Friday 1 July 2016

சென்னை பெண் பொறியாளர் சுவாதி கொலை பற்றிய கருத்தாய்வு !! ஒரு விழிப்புணர்வு பார்வை...



சுவாதி கொலையில், அரசையோ, காவல் துறையையோ, அந்த நேரத்தில் அங்கே நடைமேடையில் இருந்த பொதுமக்களையோ குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. ரயில் நிலையத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அல்லது அந்த நேரத்தில் ரயில்வே காவலர்கள் நடைமேடையில் இருந்திருந்தாலும்கூட இந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியாது. இது உணர்ச்சிவேகத்தால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் நேர்ந்த மரணம் அல்ல அது. திட்டமிட்டு, கொலைநோக்குடன் வந்தவன் நடத்திய செயல்...இந்த இடம் இல்லையென்றால் வேறொரு இடத்தில் கண்டிப்பாக அவன் சுவாதியை கொன்றுஇருப்பான் .




சுவாதி பேரை வச்சு வட்ட செயலாளர் வண்டு முருகனில் இருந்து , காலாவதி கருணாநிதி வரை கருத்து எழுதியாச்சு, குறி யாரு மேல ,காவல்துறை மேல் ,காவல்துறை சரியாக செயல் படவில்லை, தூங்குகிறது, மக்களை பாதுகாக்காமல் அரசியல் வாதிகளை பாதுகாக்கிறது ஒரு தவறு நடந்தவுடன் அருகில் இருப்பவர்கள் அதை காவல் துறைக்கு தெரிவித்தால் தான் உண்டு. இல்லை என்றால் அந்த தவறு காவல் துறைக்கு தெரியவே ,தெரியாது என்பது கூடவா மக்களுக்கு புரிய வில்லை? ஒரு விஷயம் நடந்து முடிந்து விட்டது , அடுத்து காவல்துறை விசாரணை , விசாரணை என்பது அடுத்தகட்டமாக குற்றவாளியை பிடித்து ,குற்றத்தை நீதியின் முன்பு நிரூபித்து சரியான தண்டனை பெற்று கொடுப்பது. அதற்கு ,விரிவான ,நுணுக்கமானா விசாரணை தேவை, இன்ச் பை இன்ச் என்று சொல்ல்வார்களே அது போல் விசாரணை தேவை, இல்லை என்றால் குற்றவாளி ,அடுத்த நாளே வெளியே வந்து நுங்கம்பாக்கத்தில் கத்தியோடு நிற்பான், அடுத்த கொலைக்கு தயாராக. ஆகவே சுவாதியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து விட்டு அவரவர் வேலையை பாருங்கள். காவல்துறை அதன் வேலையை செய்யட்டும்.இந்த காலத்து இளைஞர்கள், அறிவிலிகளாக, தொடை நடுங்கிகளாக, கோழையாக இருக்க என்ன காரணம்? ஒரு நிர்பயாவுக்கு இந்தியாவே கொந்தளித்ததே, ஆனால், தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ, பச்சிளம் பெண் பிஞ்சுகள் முதல், பாட்டிகள் வரை கற்பழித்து கொலை செய்வதை தட்டி கேட்க, தமிழ்நாட்டில் எவனுக்கும் தைரியம் இல்லையா? வெறும் பேடி பயல்கள் தான் தமிழனா? கோடீஸ்வர நடிகனுக்கு கொடிபிடிக்கவும், மேனா மினுக்கி அரசியல் செய்யும் ஜெயாவின் கார் டயரை, ஊருக்காவுக்கு பதில் தொட்டு நக்கும், கோழைகள் தான் தமிழனா? சொந்த பெண்ணுக்கு அநீதி நடந்தால் கூட கண்டுகொள்ளாமல், தட்டி கேட்காமல், போகும், மடதமிழனே, நீயெல்லாம் மனித பிறவிதா? மானம் கெட்ட மாதர் சங்கம்கள் தற்கொலை செய்து விட்டார்களா? காம்ரேடுகள் காணாமல் போய் விட்டார்களா? இந்த கால இளைஞர்கள் இளைஞிகள் போக்கு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது. யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாங்க, அவங்களாவும் கத்துக்க மாட்டேங்கிறாங்க. நிஜ மனிதர்களுடன் உறவாடுவதை விட மாய உலகில் சஞ்சரிப்பது ஒரு போதை போலவே ஆகி விட்டது அவர்களுக்கு. அதற்கு வடிகாலாக அமைவதுதான் பேஸ் புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்ட்டா கிராம், ஸ்நேப் சாட், போன்ற தளங்கள். நிஜ மனிதர்கள் பிரென்ட் நிறைய இருப்பதை விட மாய உலகில் இருக்கும் பேஸ் புக் பிரென்ட் ரொம்ப பிடிக்குது இவங்களுக்கு. அதனால் நிஜ ப்ரெண்டுகள் உருவாக்குவதற்கு முயற்சிக்காமல் ஒரே ஒரு நிமிடத்தில் பிரெண்டு கிடைக்கும் இடமான பேஸ் புக்குக்கு ஓடுகிறார்கள். ஒரே ஒரு பட்டன் க்ளிக் செஞ்சா போதும், உடனே ஒரு பிரெண்டு கிடைக்கிறான். அவன் நல்லவனா கெட்டவனான்னு எல்லாம் ஒன்னும் தெரியாது, அதை பற்றி கவலையுமில்லை. நண்பேன்டான்னு நெஞ்சை நிமித்தி சொல்ற அளவுக்கு ஒரு பிரெண்டு நிஜமா கிடைக்கிறது எவ்வளவு சந்தோசம்ன்னு அவங்களுக்கு தெரியல. அந்த மாறி ஒரு பிரென்ட் உருவாகுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தயவு செய்து மாய உலகில் சஞ்சாரிக்காதீர்கள் இளைஞர்களே. வெளியே வாருங்கள்.

நமது ஒட்டு மொத்த சமுதாய பிரதிபலிப்பு தான் இந்த சம்பவம். இந்த கால பெண் பிள்ளைகள் கல்யாணத்தில் நாட்டம் இல்லாமல் தள்ளிப்போடுகிறார்கள். அதில் பல பிரச்சனை எழுகிறது.பிள்ளைகளை ஒரு நல்ல இடத்தால் கட்டிக்கொடுக்கும் வரை பெத்தவன் பாடு சொல்லி மாளாது. படித்து முடித்தவுடன் கல்யாணம் செய்து கொடுப்பது பெற்றோருக்கு நல்லது.ஆணோ பெண்ணோ, நண்பர் வட்டத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆண்கள் கண்யமான முறையில் காதலை வெளிப்படுத்துங்கள். பெண்கள் மறுப்பு தெரிவித்தால் ஏற்றுக்கொண்டு விலகிவிடுங்கள். மேலும் ஆண்-பெண் நட்பு ஒரு எல்லைக்குள் தான் இருக்க வேண்டும்இப்படி ஒரு கொடூர செயலை செய்வதற்கு உள்ள காரணங்களில் முக்கியமானது அரசு/காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையே புரிதலோ,நம்பிக்கையோ ஏற்படாமல் போனது தான்.முன்பெல்லாம் காவல்துறை உங்கள் நண்பன் என்று அரசு தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு ஓரளவு பயனும் கிடைத்தது.ஆனால் இன்று இடைவெளி/அவநம்பிக்கை தான் பெருகிக்கொண்டு போகிறது.காவல் துறை அணுக முடியாததாக ஆகி விட்டது.இதற்கு காரணம் காவல் துறை அரசின் ஏவல்/எடுபிடி துறையாகி விட்டது தான். யாரை நம்பி மக்கள் கண் முன்னே நடக்கும் தவறுகளை தட்டி கேட்பார்கள். ஆனாலும் இப்போது நடந்துள்ள இரு நேரடி/மறைமுக கொலைகளால் மக்கள் தங்கள் தயக்கத்தை மீறி செயல் பட முனைவார்கள் என்று நம்பலாம்.மக்கள் அனைவரும் துணிச்சல் உள்ளவர்களாக இருக்க முடியாது.அதே சமயம் துணிச்சல் உள்ளவர்கள் நேரடியாக இப்படிப்பட்ட குற்றங்களை தட்டி கேட்க முயலும் போது பக்க பலமாக இருந்தாலே போதும்.நிச்சயம் பலன் கிடைக்கும்.நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்களாக இருந்தாலும் இணைந்து செயல் பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மக்கள் நிச்சயம் உணர்வார்கள்.தனியார் துப்பறியும் நிறுவனங்கள் இது போன்ற சம்பவங்களை விசாரித்து உண்மை நிலை கொண்டு அரசியல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு பொது நோக்கத்திற்காக செயல்பட வாய்ப்பளித்தால் குற்றவாளிகள் விவரங்கள் அதி விரைவாக புலனாய்வு செய்ய, செயல்படுத்த முடியும். காவல் துறைக்கும் பக்க பலமாக இருக்க வாய்ப்புண்டு.வாதி பிரதிவாதி இருவருக்கும் உடனடியாக நியாயம் கிடைக்க செய்வதன் மூலம் மன உளைச்சலால் வரும் துன்பங்களையும் போக்கலாம்.தனியார் துப்பறியும் நிறுவனங்களிலும் ஏராளமான புலனாய்வு வசதிகளும் உள்ளன.

கூட்டிக் கழித்துப் பார்க்கும் பொழுது சில உண்மைகள் வெளிவரத்தான் செய்யும் இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் முதற்காரணம். பாலின ஈர்ப்புதான். கை நிறைய காசு - வித விதமாக பொழுது போக்கும் வலைத்தளங்கள். இடம் சொல்லி காத்திருக்கவேண்டாம் - கையடக்க தொடர்புவழியாக ' சூடாக ஒரு தோசை ' என்று குரல் கொடுப்பதுபோல், பேசியவுடன் வந்து சேர்ந்துகொள்ள வசதி. நாகரீகம் கருதி கட்டுப்பாடில்லாத வாழ்க்கை.' எனக்கு நீ உனக்குநான் பொருத்தமான ஜோடிதான்' என்று ஆரம்பித்து கொட்டி முழங்கி, பொருத்தம் இல்லை, ஆகையால் பிரிவோம் சந்திப்போம் என்று விடைபெறுதல். இதில் பிரிய முடியாதவர்கள் சில வர்ணஜாலங்களை காட்டி பணியவைத்தல் என்பது தொடர் கதையாகிவிடுகிறது. இங்கு தோழி சொல்வதுபோல் ஆறுலட்சம் வரை ஏமாற்றியவன் உண்மையான கொலையாளியாக இருந்தால் நல்லது. ஒருவேளை, அவரை ஏமாற்றியவன கொலையாளியாக இல்லாமல் இருந்தால் போலீஸ் வறுத்தெடுப்பில் அவன் படும் அவதியில் அந்த ஆறு லட்சம் கரைந்து போகட்டும் என்ற நினைப்பிலா என்றும் தெரியவில்லை. இவர் ஆறுலட்சம் எதற்காக கொடுத்தார்? ஒரே நாளிலா? அல்லது சிறுக சிறுகவா? அது பற்றி எதுவும் சொல்லவில்லை. உழைப்பின் அருமை தெரியவில்லை பணத்தின் அருமை தெரியவில்லை. இருந்தாலும், இவர் தைரியமாக ஒப்புக்கொண்டதற்கு ஒரு சபாஷ். (அந்த பெண்ணின் தற்கொலையில் பிடிபட்டவன் தறி தொழிலாளி என்கிறார்கள். தறி தொழிலாளி படித்தவனா? பேஸ் புக்கை கைகயாளத் தெரிந்தவனா? மாபிங் செய்யுமளவிற்கு திறமை உள்ளவனா? அதுபற்றி அறிந்தவனா? அவன் சார்பாக வேறொருவர் மாபிங் செய்திருந்தால், முதலில் அவனை அல்லவோ தட்டி அழைத்துவந்து விசாரணை செய்திருக்கவேண்டும்? அல்லது பிடிபட்டவன், சில ஊழல் செய்பவர்களுக்கு பினாமியாக செயல் படுபவர்போல் செயல் பட்டு விலைக்கு வாங்கப் பட்டவனா? என்று கேள்விகள் எல்லாம் இருக்கிறதே. நானாக இருந்தால், அவனை முதலில் ஏதாவது ஒரு மிருகத்தின் படத்தை கொடுத்து மாபிங் செய்யச் சொல்வேன். செய்யத் தெரிந்தால்தான் அடுத்தகட்ட விசாரணை. ஆனால் அவன் தப்பிவிடாமல் உள்ளேயே பாதுக்காப்பாக இருக்கச் செய்து மேல் விசாரணை செய்வேன். தறித்தொழிலாளியின் மாபிங் ஆச்சரியமான அணுகுமுறை. ) அந்த தோழி சொன்னதுபோல், இந்த பெண்ணின் விஷயத்திலும் ஓட்டைகள் இருந்தால், அதை பூசிமெழுகாமல் ஆழ்ந்து வெளிக்கொணர்ந்தால் உண்மை குற்றவாளி கிடைக்கலாம். பெண்ணைப் பெற்றவர்களின் முடிவு வேறு மாதிரியாக இருந்தால், அந்த பெற்றோர்களின் முடிவுப்படியே இருக்கட்டும். வலி நிறைந்தவர்கள் வேதனை நீங்க இறைவன் அருள் புரியட்டும். பெற்ற குழந்தைகள் ஆணோ பெண்ணோ நல்லவர்களாகவே இருந்தாலும், பிரியும் விதம் வேறுமாதிரி இருந்தால் வேதனைதான். இது எல்லோருக்குமே பொதுதான்.

 ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு. அஜ்மல் கான் .

No comments:

Post a Comment