Tuesday 24 January 2017

போராட்டத்தில் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?

Image result for காவல்துறை உங்கள் நண்பன்காவல் நிலையத்தை எரித்தது போராட்டக்காரார்கள் அல்ல என்று போலீஸே சொல்கிறது என்றால், இதன் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?



தமிழக காவல்துறை என்றும் மாறாது.எட்டு நாட்கள் நம் மாணவர்கள் காவலர்களை தனக்குள் ஒருவராக நினத்து உணவு, தண்ணீர் அனைத்தும் கொடுத்து வந்தார்கள். அவர்களை இன்று விரோதிகளை போல காவல்துறை அடித்து நொருக்குகிரது.தமிழக காவல்துறையில் நல்லவர்கலும் இல்லை, நன்றி உள்ளவர்களும் இல்லை.கேட்டால் எங்கள் கடமை இது என்பார்கள். அதே கர்நாடக கலவரம் நடந்த போது அந்த மாநில காவல்துறை அந்த மாநில மக்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்கவில்லை.அப்போதும் நம் மக்கள் மீது தான் நம் காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து கைது செய்தது. 50 ஆண்டுகள் முன்பு படிக்காத பாமரர்களைஎப்படி காவல்துறை கையாண்டதோ அப்படியே தான் இன்று படித்த அறிவு சார் சமூகத்தையும் காவல்துறை கையாளுகிறது.தமிழக காவல்துறையில் காவலர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அறிவுசார் சமூகத்தில் நாமும் வாழ்கிரோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைய காவல்துறை அதிகாரிகள் மேடைகளில் சிறப்பாக மக்களுக்கு நல்ல உபதேசம் வழங்குகிறார்கள். அதனை முதலில் அவர்களும் அவர்கள் துறையில் உள்ளவர்களும் கடைபிடிக்க வேண்டும்.மொத்தத்தில் நம் சமூகம் கற்றுள்ள,கடைபிடிக்கிற நாகரீகத்தை இன்னும் நம் காவல்துறை கற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்த தக்கது.Image result for வன்முறையில் ஈடுபடக் கூடாது

தமிழக காவல்துறையின் மிக கீழ்த்தரமான செயலை இதன் மூலம் அரியாலாம்


வீடுகளை உடைப்பது, வாகனங்களை எரிப்பது, அப்பாவி பொது மக்களை அடிப்பது.. இதையெல்லாம் யார் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? ரவுடிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று நீங்கள் சொன்னால் உடனடியாக இந்த காணொளியை பாருங்கள். சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் இந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தது சென்னை காவல்துறை. இனி பொதுமக்களுக்கு இந்த காவல்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?


1)கர்பினி பெண்ணின் சிசுவை கொலை செய்தது.

2)ஏழைகளின் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியது.

3)போராட்ட கலத்தில் பெண்ணின் ஆடையை கிழித்து அரை நிவாரணம் படுத்தியது.

4)மாணவர்கள் மீது கொலைவெரி தாக்குதல் நடத்தியது.

5)மதத்தின் பெயரால் அப்பாவி வாலிபரை எட்டுபேர் சேர்ந்து தாக்கியது.

6)சம்மந்தமே இல்லாம தெருவுல நின்ன பைக்குகலை நொருக்கியது.

7)ஏழைகளின் குடிசையில் தீ வைத்தது அதுவும் பெண் போலீஸ்.


நம்புங்க காவல்துறை உங்கள் நண்பன்.
இதையென்னம் ஏன் மனித உரிமை ஆணையம் கண்டுக்கொல்லாம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமாட்டு புலப்படுகிறது நம் மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த தமிழக அரசின்

செயலாகவே இதை நம் கருதலாம். யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஒன்று மட்டும் நங்கள் கூறுவது, இந்த மீதம் உள்ள 4 ஆண்டோடு அதிமுக வின் அராஜகம் மொத்தமாக ஒழிந்து விடும் என்பது மட்டும் தீர்க்கமாக தெரிகிறது .


# நீதிபதிகளின் கண்கள் மூடப்பட்டு உள்ளதா?...

# மனித உரிமை ஆணையம் இந்த செயலுக்கு என்ன செய்யபோகிறது?

# சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அதில் வாதாடும் வழக்குறைஞ்சர்களே வெளிச்சம் என்பார்கள் அவர்களும் இதில் மவுனம் காக்க போகிறார்களா?... 
ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.




No comments:

Post a Comment