Saturday 2 July 2016

மரங்கள் உணர்ச்சி பற்றிய ஒரு தவகல்!!

மரங்களுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களாயின்
உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்...
நம்மை விட , ஏன் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் விட அதிகமாகவே மரங்கள் உணர்வு உள்ளவை...
தனக்கு வந்த நோய் அங்கு உள்ள மற்ற மரத்துக்கு வரக் கூடாது என்று காற்றில் எச்சரிக்கை செய்யும் மரத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?
தன் பழத்தில் சுவையை கூட்டியோ அல்லது குறைத்தோ பறவைகளை கவர உக்திகளை கையாலும் மரங்கள் உண்டு என்பதை அறிவீர்களா..?
மழைக்காலம் பொய்க்க போகிறது அல்லது வரட்சி வரப் போகிறது என்று முன்னமே அறிவிக்கும் மரங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளீர்களா..?
சொற்களில் அல்லாமல் தன் ரசாயன மாற்றம் முலமாக சக மரங்களுடன் மரங்கள் வேர்களில் பேசிக்கொள்ளும்
ஒவ்வொரு வளர்ந்த மரமும் இரண்டு மனதிர்களை தன் பிராணவாயு (Oxigen) வெளியேற்றல் மூலமாக காப்பாற்றுகிறது
மரத்தின் தண்டுவடம் வைத்து சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்பதை அறியலாம்
80000 வருடங்களாக ஒரே காலனியாக வாழும் மரங்கள் அமெரிக்காவில்(Utah) உண்டு
உங்கள் வீடுகளில் மரம் வளருங்கள்...
வீட்டை மட்டும் அல்ல வீட்டின் நில மதிப்பையும் உயர்த்தும்...

No comments:

Post a Comment