Tuesday, March 1, 2016

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை !!

கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக்கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். உண்மையில் சூரிய கிரகணம், மனிதனுக்கு பேராபத்தைதான் தருகிறதா?அறிவியல் சொல்லும் விளக்கம்:
" சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது.
அதேபோல், சூரிய கிரகணம்  நிகழ்ந்து சரியாக இரு வாரங்களில் சந்திர கிரகணம் நிகழும். பொதுவாக ஓர் ஆண்டில் 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டில் 4 பகுதி சூரியகிரகணங்களும் ,2 முழு சந்திர கிரகணங்களும் ஏறபட்டுள்ளன. கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும், எக்லிப்ஸ் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. சூரிய கிரகணம் என்பது, அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் உண்டாகிறது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும். சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைக்கப்பட்டு கொஞ்ச நேரம் காணாமல் போகிறது. கடந்த ஆண்டில், ஏற்பட்ட 6 கிரகணங்களில் , 4 பகுதி சூரிய கிரகணம். மீதி 2 சந்திர கிரகணம். ஆனால் இதே போல் 2009 ஆண்டும், 6 கிரகணங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை 2011 ம் ஆண்டு கிரகணங்களின் உல்டாதான். அவற்றில் 4 சந்திர கிரகணம். மீதி இரண்டும் சூரிய கிரகணங்கள். இந்த ஆண்டு ஏற்பட்டது போலவே, 21 ம் நூற்றாண்டில் 6 முறை இதே போல 4:2 விகிதத்தில் ( 4 சந்திர கிரகணம் இரண்டு சூரிய கிரகணங்கள்) ஏற்பட உள்ளன. அவை 2011 , 2029 , 2065 , 2076 & 2094 வருடங்களில் உண்டாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது. .இப்படிப்பட்ட நிகழ்வில்எப்போதும் ஜனவரியில் முதல் கிரகணமும், டிசம்பரில் கடைசி கிரகணமும் உண்டாகும்.கிரகணம் தொடர்பாக இஸ்லாம் சொல்வதென்ன?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம்ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபியவர்களின் புதல்வர்) இப்ராஹீம்(ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான்கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத் தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்த வேலை மக்களின் மூட நம்பிக்கையை நபியவர்கள் துடைந்தெரிந்தார்கள்.

இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின்இந்த விளக்கம் சான்றாக அமைந்துள்ளது. கிரகணம் பற்றி மக்கள் தங்கள்அறியாமையை வெளிப்படுத்தும் போது, நபி (ஸல்) அவர்கள் அந்தஅறியாமை இருளை நீக்கி, கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும்நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு என்பதை உணர்த்துகின்றார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கும் இந்தச்சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒருசாதாரண மனிதராக இருந்து, மக்கள் இவ்வாறு பேசியிருந்தால் அதைத்தமது தூதுத்துவத்திற்கு ஆதாரமாக ஆக்கியிருப்பார்கள். நபியின் மகன்இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது என்று மக்களேபேசிக் கொள்ளும் போது அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கைநிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று வாதிப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லாவாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும்நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியானதகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

கிரகணம் ஏற்படுவதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அதுஇறைவனின் மாபெரும் அத்தாட்சிகளான சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவர்கள்இறைத் தூதர் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

ஏகனின் எச்சரிக்கை

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள்வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச்சென்றார்கள்.

நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்துதொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக்கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும்இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும்ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின்மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள்கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும்அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம்செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒருகுட்டி கியாமத் நாளாகத் தான் அமைகின்றது. கொம்புள்ள இரண்டு ஆடுகள்கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகி நிற்பதுபோல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.

வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.


அல்குர்ஆன் 55:37

சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம்எங்கும் சிவப்பு வண்ணம் தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றது. இதுகியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதுபோன்றுள்ளது.

கங்கண சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில்நெருப்பு பற்றி எரிவது போல் தோன்றுகின்றது. ஏதோ மறு நொடியில்மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம்நம்மை ஆட்கொள்கின்றது.

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும்இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுறமாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 28:71

இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்று, பூமியில்விழும் நிழலைத் தொடரச் செய்து விட்டால் அவனைத் தவிர வேறு யார்வெளிச்சத்தைத் தர முடியும்?

கிரகணமும், வணக்கமும்!!

அறிவியலாளர்கள் கண் கொள்ளாக் காட்சி என்று கேமராக்களையும்வீடியோக்களையும் தூக்கிக் கொண்டு சூரிய, சந்திர கிரகணங்களைப் படம்பிடிக்க பேயாய் அலைகின்றனர். சிலர் விமானத்தில் பயணம் செய்துவிமானத்தில் இருந்தவாறே கிரகணத்தை கேமராக்களுக்குள்விழுங்குகின்றனர்.

இப்படி ஒரு சாரார் ஆய்வில் இறங்கியிருக்கும் போது மற்றொரு சாரார்சூரிய, சந்திர கிரகணங்களை ஏதோ ஒரு வான வேடிக்கை போல் உல்லாசப்பார்வையில் இறங்கி விடுகின்றனர். மூன்றாவது சாரார் ஒரு விதமானபயத்திலும் மூட நம்பிக்கையிலும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மறுமையை நினைவுபடுத்துகின்ற மாபெரும் நிகழ்வுகள்என்பதை மனித குலத்தின் மனதில் பதிய வைத்து அந்நாளில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடச் சொல்கின்றது.

அப்போது செய்ய வேண்டிய வணக்கங்கள் என்னென்ன என்றபட்டியலையும் விரிவாகத் தருகின்றது.

விரைந்து பள்ளிக்கு வருதல்.


நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டேபள்வாசலுக்குள் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 1040

தொழுகை


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனேஅவர்கள் பள்வாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப்பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர்(தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்டநேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்)என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்டநேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதை விடக் குறைந்தநேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்தருகூஉ முதல் ருகூஉவை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது.பின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’என்று கூறி (நிமிர்ந்து) விட்டு, சஜ்தாச் செய்தார்கள்.

பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போதுநான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)கல் நான்கு ருகூஉகள்செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன்(கிரகணம் விலகி) வெச்சம் வந்து விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள்எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணங்களைக் கூறிப்போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள், (சூரியன், சந்திரன்)இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள்ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம்செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1046


இறைவனை நினைவு கூர்தல், பிரார்த்தனை, பாவமன்னிப்பு.
அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும்அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவேசெய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனைநினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம்பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

கிரகணமும், தர்மமும்.

நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்), சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்;தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1044

கிரகணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தர்மத்தை வலியுறுத்துவதால்அந்நாளில் நாம் தர்மம் செய்து நபிவழியை செயல்படுத்துவோமாக!மறுமையில் நன்மையைப் பெறுவோமாக!

பெண்களும், கிரகணமும்.

நான் (தொழுதுகொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றையதினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும்நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகல் அதிகமாகப்பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ஏன்?அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், பெண்கன் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போதுபெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?” என வினவப்பட்டது.அதற்கு கணவன்மார்களை நிராகரிக்கிறார்கள். (கணவன் செய்த)உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்குநீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள்கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தின் போதும், கிரகண தினத்தின்போதும், பெண்களை நரகத்தில் அதிகமதிகம் பார்த்ததாகவும் அதற்குரியகாரணத்தையும் சொல்கிறார்கள். பெண்கள் இந்தக் காரணத்தைக் களைந்துதங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ள முன்வர வேண்டும். 

இவ்வாறாக, கிரகணம் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளைத் தவிர்ந்து,மறுமை நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நமது வணக்க வழிபாடுகளைஅமைத்துக் கொள்வோமாக!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment