Friday, January 29, 2016

பிரதமர் நரேந்திர மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை!!

Image result for மோடியின்
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்-வேன் என்று தேர்தல் பரப்புரையின் போது மாய-ம-யக்கம் தோற்றுவித்த நரேந்திரமோடி அறு-திப் பெரும்பான்மை பெற்று பிரதமர் ஆகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டும் தொடங்கி-விட்டது.
இந்த மூன்றாண்டு ஆட்சியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட எந்த வகையிலும் சிறப்-பான முன்னேற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. அதே-நேரம் சிறுசிறு தீப்பொறிகளை காட்டுத் தீயைப் போல உருவாக்கும் வேலைகளையே பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் மாட்டுக்கறித் தீ!
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் பல்வேறு பண்பாடு, உணவுப் பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து வருகின்றனர். ஆட்டுக் கறி, கோழிக்கறி என்பதே இந்தியாவின் பெரும்பாலான அசைவ உணவுப் பிரியர்-களின் உணவாக உள்ளது. கிராமங்களில் மடை-யான், நாரை, புறா ஆகியவற்றை உண்ணும் பழக்கம் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி மாட்டுக் கறி உண்ணும் பழக்கமும் இந்தியாவில் உண்டு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அனைத்துத் தரப்பினரது உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது.
இந்த நிலையில்தான், ‘இந்துக்களின் புனித தெய்-வம் பசு, அதை வெட்டக் கூடாது’ என்று மாட்-டுக் கறி மீது திடீர் எதிர்ப்பைக் காட்ட ஆரம்-பித்-தார்கள் பா.ஜ.க.வினர் கடைக்கண் பார்வையில் இருக்கும் இந்துத்துவ அமைப்புகள். மாட்டிறைச்சி வைத்திருந்தாக சிலர் அடித்துக் கொல்லப்பட்டனர். மிகச் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாட்டின் தோலை உரித்த தலித்துகள் நிர்வாணமாக கட்டி-வைத்து அடிக்கப்பட்டனர்.
இப்படி மாட்டுக் கறிக்கு எதிராக மோடி அரசின் நிழலில் இருக்கும் சில இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலை-யில், மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதி-கரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்று-மதி-யில் இந்தியா உலகிலேயே முதல் நாடாக இருக்கிறது. இந்த நிலையில் மாட்டு இறைச்சி பற்றிய சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உண்மைகள் தெரியாம-லேயே இதில் இஸ்லாமியர்களும் சிக்க-வைக்-கப்-பட்டு அரை- வேக்க-õடுகளால் அரசியல் செய்யப்-படு-கிறார்கள்.

மாடு இந்துக்களுக்குப் புனிதமானது என்பதில் மாற்-றுக் கருத்து இல்லை. ஆனால் மாட்டுக் கறி எந்த மதத்தைச் சார்ந்த உணவும் அல்ல, எந்த சாதியைச்
சேர்ந்த உணவுமல்ல. நிலவியல், பொருளாதாரம் சார்ந்த காரணிகளால்தான் உணவுப் பழக்கமும் அமை-கிறது. அந்தவகையில் மாட்டிறைச்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ இனத்துக்கோ, சாதிக்கோ உரித்தானதல்ல.
ஆனால் இந்துத்துவ அமைப்புகள் மாட்டுக் கறி இஸ்லாமியர்களின் உணவு, தலித்துகளின் உணவு என்று அறியாமையால் நிறுவ முற்படுகின்றன. இந்தக் கொடுமையைவிட கொடுமையானது என்ன-வென்றால், தலித்துகளும், முஸ்லிம்களும் இந்துத்-துவ கும்பலின் இந்த வலையில் விழுந்து, ‘மாட்டுக் கறி தங்களுக்கானது. அதை எதிர்க்கக் கூடாது’ என்று இந்த போராட்டத்துக்கு தங்கள் அடையாளச்
சாயத்தை ஏற்றியிருக்கின்றனர்.மாட்டிறைச்சி இஸ்லாமியர்களின் உணவு அல்ல. இஸ்லாமியர்களுக்கான வாழ்வியல், உணவியல் நெறி-களில் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. சாப்பிடலாம், சாப்பிடாமலும் இருக்கலாம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை தொடங்கி, ஆந்திரா எல்லை வரை உள்ள நீண்ட தமிழகக் கடற்கரையில் ஏராளமான கிராமங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும் முன்பு சமண சமயத்தைத் தழுவியிருந்தனர். கடலோர முஸ்லிம்கள் பயன்படுத்தத் தொடங்கி இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் பயன்படுத்துகின்ற தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா போன்ற தூய தமிழ் சொற்கள் சமணர்களிடம் இருந்து கைக்கொள்ளப்பட்டவையே. மேலும் கடலோர இஸ்லாமியர்கள் கடல்வாணிபத்திலும் ஈடுபட்டனர். மரக்கலங்களின் மக்கள் என்பதுதான் மரக்-காரையர்கள் என்று இருந்து பின் மரைக்காயர்கள் என்று மருவியது. இவர்கள் எல்லாம் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். தமிழகத்தில் கடற்கரை முஸ்-லிம்கள் உள்பட பெரும்பாலான முஸ்லிம்கள் மாட்-டிறைச்சி உண்ணும் வழக்கம் அற்றவர்கள்.
ஆனால், 1980களில் தமிழக முஸ்லிம் இளை-ஞர்கள் வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்-பூர் போன்ற நாடுகளுக்கும் செல்வது அதிக-மானது. வளைகுடா நாடுகளில் கடைநிலைத் தொழி-லாளர்-களாகச் சென்ற இவர்கள் அங்கே கட்டாயத்தின் பேரில் மாட்டு இறைச்சி சாப்பிட ஆரம்பித்தனர். அந்தப் புள்ளி-யில் இருந்துதான் தமிழக முஸ்லிம்களிடத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்தது.

இன்னும் உற்று நோக்கினால் பணக்கார இஸ்லா-மி-யர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடும் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அடித்தட்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பது அதிகரித்திருக்கிறது. கூலித் தொழில் செய்து, தொழிலாளர்களாக இருக்கும் முஸ்-லிம்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களாகவும் இரு--க்-கிறார்கள். இதில் எங்கிருந்து மதம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு சோழநாடு சோறுடைத்து என போற்றப்படும் டெல்டா மாவட்டங்களிலேயே விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமை கோர தாண்டவம் ஆடியதே. நினைவிருக்கிறதா? வரப்-பெலி எனப்படும் எலிகள் விவசாயிகளுக்கு செல--வின்றி கிடைத்ததால் எலிக்கறி சாப்பிட்டனர். அதே-போலத்தான் மாட்டிறைச்சியும் குறைந்த செலவில் கிடைக்கிறது என்பதாலேயே சாப்பிடுகிறார்களே தவிர, இதில் சித்தாதந்தமும் இல்லை புண்ணாக்கும் இல்லை. வறுமைதான் இருக்கிறது. 

தமிழகம் தாண்டிப் பார்த்தால் கேரளாவில் அனைத்து சாதி, மதத்தினருக்கும் பொதுவான உண-வாக மாட்டுக் கறி உணவு இருக்கிறது. கேரளா, அஸ்-ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பா.ஜ.க. தலைமையே மாட்டுக் கறிக்கு எதி-ர--õன நிலைப்பாட்டை எதிர்க்கிறது. ஏனெனில் அவர்-களுக்கு அரசியலைத் தாண்டி மாட்டிறைச்சியின் பயன்-பாடு புரிந்திருக்கிறது. அதனால் இம்மாநில பா.ஜ.க.வினரே தலைமையோடு மாட்டிறைச்சி விவ-காரத்தில் முரண்படும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. குறிப்பிடும்படியாக காஷ்மீர் மாநில முஸ்-லிம்-களி-டத்-திலும் மாட்டிறைச்சி பயன்பாட்டில் இல்லை. 

இவ்வாறு நிலம் சார்ந்து, பணம் சார்ந்த உணவே அன்றி மாட்டிறைச்சி மதத்துக்கானதோ, சாதிக்-கானதோ இல்லை. ஆனால் இந்துத்துவர்களுக்கு இது-பற்றிய புரிதல் இல்லை. இருந்தால் கூட மாட்டு இறைச்சியை வைத்து குறிப்பிட்ட சில மக்களின் இறைச்சியைப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்கள். மகாத்மா காந்தி மாட்டிறைச்சி பற்றி குறிப்-பிட்டதை இப்போது நினைவுகூர்வது மிகச் சரியாக இருக்கும். “பசுவதையை சட்டம் போட்டு நடை-முறைப்-படுத்த இயலாது. இந்த பூமிக்கு பாரமாய் இருக்கிற விலங்குகளை பாதுகாப்பது என்பது இயலாது. பார-மாக இருந்தால் மனிதனைக் கூட பாதுகாப்பது இய-லாத காரியம்தான். பசுவைக் காப்பாற்றுவது இந்து சமயத்தில் முக்கியமானதுதான். ஆனால், பசுவைக் காப்பதற்காக இந்து அல்லாத ஒருவனிடம் வலிமையைப் பயன்படுத்துவது இந்துமதக் கோட்பாடு ஆகாது’ என்கிறார் காந்தியடிகள். ஆனால், இப்போது பசுவைக் காப்பதாகச் சொல்லி இந்துமதத்தில் இருக்கும் தலித்கள் மீதே பலப்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்துத்துவர்கள். மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் கிராமப் பொருளாதாரமும், நாட்டின் ஏற்றுமதி வணிகமும் அடங்கியுள்ளது. இதை வசதியாக மறைத்து
உணர்ச்சிக் கொந்தளிப்பு முலாம் பூசுகிறார்கள். ஊடகங்களும் கூட! இந்தியா மாட்டுச் சந்தைகளுக்கு புகழ் பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா என இந்தியாவின் பல மாநிலங்களில் கிராமங்கள் முதல் மாநகரங்களின் புறநகர் பகுதிகள் வரை மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்றவை.

விவசாயிகளும் பொதுமக்களும் பசு உள்ளிட்ட மாடுகளை வளர்க்கின்றனர். மூன்று அல்லது நான்கு கன்றுகள் ஈனும் வரைதான் பசுவுக்கு மதிப்பு. அதன்பிறகு பசு கருத்தரிப்பது கிடையாது. இதன் பின் விவசாயிகள் அந்த பசுவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போது தமிழக அரசு இலவச கறவைமாடுகளை மக்களுக்கு வழங்கி வரு-கிறது. மாடுகளால் பயன் இல்லாத நிலையில் ஆயி-ரக்-கணக்கான மாடுகளை வைத்து எப்படி விவசாயி-களால் பராமரிக்க இயலும்?

முதிர்ந்த பசுக்களை, மாடுகளை அவர்கள் அடி-மாடு என்று கூறி இறைச்சிக்கு விற்கிறார்கள். இதுவே காலங்-காலமாக கிராமங்களில் இருந்துவரும் நடை-முறை.
இன்றைக்கு அப்படி முதிர்ச்சி அடைந்த மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லவோ, விற்கவோ இயலாத சூழலை, ‘பசு பாதுகாவலர்கள்’ என
சொல்-லிக் கொள்பவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இ-த-னால் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆனால் பல-மான பாதிப்புகள் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்-பட்-டுள்ளன. மனிதனே பெற்றோரை வயதான நிலை-யில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் காலத்--தில், பயனில்லாத மாடுகளை இறைச்சிக்காக பயன்-படுத்துவதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள். இதற்கு அரசிடம் பதில் இல்லை. மாட்டிறைச்சி வைத்திருப்-பவர்-களைத் தாக்குவது என்பது இந்தியக் கிராமப் பொரு-ளாதாரத்தின் மீதான தாக்குதல்தான்.
சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளால் உண்-ணப்-படாத விலங்குகள் அழியும் விலங்குகள் பட்டிய-லில் இருக்கின்றன. ஆனால் விலங்குகளாலும், மனிதர்-களாலும் உண்ணப்படும் நிலையிலும் மாட்டினம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த இயற்கை விஞ்ஞானத்தை இந்த்துவவாதிகள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம், மாட்டிறைச்சி உற்பத்தி செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் இந்தியாவின் முக்கியத் தொழிலாக மாறி வருகிறது. பசு பாதுகாவலர்களின் அரைகுறைப் போராட்-டங்களால் இந்தத் தொழிலுக்கும் எதிர்-காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இத்தகைய போராட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்-புற விவவசாயிகள்தான். நிறுவன ரீதியாக மாட்-டிறைச்சி ஏற்றுமதி செய்பவர்களை எதிர்த்து நின்று போராட பசு பாதுகாவலர்களுக்கு தெம்பு இல்லை.
இந்த நிலையில், இந்துத்துவம் மாட்டிறைச்சியை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்கிறது என் -றால், இதை எதிர்க்கிறோம் என்று சொல்லும் கம்--யூனிஸ்-டு-களும் மாட்டிறைச்சியை குறியீடாக வைத்து எதிர் அரசியல் செய்கிறார்கள். தலித்கள், இஸ்லாமியர்களை அழைத்து மாட்டுக் கறி திருவிழா என்று நடத்துகிறார்கள் அவர்கள்.
உண்மையிலேயே மாட்டிறைச்சிக்குப் பின்னால் இருக்கும் கிராமப் பொருளாதாரம், சாதி - மதம் தாண்-டிய பொருளாதாரக் காரணிகளை மறைத்து-விட்டு
கம்-யூனிஸ்-டுகளும் மற்ற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்-பதற்கு மாட்டிறைச்சியை அரசிய-ல் குறி-யீடா-கப் பயன்படுத்துகிறார்கள். இதுவும் எவ்-விதப் பய-னற்ற உணர்ச்சிகர அரசியல் அறுவடைக்கு-த்தான்.
இஸ்லாமியர்கள் பன்றிக்கறி சாப்பிட அனுமதி இல்லை. அதேசமயத்தில் அதை சாப்பிடுபவர்களை தடுப்பதற்கும் அனுமதியில்லை. 60% இஸ்லாமியர்கள் வாழும் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொண்ட மலேசி-யா-வில் சீனர்கள் விரும்பிச் சாப்பிடுவது பன்றிக்-கறி-தான். அதை முன்னிட்டு மலேசியாவில் பன்றிகள் அறுக்கப்பட்டு பன்றி இறைச்சி விற்கப்படுகிறது. அதேசமயம் சில வளைகுடா நாடுகளிலும் பன்றிக் கறி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் அதை இஸ்லாமியர்கள் சாப்பிடுவதில்லை. இதை மாட்டிறைச்சி எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்-பாளராக போட்டியிட்ட மோடி, வளர்ச்சி, வளர்ச்சி என்பதையே தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் ஆட்சியைப் பிடித்தபிறகு வளர்ச்சி பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாததோடு பதற்றம் பதற்றம் என்பதையே குறியாக வைத்து பா.ஜ.க.வின் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
சாமானிய மக்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்-பது அனைவருக்கும் வேலை வாய்ப்பு,  சாலைப் போக்குவரத்து வசதி, மருத்துவ வசதிகள்,
எல்--லாருக்--கும் சமமான கல்வி, விலைவாசி உயர்வு கட்டுக்--குள் இருத்தல் ஆகியவைதான் கடைக்கோடி கிரா--மங்--களை மட்டுமல்ல நகரங்களைச் சேர்ந்த மக்-களும் எதிர்பார்ப்பது. இதுதான் இந்தியாவின் உண்-மை-யான வளர்ச்சியும் கூட. ஆனால் மோடியின் மந்திர -இந்தியாவில் இவையெல்லாம் இன்னும் பழைய நிலைமையில்தான் இருக்கின்றன என்பதே நிஜம். உணவுக்கே வழியில்லாமல் பல கோடி இந்தி-யர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த உணவைதான் சாப்பிடவேண்டும் என்ற குரல் ஆளுங்-கட்சி தரப்பில் இருந்து வருவது கண்டனத்துக்-குரியது. 

காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் ஊழலால் சலிப்படைந்து வெறுப்படைந்த மக்கள் வேறு வாய்ப்பு இல்லாத நிலையில்தான் மோடியை தேர்ந்-தெடுத்தனர். அதுவும் இந்தியாவில் முப்பது சத-வி-கித மக்கள்தான் மோடிக்கு வாக்களித்தனர். மோடி ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு சில்லறை விஷ-யத்-துக்-கும் மதச் சாயம் பூசி, போலி தேசியச் சாயம் பூசி சாதாரண மக்களை கடும் வெறுப்பில் ஆழ்த்தி-யிருக்-கிறார்கள் மோடியின் நிழலில் முழங்கும் இந்துத்துவ அமைப்பினர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டில் 20  சதவிகிதம் இருக்கும் இஸ்லாமியர்களையும், 20 சதவிகிதம் இருக்கும் தலித்களையும் மோடிக்கு எதிராக காங்கிரஸால் ஒருங்கிணைக்க முடிய-வில்லை. ஆனால், மோடி பதவியேற்ற பிறகான செயல்-பாடுகளால் மோடிக்கு எதிராக இந்த நாற்பது சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களும், தலித்களும் தாங்களாகவே ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி பற்றிய உண்மைகள் தெரியா-மலோ, அல்லது தெரிந்தும் மறைத்தோ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜக அதில் தோல்வி அடைந்திருக்கிறது.மற்றவர்களை பயப்பட வைக்கவேண்டும் என்று மாட்டு இறைச்சி என்ற பூதத்தை பாஜக சுவரில் வரைந்தது. இப்போது தான் வரைந்த பூதத் தைப் பார்த்து தானே பீதியில் இருக்கிறது பாஜக. இதற்-குக் காரணம் இந்துத்துவவாதிகள் உணர்ச்சிக்-குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிவுக்கும் ஆய்-வுக்-கும் கொடுக்கவில்லை. இதற்கான விலையை பாஜக விரைவில் கொடுக்க இருக்கிறது.விதவிதமாய் பதற்றத் தீயை மூட்டினாலும் இந்தியாவில் மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை என்பதே உண்மை!
நன்றி : - புதுமடம் ஜாபர் அலீ,
சமரசம் அக்டோபர் 1-15, 2016

No comments:

Post a Comment