Wednesday 26 October 2016

தீபாவளி பிறந்த கதை !! ஒரு பார்வை..

Image result for தீபாவளிஇந்தியாவில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.அன்றைய தினம் அரசாங்க விடுமுறையும் உண்டு. இந்தியாவில் வசிக்கும் அதைவிட இந்தியர்கள் வசிக்கும் எல்லா நாடுகளிலும் இந்தப் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் தங்கள் வீடுகளில் வண்ண வண்ண விலக்குகளை ஏற்றி புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். 
தீபாவளி அன்றைக்கு காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிந்து கொள்வது, பட்டாசுகளை வெடிப்பது. பலகாரங்கள் செய்வது , வீட்டை அலங்கரிப்பது,பூஜைகள் செய்வது,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வது என பல நடைமுறைகள் இருக்கிறது. இப்படியான நடைமுறைகளுடன் எல்லாராலும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு பின்னால் எண்ணற்ற கதைகள் இருக்கிறது.
ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கு பிறகு ஏதோ ஒரு காரணம், கதை இருக்கிறது. அதை நினைவு கூறும் விதத்தில் பல விஷயங்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையின் படி சிலவற்றை மேற்கொள்கிறார்கள் அன்றைய தினத்தில் தங்கள் மனக்குறைகள் எல்லாம் நீங்கப்பெற்று மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அந்த ஒவ்வொரு கதையும் நாம் ஏன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அப்படியான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கதை 1 : இந்தியாவில் நடைப்பெற்ற,இந்தியர்கள் அதிகம் பேர் ஏற்றுக்கொள்ளும் புராணங்களில் ஒன்று ராமயணம். அதில் அயோத்தியின் அரசராக இருந்தவர் ராமர். அந்த கதையின் படி தந்தையின் உத்தரவுப்படி மனைவி சீதா மற்றும் தம்பி லட்சுமணனுடன் ராமர் 14 வருடங்கள் காட்டிற்கு செல்ல வேண்டும் அங்கு தன்னுடைய மனைவி ராவணனால் கடத்தப்படுவாள். துர்கா பூஜையன்று துர்க்கை அம்மனை வணங்கி,ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டு வருவார் ராமர். அப்படி அவர் வெற்றி வாகையை சூடி மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான அயோத்திக்கு திரும்பும் போது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள் என்ற கதை உண்டு. அதை பறைசாற்றும் விதமாகத்தான் நாம் வருடந்தோறும் தீபாவளி கொண்டாடுகிறோம் என்று சொல்வதுண்டு.

கதை 2 : இந்த கதை மஹாபாரதத்திலிருந்து சொல்லப்படுகிறது. இதில் தங்களுடைய பெரியப்பா மகன்களான கௌரவர்களால் பஞ்ச பாண்டவர்கள் சூது செய்யப்பட்டு ராஜ்ஜியத்தை இழப்பர். இதனால் மனைவி திரௌபதி மற்றும் தாய் குந்தி தேவியுடன் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வாழ்வர். அறிவித்த தண்டனையின் படி தண்டனைக் காலத்தின் கடைசி ஆண்டு அங்கியாத வாசம். அதாவது தங்களின் அடையாளத்தை மறைத்து வாழ வேண்டும். எல்லா விதிகளுடன் வெற்றிப் பெற்று அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். அவர்களை வரவேற்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது
.

கதை 3 : புராணக் காலங்களில் நரகாசுரன் என்ற அசுரன் வாழ்ந்து வந்திருக்கிறான்.அவன் மக்களையும் தேவர்களையும் எண்ணற்ற துன்பங்களை கொடுக்க மனம் பொறுக்காத கிருஷ்ணர் வதம் செய்கிறார். அப்போது இறக்கும் தருவாயில் தன்னுடைய தவறை உணர்ந்த நரகாசுரன் தான் இறந்த நாளை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அதற்கு கிருஷ்ணரும் சம்மதம் தெரிவிக்க ஆண்டாண்டு காலங்களாக நாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
கதை 4 : பார்கடலைக் கடைந்து போது அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் எண்ணற்ற பொருட்கள் கிடைத்தன. அதிலிருந்த கிடைத்தவர் தான் தேவி லட்சுமி. செல்வ வளம் அளிக்கும் இவரை தங்கள் வீடுகளுக்கு வரவேற்கவும் அவரை மகிழ்ச்சிப்படுத்தவும் தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் லட்சுமிப் பூஜை செய்வர்.

கதை 5 : துர்க்கையின் அருளால் அவரது இன்னொரு அவதாரமாக அவதரித்தவர் காளி தேவி. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவர், அசுரர்களிடமிருந்து தேவர்களையும் மக்களையும் காப்பாற்றும் பொருட்டு எண்ணற்ற அரக்கர்களை கொன்று வீழ்த்தினார். தொடர்ந்து இப்படி கொன்றதன் பலனாக தன்னுடைய சுயத்தை இழந்து தன் எதிரில் யார் வந்தாலும் அவர்களை கொன்றிடுபவராக உருவெடுத்தார். இதனால் பயந்த மற்றவர்கள் சிவனிடம் உதவி கேட்க அவர் கிளம்பிச் செல்கிறார். அவர் சாதுர்யமாக காளியை சாந்தப்படுத்துகிறார். அசுரர்களை அழித்து சந்தோஷமான வாழ்வை துவங்கியதைக் கொண்டாடும் வகையில் வருடந்தோறும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கதை 6 : கிமு 56 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான விக்ரமாதித்யன் மக்களிடையே சிறந்த அரசராக போற்றப்பட்டார். அவரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்தனர். நாளடைவில் அது ஒரு பண்டிகையாக உருவெடுத்து இன்று வரை தொடர்கிறது.

கதை 7 : ஜெயினர்களின் அரசர் வர்தமான் மஹாவீரா இருபத்தி நான்கவது அரசரும் ஜெயினர்களின் கடைசி திருத்தங்கரும் ஆவர். இவரை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதே போல அவர் பூமியில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து பின்னர் மோட்சமடைந்த நாளை நினைவு கூறும் நாள் என்றும் சொல்லப்படுகிறது. அந்நாளில் நினைவு கூர்ந்தால் தங்களுக்கு அருள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கதை 8 : சீக்கியர்களுக்கு தங்களது குருக்களின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டி அவர்களை நினைவு கூர்கிறார்கள்.இதனை மூன்றாவது குருவான அமர் தாஸ் துவக்கி வைத்தார். 1619 ஆம் ஆண்டு ஆறாவது குருவான ஹர்கோபிந்த் என்பவர் முகலாய அரசரான ஜஹாங்கிரால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இதனை நினைவு கூர்கிறார்கள் அதே போல சீக்கியர்களின் புனிதக் கோவிலான கோல்டன் டெம்பிள் 1577 ஆம் ஆண்டு கட்டத்துவங்கப்பட்டது அந்த தினத்தை நினைவு கூறும் விதமாகவும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது

கதை 9 : இந்தியா ஒரு விவசாய பூமி. விவசாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று இயற்கை சூழல் தான். எங்கள் வாழ்க்கையை வளப்படுத்த அருள் புரிய வேண்டி இயற்கையை வணங்கும் பொருட்டு ஒவ்வொரும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழி பட ஆரம்பித்தனர். நாளடைவில் அது தீபாவளிப் பண்டிகையாக உருவெடுத்தது. தீபாவளியைக் கொண்டாட எண்ணற்ற காரணங்கள் நமக்கு கிடைத்தாலும், இன்றைய சூழலில் இருக்கும் நாம் தான் அதனை எப்படி கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்க முடியும். அது மிகவும் அவசியமானதும் கூட . பண்டிகை கொண்டாட்டம் என்றாலே ஆடம்பரம் தான் முதலில் படுகிறது.இது தவறான போக்கு. ஆடம்பரத்தால் செய்யப்படும் விஷயம் என்றைக்குமே மனதில் நிற்காது. மனதிலிருந்து விரும்புங்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் தீபாவளி சிறப்பானதொரு நாளாக அமைந்திரும்
.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment