Thursday 3 August 2017

உதாசீனத்தால் உயிரை பறிக்கும் வாதக்காய்சல் (Rheumatic fever) !!

உதாசீனத்தால் உயிரை பறிக்கும் தொண்டை அழற்ச்சி.

Image result for வாதக்காய்ச்சல்வைத்தியர்கள் மற்றும் பணிபுரிபவர்களுடன் காலை வணக்கத்தை பரிமாரிவிட்டு, கடுமையான நோய் உள்ள பிள்ளைகளை பராமரிக்கும் பிரிவினுள் சென்றேன். முதலாம் இலக்க கட்டிலில் 8 வயது கொண்ட ஓர் ஆண் குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருக்க, வைத்தியரும் பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவனது பெற்றோர், அருகே நின்று அழுது கொண்டு நின்றனர்.
அமைதியாக அருகே சென்ற நான், குழந்தையின் தகப்பனிடம் என்னை அறிமுகம் செய்தவாறு மெதுவாக கதையை ஆரம்பித்தேன்.
பிள்ளைக்கு என்ன பிரச்சினை அண்ணா என அன்பாக கேட்டேன், " 3 நாளா காய்ச்சல் என்றார்".
வேற ஒன்டும் இல்லயா என கேட்டேன்,இல்ல வேற ஒன்டும் இல்ல என்றார்.
திடீரென காய்ச்சலா, இல்ல உடம்பு வலி இருமல், தடுமல் அப்டி ஏதும் வந்து, அதுக்கப்புறம் தான் காய்ச்சல் வந்ததா? என கேட்க
குறுக்கிட்ட அந்த குழந்தையின் தாய், அப்டி ஒன்டும் இல்ல டொக்டர், இவன் ஒரு 10 நாளா சும்மா கரண்ட கால் நோவுது, முழங்கால் நோவுது என்டு சொல்லி சித்தாலேப போட்டு நல்லாதான் இருந்தான், பிறகு திடீர் என்டு முந்தநாள் காய்ச்சல் வந்தது, பனடோல் குடுக்க குறையும் திரும்பவரும், பிள்ள சாப்டுரானும் இல்ல, காய்ச்சலும் விடுதில்ல அதனாலதான் OPDக்கு கொண்டு வந்த அங்க டொக்டர் இவன பரிசோதிச்சிட்டு எங்ககிட்ட நிறைய கேள்வி கேட்டுட்டு இது வாதக்காய்ச்சல் என்டு வாட்டுக்கு அனுப்பிட்டார்" என்று கூறி முடிக்க
அப்படி OPD டொக்டர் என்ன கேட்டார் என கேட்டேன்.
பிள்ளையின்ட உடம்புல சிவப்பு சிவப்பா ராஸ் மாதிரி ஏதும் கண்ட நீங்களா என கேட்டார்- நுளம்பு கடிச்சமாதிரி கைல கால்ல எல்லாம் சிவப்பா இருந்துச்சுதான் என்றேன்.
அப்றம் கை, கால்ல மூட்டு நோவு ஏதும் வந்ததா என பிள்ளையிடம் கேட்டார்-
அவனும் ஓம் என கரண்ட கால் முழங்கால் எல்லாம் தொட்டு காட்டினான். அவன் ஒரு பத்து நாளா கரண்ட கால் நோவுது, முழங்கால் நோவுது, முழங்கை நோவுது என்டு சொல்லி நான் சித்தாலேப பூசி சரியாயிட்டு என்டு சொன்னன்.
இவன் சரியான துடினம்தான, ஓடி திரிர அதான் நோவு என்று முடித்தாள் அம்மா.
சரி அப்போ பிள்ளைக்கு கிட்டத்துல ஏதும் தோல்வியாதி, தொண்டை நோய்கள் ஏதும் வந்ததா என நான் கேட்டு முடிக்க முதல் முந்திக்கொண்ட குழந்தையின் அம்மா " இத OPD டொக்டரும் கேட்டாருதான். இவன் வெயில்ல விளையாடி திரிரதான அதால ஒரு 3 கிழமைக்கு முதல் தொண்ட நோவு என்டு சொல்லி கரச்சல் படுத்தினான். பிறகு காலைல குழிக்க வச்சி தொண்டைக்கு தைலம் போட்டு விட்டு ஒரு 4 நாளால சரி ஆயிட்டு என்ற அந்த தாய்,
என்ட பிள்ளைக்கு வாதக்காய்ச்சல் என்டு எல்லாரும் சொல்ராங்களே
அது என்ன? ஏன் என்ட பிள்ளைக்கு வந்திரிக்கி? பயபுடதேவலதானே? அதால பிள்ளைக்கு என்னயும் பிரச்சினயா? என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.
வாதக்காய்சல்  (Rheumatic fever.)
ஸ்ட்ரெப்டோ கொக்கஸ் பயோஜன் (strepto coccus pyogen) எனும் ஓர்வகை பற்றிரிய இனமானது தொண்டையில் தொற்றுவதனால் உருவான தொண்டை அழற்ச்சி மற்றும் தோலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களுக்கு ஒழுங்கான முறையில் சிகிச்சை பெறாத சிலரில் இந்நோய்க் காரணிகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் உருவாக்கப்படும் பிறபொருள் எதிரி என அழைக்கப்படும் இரசாயனப் பொருட்கள் இதயம், இதய வால்புகள் மற்றும் மூட்டுக்களில் உள்ள சாதாரண கலங்கள் மற்றும் கூறுகளுடன் இடைத்தாக்கம் அடைவதனால் இந்நோய் நிலை உருவாகின்றது.
பொதுவாக, தொண்டை வலி ஏற்பட்டு குணமடைந்து 2/ 3 வாரங்களில் இந் நோயின்அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
பொதுவான அவ் அறிகுறிகள்
:-) உடலில் rashes தோனறி மறைதல்- இவை எவ்வித கடி மற்றும் நோவு உணர்வை ஏற்படுதுவதில்லை. எனவே இதனை நோயாளிகள் அவதானிப்பது குறைவு.
:-) சடுதியான காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை.
:-)மூட்டு வலி-
முதலில் இரு கரண்டை கால் மூட்டுகளிலும் ஏற்பட்டு நீங்கி பின்னர் இரு முழங்கால்களிலும் ஏற்படும்.
பின்னர் இரு மணிக்கட்டு மூட்டுகளிலும் ஏற்பட்டு நீங்கி, இரு முழங்கை மூட்டுகளிலும் ஏற்படும்.
:-)வலிப்பின்போது ஏற்படுவது போன்ற அசாதாரன உடல் அசைவுகள் ஏற்படல்.
ஆங்கிலத்தில் இதனை சிடன்ஹம் கோரியா (sydenham's chorea) என்பார்கள்.
வாதக்காய்ச்சலால் ஏற்படும் கடுமையான பாதக விளைவுகள் எவை?
1. இதய வால்புகள் பாதிப்படைதல்.
2.இதய தொழிற்பாடு பாதிப்படைதல்.
3.சிறுநீரகம் பாதிக்கப்படல்
4.இரத்தக் குழாய்களின் உள்ளே இரத்தம் கட்டியாகி அடைத்து மரணம் ஏற்படல்.
சிறுவர்களை மட்டுமன்றி எந்த ஒரு நபரையும் இந்நோய் தாக்கலாம்.
எனவே, தொண்டை மற்றும் தோலில் ஏற்படும் நோய்களை அலட்சியம் செய்யாமல் உரிய காலத்தில் உரிய சிகிச்சையினை பெற்று உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment