Sunday 1 May 2016

தேர்தல் அறிக்கை ஒரு கட்டு காகித குவியல்!! எனது ஆதங்க பார்வை...

சமூக அக்கறை கொண்ட அன்பு வாசகர்களே!!
எனது ஆதங்கத்தை பதிவு செய்ய ஆசை படுகிறேன்.ஒரு நாட்டின் பொருளாதாரம் முனேற்றம் அடைய வேண்டும் என்றால் வேலை முக்கியம். தமிழர்கள் உலகின் எத்தனயோ நாடுகளில் தங்களின் உழைப்பை கொடுத்து உள்ளார்கள். அனால் பிறந்த மண்ணில் அது போன்றதொரு வாய்ப்பு இல்லை. நம் நாட்டின் அரசியல் சட்டம் சரியா? மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை சரியா? யார் நம்மை ஆள்வது? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் படிக்கிறோம், வேலைக்கு செல்கிறோம் ஆனால் எவ்வளவு கஷ்ட படுகிறோம். அரசியலில் முறையாக படித்தவர் உண்டா? இல்லை அரசியலுக்கு தான் கல்வி தகுதி உண்டா? யார் வேண்டுமானாலும் நம்மளை ஆட்சி செய்யலாம். இதை பதிவு செய்யும் போது கூட நான் உணர்ச்சி வச பட்டவனாய் இருக்கிறேன். நமக்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்காதா? நாம் ஆதங்க பட்டு பேசுவதை யாரவது செவி கொடுத்து கேட்பார்களா? நாம் மட்டும் ஏன் இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.
ஒரு விஷயத்த எல்லாரும் புரிஞ்சிக்கணும்.....

1)3.80 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போறோம்னு சொல்லி இருக்காங்க .... அதை எப்படி பண்ண போறங்கனு சொல்லவே இல்லை... காரணம் அவங்க கட்சி காரங்கள வச்சி பணம் வாங்கிட்டு வேலை கொடுப்பாங்க.... திறமைய மதிச்சு ஒழுங்கா எக்ஸாம் வச்சு வேலை கொடுக்கணும்.....

2) எந்த ஒரு அரசு அலுவலகங்களையும் பொது மக்களால் காசு கொடுக்காம வேல வாங்க முடியல... அதை ஒழிக்க எந்த திட்டமும் இந்த தேர்தல் அறிக்கைல் இல்லவே இல்லை..... எப்படியாவது ஆட்சியை பிடிக்கணும்...

4) விவசாய கடன் ரத்து... அதை அவங்கள வாங்குற அளவுக்கு கொண்டு சென்றதே நீங்கதான்...

5) எல்லா திட்டங்களுக்கும் நிறைவேற்ற ஆகுற செலவுக்கு .... மொத்த காசையும் ஊழல் பண்ணாம மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்து முன்னெற்ற பாதைக்கு கொண்டுசென்றாலே போதும்...

6) வெறும் அறிக்கை வடிவத்துல தான் திட்டம் இருக்கும் ... சட்டமும் புத்தக வடிவில் தான் இருக்கும்... இது இரண்டும் மக்களுக்கு எப்போ செயல் வடிவத்துல வருதோ அன்றைக்குத்தான் மக்களுக்கு நல்ல காலம் .

அதற்கு வழி ஊழல் இல்லாத ஆட்சி . தன் கடமையை சரியாய் செய்யும் அரசு அதிகாரிகள்.... நேர்மையான மக்கள் ..... இது மூன்றும் என்றைக்கு கிடைக்குதோ அன்றைக்குத்தான் நம் நாடு முன்னேறும் .. என்னுடைய  ஆதங்க 

 அறிக்கை ஒரு கட்டு காகித குவியல்!!

இதனால் தமிழகத்துக்கோ, தமிழ் மக்களுக்கோ ஒரு பயனும் இருக்காது என்பதை 100% ஆணித்தரமாக சொல்லமுடியும்.மக்களை மீண்டும் மீண்டும் அடிமை ஆக்குவதே இந்த அறிக்கை ,

1,இலவச மின்சாரம் யாருக்கு போய் சேரும் 1,2,ஏக்கர் உள்ள விவசாயிகள் பயிர் கடன்கள் எப்புட்டு ,எல்லாம் விவசாயி பயிர் கடன்கள் வாங்கியா பெரிய பெரிய முதலாளிக்கு தான் போய் சேரும் இந்த கடன் தள்ளுபடிம் இலவச மின்சாரமும் ,,3ஜி / 4ஜி யாருக்கு வேணும் ,

3,அரசு வேலை செயும் மகளிருக்கு மட்டும் தான் இந்த 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும், அப்போறம் பிரைவேட்டுல் வேலை செயும் மகளிருக்கு என்ன செய்யும் இந்த அரசு ,அதை பத்தி ஏதேனும் உண்டா ?

முதலில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமா ? அரசு வேலை வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயம் 20,30 வருடம் என்று சட்டம் போட முடிமா ? அரசு வேலை பார்கும் நபர் லசம் வாங்கினால் எந்த வித அறிவுப்பு இல்லாமல் பதவி பறிக்க முடிஉமா ? அரசு வேலை பார்கும் நபர் யாரா இருந்தாலும் வருமானடிஎகு மேல் சொத்து சேர்ததால் ,அந்த வருமானடிஎகு மேல் உள்ள சொத்தை மட்டும் பறிமுதல் சட்டம் போட முடிஉமா ? இதை நீ தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இரூந்தால் திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் ஏதுவும் மக்களுக்கு தேவை இல்லை ,மக்களே கொஞ்சம் சித்திங்கல் ,இன்னும் அடிமையா இருக்க போறிங்களா ? யாரும் விலைவாசியை குறைப்போம் ,இனிமேல் எந்த விலைவாசியைம் கூடது என்று யாரும் சொல்ல மாட்டான் . அட்லிஸ்ட் இலவசம் தேவை இல்லை என்று மக்கள் கூற முன் வர வேண்டும் ,இலவசம் என்றால் மக்கள் அவனுக்கு ஓட்டு போட கூடாது.
 தேர்தல் அறிக்கை யாருக்கு லாபம்?

நம் அரசியலே மாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு நமக்கு எத்தனை சுற்றுகள்- கல்வி தகுதி தேவை, ஆங்கிலம் தேவை, ஆளுமை திறன் தேவை, கணினி அறிவு தேவை- வருடத்திற்கு ஒரு முறை திறமை பரிசோதிக்க பட்டு சம்பள உயர்வு, சரியாக வேலை செய்யவில்லை என்றால் பணி நீக்கம். அரசியலில் இப்படி எதாவது ஒன்று உண்டா? என்ன தகுதி உள்ளது இந்த அரசியல் வாதிகளிடம்? ஜெயித்து விட்டால் 5- ஆண்டு நாம் கேள்வி கேட்க முடியுமா? இதுபோல பல கேள்விகள் என்னுள் எழுகின்றன நண்பர்களே என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். நான் ஒருவன் மட்டும் முயன்றால் முடியாது.


மக்களுக்கு உண்மையாக இருப்போம், ஆட்டய போடுவதற்கும், ஓட்டு வாங்கவதற்கும் திட்டங்கள் கொண்டு வரமாட்டோம், விவசாயத்தை முக்கியமாக கருதுவோம், ரியல் எஸ்டேட்டை கட்டு படுத்துவோம்,மது ஆலையை உடனடியாக மூடி மது விலக்குக்கு முன்னோடியாக இருப்போம், இயற்கை வளங்களை சுரண்ட மாட்டோம், வட்ட, மாவட்டங்களின் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம், லஞ்சம் கேக்க மாட்டோம், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வோம்ன்னு தேர்தல் அறிக்கை கொண்டு வாங்க, நாங்க ஓட்டு போடுறோம்.

நம்மை ஆளுவதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. சிந்திப்போம் நண்பர்களே...


ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment