Wednesday 27 December 2017

வணக்கம் முஸ்லிம் முகநூல் மீடியாவிற்கு சில விளக்கங்கள் !!


Related imageகடந்த சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற நோபுள்மரைன் சாகுல்கமீது அவர்களின் இல்லத்திருமண விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....!
அந்த சமயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவர் அப்துல்ரஹ்மான் EX.MP அவர்களும்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின்அவர்களும்,அவர்களின் மனைவியும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது....!!!
இந்த சந்திப்பின் போது. ஸ்டாலின் அவர்களின் மனைவி , முஸ்லிம் லீக் முதன்மை தலைவர் அப்துல் ரஹ்மான் ex.mp அவர்களுக்கு வணக்கம் சொல்கிறார்....!!!
அப்துல்ரஹ்மான் ex.mp அவர்களும் மரியாதை நிமித்தமாக பதில் வணக்கம் செலுத்துகிறார்கள்....!!!
தற்போது முகநூல் முஸ்லிம் மீடியா தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் எல்லாம் ஏதோ இஸ்லாமிய விரோத காரியத்தை செய்ததைப்போல பதிவிட்டு, அவர்களின் முஸ்லிம் லீக் வெறுப்பை தீர்த்துக்கொள்கிறார்களோ.....??? என்று எண்ணுகிற அளவிற்கு அவர்களின் பதிவுகள் நம்மை எண்ணத்தோன்றுகிறது.....!!!?
இவர்கள் இதுபோன்ற பதிவுகளை போடுவதன் மூலம் அற்ப சமூகவலைதள விளம்பரங்களை தேடிக்கொள்ள விரும்புகிறார்களா....??? என்கிற சந்தேகமும் எழுகிறது...!!!

எது....??? எப்படியோ....???
எமது நிலைப்பாடு:::
"வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.
'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ,
அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:86
வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258
விளக்கம்:
முதல் வசனத்தில், "அவர்கள் வீணானதை செவியுறும்போது அதனை அலட்சியம் செய்வார்கள்" என்ற அடிப்படையில் இதனை நாம்(முஸ்லிம் லீக்கர்கள்) பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை....!!!
இரண்டாவது வசனத்தில்,
உங்களுக்கு வாழ்த்துக்கூறப்பட்டால் , அதைவிட சிறந்ததையோ, அல்லது அதையோ திருப்பி கூறவேண்டியதின் அடிப்படையில் அவர்களின் வணக்கத்தை நாகரீகம் கருதி, பதிலாக அவர்களுக்கு திருப்பி கூறப்பட்டது.....!!!
மூன்றாவதாக உள்ள ஹதீஸில்,
வேதமுடையவர்கள் உங்களுக்கு ஸலாம் கொடுக்கப்பட்டால், அவர்களின் ஸலாம் -ஐ அப்படியே திருப்பிக்கூறலாம் என்கிற விசயம் தெளிவாகிறது....!!!
மற்றொரு, ஹதீஸில் ,யூதர்களுடைய ஸலாமை போல உங்களுடைய ஸலாமை அமைக்க வேண்டாம் என்கிற பொருள்பட வந்துள்ளது...!
ஏனெனில், அவர்கள் தன் முன்கைகளாலும், தலையை லேசாக சாய்த்தும் ஸலாம் கூறுவார்கள் என்று உள்ளதையும் கருத்தில் கொண்டால், நாம் வணக்கம் சொன்ன நிகழ்வு என்பது அவர்களின் வணக்கத்திற்கு பதில் மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலைக்கு மாறுவோம்.....!!!
நம் அனைவரின் மீதும் ,இறைவனின் "ஸலாம்" நிலவட்டுமாக....!!!
இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுவது மரியாதைக்குரியது இது தமிழர் பண்பாடு அனைத்தையும் அரிந்த நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா நாம் எதை நினைத்து வணக்கம் வைத்தோம் என்று வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்ற வசனம் நாம் தொழுது வணங்குவதைக் குறிக்கிறது. நாம் இறைவனை இரு கைகளையும் சேர்த்து வணங்கமாட்டோம். இதை அதனுடன் சேர்த்து ஒப்பிட வேண்டாம். சில நாட்களாக உங்கள் பக்கத்தில் தனிநபர் விமர்சனம் அதிகமாக இருக்கிறது தனிநபர் விமர்சனம் இருந்தால் உங்கள் பெயருடன் சேர்த்து பதிவிடுங்கள் முகநூல் முஸ்லீம் மீடியா என்ற பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் பதிவிடுவது அனைத்து முஸ்லீம்களின் என்னம் என்று நினைத்து பதிவிடவேண்டாம்.இது தமிழர்களின் பண்பாடு...நாகரீகமும் கூட ...தேவையில்லாமல் நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்...உள்ளத்தில் இறைநம்பிக்கை உறுதியாக இருக்கும் வரை ,மற்ற விஷயங்களை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட தேவையில்லை ...
அனைத்தையும் இறைவன் அறிவான். 


நன்றி : மு.அஜ்மல் கான்.

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment