Monday 16 May 2016

11 ஆவணங்களை காட்டி, வாக்களிக்கலாம் (வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்)

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், அதற்கு மாற்றாக 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு முன்னர் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை காண்பிக்க வேண்டும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

* ஓட்டுநர் உரிமம்.

* மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.

* வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்(புகைப்படத்துன்)

* நிரந்தர கணக்கு எண் அட்டை(பான்கார்டு)

* தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை

* தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு

* நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

No comments:

Post a Comment