Wednesday, December 2, 2015

மழையால் பரவும் சுகாதார சீர்கேடு !! ஒரு சமூக விழிப்புணர்வு பார்வை ...

Image result for Most common rainy season diseasesதமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது.தமிழகத்தில் மலேரியாவும், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.

வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன்கவனத்தில் கொள்ளவும்:
1. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களைஅழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.

2.நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியைஇயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்தஅளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.


3. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவதுமின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன்கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன்(காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.  
மேலும்  உங்களுக்கு மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு :
  • எலெக்ட்ரிக் மீட்டர் பழுது பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இதில் புகை எதுவும் வந்தால் உடனே மின் வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள். 
  • துணிமணிகளை ஓரளவு துவைத்து காய வைத்து உபயோகத்தில் கொண்டு வரலாம். 
  • செப்டிக் டேங்க் வெள்ள நீரால் நிறைந்து விட்டிருந்தால், கால்வாசியாவது நீரை வெளியேற்ற வேண்டும். 
  • திறந்த கிணறு வெள்ள நீரால் நிரம்பி விட்டிருந்தால், கால் வாசி நீரையாவது வெளியேற்றி விட்டு பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்.
  • ஷார்ட் circuit அநேகமாக சுவிட்ச் போர்டுகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றில் இருந்து நீர் சுத்தமாக வடிந்து விட்டதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.எதிலாவது புகை வந்தால் உடனே off செய்து விடுங்கள்.
  • நீரில் முங்கி இருந்தால் பேன், பிரிட்ஜ், பம்ப், டெலிபோன், கம்யுட்டர், மைக்ரோவேவ் ஆகியவை 95% கெட்டு போயிருக்க வாய்ப்பு என்பது கசப்பான உண்மை. 
  • நீர் எந்த அளவுக்கு ஏறியிருந்தது என்பதை குறித்து கொண்டால், குறைந்த பட்சம் அடுத்த முறை உஷாராய் இருக்க உதவும்.

4. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படிதடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.

5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரைவயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம்அளியுங்கள்.

6. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள்.இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டுவிட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான்போயிருக்கும்.

7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத்தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
8.  உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய இறைவனுக்கும்,அவன் அருளால் உங்களுக்கு உதவிகள் புரிந்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள்முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொருஇடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்துஅமைதி கொள்ளுங்கள்.

மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் !!
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மோசமடைந்திருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் பிரச்சினைகளையும் கொண்டு வந்து விட்டுள்ளது. பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஏற்கனவே பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. தேங்கிக் கிடக்கும் நீர், சாலைகளில் பெருகி வழியும் குப்பைகள், பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் மலேரியாவும், எலிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இவை சென்னையில் அதிகரித்து வருகின்றன. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் காலி மனைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் உள்ளே போக பல நாட்களாகிறது. இதன் காரணமாக கொசுக்கள் பெருகியுள்ளன. இதுதவிர கழிவு நீரும் பல இடங்களில் சாலைகளிலேயே ஓடுகின்றன. குப்பைகளும் பெருகிப் போய்க் கிடக்கின்றன. எல்லாம் சேர்ந்து இப்போது மலேரியா, எலிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துள்ளன. இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை உள் சிகிச்சை துறை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 வாரங்களில் மலேரியா மற்றும் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கு வருவோரின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதாரண வைரஸ் காய்ச்சல் தவிர இதுபோன்ற சீசனல் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நோய்த் தாக்குதல் சாதாரணமாக இருப்பவர்களுக்கு இளைப்பு, தொடர் இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. அதீதமாக தாக்கப்படுவோருக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் மாசுதான் இதற்கு முக்கியக்காரணம். தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் மலேரியா, எலிக்காய்ச்சல் போன்றவை பரவுகின்றன. தற்போது பெய்து வரும் மழை நின்றதும் மலேரியா பெருமளவில் பரவும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல எலிக்காய்ச்சலும் பெருகும் அபாயம் உள்ளது என்றார். இதேபோல வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறது. சென்னை தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழையால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மழை காரணமாக பரவும் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாம். அதேசமயம், கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் மட்டும் 5000 பேருக்கு மழையால் ஏற்படும் நோய்கள் தாக்கியுள்ளன.உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 1775 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.


டெங்கு  காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல்..

டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 10 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னையின் மக்கள் தொகை பெருக் கத்துக்கு ஏற்ப அடிப்படை உள்கட்ட மைப்பு வசதிகள் பெருக்கப்படவில்லை. 1970-களில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.


மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேக மாக பரவத் தொடங்கியுள்ளன. அவற்றை கட்டுப்படுத்த அனைத்து பகுதி களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment