Thursday 15 February 2018

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு குவைத்தில் தடை ஏன் ? ஒரு தவகல்!!


குவைத் நாட்டில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் அதிகள் வந்து கொண்டிருப்பதால் பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் குவைத் உள்பட வெளிநாடுகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 


குவைத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஜோனா டெமாஃபிஸ்  (வயது 29 )படுகொலை ஆகும்.இந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு குவைத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணவில்லை.


பொதுமன்னிப்பு முன்னிட்டு இவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தீவிரமாக இந்த பெண்ணை தேடிவந்தனர்.இந்நிலையில் இந்த பெண்ணின் உடல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குவைத்தில் வாழும் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இவ்வளவு நாட்களாக இந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருந்துள்ளது.இதையடுத்து இதில் தொடர்புடைய லெபனான் நபர் மற்றும் அவரது சிரியா மனைவியையும் குவைத் அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.


இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பணிப்பெண் உடல் குவைத் அல்-சபா பிணவறையில் வைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் குவைத் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.இதையடுத்து குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று உடல் தாயகம் அனுப்பப்பட்டது. நேற்று குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரி ரெனே வில்லா நேரடியாக குவைத் அல்-சபா மருத்துவமனைக்கு சென்று ஜோனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு இவரது  உடல் குவைத் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இந்த நிகழ்வு அனைத்து முடியும்வரையில் தூதுவர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக புகார்கள் குவிந்தன.இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ளதை அடுத்து குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.




குவைத் பாராளுமன்ற கூட்டத்தில் சில நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து முடிவு எடுக்கப்பட்டது:

இதையடுத்து இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் Khaled Al-Roudhan அவர்கள் பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் வங்கதேசம், நேபாளம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை குவைத்தில் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வர விரைவில் விசா வழங்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment