Sunday 13 November 2016

68 ஆண்டுகள் கழித்து வானில் தோன்றும் 'சூப்பர் மூன்' பற்றிய ஒரு தவகல் !!

placeholderசூப்பர் மூன் என்றால் என்ன? அது எப்படின்னு ஏதோ தோராயமா எல்லோருக்கும் ஒரு குழப்பம் இருந்து கிட்டே இருக்கும். அதை மிக எளிதாகச் சொல்லணும் என்றால்..
ஒரு பௌர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் நிலா வந்தால், நிலா 14% பெரியதாகவும், ஒளி இருப்பதாகவும் தெரியும். அதைத்தான் சூப்பர் மூன் என்கிறோம். அதிலும் நம்ம இந்த பௌர்ணமி சூப்பர் மூனுக்கு இன்னும் கொஞ்சம் விஷேசம் இருக்கு.

நம்ம நிலா இருக்கே அது பூமியைச் சுற்றிவர 27.3 நாட்கள் ஆகுது. எனவே 27.3 நாளைக்கு ஒரு முறை நிலா பூமிக்கு அருகில் வந்துபோகுது.

ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நமக்கு சந்திரன் பூமியைச் சுற்றி வர 29.5 நாட்கள் ஆவது போல தோற்றம் தெரிகிறது, 

இதனால் எல்லா பௌர்ணமி அன்றும் நிலா பூமியின் அருகில் வருவதில்லை.

இதில் இன்னும் கொஞ்சம் ஆழமா போவோம்.

நிலா பூமியை நீள் வட்டப் பாதையில் சுத்தி வருது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Apogee_%28PSF%29.png/800px-Apogee_%28PSF%29.png

இதில் 1. நிலா பூமியில் இருந்து தொலைவில் உள்ளதைக் குறிக்கிறது, இதற்கு அபோஜி என்று பேர்.

2. நிலா பூமிக்கு அருகில் இருப்பதைக் குறிக்கிறது. இதற்குப் பெரிஜி என்று பெயர்.

சராசரி அபோஜியில் நிலவின் தூரம் 405,696 km. பெரிஜியில் நிலவின் தூரம் 384,399 கி.மீ

இங்க ஏன் சராசரின்னு சொல்றோம்? காரணம் சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி இப்படியாகப்பட்ட பெருங்கோள்களின் ஈர்ப்பு விசையைப் பொருத்து இந்த அபோஜி - பெரிஜி தூரங்கள் மாறும்.

வருஷத்திற்கு ஒன்றொ அல்லது இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒன்றோ சூப்பர் மூன்கள் வந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. இந்த முறை மார்ச் 19 ஆம் தேதி வந்த சூப்பர் மூனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 356,577 கி.மீ அதாவது சராசரியை விட 30,000 கிமீ தூரம் நெருக்கம்.
சூப்பர் நிலவு :

பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பது தான் 'சூப்பர் நிலவு'. இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 'சூப்பர் நிலவு' ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.


placeholder
68 ஆண்டுகளுக்கு பிறகு :


கடந்த 1948ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் நாளை மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. அந்த சமயத்தில் நிலா எப்படி இருக்கும்? என்ற படத்தையும் நாசா வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். நாளைய சூப்பர் நிலவை பார்க்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் சூப்பர் நிலவு நிகழும். அதனை பார்த்துக்கொள்ளலாம். இதுவும் பெரியதாக தான் இருக்கும். அதனையும் பார்க்காவிட்டால், அடுத்த ஆண்டு (2017) டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment