Friday 30 September 2016

நவராத்திரி கொலுவின் தத்துவம் மற்றும் கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை !!

நவராத்திரி கொலுவின் தத்துவம்;  

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதென்பது ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் குட்டி திருவிழா தான். நவராத்திரி முழுவதும் வீட்டை அலங்கரித்து, மாவிலை தோரணத்தால் வீட்டை அலங்கரித்து கொலு படிகட்டுகள் அமைத்து பொம்மைகளால் அவற்றை அலங்கரிப்பதே ஒரு தனி கலைதான்.அந்த கலை எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது.கொலு என்றால் அழகு என்று பொருள்.ஒன்பது படிகள் அமைத்து கொலு வைக்க படுகிறது.இவை ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.
Image result for கொலு பொம்மைகொலு பொம்மை தத்துவம் என்ன வென்றால் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது.
*முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
*இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள் ஆகும்.
*மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.
* நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
*ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
*ஆறாம்படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் ஆகலாம் என்பது பொருளாகும்.
*ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
*எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.

கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை:  
1. கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்கும் முன் முதலில் படிகளை நன்றாக சரிபார்க்கவும்
2. கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்தவும. ( பட்டு துணிகள் வேண்டாம்)
3. கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும் .
4. கொலு பொம்மைகளை அடுக்கும் முன் படிகளை அலங்கரிக்கும் வேலைகளை முதலில் செய்துவிடவும்.
5. கொலு பொம்மைகளுக்கு நவராத்திரி நாட்களில் சாம்பிராணி புகைகளை அதிகம் காட்டவேண்டாம்.
6. கொலு பொம்மைகளில் லேசாக மண் படிந்து இருந்தால் அதை ஒரு காட்டன் துணியால் தட்டவும். ( அதன் மீது துடைத்து தேய்க்க கூடாது)
7. தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் எந்த ஒரு தின்பண்டகளையும் வைக்க கூடாது .
8. உங்கள் வீட்டு கொலுவை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் பொம்மைகளை கீழ் படியில் மட்டும் வைக்கவும்.
9. நவராத்திரி நாட்களில் கொலு வைக்கும் இடத்தில் காற்றாடிகளை பயன்படுத்த வேண்டாம்.
10. கொலு முடிந்த பிறகு இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்ளவும்.
11. உங்கள் வீட்டு கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை தயவுசெய்து எழுதிவைத்து கொள்ளவும் . அடுத்தமுறை கொலுவைக்கும்போது உங்களிடம் இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு உதவியாக இருக்கும் .
12. கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடிக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .
13. உங்கள் வீட்டு கொலுவில் மிகவும் பழைய ( வர்ணம் இல்லாத) பொம்மைகள் இருந்தால் அதனை தனியாக ஒரு பெட்டியில் கட்டி வைக்கவும் . ( புதியதாக வர்ணம் பூச ஏதுவாக இருக்கும்)
14. கொலு பொம்மைகளை கட்டிவைக்கும் போது முதலில் பொம்மைகளுக்கு பைகளை போடவும்.( polythin cover) அதன்பிறகு காகிதங்களை வைத்து பொம்மைகளை மடிக்கவும்.
15. கண்டிப்பாக பழைய துணிகளை பொம்மைகளுக்கு பயன்படுத்தகூடாது . அது பொம்மைகளின் மேல் உள்ள பளபளப்பை குறைத்துவிடும்
16. பொம்மைகளை பெட்டிகளில் அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிர்க்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.
17. பொம்மைகளை அடுக்கும்போது அடுத்து அடுத்து மேல் நோக்கி அடுக்கும்போது காகிததூள்களை (cut piece) பயன்படுத்தவும்.
18. எந்த ஆர்வத்துடம் கொலு வைகின்றோமோ அதே ஆர்வத்துடன் பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,
19. இந்துகளின் பண்டிகைகளில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி திகழ்கிறது , அப்படி கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில்தான் நம் வீட்டிற்கு அணைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது. அப்படி நாம் கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு அணைத்து அனுக்ரஹம்களும் வந்து சேர்வது நிச்சயம்.
தொகுப்பு   : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment