Thursday 12 May 2016

2016 சட்டசபை தேர்தலில் யார் ஆளும் கட்சி !!


Tamilnadu Assembly Election 2016 Schedule
திமுக கூட்டணி - திமுக 24% காங் 4% மு.லீ. - 3% - (பு.த பெ.ம.க சிவகாமியின் கட்சி ) - 1% இதர ஓட்டுகள் - 3% மொத்தம் 35%, அதிமுக 30% இதர ஓட்டுக்கள் - 3% மொத்தம் 33%. ( கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 44% என்பது எப்படி கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த 44% என்பது அதிமுகவின் ஒரிஜினல் வாக்கு சதவீதம் கிடையாது) . கே.நல.கூ = தேமுதிக 5%, வைகோ 3%, வி.சி 2%, கம்.யூ - 1.5%, தா.ம.க - 1% இதர ஓட்டுகள் - 4.5% , மொத்தம் 17%, பா.ம.க - 5%, பா.ஜ.க - 3%, இதர ஜாதி கட்சிகள், சுயேட்சைகள் = 7% ஆக மொத்தம் 35 33 17 5 3 7 = 100%. . இதர ஓட்டுக்கள் என்பது, நடுநிலை புதிய வாக்காளர்கள் சுமார் 10-12% ( திமுகவை விட அதிமுகவுக்கு 4 - 5% அதிகம் ஒட்டு உண்டு. அது போல, தே. நல. கூ -க்கு நடுநிலை புதிய வாக்காளர்கள் = 4-5% ஒட்டு கிடைக்கும். இது தான் இப்போதைய நிலவரம். இதுதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




இதில் ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்கள் 100% ஒட்டு போடுவார்கள் என்று நினைக்க முடியாது. அதிக பட்சம் 80% ஒட்டு போடுவார்கள் என்று எடுத்து கொண்டாலும் 20% வாக்காளர்கள் ஒட்டு போடமாட்டார்கள். ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை எந்த கட்சியில் அதிகமோ, அவர்களால் அந்த கட்சிக்கு பாதகம் ஏற்படலாம். அதுபோல இதர ஜாதிகட்சிகள் சுயேட்சைகளின் 7% சதவீத வாக்குகள் திமுக அல்லது அதிமுக அல்லது கே.நல.கூ-க்கு சாதகமாக விழுந்தால், அதன்படி வெற்றியும் அந்தந்த கட்சிகளுக்கு சாதகமாக மாறலாம். இந்த தேர்தலில் விநோதமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ, பாமக., பாஜக என்று ஐந்து முனை போட்டி இருந்தாலும், முக்கியமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ-க்கு தான் மும்முனை போட்டி. 30% தொகுதிகளில் திமுக - அதிமுகவும், 30% தொகுதிகளில், அதிமுகவும் - கே.நல.கூ-க்கும், 20% தொகுதிகளில் திமுக - கே.நல.கூ தான் நேரடி போட்டி நடக்கும். 10% தொகுதிகளில் பா.ம.க - மற்றகட்சிகளுக்கு கடும் போட்டி இருக்கும். இந்த 10% தொகுதிகளில், கே.நல.கூட்டணியின் வாக்கு வங்கி, பாமகவால் நிச்சயம் பாதிக்க படும். அதுபோல 10% இடங்களில் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நடை பெறும். எப்படி பார்த்தாலும், திமுக, அதிமுகவுக்கு இடையில் 2-4% வாக்கு வித்தியாசம் இருக்கும். கே.நல.கூ-க்கும் - திமுக அதிமுக இடையில் 10-12% வாக்கு வித்தியாசம் இருக்கும். திமுகவினர் 100% ஓட்டு போட்டால், திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக 100% வாக்கு அளித்தால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி இருக்கும். கே.நல.கூ - இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகளை பிரிக்குமே தவிர, வெற்றி பெற மிகவும் கஷ்டம். மேலும், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்தால், யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று நடுநிலை புதிய வாக்காளர்களுக்கு நல்ல அறிவு இருப்பதால், அவர்களின் வாக்குகள் மிகவும் முக்கிய இடத்தில இருக்கிறது. எப்படி பார்த்தாலும் திமுக ஆட்சியை பிடிக்கவும், அதிமுக ஆட்சியை இழக்கவும் விஷயங்கள் நடை பெறலாம். தேர்தல் கமிஷன் உதவியோடு, அதிமுக, கே.நல.கூ- மற்றும், பிஜேபி, பாமகவின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கினால், இதில் மாற்றம் நடைபெறலாம். 

ஒரு அருமையான சந்தர்ப்பம், ஒரு அழகான கூட்டணி, நல்ல திறமையான அனுபவம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்கள், மக்கள் சக்தி பெற்ற விஜயகாந்த், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கவர ஒரு சிறுத்தை, காங்கிரஸ் பேரியிக்கத்தின் ஒரு பகுதி ஆதரவை பெற்ற வாசன், தொடர்ந்து நான்கு முறை ராஜ்ய சபாவில் உறுப்பினாராக இருந்த அனுபவம், அனைத்தையும் பயன்படுத்தி ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து சிறந்த பிரச்சாரம் செய்து, மேடை நாகரிகத்தை அனைவரும் ஒரு சேர பின்பற்றி ஒரு நல்ல பிம்பத்தை மக்கள் மத்தியில் இவர்கள் உருவாக்கி இருந்தால், அது ஒரு சிறந்த கூட்டணியாக

மக்களே உங்களுக்கு கடைசி சந்தர்ப்பம் நழுவ விட்டு விடாதீர்கள்....திமுக அதிமுக ஆகிய ரெண்டு கட்சிகளையும் ஒழிக்க கடைசி சந்தர்ப்பம்....இந்த தேர்தலில் மூன்றாவது கூட்டணியை வெற்றி பெற வைக்க வில்லை என்றால் அப்புறம் கடைசி வரை அந்த இரண்டு திருட்டு கட்சிகளிடம் நீங்கள் அடிமையாக இருக்க வேண்டி ஆகிவிடும்..மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியை இந்த ஒருமுறை ஆதரவு கொடுங்கள் .. மாற்றத்தை விரும்புவோம் நாம் மாற்றத்தை கொண்டு வருவோம் , இரண்டு ஊழல் இயக்கங்களை அறவே அகற்றுவோம் புதிய அணி ,கூட்டணி ஆட்சியயை, நல்லவர்கள் உள்ள ஆட்சியை கொண்டுவருவோம் , தேமுதிக - மக்கள் நல கூட்டணி - தாமாகா கூட்டணிக்கு வாக்களிப்போம்....நல்லாட்சியை கொண்டு வருவோம் .இதுதான் நிதர்சன உண்மை. மே 19 இதை நிருபிக்கும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment