Monday 28 August 2017

”ஹைபர்லூப்” என்ற புதிய போக்குவரத்து பயணம் எப்படி இருக்கும்? அதுஎவ்வாறு செயல்பட உள்ளது?

உலகப் பயணத்தை மாற்றும் ஹைபர் லூப்!அதிநவீன கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமெரிக்காவின் நாசாவுக்கே போட்டியாகத் திகழ்கிறார். அந்த அளவுக்கு உலகின் எல்லா முக்கியமான தளங்களிலும் தன் கண்டுபிடிப்பு முத்திரையை அவர் பதித்து வருகிறார் .

இவர் Tesla Automaker Company என்ற உலகின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை 2003ஆம் ஆண்டு நிறுவினார். இந்த நிறுவனத்தின் முக்கியமான லட்சியமே முழுக்க முழுக்க மின்சார கட்டுப்பாட்டில் “Auto Drive” என்று கூறப்படும் ஓட்டுநரில்லாத கார்களைத் தயாரிப்பதுதான். இந்தச் செய்தியை அறிந்த பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்தன.


டெஸ்லா மோட்டார்ஸின் “Auto Drive” கார்கள் அமெரிக்காவில் பலவிதமான பரிசோதனைக்குட்பட்டு உலகச் சந்தையில் வெளிவரத் தயாராக உள்ளன. இதற்காக அந்த நாட்டு அரசு ‘ஆட்டோ டிரைவர்’சாலைகளை அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, எலான் மஸ்க்கின் மற்றொரு கண்டுபிடிப்பான ‘ஹைபர் லூப்’ என்று கூறப்படும் அதிவேக சுரங்கப்பாதை தொழில்நுட்பத்திட்டத்தை ஆரம்பித்தார்.
‘ஹைபர் லூப்’ தொழில்நுட்பம் என்பது குழாய் போன்ற பெரிய பைப்புகளைப் பூமிக்கு அடியிலும், கடல் அடியிலும் அமைத்து அதனுள் பயணிகள் வசதியாகப் படுத்து பயணிக்கும் அளவுக்கு எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பயண தொழில்நுட்பமாகும். இதற்காக அமெரிக்க அரசிடமிருந்து அனுமதி வாங்கப்பட்டு சில தடங்களில் பரிசோதனையும் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பூமியில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லாவிதமான வாகனங்களை விடவும் அதிவேகத்தில் தகுந்த பாதுகாப்புடன் எலான் மஸ்க்கின் ‘ஹைபர் லூப்’பயண தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
இந்த ‘ஹைபர் லூப்’தொழில்நுட்பத்தை பொறியியல் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எலான் மஸ்க் ஆகஸ்ட் 26 அன்று ஒரு போட்டி ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள தனது “Space X” தொழிற்கூடத்தில் நடத்தினார். உலகில் உள்ள தலைசிறந்த 24 பல்கலைக்கழகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் ‘ஹைபர் லூப்’போட்டியில் கலந்துகொண்டனர். தனது “Space X” தொழிற்கூடத்தில் 1.5 கி.மீ தூரத்துக்கு டியூப் அமைத்து போட்டி நடத்தப்பட்டது. போட்டியின் இறுதியில் WARR டீம் என்ற முனிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ‘ஹைபர் லூப்’போட்டியில் 324 kM/h வேகத்தில் தங்களது ‘ஹைபர் லூப்’ அதிவேக வாகனத்தைச் செலுத்தி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எலான் மஸ்க் கடந்த 2013 ஆண்டு 700 கிலோமீட்டரை ஒரு மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு ஒரு ‘ஹைபர் லூப்’எந்திரத்தைத் தயாரிக்க திட்டம் வைத்திருந்தார். ஆனால், தற்போது இவரின் “Space X” எனப்படும் விண்வெளி (செவ்வாய் கிரகம்) பயணத்தில் ஆராய்ச்சி நடத்திவருவதால் ‘ஹைபர் லூப்’ தொழில்நுட்பத்தை எலான் மஸ்க் கைவிட்டார். ஆனால் அமெரிக்காவின் மூன்று முன்னணி நிறுவனங்கள் ‘ஹைபர் லூப்’பயண தொழில்நுட்பத்தைத் தயாரித்து வருகிறது. அதில் “Hyperloop One” என்ற அமெரிக்க நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment