Friday 24 February 2017

இதை படித்து விட்டு மாடுலர் கிச்சனுக்குமாறுங்க ..

Image result for Modular Kitchenமாடுலர் கிச்சன் என்ற வகை தற்போது எல்லா வீடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இப்போது புதிதாகக் கட்டப்படும் எல்லாச் சமையலறைகளும் இந்த வகையிலேயே கட்டப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ளச் சமையலறைகளையும் மாடுலர் கிச்சன்களாக மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும். பழைய வீடுகளில் இத்தகைய மாடுலர் கிச்சன்களைப் பொருத்த வேண்டுமானால் சில வழிமுறைகளை அறிந்துகொள்வது முக்கியம்.

மாடுலரில் முக்கியமான அம்சம்  குறைந்தபட்ச இடத்தில் அதிக பொருட்கள் வைக்கும் வசதி. அதற்கேற்ப டிராயர்களை வடிவமைக்க தேவை இருக்கிறது. நம் விருப்பம் அல்லது வசதிக்கு ஏற்ப ‘எல்’, ‘பேரலல்’, ‘ப’ அல்லது ‘அடுப்பு நடுவில் வரும் தீவு வடிவம்’ என்று முடிவு செய்து இருப்போம்தானே? இவற்றில் SS 304 கிரேடு ஸ்டீல் நல்லது. ஸ்லீக் உள்பட  நூற்றுக்கணக்கான பிராண்டு களில் கிடைக்கிறது.

தரம் உறுதி செய்து கொள்ளல் மிக அவசியம்.கீல்களில் பிராண்ட் பார்த்து வாங்குவது நல்லது. ‘எப்கோ’ உபயோகிப்பதாகக் கூறுகிற ‘இன்ஸ்பையர் இன்டீரியர்’ வினோத், இன்னும் பல தகவல்களையும் அளிக்கிறார். இழுவைகளில் பலவித வடிவங்கள்...முதலில் பாஸ்கட் எனப்படும் எவர்சில்வர் கூடைகள் வடிவத்துக்கு ஏற்றவாறு... பொருட்கள் வைக்கும் பகுதிஇழுவை வசதிகள் இவற்றில்... 

மூலைகளை வெறும் தட்டுமுட்டு சாமானுக்கு வைத்திருந்த காலம் போய், அங்கு அழகுக்காகச் செலவிடும் ஃபேஷன் வந்துவிட்டது! அடுத்த பக்கம் பாருங்கள்...ரோலிங் வசதி கொண்ட சிறு கதவுகள் இவை கதவுக்கான இடத்தை அடைக்காது. மேடைக்கு அருகில்கூட வைக்கலாம். இவற்றை ஈரப் பொருட்கள் கவிழ்க்கும் பகுதி, சிலிண்டர் வைக்கும் பகுதியில் பொருத்தலாம்.

இது வரை பார்த்தது சில வகைகளே. இவை தவிர நாமே தேவைக்கு ஏற்றபடி  டிசைன் செய்து கொள்ளலாம். சிலருக்கு இழுவைகள் பிடிக்காது. சிலருக்கு கூடை அமைப்புகள் பிடிக்காது.   அடுத்து  கைப்பிடிகள். இவை பெரும்பாலும் நல்ல தரமான ஸ்ெடயின் ஸ்டீல் தயாரிப்பாக இருக்க வேண்டும். SS304 தரம் மருத்துவத்துறையில் உபயோகப்படுத்துவது... எளிதில் துருப்பிடிக்காது.  இழுவைகளுக்கு குமிழ்கள் தேவைப்படும். ஆயிரக்கணக்கில் இருக்கும். பொதுவாக வளைந்து இருக்கும் சாதா கைப்பிடி என் சாய்ஸ்!

இந்தப் படத்தில் கைப்பிடியால் எப்படி மாடுலர் கிச்சனை இன்னும் அழகுப்படுத்தி இருக்கிறார்கள் என்று அறியலாம். கைப்பிடிகளில் அழகும் வேண்டும். அதே நேரம் கிழிக்காமல் நுனி கூர்ப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும்.HDF போன்ற பலகைகளில் ஸ்க்ரூக்கள் பொருத்தும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஸ்க்ரூ உள்ளே செல்லும்போது ஸ்க்ரூ வடிவத் துளையில்  சென்று அதே வடிவில் வெளியே வர வேண்டும் ஜிப்சம் போர்டு ஸ்க்ரூக்களை உபயோகப்படுத்துவதாக வினோத் கூறினார். 

அதை மெஷினில் பொருத்தும்போது மிக அழகாக உள்ளே சென்று விடும். மெஷின் வழியாகவே எடுக்க வேண்டும். இவற்றைக் கழற்றி மாட்டினால், பலகைக்கு எந்தப் பிரச்னையும்  ஏற்படாமல் இருப்பது அவசியம். சில வகை ஸ்க்ரூ மெழுகுடன்  வருகிறது. பி.வி.சி. ப்ளக்கில் இவற்றைப் பொருத்தும்போது எளிதாக கழற்றி எடுக்க வசதி.இன்ஞ்சஸ் அதாவது, கீல்களில் பொருத்தும் ஸ்க்ரூக்களும் கவனிக்க வேண்டியவை. இப்போது பிளைவுட் 18 மி.மீ. அதற்கு மேல் கீல்கள் 3 மி.மீ. இதற்குப் பொருத்தும் ஸ்க்ரூ 20 மி.மீ. வரை உள்ளே செல்வது நல்லது. 

இதனால் கழற்றிக் கொண்டு வெளியே வராது.  எஸ்.எஸ். போன்ற ஸ்க்ரூக்களில் த்ரெட் நன்றாக இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.கைப்பிடிக்கு உபயோகப்படுத்தும் போல்ட் போன்றவை மிக முக்கியம். மாடுலர் கிச்சன் நீண்ட நாளைக்கு நன்றாக உழைக்க முக்கிய காரணம் லட்சக்கணக்கில் வாங்கும் லேமினேஷனோ, விதவித கூடைகளோ இல்லை. 5 ரூபாய்க்கு வாங்கும் ஸ்க்ரூ பொருத்தும் விதம்தான். இல்லையென்றால் கதவுகள் கையோடு வரும்... இழுவைகள் காலில் விழும்!

இப்போது  முழு  வடிவமைப்புக்குச் செல்வோம். இப்போது முழு சமையலறையே ஸ்லீக், வியனட்டா குசைன், யூனிவர்சல் போன்ற பிராண்ட்களில்  ரெடிமேடாகவே கிடைக்கிறது. வாங்கி வீட்டில் வைத்தால் கிச்சன் ரெடி. நமக்கென்னவோ, டெய்லரிடம் போராடி அளவு கொடுத்து தைக்கும்  ப்ளவுஸ் போல ரெடிமேட் ப்ளவுஸ் சரி வருவதில்லையே. அடுப்பங்கரை மட்டும்  வருமா என்ன? 

அடுத்து  முழு  அளவுகளில்  எப்படி டிசைன் செய்யலாம் என்று எடுத்துக்காட்டு. முதலில் பேரலல், U, L, ஒரு பக்கம் மட்டும் மேடை, தீவு  எப்படி வருகிறது என்று தீர்மானிக்க வேண்டும். அடுத்து அடுப்பு எங்கு வைப்பது என்று. சிலர் தெற்கு பார்த்துச் சமைக்க மாட்டார்கள். எனவே, பெரியவர்கள் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அடுத்து சிம்னிக்கு பைப் வெளியே போகும் வசதி. எங்கு அடுப்பு வைத்தால் பைப் போவது பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று பார்த்து, அதற்கு ஏற்ப துளையிட்டுக் கொள்வது முக்கியம். 

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் நடுவில் சிம்னி  குழாய் போகும் இடத்தில் பீம் வந்து விட்டது. அதற்கான பெரிய துளையை போடும் ஆட்களை தேடினேன். அழகாக ஆப்பிளில் நடுவில் துளை போடும் சாதனம் போல துளை போட்டு பீம்மை  ஒரு குழவி போல கையில் கொடுத்து விட்டார்கள். இதுபோன்ற ஆட்களை தேடுவதுதான் கஷ்டம்! அடுத்து சிலிண்டர் வைக்கும் இடம். நான் பால்கனியில் வைத்துக்கொண்டு ஒரு கேஸ் பைப் நிறுவனம் மூலம் குழாய் வழியே வரச் செய்தேன். சமையலறை சிறிதாக இருப்பவர்கள் இப்படிச் செய்யலாம். சிலர் அடுப்பின் கீழேயே வைப்பார்கள். அப்போது அந்தப் பகுதியை சிலிண்டர் உள்ளே போகும் வகையில் காலியாக விட வேண்டும். 

அடுத்து சிங்... பல நவீன டிசைன்கள், கிரானைட், எவர்சில்வர் புழக்கத்தில் அதிகமாக இருக்கிறது. இதில் உள்ள குழாயில் சுடுநீர், குளிர்நீர் வர வேண்டிய வசதி வேண்டும் என்றால், டைல்ஸ் பதிக்கும் முன்பே குழாய் வேலைகளை முடிக்க வேண்டும். அடுத்து வாட்டர் ப்யூரிபயர் மாடுலர் உள்ளே வைப்பதாக இருந்தால், அந்த இடத்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கான எலெக்ட்ரிக், குழாய் பாயின்டுகள், வேண்டாத நீர் சிங்கில் வெளியேறுமா, இல்லை வேறு இடமா என்றெல்லாம் முடிவு செய்வது அவசியம். நிறைய பணம் போட்டு செய்யும் வேலை என்றாலும், நுணுக்கமாக சில விஷயங்களில் கவனம் செலுத்தாவிடில், நாம் நினைத்தது போல வராதே!

அடுத்து மேடை... கிரானைட், குவார்ட்ஸ் என்று பல வகைகளில் கிடைக்கிறது. எந்தக் கறையும் படாமல், கீறல் விழாத  தரத்தில், உடனே சுத்தம் செய்யும் படி வாங்குவது நல்லது. சிலர் கழுவி விட வசதியாக ஸ்கர்ட்டிங் போல இன்னொரு கல்லை ஒட்டுவார்கள். இது சரியாக செய்யாவிடில், கீழே விழுந்து சமையல் அறை அமைப்பை கெடுத்துவிடும். பெரும்பாலும் நுனியை பாலீஷ் செய்வதே நடக்கிறது.

மைக்ரோவேவ் அவன் வைக்கும் இடம் 


மைக்ரோவேவை அதிக உயரத்திலோ, கீழேயோ வைக்கக் கூடாது. சிலர் டால் (உயரமாக உள்ள அலமாரி) யூனிட்டின் உள்ளே வைத்து விடுவார்கள். அதற்கான மின்சார வசதி தயாராக  இருக்க வேண்டும். எனவே டைல்ஸ் பதிக்கும் முன்பே  உள் அலங்கார பொறியாளருடன் விவாதித்து வடிவமைக்க வேண்டும். 
 
இதில், தீவு அமைப்பு இருந்தாலும் அடுப்பு ஓரமாக உள்ளது. அடுப்பின் மேலே அவன் உள்ள அமைப்பு. இத்தனை உயரத்தில் அமைவது எனக்கு கடினம். அடுத்து கன்வஷன் அடுப்பா சாதா அடுப்பா என்று யோசித்துக் கொள்ள வேண்டும். டிஷ் வாஷர் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது எதிர்பக்கம் சரியான உயரத்தில் உள்ளது. ஆனால், பக்கத்தில் காலி  இடம் இல்லை. அடுப்புக்கு வலது பக்கம் பொருத்துவது சரியாக இருக்கும்.  இதில் அடுப்பு பதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றி உள்ள பசை தரமாக இருக்க வேண்டும். 

அடுப்பு, சிங் எல்லாம் வசதியான  இடங்களில் பொருத்தி விட்டு, அதற்கு ஏற்ப இழுவைகளைப் பொருத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, உயர அமைப்பில் உள்ள இழுவைகள் போன்றவற்றையும் வடிவமைக்க வேண்டும். இப்படத்தில் கன்வஷன் அடுப்பு பொருத்தப்பட்டு இருப்பதைக் கவனிக்கலாம். இந்த அமைப்புக்கு ஓர் ஓரமாக சிங் இருப்பது நல்லது. அதே நேரம் கை இடிக்காமல் இருக்க வேண்டும். படத்தில் உள்ளது ஒரு மாடலே. நமக்கு கிரைண்டர், மிக்ஸி வைக்கும் இடங்களை தீர்மானிப்பது அவசியம். அவற்றை ஷட்டருக்குள் வைக்கலாம். 


மாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொடுக்க இன்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விசாரித்து அழைத்தால், அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். இதுதான் முதல் படி. முன் பணம் கட்ட வேண்டியிருக்கும்.
நேரில் கடைக்குச் சென்று தேவையான மாடல், வண்ணம் போன்றவற்றைத் தேர்வு செய்வது அடுத்த நிலை. பொதுவாக மற்ற நிறங்களைக் காட்டிலும் பழுப்பு நிறத்தைத் தேர்வு செய்வதே நல்லது.
நிறுவனத்திலிருந்து பொறியாளர் வந்து அறையின் நீளம், அகலம் போன்றவற்றைத் துல்லியமாக அளப்பார்கள். பழைய சமையலறை, மாடுலருக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பும் செலவும் தனி.
நீங்கள் தேர்ந்தெடுத்த வரைபடத்தில் கையெழுத்து போட்டு ஒப்பு கொண்ட பின், மூன்று நான்கு வாரங்களில் மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான பேனல்கள் வரும். கோப்பைகள், தட்டுகள், அழகு வகைகள் வைப்பதற்கான கண்ணாடிகளும் இதில் அடக்கம்.
வேலைச் செய்ய வரும் நிபுணரிடம் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் ( கரண்டி, ஸ்பூன், டம்பளர், பாத்திரங்கள்) என்பதை முன்கூட்டியே ஆலோசித்துத் தெரிவித்து விட வேண்டும். சமையலறையிலேயே சிறு பூஜை அறையும் சில இல்லங்களில் இருக்கக் கூடும். அப்படி இருந்தால் சாமி படங்களை மாட்டுகிற விதத்தையும் தெரிவித்து விட வேண்டும்.
சமையல் சிலிண்டர் வெளியே தெரியாதவாறு பொருத்துவார்கள். அப்போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். துவாரம் வைத்து அமைப்பதுதான் அவர்கள் வேலை. பிறகு சிலிண்டர் குழாயை அடுப்புடன் இணைப்பது காஸ் கம்பெனியைச் சார்ந்தது.
பழைய சமையலறைகளை மாடுலர் கிச்சன்களாக மாற்றக் குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் செலவு ஆகும். அறையின் நீள அகலம் இவற்றைப் பொருத்து செலவு கூடுதல் ஆகவும் வாய்ப்பு உள்ளது.  
மாடுலர் கிச்சன் அமைக்கத் துளை போடுவது உள்ளிட்ட பணிகள் மின்சாரத்தைச் சார்ந்தது. எனவே,மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே சொல்லி விடுவதும் நல்லது.
ஐடியல் அடுப்பங்கரை என்பது அவரவர் மனதுக்குப் பொருத்தமானதே. என் மனதுக்கு எந்த சமையலறையும் அழகானதே. வீடுகள் அடிக்கடி மாறுவதால் எல்லா இடங்களிலும் பொருத்திக்கொள்ளும் மனம் வந்துவிட்டது. மனதுக்கேற்ப சமையல் இடம் அமைவது, இன்னும் மகிழ்வைக் கொடுக்கும். வாழ்த்துகள்!  

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment