்பில்லாத சுழலும் இயந்திரங்கள். 
7. மறிக்கப்படாத உள் திறந்த வெளிகள். 
8. பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள். 


இயந்திரங்கள் சம்பந்தமான விபத்துக்களைத் தவிர்க்க கீழ்க்கண்டவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் 

1.கிரேன் இயக்குபவர் தகுந்த உரிமம் பெற்றவராகவும், குறிப்பிட்டவேலைக்கு உகந்தவராகவும் இருக்கின்றாரா? 
2. கிரேனின் ஆர்.சி. புத்தகம் மற்றும் பாதுகாப்பீடு நடைமுறையில் உள்ளதா? 
3. சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா? 
4. கிரேன் நகரும் தரை தளம் பலமாக உள்ளதா? 
5. நகரும் தளப் பரப்பு வேலைக்குப் போதுமானதாக உள்ளதா? 
6.நகரும் தரைப் பரப்பிற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? உரியவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? 
7.தயாரிப்பாளரின் பரிந்துரைப்படி இந்த கிரேன் மேற்படி பணிக்கு உகந்ததா? தேவைப்படும் நெம்புகோல் நீளத்திற்கு ஏற்ப பளுவைத் தூக்கவல்லதா? 8.கிரேன் இயக்குநருக்குப் பணி பற்றிய முழுவிபரம் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளாரா? 
9.பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கிரேன் நகரும்விதம் மற்றும் பணிமுறைகள் தெரியுமா? பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளதா? 
10.பணி நடைபெறும் இடத்தில் மூன்றாம் மனிதர்கள் நுழையா வண்ணம் அறிவிப்புகள் உள்ளதா? இவற்றையெல்லாம் நாம்
பரிசோதித்துக் கொள்வது நல்லது. பொதுவாக, கட்டுமான புராஜெக்ட்களில் நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய சில பாதுகாப்பற்ற நடவடிக்கைகள்

1. இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது அதில் ஏதாவது பழுதினைப் பார்த்தல். 
2. மின்சாரம் பாயும் நிலையில் இருக்கும்போதே மின் பணிகளைச் செய்தல். 
3. இயந்திரத்தின் பாதுகாப்பிற்காக உள்ள இனங்களை இடையூறாக இருக்கிறது என கழட்டி வைத்துவிடுவது. 
4. தனி மனிதர் பாதுகாப்புச் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பது. 
5. பாதுகாப்புச் சாதனங்களை செயலிழக்கச் செய்து வைத்திருப்பது. 
6. மின்சாதனங்கள் பொருத்தும் பிளக் பூமியுடன் தொடர்பு கம்பி இல்லாதிருப்பது.  அடுத்ததாக, ஒரு கட்டுமான புராஜெக்டில் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியான ஸ்கஃப் ஃபோல்டிங்கில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ்கள். 


1. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் மொத்த எடையை விட 4 மடங்கு பாரம் தாங்கும் வகையிலான ஸ்கஃப் ஃபோல்டிங் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் நிலை நிறுத்தப்பட வேண்டும். 
2.நிலை நிறுத்தும் இடமும் திடமானதாக இருக்க வேண்டும். பேரல்கள், பெட்டிகள், தனித்தனி செங்கற்கள் அல்லது கான்கிரீட் பிளாக்குகள் போன்றவை ஸ்கஃப் ஃபோல்டிங்குகளுக்கு ஆதாரமாக நிறுத்தப்படக் கூடாது. 3. ஸ்கஃப் ஃபோல்டிங் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து நிபுணத்துவம் கொண்ட ஒரு மேற்பார்வையாளரின் முன்னால்தான் ஸ்கஃப் ஃபோல்டிங்கை, நிலை நிறுத்துவது, நகர்த்துவது, கழற்றி மாட்டுவது, இடமாற்றம் செய்வது போன்ற வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
4. ஸ்கஃப் ஃபோல்டிங் அமைப்பில் பாதுகாப்பு கட்டமைப்பு (Safety Flatform), மேலெழும் போதும், கீழிறங்கும் போதும் இடையில் பாதுகாப்புப் பிடி மற்றும் டோ போர்டு அமைப்பும் செய்யப்பட வேண்டும். 
5. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் தாங்கு உபகரணங்களான பிராக்கெட், பிரேசஸ், ட்ரஸ்சஸ்-ஸ்குரூலக்ஸ் மற்றும் ஏணிகள் நல்ல நிலையில் உள்ளனவா? என்பது நிர்மாணிக்கும் முன்பு உறுதி செய்யப்பட வேண்டும். 
6. கட்டிடப் பாதுகாப்பு பொறியாளர், கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் கண்காணித்து உரிய உயரதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 
7. தொங்கு நிலையில் உள்ள ஸ்கஃப் ஃபோல்டிங்கின் பிடிப்பு நிலையினை கட்டுமானப் பணியின் ஒவ்வொரு ஷிஃப்டுக்கு முன்பும் உரிய அதிகாரி ஒருவரால் கண்காணிக்கப்பட வேண்டும். 
8. நார்கயிறு அல்லது சிந்தெடிக் கயிறு மூலம் தொங்கு ஸ்கஃப் ஃபோல்டிங் செயல்படுத்தப்படும் போது,சுற்றியுள்ள பகுதியில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
9. கிணற்று படிகள் மற்றும் ஏணிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி ஸ்கஃப் ஃபோல்டிங் உருவாக்கப்படக் கூடாது. 
10. மின் இணைப்பு உள்ள இடத்திலிருந்து 10 அடி தூரத்தில் மட்டுமே ஸ்கஃப் ஃபோல்டிங் அமைக்கப்பட வேண்டும். சில கட்டுமான வேலைகளில், மின் இணைப்புகளைக் கவனமாக செய்வதில்லை. தொழிலாளி பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

1.முக்கியமாக வேலைக்கு வரும் தொழிலாளிக்கு அந்தந்த நாடுகளின் துணையுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கு என்று பிரித்து Training கொடுத்தார்கள்.

2.PPE என்று சொல்லக்கூடிய Personal Protective Equipment ஐ ஆதாவது முக்கியமாக ஹெல்மெட்,ஷூ மற்றும் பாதுகாப்பு பட்டை/வார்.இதைத்தவிர குறிப்பிட்ட வேலைக்கு தேவையான மூக்குக் கண்ணாடி,Nose Flter என்று பல சாதனங்களை கொடுப்பது அத்தியாவசிமாக்கியது.
3.வேலை செய்யும் இடத்துக்கு போய் வர சரியான படிகள்/ஏணிகள்.
4.சரியான தகுதியுடன் வேலை செய்யும் கிரேன் ஓட்டுனர் மட்டும் அவர்களுக்கு உரிய தகவல்களை கொடுப்பவர்களுக்க்கு தேவையான தகுதி என்று பல அடுக்கு ஆட்களை நிறுவியது.
5.மிக முக்கியமாக ஒப்பந்தக்காரர்களை, ஏற்படும் விபத்துக்கு Responsibility யாக்கியது.
6.எல்லாவற்றையும் விட வேலை செய்யும் இடம் பாதுகாப்பாக இல்லாமல் இருந்தால் அமைச்சுக்கு இலவசமாக தொலைப்பேசி தொடர்பு ஏற்படுத்தி,யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

இதோடு நில்லாமல் தொழிலாளர்கள் கூடும் பொது இடத்தில் கீழ்கண்டவாறு சுவரொட்டிகளை ஒட்டி வேலைக்கு வந்த நம்மை பத்திரமாக திருப்பி அனுப்ப எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

நல்ல தொடக்கம் நல்ல முடிவுக்கு அறிகுறி எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த ஒரு பணியையும் நல்ல விதமாக தொடங்கினாலே, அது நன்றாக முடிவடைவதற்கு அச்சாரமாகி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது. நல்ல தொடக்கம் என்பது நல்ல சூழ்நிலையை உருவாக்குவதே. மற்றவரின் நம்பிக்கை கெடாதபடி ஒரு வேலையைத் தொடங்குவது ஒரு கலையாகும். இக் கலையை கைவரப் பெற்று களத்தில் பணியாற்றும் பொறியாளரே மிகச்சிறந்த பொறியாளர் என பேர் எடுப்பர்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment